மஹான் பாபா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின்
நல்லுபதேசங்கள்
காசு இல்லாமல்
காசு இல்லாமல் கோடி
கோடியாகத் தேட வேண்டுமென்று மஹான்
பாபா அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
முஹம்மது முபாரக் ஆலிம்
ஒருவருக்கு
உதவி செய்வது எப்படி?
ஒருவர்
கீழே விழுகிறார் என்றால் கீழே விழும்போது
லேசாக கையை தூக்கி நிமிர்த்தி
விடவும். அவர் நின்று கொண்டால்
கையை எடுத்து விடுங்கள் என்றார்கள்
மஹான் பாபா அவர்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் மௌலவி ளு.ளு.குத்புத்தீன் ஆலிம் மஹான் பாபா
மகனார்
ஒரு காசு லாபாமா? ஒரு
ரூபாய் லாபமா?
ஒருசமயம்
சுல்தான் ஹாஜியார் ளுஃழ. ஷாஹூல்ஹமீது என்பாரின்
கடைக்கு மஹான் பாபா அவர்கள்
சென்று, ஒருகாசு லாபமா? ஒரு
ரூபாய் லாபமா? என்று கேட்டார்கள்.
அதற்கு சுல்தான் ஹாஜியார், ஒரு ரூபாய் தானே
லாபம் என்றார். அப்படியல்ல. ஒரு காசுதான் லாபம்
என்றனர் மஹான் பாபா அவர்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் ளு.சுல்தான் ஷாஹூல்ஹமீது
மகனார் - பனைக்குளம்
ஒரு சல்லிதானே ஒரு மல்லிதானே என்று
எண்ண வேண்டாம்
ஒரு சல்லிதானே ஒரு மல்லிதானே என்று
எண்ண வேண்டாம். ஒரு கோடி ரூபாயில்
ஒரு சல்லியை எடுத்து விட்டால்
அதற்குப் பெயரென்ன? என்று கேட்டனர் மஹான்
பாபா அவர்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
முரீது
என்றால் யார்?
ஒருசமயம்
மஹான் பாபா அவர்களும் திடல்
அபுல்காசிம் ஆலிம் அவர்களும் அபிராமம்
அப்துல்காதிர் ஆலிம் அவர்களை காணச்
சென்றார்களாம். அப்போது அப்துல்காதிர் ஆலிம்
பாபாவிடம் கேட்டார்களாம், ஷைகு என்றால் யார்?
முரீது என்றால் யார்? என்று.
ஷைகு என்றால் தண்ணீர், முரீது
என்றால் சோறு என மஹான்
பாபா பதில் கூறினர்.
அறிவிப்பாளர்:
அபுல்காசிம் ஆலிம், திடல
;
மிருகத்தன்மை
நீங்க
கறி உணவு சாப்பிட்ட
பின் மிட்டாய் இனிப்பு வெற்றிலை போடுவதால்
அது மிருகத்தன்மையை விட்டும் நம்மை நீக்குமென்று மஹான்
பாபா கூறக்கேட்டு.
அறிவிப்பவர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
வெண்டைக்காயின்
மகிமை
வெண்டைக்காய்
சாப்பிடுவது தங்கத்தை மூஸ் தங்கமாக ஆக்குமென்று
மஹான் பாபா கூறினர்.
அறிவிப்பாளர்:
நு.P.ளு.முஹம்மது முஸ்தபா,
ளுஃழ.நு.P.ஷைகு முஹம்மது,
சாயல்குடி, முகவை
மார்க்கத்தை
விளங்க வேண்டிய முறையில் விளங்க
வேண்டும்
ஆலிமாக
இருந்தாலும் மார்க்கத்தை (ஷரீ அத்தை) விளங்க
வேண்டிய முறையில் விளங்கா விட்டால் வழிதவறிப்
போய் விடுவார்கள்.
அறிவிப்பாளர்:
அல்லாஹ் ளு.ளு.குத்புத்தீன்
ஆலிம், மஹான் பாபா மகனார்
புழு ஊரணியில் குளிப்பதன் சிறப்பு
பனைக்குளம்
புழு ஊரணியில் குளித்தால் கோடி கோடி பவுன்
கிடைக்கும்.
அறிவிப்பாளர்:
யு.N.ஆ.அப்துல்மஜீது, பேரையூர்
வயிற்றை
நம்பிய குடி வாழாது
வயிற்றை
நம்பிய குடி வாழாது. விளக்கம்:
ஒரு இடத்திற்கு சென்றால் உணவுக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடாது. தயாராக இருந்தால்
இருப்பதை சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். உணவுக்காக காத்திருந்தால் நாம் எண்ணிப்போன காரியம்
கைகூடாமல் போய்விடலாம்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது மபாரக் ஆலிம்
மலட்டுச்
சந்திப்பு வேண்டாம்
அல்ஹாஜ்
அஹ்மதுதமீம் அவர்களுக்கு மஹான் பாபா கூறினார்.
'ஒருவரை சந்தித்தால் அது மலட்டுச் சந்திப்பாக
இருக்கக் கூடாது'. அதாவது ஒன்று உங்களுக்குப்
பயனுள்ளதாக இருக்க வேண்டும் அல்லது
பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறின்றி
சந்தித்தால் இறைவன் நாளை கேள்வி
கணக்குக் கேட்டு ஏன் பயனில்லாத
சந்திப்புக்காக சென்றாயென தண்டிப்பான்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
கோணாமல்
இருப்பது பலகோடி
கோடி வந்தாலும், கோடி போனாலும் கோணாமல்
இருப்பது பலகோடி என்றனர் மஹான்
பாபா அவர்கள்
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக்
ஆலிம்,யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்
ஒன்று உங்களுக்க ஒரு அணா பயனிருக்க
வேண்டும்
அல்லது
மற்றவருக்கு ஒரு அணா பயனிருக்க
வேண்டும்
ஒன்று உங்களுக்கு ஒருஅணா பயனிருக்க வேண்டும்
அல்லது மற்றவருக்கு ஒருஅணா பயன் கிடைக்க
வேண்டும் என்று மஹான் பாபா
தமது மகனார் அல்ஹாஜ் முஹம்மது
முபாரக் ஆலிம் அவர்களுக்கு கூறினார்கள்.
இனி பயனில்லாமல் ஒருவரை சந்தித்தால் அது
வீண் சந்திப்பென்று அல்லாஹ் எழுதித்தண்டிப்பான் என்றனர்.
ஒருவரை பயனில்லாத முறையில் சந்தித்து விட்டால் அதை எவ்வாறு பயனள்ள
சந்திப்பாக மாற்றிக்கொள்ளலானெ;ற வழியை தனது
மகனாருக்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
வீணணென்று
பெயர் வாங்க வேண்டாம்
தனக்குப்
பயனுள்ள வேலையை செய்ய வேண்டும்.
அல்லது பிறருக்கு பயனுள்ள வேலையை செய்ய
வேண்டும். அவ்வாறு இல்லையேல் அவர்
வீணணென்று பெயர் பெற்று விடுவார்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
முஹ்யித்தீன்
ஆண்டகை எங்கே சாப்பிடுவார்கள்?
மஹான் பாபா அவர்கள் வெளியூருக்குச்
செல்லும் போதெல்லாம் இராமநாதபுரத்தில் இரயில்வே ஸ்டேஷனுக்கு சமீபமாக உள்ள தாவூத்
ஹோட்டலில் வழக்கமாக சாப்பிடுவார்கள். ஒருசமயம் அவர்களும் அவர்களுடைய மகனாரும் தாவூத் ஹோட்டலுக்கு சாப்பிடச்
சென்றபோது ஆணம் சலித்த வாடை
அடித்ததால் மகனார் கூறினர். பக்கத்திலுள்ள
ஆர்யபவன் ஹோட்டலில் புதிய சட்னியும் சாம்பாரும்
ருசியாகக் கிடைக்கும் அய்கேபோய் சாப்பிடுவோம் வாருங்கள் என்றார். அதற்கு மஹான் பாபா,
ரசூலுல்லாஹ் முஹ்யித்தீன் ஆண்டகை, நாகூர் ஆண்டவர்கள்
போன்றோர் எல்லாம் இங்கே வந்தால்
இந்த ஹோட்டலில் தான் சாப்பிடுவார்கள் என்று
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தமது காரியங்கள் நிறைவேற நேர்ச்சை வைக்க
வேண்டும்
மஹான் பாபா அவர்களிடம் பலர்வந்து
அவர்களுடைய காரியங்களை கூறி அவர்களுக்குள்ள நோய்கள்
குணம்பெற வேண்டுவர். பாபா அவர்களும் அவர்களுக்கு
பல பக்குவங்களை கூறுவர். அத்துடன் நோய் குணமடைந்தால் நாகூர்
ஷாஹூல் ஹமீது நாயகம் மற்றும்
வேறுசில வலிமார்களின் பெயரால் நேர்ச்சை வைக்க
நிய்யத்து செய்யச் சொல்வார்கள். சிலருக்கு
அதிகமான நேர்ச்சைகள் வைக்கச்சொல்லி மத்ரஸாவில் ஓதும் பிள்ளைகளுக்கு கொடுக்கச்
சொல்வார்கள். சிலசமயம் சிலர் ஏதேனும் மிகச்சிறிய
நேர்ச்சையை, ஒரு அணா அல்லது
அரை அணா நேர்ச்சையை வைத்து
அதை மஹான் பாபாவிடம் கொண்டுவந்து
கொடுப்பதுண்டு அதையும்; அவர்கள் மிகவும் கண்ணியத்தோடு
முஹயித்தீன் ஆண்டவர்கள் வாங்குவது போன்று வாங்குவார்கள். சிலபோது
பெரிய நேர்ச்சைகளை கூட பெற்றுக்கொள்ள அனுமதியில்லே
எனக்கூறி விடுவார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஹலாலான
உணவு சாப்பிட வேண்டும்
வேலூரில்
ஒரு சீமான் ஒரு பெட்டிக்கடை
வைத்து வியாபாரம் செய்து வந்தார். அக்கடையில்
போய் வெற்றிலை பாக்கு வாங்குவது வழக்கம்.
ஒருவர், நீங்கள் வெற்றிலை பாக்கு
வாங்கும் கடைக்காரர் யார் தெரியுமா? இந்த
ஊரிலேயே பெரிய கோடீஸ்வரர் என்று
சொல்ல, அதுகேட்ட மஹான் பாபா அவரிடம்
போய் தாங்கள் பெரிய கோடீஸ்வரராமே
என்று கேட்க, அதற்கவர், ஆம்
என்று சர்வசாதாரணமாகக் கூறினார். அப்படியானால் இந்தப் பெட்டிக்கடையை ஏன்
வைத்துள்ளீர்கள்? என்று பாபா அவர்கள்
கேட்க அதற்கவர் தங்களுடைய வீட்டில் இன்று ஒருகுடம் தண்ணீர்
எடுத்து வைக்கிறீர்கள். இவ்வாறே நாளை ஒருகுடம்
தண்ணீர் எடுத:து வைக்கிறீர்கள்.
இதே போல ஏழு நாட்களும்
எடுத்து வைக்கிறீர்கள். பின்னர் தண்ணீர் குடிப்பதென்றால்
என்றைக்கு எடுத்துவைத்த தண்ணீரை குடிப்பீர்கள் என்று
கேட்க, அதற்க பாபா அவர்கள்
ஏழவாது நாள் எடுத்துவைத்த தண்ணீரைத்தான்
குடிப்பேன் என்று சொல்ல, அதற்கவர்
முதல்நாள் எடுத்துவைத்த தண்ணீரை குடிக்க மாட்டீர்களா?
என்று கேட்க, அதில் தூசிகள்
பட்டிருக்கலாம். ஆனால் ஏழாவது நாள்
எடுத்துவைத்த தண்ணீரில் தூசிகள் படிய வாய்ப்பில்லை
அல்லவா! என மஹான் பாபா
அவர்கள் சொல்லவே அதுகேட்ட அக்கடைக்காரர்
அதுபோன்று தான் நான் முன்பு
சம்பாதித்து வைத்துள்ள பணத்தில் பல பாவங்கள் கலந்திருக்கலாம்
அதற்காகத்தான் இன்று நேரடியாக நான்
ஹலாலான சம்பாத்தியம் செய்து ஒவ்வொரு நாளும்
சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஜூஹ்து
(பற்றற்றதன்மை) என்றால் என்ன?
ஷாதுலி
இமாமவர்கள் ஒருசமயம் ஜூஹ்து (பற்றற்ற தன்மை)
குறித்து பயான் செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது இமாமவர்கள் உயர்தரமான ஆடையை அணிந்திருந்தார்கள். சிறிது
தொலைவில் ஒட்டுப்போட்ட ஆடையை அணிந்திருந்த ஒரு
முஸாபிர், உயர்தரமான ஆடையை அணிந்திருக்கும் இவர்களுக்கு
பற்றற்ற தன்மை குறித்து பேச
என்ன தகுதியிருக்கிறது? என்று எண்ணினார். திடீரென
ஷாதுலி இமாமவர்கள் அவர் பக்கமாகத் திரும்பி,
உனது ஆடை உலகம் வேண்டுமெனச்
சொல்கிறது. எனது ஆடை உலகம்
வேண்டாமென்று சொல்கிறதென பட்டென்று பதலளித்தார்கள். அதைக்கண்ட அவர், நமது உள்ளத்தில்
நினைத்ததை இவர்கள் எப்படி அறிந்தார்களென
ஆச்சரியம் அடைந்தார்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நாம் கோடி கோடியாகத் தேட
வேண்டும்
கோடி கோடியாக, லட்சம் லட்சமாக, பல்லாயிரக்கணக்கில்
சம்பாதிக்க வேண்டுமென்று மஹான் பாபா கூறினார்கள்.
நூறு ரூபாயை பார்ப்பதற்கே அரிதான
காலத்தில் இதனை பலமுறை கேட்டுக்
கொண்டிருந்த ரஹ்மதுல்லாஹ் என்பார் ஒருநாள், இநத்
பல்லாயிரத்தில் எத்தனை சைபரை குறைத்துக்
கொள்ளலாமென்று சிரித்துக்கொண்டே வினவினார். ரஹ்மதுல்லாஹ் தங்களுக்கு இப்போது விளங்காது. அன்ஷாஅல்லாஹ்
பிறகு விளங்கும் என்றார்கள். மஹான் பாபா கூறியதுபோல
பல லட்சங்களையும் கோடிகளையும் பாபாவுடைய துஆ பரக்கத்தால் இன்று
தேடுகின்ற பாக்கியத்தை பெற்றுள்ளேன். இதற்குமேல் கூறுவது சரியல்ல வாதலால்
நிறுத்திக்கொள்கிறேன் என்றார்.
அறிவிப்பாளர்:
கணக்குப்பிள்ளை ரஹ்மதுல்லாஹ், பனைக்குளம்
அதிகமாக
சிரிக்க வேண்டாம்
மஹான் பாபா அவர்கள் ஓதிக்
கொண்டிருந்த துவக்க காலத்தில் இஹ்யா
உலூமுத்தீன் என்னும் நூலில் அப்துல்லாஹ்
இப்னு முபாரக் (ரழி) என்றொரு iஹாபி
ஒரு ஹதீஸை அறிவித்துள்ளனர். அதில்
நபியவர்களை நான் சிரித்தவர்களாக பார்த்ததில்லை
எனக் கூறியுள்ளனர். அன்றுமுதல் மஹான் பாபா அவர்கள்
சிரிப்பதை விட்டு விட்டனர். இந்த
ஹதீஸை அறிவித்த இன்னு முபாரக் (ரழி)
அவர்களின் பெயரை தமது குழந்தைகளில்
ஒருவருக்கு வைக்க வேண்டுமென நிய்யத்து
வைத்து எனக்கு முஹம்மது முபாரக்
என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சுறுசுறுப்புனட்
நடந்தார், சிறந்த வேலை பெற்றார்
ஒருவர்
மஹான் பாபாவிடம் வந்து வேலை கிடைக்க
துஆ செய்யுமாறு கூறினார். மஹான் பாபா தாங்கள்
எந்த ஊருக்கு வேலைதேடிப் போகிறீர்கள்?
என்று கேட்க, அதற்கவர் சென்னைக்கு
என்று கூறினார். அன்றைய சூழ்நிலையில் வேலை
கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம்
சரி சென்னையில் எங்கே தங்குவீர்கள்? என்று
பாபா கேட்க, பாண்டி பஜாரில்
என்று கூறினார். அங்கே எந்த நேரத்தில்
கூட்டமாக இருக்கும்? என பாபா அவர்கள்
கேட்க, அதற்கவர் காலை 10-30 மணிக்கும் மாலை 5-00 மணிக்கும் என்று கூறினார். அதுகேட்ட
பாபா, அப்படியா என்று கேட்டுவிட்டு அப்படியானால்
அந்த பஜார் பிளாட்பாரத்தில் காலையிலும்
மாலையிலும் தவறவிட்டு விட்ட சாமானை எடுக்கப்
போவதுபோல விரைந்து செல்ல வேண்டும். யார்
கூப்பிட்டாலும் நில்லாது கையை காட்டிவிட்டு செல்ல
வேண்டும். நிற்கக் கூடாதென பாபா
கூறினார்கள். இவ்வாறு மூன்று நாட்கள்
காலையிலும் மாலையிலும் நடந்தார் இரண்டாவது நாள் அவருக்குத் தெரிந்த
ஒருவர் அவரை கூப்பிட்டார். கையை
காட்டிவிட்டு சென்று விட்டார். மூன்று
நாட்களும் செல்வதை கவனித்த அந்த
நபர் மாலையில் அவர் வரும் சமயத்தை
பார்த்து தயாராக இருந்தவர் அவர்
வந்தபோது அவருடைய கையை பிடித்துக்கொண்டு
எங்கே அவசரமாக செல்கிறாய்? என்று
கேட்டார். ஒரு இடத்திற்கு என்றார்
அதற்கவர் நீ என்ன செய்கிறாய்?
என்றுகேட்க நான் சும்மாதான் இருக்கிறேன்
என்றுசொல்ல என கடைக்கு வருகிறாயா?
என அவருடைய சுறுசுறுப்பiயும்
நடையையும் பார்த்துக் கேட்டார் அந்த மனிதர் பின்னர்
அவரது கடையிலேயே வேலைக்கும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். வேலைகிடைக்க பாபாவை துஆசெய்யச் சொன்னார்
அவருக்கு பாபா அவர்கள் துஆ
செய்ததோடு நாம் சுறுசுறுப்பாக செயல்பட்டால்
காண்போர் தாமாகவே அழைத்து நல்லவேலை
தருவார்கள். அத்துடன் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்னும் கல்வியையும்
கற்றுத்தந்தார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஆயிரம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் இருந்தாலும் ஒரு முஹ்யித்தீன் ஆண்டவரைத்
தான் பின்பற்ற வேண்டும்
மஹர்ன பாபா கூறினார்கள். ஆயிரம்
முஹ்யித்தீன் ஆண்டவர்கள் இருந்தாலும் ஒரு முஹ்யித்தீன் ஆண்டவரைத்
தான் நாம் பின்பற்ற வேண்டுமென்று
கூறினார்கள். இதற்கு பல விளக்கங்கள்
உள்ளன. அதைகேட்டுத் தெரிந்து கொள்க.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஷைகும்
நல்லவரே, முரீதும் நல்லவரே
ஒருசமயம்
ஒரு ஷைகுடைய வீட்டுக்கு வெளியே
அவர்களுடைய முரீதுகளில் ஒருவர் பெருக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது கிழ்ரு நபியவர்கள் அங்கேவந்து
அந்த முரீதிடம், நான் கிழ்ரு வந்திருக்கிறேன்.
நீ எதைக் கேட்டாலும் நான்
துஆ செய்தால் அது உனக்குக் கிடைக்கும்
ஆகையால் உனக்கு என்ன வேண்டும்
கேள் என்று கேட்டார்கள். அதுகேட்ட
அந்த முரீது, எனது ஷைகல்லாதவர்களிடமிருந்து
எதையும் நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை
என்று கூறினார். அதுகேட்ட கிழ்ரு நபியவர்கள், ஷைகும்
நல்லவரே, முரீதும் நல்லவரே எனக்கூறி விட்டு
சென்று விட்டார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தர்மத்தால்
செல்வச் செழிப்புடன் வாழந்த சீமான்
வேலூரில்
ஒருபெரிய சீமான் இருந்தார். ஐநூறு
தையல் மிஷின்களை வைத்து தினமும் சட்டை
கைலிகள் போன்றவற்றை தை;தது ஓதுகின்ற
பிள்ளைகள், உலமாக்கள், ஏழைகள் போன்றோருக்கு கொடுத்து
வந்தார். ஒருசமயம் அவருடைய மனைவி இப்படி
தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தால் நாம் நஷ்டமடைந்து விடுவோம்.
அதனால் இதை நிறுத்தி விடுங்களென்று
சொல்ல அதைகேட்டு அவரும் நிறுத்தி விட்டார்.
ஒருவருடத்திற்குப் பின் அவருடைய கம்பெனியில்
பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது
அதைக்கண்ட வஅர், நாம் செய்துவந்த
தர்மத்தை நிறுத்தியதால் தான் நமக்கு இந்த
நஷ்டம் வந்ததென்று எண்ணி மீண்டும் ஐநூறு
தையல் மிஷின்களை வைத்து ஏழைகளுக்கும், உலமாக்களுக்கும்,
ஓதும் பிள்ளைகளுக்கும் தைத்துக் கொடுக்கத் துவங்கினார் என மஹான் பாபா
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நல்லாரை
காண்பதும் நன்றே
நல்லாரை
காண்பதும் நன்று, நல்லார் சொல்
கேட்பதும் நன்று. நல்லாருடன் இணங்கி
இருப்பதும் நன்று. இவ்வாறே தீயோரை
காண்பதும் தீது, தீயோர்சொல் கேட்பதும்
தீது, தீயோருடன் இணங்கி இருப்பதும் தீது
என்பதாக மஹர் பாபா அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
புகழ் ஊரணியில் குளிப்பதன் பலன்
புகழ் ஊரணி(புளு ஊரணி)யில் குளித்தால் நமது
நல்ல நாட்டங்களனைத்தும் நிறைவேறும், கஷ்டம் நீங்க, செல்வம்
பெருக, நோய்நீங்க, நமது நல்ல நாட்டங்களனைத்தும்
நிறைவேறுமென மஹான் பாபா தமது
நேசர்கள் அனைவரிடமும் கூறியுள்ளார்கள். அதன்படி பாபா அவர்கள்
இருக்கும் போதும் அவர்கள் தமது
நாட்டங்களை நினைத்து இந்த ஊரணியில் குளித்து
வந்தார்கள் இப்போதும் குளித்து வருகிறார்கள். பாபா அவர்களும் அதிகமாக
இந்தப் புகழ் ஊரணியில் (புளு
ஊரணி) தான் குளிப்பார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஸலவாத்து
தான் முரீது
நான் மஹான் பாபாவைக் கண்டால்
எனது கவலைகள் அனைத்தும் பறந்து
விடும். உறங்கப் போகுமுன் இன்னா
அன்ஸல் னாவை ஏழுமுறை ஓதுங்கள்
ரஹீமாபீவி என்றார்கள்.
ஸலவாத்து தான் முரீது ஓதுங்கள்
ரஹீமாபீவி என்று எனக்கு நல்லுரை
கூறினார்கள் மஹான் பாபா.
அறிவிப்பாளர்:
ஆளுஆ.அபூதாலிபு மனைவி ரஹீமாபீவி, இருமேனி,
முகவை மாவட்டம்
நாம் இருக்கிறோம் என்போருக்கு நாம் இருக்கிறோம்
நாம் இல்லை என்போருக்கு நாம்
இல்லை
நாம் இருக்கிறோம் என்போருக்கு
நாம் இருக்கிறோம். நாம் இல்லை என்போருக்கு
நாம் இல்லை.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்,
ளுஆ.முஹம்மது யஃகூப், கமுதி
நாம் மறைந்த பின்பும் எப்போதும்
போல் கேட்கவும்
நாம் மறைந்த பின்பும் எப்போதும்
போல் நம்மிடம் கேட்பதை எல்லாம் கேட்கவும்.
அறிவிப்பாளர்:
சில்லான்குட்டி, சீனி வருசை முஹம்மது,
பனைக்குளம்
பக்கீர்
கோலத்தில் கோடீஸ்வர பையன்
வேலூரில்
மஹான் பாபா அவர்கள் காலை
உணவு சாப்பிடச் செல்லும் போது ஒருபையன் வீட்டுவாசல்
ஒன்றில் ஓட்டுப்போட்ட சட்டை அணிந்து நிற்பதுண்டு.
அவரை காணும் போதெல்லாம் மஹான்
பாபாவுக்கு இரக்கம் வரும். ஒருநாள்
அவரை அழைத்துக் கொண்டுபோய் காலை உணவு வாங்கிக்கொடுக்க
வேண்டுமென எண்ணியிருந்தார்கள். வழக்கம்போல் ஒருநாள் காலையில் சாப்பிடச்
செல்லும்போது அப்பையன் நின்று கொண்டிருந்தார். அவரிடம்
போய் நாஷ்டா சாப்பிடப் போவோமா
என பாபா அப்பையனே அழைக்க,
அவரும் பாபாவோடு சென்றார். ஒருபெரிய ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள். அந்த ஹோட்டலில் ஹோட்டலுக்கு
வெளியேயிருந்து சாப்பிட்டால் டீ ஒரு அணா.
கொஞ்சம் உள்ளே சென்று சாப்பிட்டால்
ஒரு ரூபாய் இன்னும் கொஞ்சம்
உள்ளே சென்று சாப்பிட்டால் ஐந்து
மூபாய் இன்னும் உள்ளே சென்று
சாப்பிட்டால் பத்து ரூபாய் இத்தனை
தரம் வாய்ந்த ஹோட்டலுக்கு வந்தவர்கள்
அப்பையன் மளமளவென்று ஹோட்டல் உட்பகுதிக்கு பாபாவை
அழைத்துச் சென்று விட்டார். பாபா
மலைத்துப் போனார்கள். அங்கேசென்று அமர்ந்ததும் அவர்களை கேட்காமலேயே உயர்தரமான
உணவுகள் எல்லாம் கொண்டுவந்து வைக்கப்பட,
சாப்பிட்டு முடித்தார்கள். பின்னர் பில் கேட்டபோது
முதலாளி கணக்கில் எழுதியாகி விட்டது என சர்வர்
கூறினார். இத்தனைக்கும் நம்மிடம் பணமில்லை கல்லாவுக்குப் போய் முதலாளிடம் பிறகு
பணம் கொண்டுவந்து தருகிறேனென சொல்லலாமெனம பாபா நினைத்திருந்தார்கள். ஆனால் அப்பையனோ
பாபாவை கல்லா அருகே கூட
செல்லவிடாமல் வாருங்களென்று வெளியே அழைத்துக்கொண்டு வந்து
விட்டார். அதுகண்ட பாபா அவர்கள்
இப்பையன் நல்லவன் இல்லையோ என
வேதனைப் பட்டார்கள். சிறிதுதூரம் சென்றதும் அப்பையனை போகச் சொல்லிவிட்டு அருகே
இருந்த பெட்டிக்கடைக்கு போகிறேனென நின்றவர்கள் பின்னர் பெட்டிக்கடைக்குப் போய்விட்டு
அங்கிருந்து மீண்டும் ஹோட்டலுக்கு சென்று கல்லாவிலிருந்த முதலாளியிடம்,
நான் மத்ரஸாவுக்குப் போய் பணத்தை எடுத்துக்கொண்டு
வந்து தருகிறேன் என்றார்கள். அதற்கு கல்லாவில் இருந்தவர்
முதலாளி கணக்கில் எழுதியாகி விட்டது என்றார். எந்த
முதலாளி என பாபாகேட்க உங்களொ
வந்த பையன்தான் முதலாளி என்று கூற
மஹான் பாபா அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
அதன்பின் மீண்டும் அப்பையனை சந்தித்து நீங்கள்தான் இவ்வூரிலேயே பெரிய கோடீஸ்வரராமே என
பாபா கேட்க, அவர் ஆம்
என்று சாதாரணமாச் சொன்னார். அப்படியானால் நீங்கள் ஏன் ஓட்டுப்போட்ட
சட்டையை அணிந்துள்ளீர்கள்? என்று பாபா கேட்க
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் ஓட்டுப்போட்ட
சட்டை அணியவில்லையா? என்று கேட்டார்.
அறிவிப்பாளர்:
மஹான் பாபா சொல்லக்கேட்டு,
அல்ஹாஜ்
முஹம்மது முபாரக் ஆலம்
அல்லாஹ்வை
சொந்தமாக்க வேண்டுமென ஆயிரத்தில் ஒருவர் வருகிறார்
நம்மை இவ்வளவு பேர் ஏன்
பார்க்க வருகின்றார்கள் தெரியுமா? கஞ்சிக்கு இல்லை, கூழுக்கு இல்லை,
இந்த வியாதி குணமாக வேண்டும்
அந்த வியாதி குணமாக வேண்டுமென்று
வருகிறார்கள். ஆனால் அல்லாஹ்வை சொந்தமாக்க
வேண்டும் ரசூலுல்லாஹ்வை சொந்தமாக்க வேண்டும், அவ்லியார்க்களை சொந்தமாக்க வேண்டும் மென்று வருபவர்கள் ஆயிரத்தில்
ஒருவராகத்தான் இருக்கிhரென்று பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
பிறர்பொருளை
சாப்பிடுவது ஹராமென்று எடுத்துக் கூறிய மஹான் பாபா
தங்கத்தை
தரம் பார்க்க உரசிப் பார்த்துவிட்டு,
மெழுகில் ஒட்டி சேகரமாகும் மெழுகை
நீண்ட நாட்களுக்குப் பின உருக்கி அதிலிருந்து
கிடைத்த தங்கத்தை விற்ற பணத்தை ஒருமுறை
பாபாவிடம் கொண்டுவந்து இந்த நேர்ச்சையை பெற்றுக்கொள்ளுங்களென்று
கொடுக்க, பாபா இது நமக்குரியதில்லை
என்று சொல்ல அதற்கவர் தங்கத்தை
உரசி மெழுகில் தடவி அதை உருக்கி
விற்ற பணம் வேபறு தப்பானதில்லை
என்று கூறி பெற்றுக்கொள்ளுமாறு வேண்டினார்.
அதற்கு பாபா இது பிறரின்
பொருள் ஹராமானதென்று கூறி அதை பெற்றுக்கொள்ள
மறுத்துவிட்டனர்.
அறிவிப்பாளர்:
அ.ப.ஷரீப்,
நத்தம், அபிராமம்
நான் தந்தேனென்று வெந்நீர் சாப்பிடுங்கள் குணமடைவீர்கள்
உனக்கோ
அல்லது உனது குழந்தைகளுக்கோ நோய்
வந்தால் வெந்நீர் கடவைத்து நான் தந்ததாக எண்ணிக்குடி
என்றார்கள் அதன்படி இதுநாள்வரை நடந்து
வருகிறோம். பாபாவின் துஆவைக் கொண்டு அல்லாஹ்
எங்களுக்கு சுகத்தை தந்து கொண்டிருக்கிறான்.
அறிவிப்பாளர்:
சல்ஹா அம்மா, றுஃழ. இப்ராஹீம்
கனி, பனைக்குளம்
அடுத்த
வீட்டுக்குச் சென்று ஓதுவது தரித்திரமென்று
தடுத்தார்கள்
எனக்குச்
சரியாக ஓதவராததால் அடுத்த வீட்டுக்குச் சென்று
குர்ஆன் ஓதிவிட்டு வருவதைக் கண்ட பாபா அடுத்த
வீட்டுக்குச் சென்று ஓதுவது தரித்திரம்.
நமது வீட்டிலேயே ஓதவேண்டுமெனக் கூறினார்கள். அதன்படி வீட்டிலேயே ஓதினேன்.
விரைவில் நல்லபடியாக ஓதவந்து விட்டது.
மஹான் பாபா எங்களுடைய வாழ்க்கையில்
பின்னால் நடக்கவிருப்பவைகளை எல்லாம் முன்னறிவிப்புச் செய்தும்
நாங்கள் அவ்வப்போது நடந்துகொள்ள வேண்டிய நேர்வழியை சொல்லிக்கொடுத்தும்
எங்களுடைய சிரமநிலை நீங்கி செழிப்பான வாழ்வுக்கு
துஆ செய்தும் உதவிய பேருதவிக்கு நாங்கள்
என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் அவர்களுக்கு நாங்கள் கடமையும் பட்டுள்ளோம்.
அறிவிப்பாளர்:
இப்ராஹீம் கனி, சல்ஹாம்மாள், பனைக்குளம்
முறையற்றவர்களிடம்
முரீது பெறாதீர்
மஹான் பாபா அவர்கள் எங்களுக்கு
அனைத்து நேர்வழியையும் படித்துத் தந்தார்கள். எங்களுடைய வீட்டிலுள்ளவர்களின் பிணிகள் நீங்க அவ்வப்போது
எங்களுக்கு பக்குவமும் சொல்லி வந்தார்கள். நாங்கள்
எல்லா நலமும்பெற மிக அதிகமாக துஆவும்
செய்தார்கள். உம்மி ஸலவாத்தை மிக
அதிகமாக என்னை ஊதி வருமாறு
சொன்னார்கள். யாரிடமும் முரீது வாங்கி நாசி
அடைத்து இரத்தம் கக்க வேண்டாமென்று
எச்சரிக்கை செய்து. ஒருதிக்ரை கூறி
ஒழுவோடு 21 நாள் ஓதி வாருங்கள்
யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்கள்.
நான் ஒழுவோடு இருப்பதை கண்ட
என்தோழி என் ஒழுவுடன் இருக்கிறாய்?
எனக்கேட்டு தொந்தரவு செய்தார். பாபா ஒழுவுடன் இருக்கச்
சொன்றார்களென்று கூறிவிட்டேன். மறுமுறை வந்த பாபா
நான் சொல்ல வேண்டாமென்று சொன்னதை
சொல்லி வீட்டீர்களா என என்னைக் கண்டதும்
கேட்டு விட்டார்கள்.
அறிவிப்பாளர்:
சல்ஹம்மா, னுஃழ.சுல்தான், கத்தாழை
வீடு, பேரையூர்.
மறைவுக்குப்
பின்னும் மக்களை ஷரீ அத்துப்படி
நடக்கச் சொன்ன மஹான் பாபா
1980ம்
ஆண்டு நான் பனைக்குளம் வந்தேன்.
அதுசமயம் பள்ளிவாசலின் தென்பக்கம் அடங்கியுள்ள பெரியார் யார்? என்று அங்குள்ளவர்களிடம்
கேட்டேன். அவர்கள்தான் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் என்று கூறினர். ஐம்பது
வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை நான் வந்தபோது
அவர்களை பார்த்துள்ளேன் என்றவன். இஷா தொழுகைக்குப்பின் மஹான்
பாபாவின் தர்ஹாவுக்குச் சென்று அவர்களை ஸ்யாரத்துச்
செய்துவிட்டு தூக்கக் களைப்பால் தென்பக்க
வராண்டாவிலேயே படுத்துத் தூங்கி விட்டேன். அப்போது
ஒரு பெரியார் வந்து என்னை தட்டி
எழுப்பி விட்டேன். அப்போது ஒரு பெரியார்
வந்து என்னை தட்டி எழுப்பி
திரும்பிப் படுக்குமாறு கூறினார்கள். நான் திடுக்கிட்டு விழித்துப்
பார்க்க அங்கே யாருமேயில்லை. நம்மை
திரும்பிப் படுக்க ஏன் சொன்னார்கள்?
என்று பார்த்தால் தூக்கக் கலக்கத்தில் என்னையும்
அறியாமல் மேற்குப்பக்கம் கால்நீட்டி படுத்திருப்பதை அறிந்து அதற்காக வருத்தப்பட்டேன்.
நம்மை தட்டி எழுப்பிய பெரியார்
யாரென்று நான் யோசித்துப் பார்த்தபோது
ஐம்பது வருடங்களுக்கு முன் பார்த்த செய்யிது
முஹம்மது வலியுல்லாஹ் தான் என்பதை தெளிவாகப்
புரிந்து கொண்டேன்.
அறிவிப்பாளர்:
முஹம்மது ஸாலிஹ் பின காதர்
ஷேக் காதி,
ஆதிபட்டிணம்,
அம்மாபட்டிணம்
ஆரம்பம்
எதுவோ அதுவே முடிவாகும்
வெளிநாட்டுப்
பயணம் செய்யும் நேசர்களுக்கு பாபா அவர்கள் இப்படிக்
கூறுவார்கள். நீங்கள் பயணம் புறப்படும்
தினத்தன்று நல்லபடியாக கறிவாங்கிச் சமைத்து நீங்களும் உங்களுடைய
குடும்பத்தாரும் மகிழ்ச்சியோடு சாப்பிட்ட பின் பயணமானால் நீங்கள்
எத்தனை மகிழ்ச்சியோடு மங்களகரமாக பயணமாகிறீர்;களோ அத்தனை மகிழ்ச்சியோடு
மங்களகரமாக திரும்பி வருவீர்கள்.
உங்களுடைய
ஆரம்பம் எப்படியோ அப்படித்தான் முடிவும் இருக்கும். உங்களின் அகம் எப்படியோ அப்படித்தான்
புறமும் இருக்கும்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
கோதுமையின்
மகிமை
பொன் ஒன்றுக்குச் சமமானது கோதுமையின் விசேஷம்,
உளுத்துப்போன கோதுமை நல்ல அரிசியைவிட
சத்தானது. சோற்றுப்பானையை வைரப்பனையாக ஆக்கிவிடும். இரத்தத்தை உண்டாக்கும் உணவை உண்ண வேண்டும்.
நாம் தனியாளாக இருந்தால் என்ன வேண்டும்? (ஒன்றும்
தேவையில்லை) குடும்பத்தை கண்ணீரில் கலங்கவிடக் கூடாது மரியாதையுடன் வைப்பதற்கு
நாம் சம்பாத்தியம் செய்ய வேண்டும். நாம்
தெம்பற்றவர்களாக சும்மா இருந்தாலும் குடும்பத்திற்கும்
பிள்ளைகளுக்கும் மிகத்தைரியமாக இருக்கும். உதவியாகவும் இருக்கும் சுவரை வைத்துத்தான் சித்திரம்
வரைய வேண்டும். நாம் நல்ல தேக
ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் நமது குடும்பம் குழந்தையை
கவனிக்க முடியும். அமலும் செய்ய முடியும்.
இஸ்லாத்திற்கு சேவையும் செய்ய முடியும்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
வலியாக
இருந்தாலும் பெண்களை பார்ப்பது ஹராம்
பனைக்குளத்திற்கு
வந்துவிட:டு ஊருக்கு திரும்பும்போது
பஸ் ஏறுவதற்காக நாங்கள் இருவரும் நரிப்பாலத்தை
கடந்து பஸ் நிற்குமிடத்திற்கு வந்தோம்.
அங்கே பெண்கள் கூட்டமாக இருந்தார்கள்
உடனே பாபா அவர்கள் வலியாக
இருந்தாலும் பெண்களை பார்ப்பது ஹராம்
என்று சொன்னது இன்னும் எனது
நினைவை விட்டு நீங்கவில்லை.
அறிவிப்பாளர்:
ளுழு.முஹம்மது காசிம், அபிராமம்
வெள்ளிக்கிழமை
பயணம் செய்ய வேண்டாம்
நான் பாபா அவர்களை சந்திப்பதற்காக
வெள்ளிக்கிழமைகளில் பனைக்குளத்திற்கு போவது வழக்கம். ஒருசமயம்
வெள்ளிக்கிழமைகளில் வரவேண்டாம் பஸ் ரிப்பேராகி வழியில்
நின்றுவிட்டால் ஜூம்ஆ கிடைக்காமல் போய்விடும்
என உபதேசம் செய்துவிட்டு உண்மையில்
என்னை தேடிவந்தால் இன்ஷா அல்லாஹ் என்ன
கிழமையானாலும் வெளியூருக்குப் போகாமலேயே எனது சந்திப்புக் கிடைக்குமென்று
உறுதியாகச் சொன்னார்கள். அவ்வாறே சந்தித்தும் வந்தோம்.
அறிவிப்பாளர்:
ளுழு.முஹம்மது காசிம், அபிராமம்
எந்த இமாமையும் புறக்கணிக்கக் கூடாது
பாபா வலியுல்லாஹ் அவர்கள் விருந்துண்ணும் போது
ருசியான பதார்த்தங்களை எடுத்து சாப்பிடவே மாட்டார்கள்.
இதனை பலமுறை நான் நேரில்
பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு அவர்கள்
தமது நப்ஸை கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
அவர்கள் ஹனபி மத்ஹபை சார்ந்தவர்கள்
சுருமீன் சாப்பிடுவீர்களா என்று கேட்டேன். சறுர்முpனு; ஹனுபுP முது;ஹபுக்காரர்களுக்கு மக்ரூஹ் அதேநேரம் விருந்துக்கு
போனால் சுறாமீன் சாப்பிடுவேன் எங்களுடைய வீட்டில் வாங்கி சமைக்க மாட்டோம்.
அதேநேரம் எந்த இமாமையும் புறக்கணிக்கக்
கூடாது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: ளுழு.முஹம்மது காசிம்,
அபிராமம்
புனித ஹஜ்ஜை நிறைவேற்றி வந்தபின்
வசதி வாய்ப்புற்றோர் ஹாஜ்ஜூச் செய்திட வலியுறுத்தினர்
பாபா வலியுல்லாஹ் அவர்கள் எதை சொன்னார்களோ
அதை செய்தார்கள். எதை செய்தார்களோ அதையே
சொன்னார்கள். மக்கா சென்று ஹஜ்ஜூக்
கடமையை நிறைவேற்றி விட்டு வந்தபின் வசதிபடைத்தோரிடம்
மக்கா சென்று ஹஜ்ஜூச் செய்யுமாறு
உபதேசித்தார்கள்.
அறிவிப்பாளர்:
ளுழு.முஹம்மது காசிம், அபிராமம்
தஸ்பீஹ்
மணி வைத்திருக்க வேண்டும், என்னை சந்திக்க வந்தால்
நேராக ஊரிலிருந்து வரவேண்டும், கூட்டுச் சேர்ந்து வரக்கூடாது
எங்கள்
ஷைகுனா மஹான் பாபா தம்மை
சந்திக்கவரும் நேசர்களிடம் கல்வத்து நாயகத்தை பற்றி கூறுவார்கள். கல்வந்து
நாயகம் அவர்கள் சில்லா இருக்கும்
போது அவர்களை யாராவது சந்திக்க
வந்தால் அவர்களை உள்ளே அழைக்குமுன்
இண்டு கேள்விகளை கேட்பார்கள். தங்கள் கையில் தஸ்வீஹ்
மணி உள்ளதா? அடுத்து என்னை
சந்திக்க நேராக வருகிறீர்களா? அல்லத
வநத இடத்தில் கேள்விப்பட்டு வருகிறீர்களா? என்று கேட்பார்கள் தஸ்பீஹ்
மணி கையில் உள்ளதென்றும், ஊரிலிருந்து
நேராக தங்களை காணுவதற்காகத்தான் வருகிறேன்
என்று சொன்னால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார்கள்.
தஸ்பீஹ் மணி இல்லாதவர்களை வாங்கி
வருமாறும் வந்த இடத்தில் கேள்விப்பட்டு
வந்ததாகக் கூறினால் ஊருக்குப் போய்விட்டு என்னைப் பார்க்க நேரடியாக
வாருங்கள் என்றும் கூறி விடுவார்கள்.
இந்த முறையை பாபாவை காண
வருவோரிடமும் சொல்லிக் காண்பித்து தஸ்பிஹ் மணிவைத்துக் கொள்ளுமாறும்,
என்னை பார்க்க வருவோர் நேராக
தன்னை பார்க்க வருமாறும், அதேபோல
நேராகத் திரும்பிப் போய்விடவேண்டுமென்றும், என்னைக்கான வரும்போது யாரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு வரக்கூடாதென்றும், அவர்களாக வழியில் வந்து சேர்ந்து
கொண்டால் பரவாயில்லை என்றும் பலமுறை கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
புர்தா
ஹரீபின் மகிமை
பேரையூர்
அப்துல்அஸீஸ் ஆலம் அவர்களின் கடையை
வணிகவரித்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனைசெய்து
கணக்குப் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டுபோய் கோர்ட்டில்
வழக்குத் தொடுத்து விட்டனர். இதனால் கடுமையான தண்டனையும்,
அபராதமும் விதித்து விடுவார்களென எண்ணிய அவர்கள் பாபா
அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறி
முறையிட்டார்கள். அதற்கு பாபா அவர்கள்
பயப்பட வேண்டாம் கோர்ட்டக்குப் போகு முன்வரை ஒரு
பள்ளிவாசலில் அமர்ந்து புர்h ஷரீபை ஓதிக்கொண்டேயிருந்து
கோர்ட்டுக்கு போகும் தினத்தன்று கோர்ட்டுக்கு
போங்களென்று சொன்னார்கள். அதன்படி அவர் ஓதிவிட்டு
கோர்ட்டுக்கு போனார் கோர்ட்டார் கணக்குகளை
எல்லாம் பார்த்துவிட்டு இதில் தவறு ஒன்றுமில்லை
இதை தள்ளுபடி செய்கிறேன் என்று தீர்ப்பளித்தனர். இதைக்கண்ட
ஆலிம் அவர்கள் பேராச்சரியமும் பெருமகிழ்ச்சியும்
கொண்டார்கள்.
அறிவிப்பாளர்:
முஹம்மது முபாரக் ஆலிம், பேரையூர்
அஸீஸ் ஆலிம் கூறியது
பளிங்கு
மாளிகை
எங்கள்
ஷைகுனா பாபா வலியுல்லாஹ் அவர்கள்
என்னை நோக்கி, முபாரக் நான்
பளிங்கினாலேயே வீடுகட்டி இருப்பேன் ஏன் கட்டவில்லை தெரியுமா?
என்றார்கள்.
மூதேவி, பேய். பிசாசு,
ஷைத்தான் (குணம் உள்ளவர்கள்) வந்து
இருந்துகொண்டு போக மாட்டார்கள், அதனால்தான்
கட்டவில்லை என்றார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஈமானுக்காக
துஆ செய்ய வேண்டும்
பாபா என்னை அதிகமாக ஸலவாத்து
ஓதி வாருங்கள் என்றார்கள். புர்தா ஓதிவாருங்கள் அதில்
அதிகமான பலனுண்டு என்றார்கள். தஹஜ்ஜத் தொழுகையை தொடர்ந்து
தொழுது வாருங்கள்
என்றார்கள். நான் பாபாவை சந்திக்கும்
போதெல்லாம் ஈமானுக்காக துஆ செய்யுபடி கேட்பேன்.
அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு
என்ன? அப்துர்ரஸ்ஸாக் உங்களுடைய ஊரிலிருந்து வருவோரெல்லாம் எங்களுக்கு அது வேண்டும் இது
வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால்
நீங்க் வரும் போதெல்லாம் ஈமானுக்காக
துஆ செய்யுங்களென்று கேட்கிறீர்களே என்பார்கள். ஒருசமயம் பாபா என்னை தினமும்
12 தடவை வீதம் 40 நாட்களுக்கு புர்தா ஷரீப் ஓதும்படி
கூறினார்கள். இதன்மூலம் நான் பல்வேறு பயன்களை
கண்டேன்.
அறிவிப்பாளர்:
PNமு. அப்துர்ரஸ்ஸாக், பேரையூர்
தாயாரை
கொல்லவிருந்தவரை தடுத்தனர் பாபா
மஹான் பாபா அவர்கள் பனைக்குளம்
பள்ளிவாசலிலிருந்து புழு ஊரணிக்குச் செல்லும்
ஒற்றையடி பாதையில் திடீரென்று சென்றபோது ஐக்கிய முஸ்லிம் சங்கத்திற்குள்
இருந்த ரவுண்டானாவில் சிலர் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள். அப்போது அந்த ஒற்றையடி
பாதையில் பாபா நின்றுகொண்டு அந்த
சதுக்கத்தில் இருந்த ஒருவரை அழைத்தார்கள்.
அவர் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு அழகன்குளத்திற்கு
போய்விட்டு திரும்பி வந்தார்கள். போகும்போதும், வரும்போதும் அவரிடம் நடந்துகொள்ள வேண்டிய
முறையையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே வந்தார்கள். இந்நிலையில் அவர் தனது தாயாரின்மீது
கடும் கோபம்கொண்டு அவரை குத்திக் கொலை
செய்ய வேண்டுமென எண்ணி கத்தியை மறைத்து
வைத்திருந்தார். பாபா அவர்கள் தாயாரிடம்
எத்தனை அன்பாக நடந்துகொள்ள வேண்டுமென்று
பல ஹதீஸ்களை எடுத்துக்கூறியும் அவர் மனம் மாறாமல்
அதே கோபத்துடன் இருந்தார். இறுதியில் அவர் தமது அக்குளில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுக்குமாறு பாபா
கூறியதும் அவர் திடுக்கிட்டுப் போய்
ஒன்றுமில்லை என்றார். பாபாவே அவர் அக்குளில்
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நீங்கள்
உங்களுடைய தாயாரை கத்தியால் குத்தப்போவதை
அல்லாஹ் எனக்கு அறிவித்து அதை
தடுக்கச் சொன்னார். இத்தனை சொல்லியும் உங்களுடைய
மனம் மாறவில்லை. இனிமேல் இப்படியெல்லாம் நடக்கக்
கூடாதென்று சொல்லி அனுப்பி வைத்தார்களாம்
பாபா, இந்த நிகழ்ச்சியை அவரே
கூறி தனது பெயரை வெளியிட
வேண்டாமென்று கூறினார்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
யாருக்கு
தர்மம் கொடுக்க வேண்டும்ஃ
ஒருபெரிய
ஷைகிடம் சிஷ்யராக இருந்த சீமான் ஒருவர்
தாம் ஸகாத்துக் கொடுக்க அனுமதி கேட்டார்.
மிகவும் கெஞ்சி வேண்டியபின் அந்தச்
சீமானிடம் ஷைகு சொன்னார்கள். தகுதியுள்ளர்வர்களை
பார்த்து கொடுங்கள் என்றார்கள். அப்போது அவர் ஸகாத்துக்குரிய
காசுகளாக பல தங்க மூட்டைகளை
கட்டி வைத்திருந்தார். அதில் ஒரு மூட்டையை
எடுத்துக்கொண்டு அதற்குத் தகுதியான ஆளைத்தேடி ஊர் முழுவதும் அலைந்தார்
ஒருவரும் அவருக்குத் தென்படவில்லை. இறுதியில் ஒரு முச்சந்தியில் இரு
கால்களும், இரு கைகளும் இல்லாத
ஒரு மூடவனை கண்டார். இவர்தான்
மிகவுமு; தகுதியான ஆளென்று எண்ணியவர் அவரிடமே
அந்த ஒருமூட்டை தங்கக் காசுகளையும் கொடுத்துவிட்டுச்
சென்றார். சில நாட்களுக்குப் பின்மற்றொரு
மூட்டையை எடுத்துக்கொண்டு ஸகாத்தை பெறுவதற்கு தகுதியானவரை
தேடியலைந்தார். அன்றும் ஒருவர்கூட அவருக்குக்
கிடைக்கவில்லை. அந்த முடவன்தான் எக்காலம்
பிறாது உதவியால் வாழ வேண்டியவராக இருக்கிறாரே
அவரிடமே இந்த மூட்டையையும் கொடுக்கலாமென
அவர் இருக்குமிடத்தை நோக்கிச் சென்றார். அப்போது அந்த முடவனை
சுற்றி ஒரு கூட்டம் நின்று
கொண்டிருந்தது. இவரும் அக்கூட்டத்தாரை நோக்கி
மிகவும் குதூகலத்தோடு. பிறந்தால் என்னைப்போல பிறக்க வேண்டும் நான்
ஒருநாள் முச்சந்தியில் இருந்தபோது ஒருவர் ஒரு தங்க
மூட்டையை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அதை கொண்டு இந்த
ஊரிலேயே உயர்தரமான ஹோட்டலில் தங்கி லண்டனிலிருந்து மிகவும்
அழகான ஒரு விலைமாதை தருவித்தேன்.
அத்துடன் உயர்ந்த வகை மதுபானங்களையும்
வரவழைத்தேன். இந்த ஒருமாதமும் அவற்றை
மிகவுமு; சந்தோஷமாக அனுபவித்துவிட்டு இன்றுதான் வருகிறேன் என்று சொன்னதும் அச்சீமான்
துடித்துப்போய் வேதனைப்பட்டவராக நடந்த விஷயங்கள் அனைத்தையும்
தமது ஷைகிடம் வந்து கூறினார்.
அதைக்கேட்ட ஷைகவர்கள் அவன் செய்த பாவங்களனைத்தும்
உன்மீதே எழுதப்பட்டு விட்டதென்று சொல்ல அதைக்கேட்ட சீமான்
முன்னைவிட பன்மடங்கு வேதனையடைந்தார். அதன்பின் சிறிது காலம்சென்று திரும்பவும்
தமது ஷைகிட்ம ஸகாத்துக் கொடுக்க
அனுமதி தாருங்களென்று வேண்டினார். ஷைகவர்கள் பதிலேதும் தரவில்லை. இச்சம்பவம் நடந்து நீண்ட நாட்களுக்குப்
பின் ஒருநாள் ஒரு நாலணாவை
ஷைகவர்கள் அந்தச் சீமானிடம் கொடுத்து
இதை நீங்கள் காலையில் உங்களுடைய
வீட்டுக்கதவை திறக்கும்போது யார் எதிரில் தெரிகிறாரோ
அவருடைய கையில் கொடுங்கள். பின்னர்
அதை அவர் என்ன செய்கிறாரென்று
அவரைப் பின்தொடர்ந்து சென்று பார்த்துவிட்டு வந்து
என்னிடம் சொல்லுங்கள் என்றார்கள். அவரும் காலையில் அவரது
வீட்டுக்கதவை திறந்தபோது எதிரில் உயர்வகை ஷேர்வானியும்,
பேண்டும், டர்க்கி தொப்பியும் அணிந்த
மிகக் கம்பீரமான ஒருசீமானை போன்றவர் எதிரில் நிற்பதைக் கண்டு
சீமான் பிரமித்துப்போய் விட்டார். அத்துடன் எதிரில் நிற்பவர் வசதி
படைத்தவர் போல் தெரிகிறார். இந்த
நாணாவை கொண்டுபோய் அவரிடம் கொடுத்தால் அவர்
நம்மை என்னசெய்வாரோ என யோசித்தவர், என்ன
நடந்தாலும் சரி, நமது ஷைகவர்கள்
கூறியவாறு நாம் முதன்முதல் சந்தித்த
இவரிடமே இந்த நாலணாவை கொடுப்போமென்று
எண்ணிக்கொடுத்தார்இ
அதை மிகவும் ஆவலோடு
பெற்றுக்கொண்ட அவர் விரைவாக ஒருதிசையை
நோக்கிச் சென்றார். அவரை பின்தொடர்ந்து சீமானும்
சென்றார். நாலணாவை பெற்றவர் வேகமாக
ஒரு கடைக்குச் சென்று அந்த நாலணாவுக்கும்
கோதுமை மாவை வாங்கிக் கொண்டு
மற்றொரு வழியாகச் சென்று ஒரு குடிசைக்குள்
நுழைந்து அங்கிருந்தோரை நோக்கி இந்த மாவில்
ஒரு பகுதியை கூழ் காய்ச்சுங்கள்,
மறுபகுதியை வைத்து வழடுங்களென்று கூறினார்.
அந்தக் குடிசைக்குள் சில பெண்களுடைய பேச்சுக்
குரல்களும் கேட்டன. பின்தொடர்ந்து வந்த
சீமானும் மாவை வாங்கிக்கொண்டு வந்தவரின்
பேச்சையும், உள்ளேயிருந்த பெண்களின் பேச்சையும் கேட்டுக்கொண்டு வெளியே நின்றிருந்தார். அக்குடிசையில்
இருந்தவர்கள் கூழைக்காய்ச்சி குடித்தபின் அந்தக்காசை கொடுத்த சீமானுக்காக இறiவா அவருக்கு நிறைந்த
பாக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் சிறப்பான
உயர்வையும் மேலும் பல நலன்களையும்
தந்தருள்வாயாக என துஆ செய்து
முடித்தபின் அந்தக்காசை வாங்கியவர் குடிசைக்குள்ளிலிருந்து வெளியே வந்தார். வந்தவர்
அந்தச் சீமான் நிற்பதை கண்டு
நேரிலும் அவருக்காக துஆ செய்தார். அந்தச்
சீமான் அவருடைய நிலையை விசாரிக்க
அவர் நானும் என் மனைவியுமு;
எனது குழந்தைகளான ஏழு குமர்களும் இக்குடிiசியல் தான் வாழந்து
வருகிறோம். நான் உடுத்தியுள்ள இந்த
ஒரு ஆடையை தவிர வேறு
ஆடை என்னிடம் கிடையாது. இதை நான் வெளியே
வரும்போதுதான் அணிந்துகொண்டு வருவேன் எனது மனைவிக்கும்
குழந்தைகளுக்கும் ஆடையென்று எதுவுமே கிடையாது. நான்
வீட்டுக்குள் நுழையும்போது எனது குழந்தைகள் வீட்டுக்குள்
தோண்டப்பட்ட குழியில் இறங்கி தங்களின் உடலை
மறைத்துக்கொள்வார்கள். நான் தினமும் கூலிவேலை
செய்து அதிலிருந்து கிடைக்கும் சொற்பக்காசை கொண்டு உணவை வாங்கி
உண்டு வாழ்ந்து வருகிறோம். ஆனால் மூன்று நாட்களாக
எந்த வேலையும் கிடைக்காததால் எனது குழந்தைகளனைவரும் பசியால்
துடித்துக் கொண்டிருந்தார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல்
வேலை ஏதாவது கிடைக்குமா என்றுதேடி
வெளியே வந்தேன் எதுவும் கிடைக்கவில்லை
இந்நிலையில் உங்களுடைய வீதிவழியாக வரும்போது
உங்களுடைய வீட்டு வாசலுக்குப் பக்கத்தில்
ஒரு செத்தகோழி கிடப்பதை கண்டு இதையாவது எடுத்துக்
கொண்டு போய் நமது குழந்தைகளின்
உயிரை காப்பாற்றலாமே என எண்ணித்தான் நின்று
கொண்டிருந்தேன். அதேநேரம் நாம் எடுப்பதை யாரும்
பார்த்துவிடக் கூடாதே என யோசித்துக்கொண்டிருந்த
போதுதான் திடீரென உங்களுடைய வீட்டின்
கதவு திறக்கப்பட்டு தாங்கள் நாலணாவை கொடுத்தீர்கள்
அதைக் கொண்டுதான் கோதுமைமாவு வாங்கி கூழ்காய்ச்சி எங்களின்
பசியை போக்கிக்கொண்டோம். இதுதான் எங்களின் நிலை
என்று கூறினார்.
அதைக்கேட்ட சீமான் தமது ஷைகிடம்
சென்று நடந்தவை அனைத்தையும் கூறினார்.
மூன்று நர்கள் பசித்திருந்தும் கூட
எவரிடமும் காசு கேட்காமல் செத்த
கோழியையாவது எடுத்துச் சமைத்து தமது குழந்தைகளை
காப்பாற்றலாமே என எண்ணினாரே அவர்
போன்றோருக்குத் தான் தர்மம் செய்ய
வேண்டும். நீரும் எவ்வளவோ திரவியத்தை
கொடுத்தீர் அது எவ்வளவு பாவத்தை
உமக்கு சம்பாதித்துத் தந்தது. அதேநேரம் ஒரு
நாலணா எத்தனை புண்ணியத்தை தேடித்தந்தது
பார்த்தீரா? என்றார்கள். உலகில் எவ்வளவோ பேர்
இருக்கிறார்கள் அவர்களும் பட்டினி கிடந்து இறந்து
போகிறார்கள். ஆனால் யாரிடமும் கேட்க
மாட்டார்கள் இப்படிப்பட்டடோரை தெரிந்து எவ்வளவு தர்மம் செய்தாலும்
அது நன்மையை தந்துகொண்டே இருக்குமென்று
கூறி அந்த மனிதருக்கும் அவரது
குமருகளுக்கும் நிறைவாக தர்மம் செய்யுமாறு
சொல்ல, அந்தச்சீமான் நாலணாவை பெற்றாரே அவருக்கும்
அவருடைய குழந்தைகளுக்கும் அழகான பங்களாக்களை கட்டிக்கொடுத்து
அந்த ஏழு குமருகளுக்கும் வசதி
படைத்தவர்களாகப் பார்த்து திருமணமும் செய்துகொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என மஹான் பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
மேன்மக்களாக
வேண்டுமா?
சுத்த பரிபூரண சுகவாசி தன்னிலோர்
ஒரு சொட்டாகிலும் தொட்டவர் மேன்மக்கள் தான் என்று பாபா
கூறினார்கள்.
கருத்து:
நல்லோர் மீது கடுகளவு நேசம்
வைத்தாலும் வைத்தவர்கள் மேன்மக்களாகி விடுவார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நாம் அமர்ந்து கொண்டு பிறரை நி;ற்கவைக்க வேண்டாம்
நாம் அமர்ந்திருந்து கொண்டு பிறரை நிற்க
வைத்துக் கொண்டிருந்தால் அமர்ந்திருப்பவர் நரகவாதி என்ற பாபா
சொன்னார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அக்கிரமக்காரனுக்கும்,
அநியாயக்காரனுக்கும் நாம்
அடங்கி
கட்டுப்பட்டிருக்கக் கூடாது
அக்கிரமக்காரனுக்கும்
அநியாயக்காரனுக்கும் நாம் அடங்கி கட்டுப்பட்டிருந்தால்
அநியாயக்காரன் நரகத்திற்கு போவதற்கு நாம்தான் காரியஷ்தன் என பாபா சொன்னார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பாங்கு
சொல்லும் போது பேச வேண்டாம்
பாங்கு சொல்லும்போது பேசிக்
கொண்டிருப்பவர் நரகவாதி என பாபா
சொன்னார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
தொலைவில்
உள்ளதை சமீபமாக்கிக் கொள்க
தொலைவில்
உள்ளதை சமீபமாக்கிக் கொள்ளுங்கள் சமீபமாக உள்ளதை தொலைவிலாக்கிக்
கொள்ளாதீர்கள் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஒரு ஆணுக்கு மனைவியை கொடுத்தது
மூன்று காரியத்திற்காக
1. குழந்தை பாக்கியம் கிடைப்பதற்காக
2. பணிவிடைக்காக
3. ஒரு ஆண் தவறாக
நடக்காமலிக்க என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
யாஅல்லாஹ்
என்னை காட்டிக் கொடுத்து விடாதே
அல்லாஹ்விடம்
நான் கேட்டுக்கொண்டே இருந்தேன் யஅல்லாஹ் என்னை மக்களிடம் காட்டிக்
கொடுத்து விடாதேயென்று காரணம் மக்கள் என்னை
சூழ்ந்து கொண்டு இபாதத்துச் செய்ய
விடாமல் தடுத்து விடுவார்கள் என்று
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
நேரங்களின்
பயன்கள்
பகல்
12 மணி முதல் இரவு 12 மணிவரை
'மௌத்' (இறப்பு) உடைய தண்ணீர்.
இரவு 12 மணிமுதல் பகல் 12 மணிவரை 'ஹயாத்'
உயிருள்ள தண்ணீர் என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
துஆ கபூலாகும் நேரம்
இரவு
12 மணிமுதல் பஜ்ர் வரை
ரிஸ்கு
(உணவு) அளக்கும் நேரம்
பஜ்ரிலிருந்து காலை 8.15 மணிவரை
புதுமனை
புகும் நேரம்
வெள்ளி இரவு 1 மணிக்கு
என பாபா கூறினார்கள்
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கோடியிருந்தாலும்
தேடுவதன் அவசியம்
கோடியிருந்தாலும் அடுத்த நேரம் குடிக்கக்
கஞ்சியில்லா தவன்போல் பணம் தேட வேண்டுமென
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பெண்களை
விரைவில் நிமிர்த்த வேண்டாம்
பெண்கள் கோணல் (வளைவான)
எலும்பால் படைக்கப்பட்டவர்கள். அவர்களை விரைவில் நிமிர்த்த
எண்ண வேண்டாமென பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
மையித்துத்
தொழுகையின் பலன்
மையித்துத் தொழுகை தொழுதால் நபியவர்களின்
காலத்தில் ஸஹாபாக்களோடு தொழுத நன்மை கிடைக்கும்
என பாபா கூறினார்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கறி விற்பவர் கறி சாப்பிட வேண்டாம்
கறி விற்பவர் கறி
சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் ஏழையாகி விடுவார். தனக்கு
பிறருடைய கடையில் வாங்கிக் கொள்ளவேண்டும்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஒரு விஷயம் யாருக்கெல்லாம் தெரியலாம்
ஒரு விஷயம் தனக்கு
மட்டும் தெரிய வேண்டும். தன்னைத்
தவிர மற்றவர்களுக்கு தெரியக்கூடாது. சிலவிஷயம் தனக்கும் தன்னல்லாத இன்னொருவருக்கும் தவிர வேறு யாருக்கும்
தெரியக் கூடாது. சிலவிஷயம் எல்லோருக்கும்
தெரியலாம் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஊசி கொண்டு எடுப்பதை ஊசி
கொண்டுதான் எடுக்க வேண்டும்
ஊசிகொண்டு எடுப்பதை ஊசி கொண்டுதான் எடுக்க
வேண்டும். கோடாலி கொண்ட எடுப்பதை
கோடாலி கொண்டு தான் எடுக்க
வேண்டும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
டாக்டரிடம்
காட்ட வேண்டியதை டாக்டரிடம் தான் காட்ட வேண்டும்
டாக்டரிடம் காட்டுவதை டாக்டரிடம் காட்ட வேண்டும் டாக்டர்
கைவிட்டு விட்டால் நம்மிடம் வரவும் என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பிறர் நமக்குச் செய்யும் வேலையை நாம் அவருக்குச்
செய்ய வேண்டும்
நானும் பாபாவும் வாலாந்தரவையிலிருந்து
பனைக்குளம் வரும்போது அவர்கள் கால் கட்டையை
கையில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அப்போது நான் பாபாவிடம்
கால்கட்டையை நான் கொண்டு வருகிறேனென்று
கேட்டேன். நமக்குப் பிறர் பார்க்கும் வேலையை
நாமும் அவருக்குப் பார்க்க தயாராக இருந்தால்
கால்கட்டையை பிறரிடம் கொடுக்கலாம் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பிறருக்கு
தர்மம் கொடுத்தால் அவருக்கு
பலனளிக்கும்
வகையில் கொடுக்க வேண்டும்
பிறருக்கு
தர்மம் கொடுத்தால் சிறிது சிறிதாக பிரித்து
பலருக்கு பங்கிட்டுக் கொடுப்பதில் எவருடைய கஷ்டமும் நீங்காது
நல்லவர்களை தேடி அவர்கள் கஷ்டம்
நீங்கும் வகையில் ஓரளவுக்கு தொகை
கொடுப்பதே மிகவும் நல்லது என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
முப்பது
வயதுக்குள் மூன்றில் ஒன்றை தேடிக்கொள்
30 வயதுக்குள் மூன்றில் ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும்.
1. செல்வம் (நிறைந்த திரவியம்)
2. குழந்தைகள் (ஒளலாதுகள்)
3. மார்க்க நிபுணராகிக் கொள்ளுதல்
போகாத இடம் தனில் போக
வேண்டாம்
போகாத இடம் தனில்
போக வேண்டாம் போக விட்டுப் புறம்
சொல்லித் திரிய வேண்டாம் என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
குற்றம்
பார்க்க வேண்டாம்
குற்றம் பார்க்கில் சுற்றமில்லை
என பாபா கூறினார்கள்
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
மிதிகொப்பு
வேண்டும் அல்லது பிடி கொப்பு
வேண்டும்
ஒருமிதி
கொப்பு அல்லது ஒருபிடி கொப்பு
வேண்டும்
கருத்து
: ஒருதொழிலை விடுமுன் இன்னொரு தொழிலை வைத்துக்கொள்ள
வேண்டும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஆரம்பம்
எதுவோ கடைசியும் அதுவே
ஆரம்பம் விதை கடைசியும்
விதை மனிதன் முதலில் மண்
முடிவும் மண் என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
இறை மறுப்பாளரின் நேசம் வேண்டாம்
குப்பார்கள் (இறை மறுப்பாளர்கள்) உடனிருப்பது
கக்கூஸில் விரும்பாமலிருந்து உடனே வெளியே வந்து
விடுவது போல் இருக்க வேண்டும்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பெயரைக்
கூறி சரியாக அழைக்க வேண்டும்
சரியான முறையில் பெயரைக்
கூறி அழைப்பது ஒரு துஆவாகும் என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஆறு ரஹ்மத் இறக்கி வைக்கிறான்
சாதாரணமாக (எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி) ஆறு ரஹ்மத்தை
அல்லாஹ் குறைந்த பட்சம் இறக்கி
வைக்கிறான் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
தொழுகையை
விட்டவன் மெத்தையை
விட்டு
குப்பையில் படுத்து விட்டான்
மனிதன்
தொழுகையை விட்டு விட்டால் மெத்தையில்
படுத்துக்கிடப்பவன் குப்பையில் படுக்க நாடி விட்டான்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஒரு இஸ்லாமியன் வீட்டில் யாரெல்லாம் குடியிருக்கிறார்கள்?
ஒரு இஸ்லாமியனுடைய வீட்டில்
அல்லாஹ் நபிகள் நாயகம், வலிமார்கள்,
அன்பியாக்கள் அனைவரும் குடியிருக்கிறார்கள். வீட்டுக்குள் நுழையும்போது அவர்களெல்லாம் இருக்கிறார்களென்று நினைத்து ஸலாம்சொல்லி நுழைய வேண்டும். காபிரானவன்
வீட்டுக்குள் நுழையும்போது இப்லீஸ், நம்ரூத், பிர்அவ்ன், அபூஜஹ்ல் போன்ற அல்லாஹ்வால் சபிக்கப்பட்ட
ரூஹூகள் இருக்கும். அவர்களுடைய வீடுகளில் நுழையும்போது நவூதுபில்லாஹ் (அல்லாஹ் எங்களை காப்பாற்று)
அவூதுபில்லாஹ் (அல்லாஹ் நான் உன்னிடம்
பாதுகாப்பு தேடுகிறேன்) என்று கூற வேண்டுமென
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
இஸ்லாமியனிடம்
இருக்கும் சொத்தின் மகிமை
இஸ்லாமியனிடம்
இருக்கும் சொத்துக்கும் ஒரு காபிரி (இறை
மறுப்பாளனி)டம் இருக்கும் சொத்துக்கும்
என்ன வித்தியாசம் எனில்...
இஸ்லாமியனுக்கு அல்லாஹ் சுவர்க்கலோகத்திலிருந்து அருளை இறக்கி
வைக்கிறான். இதேபோல இஸ்லாமியனுடைய நிலமும்,
காபிருடைய நிலமும் பக்கம் பக்கமாக
இருந்தாலும் இஸ்லாமியனுடைய நிலத்தில் சுவர்க்கலோகத்திலிருந்து மேகங்கள் திரண்டு மழைபொழியும், காவிரானவனுடைய
நிலத்தில் நரகலோகத்திலிருந்து மேகங்கள் திரண்டு மழை பொழியும்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
நஸ்ரானியாகி
இருப்பீர்கள்
என்னிடம் மஹான் பாபா கூறினார்கள்.
ஹக்கீம் நீங்கள் நம்மிடம் வந்திருக்கா
விட்டால் நஸ்ரானியாகிப் போயிருப்பீர்கள் லண்டனில் படிக்கவிருந்த போது.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
சீதேவிகளின்
அடையாளங்கள்
1. தாட்ஷண்யம்
2. தழுமை (மரியாதை)
3. பணிவு
4. மார்க்கத்திற்குப் புறம்பான கூட்டத்தை விட்டும் நீங்கியிருப்பார்கள் மார்க்க மேதைகளுக்கு மரியாதை
செலுத்துவார்கள் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
குடும்ப
வாழ்க்கையில் ஈடுபடுவது எப்போது?
உணவருந்திய பின் குடும்ப வாழ்க்கையில்
ஈடுபடுவது எண்ணற்ற நோய்களை தோற்றுவிக்கும்.
குறைந்தது ஒன்றரை மணிநேரம் அதிகபட்சம்
நான்கு மணிநேர தாமத்திற்குப்பின் குடும்ப
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
முரீது
பெற்றவர் இறந்து போனார்
ஒருவர் தமமு ஷைகிடம்
முரீது கேட்டார். அதற்கவர்கள் சிறிது நாட்கள் போகட்டும்
என்றார்கள். அதை கேட்காமல் இப்போதே
முரீது வேண்டும் என்றார். உடனே ஒரு அறைக்குள்
அழைத்துக் கொண்டுபோய் முரீது கொடுத்தார்கள். சிறிதுநேரம்
கழித்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
தொத்துநோய்கள்
வராமலிருக்க
ஒரு ஊருக்குள் நுழைந்ததும்
ஒரு வெங்காயப் பல் சாப்பிட்டால் அந்த
ஊரிலுள்ள எந்தத் தொத்து நோயும்
வராது என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பொய் சொல்லக் கூடாதவைகள்
1. லஞ்சம் கொடுக்கல், வாங்கல்
2. பிறர் சொத்தை அபகரித்தல்
3. பிறரை கொலை செய்வதற்கு
4. மார்க்க விஷயத்திற்குப் புறம்பாக
தீர்ப்பு கூறுவது (பத்வா கொடுப்பது) என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கொக்கு
தலையில் வெண்ணை வைத்தது போல
கொக்கு தலையில் வெண்ணை
வைத்துப் பிடிப்பது போன்று சிலர் உங்களை
மயக்கி வசப்படுத்த முயல்வார்கள். அவர்களுக்கு இணங்கி தங்கள் மதியை
இழக்கக்கூடாது என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
5 காரியங்களை
விரைவில் நிறைவேற்ற வேண்டும்
1. மையித்தை விரைந்து அடக்கம் செய்தல்
2. வயதுக்கு வந்ததும் பெண்ணை திருமணம் செய்து
கொடுத்தல். காரணம் நோயாளியாகி விடும்,
தவறிவிடும், பைத்தியம் பிடித்து விடும்.
3. பங்கு சொல்லியதும் தொழுதல்
4. நோய்கள் வருமுன் அமல்
செய்தல்
5. கடன் வாங்கியிருந்தால் வசதி
வந்ததும் கொடுத்து விடுதல் என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
வியாபாரத்திற்கு
முக்கியமானவை
1. இடம்
2. முதலீடு
3. ஆள் என பாபா
கூறினார்கள்
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பள்ளிவாசலின்
சிறப்பு
பெரும்பாலான நேரத்தை பள்ளிவாசலில் கழிக்க
வேண்டும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
சுகாதாரம்
ஸ்டாம்பை (தபால் தலைகள்) எச்சில்
தடவி ஒட்டக்கூடாது கலர் (பாட்டில்கள்) சாப்பிடக்கூடாது.
வயிற்றுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பன்,
ரொட்டி சாப்பிடக்கூடாது. சோடா, உப்பு சேர்த்துச்
செய்வதால், அதில் ஒரு சிறிய
கட்டி வயிற்றுக்குச் சென்று விட்டாலும் அது
வயிற்றை துளைத்துவிடும். அச்சிட்ட பேப்பர்களில் உணவு வகைகளை மடிக்கக்
கூடாது அதிலுள்ள நச்சு தேகத்திற்குக் கெடுதி
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
வெள்ளிக்கிழமை
குளித்தல்
வெள்ளிக்கிழமை குளிக்க வேண்டும். அரபிகள்
ஒருவரை திட்டும்போது வெள்ளிக்கிழமை கூடக் குளிக்காதவனே எனத்
திட்டுவார்கள் என்று பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கருவாடு
சாப்பிடுதல்
வேலூரில் கருவாடு சாப்பிடுவோருக்கு பெண்
கொடுக்காமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பழைய ஆணம் (குழம்பு ஃ
சால்னா) சாப்பிட வேண்டாம்
பழைய ஆணம் சாப்பிடக்கூடாது
ஒருபொருளை சமைக்காமல் வைத்து (கறிகளை) ஒருபொருளை
(கறிகளை) சமைத்து வைத்துப் பார்க்கும்போது
சமைக்காமல் வைத்த பொருள் கெடும்பொழுது.
சமைத்துவைத்த பொருளும் கெட்டு விடுகிறது. ஏனெனில்
அப்பொருளில் இருக்கும் நூர் (பிரகாசம்) குறிப்பிட்ட
நேரத்தில் விலகிவிட்டபின் கெட்டுத்தான் போகும் என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஆலிமுக்குச்
செய்த உதவி எனக்குச் செய்த
உதவி
அஸீஸ் ஆலிமுக்குக் கடைவைத்துக் கொடுக்க தாங்கள் செய்த
உதவி எனக்குச் செய்த உதவியாகி விட்டது.
எனக்குச் செய்த உதவி நபிக்ள
நாயகத்திற்குச் செய்த உதவியாகி விட்டது.
நபிகள் நாயத்திற்குச் செய்த உதவி அல்லாஹ்வுக்குச்
செய்த உதவியாகி விட்டது என பாபா
கூறினர் (மஹான் பாபாவின் வேண்டுகோளுக்கு
இணங்க நான் அவருக்கு கடைவைக்க
உதவி செய்தேன்).
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
குட்டுப்பட்டால்
வைரக்கல்லில் குட்டுப்பட வேண்டும்
குட்டுப்பட்டாலும்
வைரக்கல் போட்ட மோதிரத்தால் குட்டுப்பட
வேண்டும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பாவங்கள்
சில பாவங்களை நமது
கண்களால் காணமுடியும். சில பாவங்களை நம்மால்
காணமுடியாது. நம்மை அறியாமலேயே அப்பாவங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
மாடுமுட்ட
வந்தால் எதிர்த்தா நிற்போம்?
மாடுமுட்ட
வந்தால் எதிர்த்தா நிற்போம்? அது வேகமாக வரும்போது
நாம் சற்று விலகிக் கொண்டால்
அதுதானே சுவரில் முட்டி மாண்டு
விடும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கெட்ட காற்றுள்ள இடத்தில் இருக்க வேண்டாம்
நாம் ஒரு மனிதரோடு
இருக்கும்போது அவன் காற்று விட்டு
விட்டால் வீசுதே என அவனோடு
இருக்கக் கூடாது சற்று விலகிக்
கொண்டால் அக்காற்று அவனைத்தான் சுற்றிக் கொண்டிருக்கும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
ஒருவரிடம்
எவ்வாறு பேச வேண்டும்?
பிறருடன் பேசினால் முஹ்யித்தீன் ஆண்டவர்களோடு பேசுவது போன்று பேச
வேண்டும் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
செயல்களனைத்தையும்
தொழுமைகயாக்கிக் கொள்க
உண்ணுவதும், குடிப்பதும் (பருகுவதும்) நடப்பதும் பார்ப்பது அனைத்தையும் நாம் தொழுகையாக ஆக்கிக்
கொள்ளலாம் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
எப்படிப்பட்ட
டாக்டராலும் நீக்க முடியாத வியாதி
மலஜலம் கழிக்குமிடத்தில் காலில்
செருப்பும், தலையை மூடாமலும் சென்றால்
அவருக்குக் கொடியநோய் வரும். உலகில் எப்படிப்பட்ட
டாக்டராலும் அந்நோயை நீக்க முடியாது
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
இரவில்
எண்ணெய் தேய்ப்பது, குடிப்பது வேண்டாம்
1. இரவில் எண்ணெய் தேய்ப்பது.
குடிப்பது கூடாது ஏனெனில் விஷ
ஐந்துக்கள் கடித்தால் விஷம் இறங்காது.
2. குடும்பத்தில் கூடிய நேரத்திலும், உடம்பு
சல்லையான நேரத்திலும் எண்ணெய் தேய்ப்பது கூடாது
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கத்தி போன்றவர்கள் பெண்கள்
ஒருவிரலை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்துக்
கெண்டேயிருந்தால் என்னவாகும்? இரத்தம் முழுவதும் நீங்கி
உடல் பலம் குறைந்து விடும்.
கத்தி போன்றர்கள் பெண்கள். பெண்களிடமும் கொஞ்சம் விலகி சிலசமயம்
படுப்பது நல்லது என பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அல்லாஹ்
இறக்கும் ரஹ்மத்தில் ஓதும் 99.9மூ பிள்ளைகளுக்கு
அல்லாஹூத்த ஆலா உலகிற்கு இறக்கும்
100 ரஹ்மத்தில் 99.9மூ ஓதுகிற பிள்ளைகளுக்கும்,
0.01மூ மற்ற உலகத்தாருக்கும் இறக்கி
அருளுகிறான் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
செருப்பு
அணிவதன் மகத்துவம்
செருப்பில்லாமல் செல்பவரின் காரியம் ஜெயமடையாது (நடக்காது)
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
தொழில்
செய்யாதவனின் இழிநிலை
வியாபாரம்
செய்யாதவன் பொன்னையன் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
40 வயதுக்குப்
பின் வேண்டாதவை
நாற்பது
வயதுக்குப்பின் நல்லெண்ணெய், நெய், சீனி, கருப்பட்டி
கெடுதியாகும். மிளகாய், உப்பு, புளிப்பும் கெடுதியே.
எண்ணெய் நெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்
உபயோகித்தல் நல்லது. கருப்பட்டி, சீனிக்குப்
பதிலாக பனங்கற்கண்டு உபயோகித்தால் கெடுதிவராது என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
40 வயதுக்குப்பின்
பெண்களின் மகத்துவம் குறைந்து விடும்
ஒரு பூரணமான் ஐஸ்கட்டி சிறிது நேரமானதும் கரைந்து
விடுவதுபோல நாற்பது வயதுக்குப்பின் பெண்களின்
மகத்துவமும் குறைந்து விடுகிறது. அதேபோல் ஆண்களின் உடம்பு
உச்ச நிலைக்காகி சுகாதாரம் இறங்கும்படியில் வந்து விடுகிறது என
பாபா கூறினார்கள். அறிவிப்பாளர்: யுமுமு. அப்துல் ஹக்கீம்,
பேரையூர்
தலைமை பதவி வேண்டாம்
நாம் நடந்துகொள்ளும் விதம் நம்மை எல்லோருக்கும்
தலைமையாக இருக்க வேண்டுமென எண்ண
வைக்க வேண்டும். அதே நேரம் நாம்
அந்தத் தலைமை பதவியை ஏற்கக்கூடாது
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அரசுடன்
வியாபாரம் வேண்டாம்
அரசுடன்
எந்த வியாபாரமும் செய்யக்கூடாது என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அமுது துஆ கேட்க வேண்டும்
துஆ கேட்கும்போது அழுகை வராவிட்டாலும் அழுகையை
வரவழைத்து துஆ கேட்க வேண்டும்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
குடும்பஸ்தன்
முடிவைக்க வேண்டாம்
குடும்பத்தார்கள்
முடி வைக்கக்கூடாது. இது மஸ்தான்கள், சன்னியாசிகளின்
வேலையென பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
பஸ்ஸில்
முன்னால் அமர வேண்டாம்
ஹக்கீம்
முன்னால் உட்காருவதால் மயக்கம் வருகிறது என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
கொலை செய்யாதீர்கள்
பணம், காசுக்காக ஒருவரை கொலை செய்யாதீர்கள்
என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
தொழுகையின்
அவசியம்
(தொழாதவன்
உலகில் ஜெயிக்க மாட்டான்)
கையை, காலை கழுவிவிட்டு இரண்டு
முட்டு முட்டத் தெரியாதவன் உலகத்தில்
எதைசெய்து ஜெயிப்பான் என பாபா கேட்டார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அல்லாஹ்
பத்தில் ஒன்பது ரஹ்மத் வரை
கொடுக்கிறான்
அல்லாஹ்
பத்தில் மிகக்கூடியாது ஒன்பது வரை கொடுக்கிறான்.
பத்தையும் ஒருவருக்கு கொடுத்து விடுவதில்லை. சிலருக்கு 1,2,3,4,5,6,7,8,9 எனக் கொடுக்கிறான் என
பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
வலித்தன்மை
யாருக்குக் கிடைக்கும்?
1. ஆலிமுக்கு
2. ஓதுகின்ற பிள்ளைகளுக்கு
3. பெரிய டாக்டருக்கு (தனக்கு
மிஞ்சிய டாக்டர் இல்லையென்ற உயர்வுள்ள
டாக்டருக்கு)
4. தன்னைவிட சீமானில்லை என்னுமளவு சீமான்தனம் உள்ளருக்கு என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
யுமுமு. அப்துல் ஹக்கீம், பேரையூர்
அல்ஹாஜ்
முஹம்மது முபாரக் ஆலிம்
ஒரு ஊருக்குள் நுழைந்தால் அங்குள்ள
வலிமார்களுக்க
ஸலாம் சொல்க
ஒரு ஊருக்குள் நுழையும்போது அங்குள்ள வலிமார்களுக்கு அஸ்லாமு அலைக்கும் யாதார
கவ்மிம் முஃமினீன் என்று சொல்ல வேண்டும்.
அங்குள்ள குறிப்பிட்ட வலிமார்களின் பெயர் நினைவில் இருந்தால்
அவர்களுடைய பெயரை சொல்லியும் ஸலாம்
சொல்லலாம். நாம் சொல்லும் ஊரிலுள்ள
வலிமார்களுக்கு ஸலாம் சொல்லி நுழைந்தால்
அவ்வூரிலிருந்து திரும்பும்வரை அந்த வலிமார்களின் பாதுகாப்பில்
நாம் இருப்போம் என பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நம்மிடம்
வந்துவிட்டு யாரும்
வெறுங்கையோடு
செல்லக்கூடாது
மஹான் பாபாவிடம் வருவோருக்கு தாங்கள் நல்ல நல்ல்
செய்திகளையும், நல்ல வழிமுறைகளையும் அவர்களது
தேவைகள் நிறைவேறுவதற்குரிய வழிகளையும் சொல்லித் தருகிறீர்கள் இந்நிலையில் சில தீயவர்களும் தங்களிடம்
வருகின்றனர். அவர்களுக்கும் பலநல்ல வழிகளை கூறுகிறீர்களே
இதுசரியா? என்று ஒருவர் கேட்க,
அதற்கு பாபா அவர்கள் நம்மிடம்
வந்துவிட்டு யாரும் வெறுங்கையோடு செல்லக்கூடாது
எனக் கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
இன்ஸான்
காமிலே நூறுமுறை படித்தறிந்த மஹான் பாபா
மஹான் பாபா அவர்களும் அவர்களுடைய
நேசர் மதுரை ஆசுவு அப்துர்ரஹீம்
அவர்களும், நானும் ஒரு ஊருக்குச்
சென்றிருந்தோம். அங்குள்ள ஒரு பெரியாரிடம் பேசிக்
கொண்டிருக்கும் போது அவர் மஹான்
பாபாவிடம் தாங்கள் ஞானக்கிரந்தமாகிய இன்ஸான்
காமிலே படித்துள்ளீர்களா? எனக்கேட்க அதற்கு மஹான் பாபா
அவர்கள் நூறுதடமைவ படித்துள்ளேன் என்றனர். அதுகேட்ட அப்பெரியார் ஆச்சரியப்பட்டார்கள்.
குறிப்பு:
அந்த ஞானக்கிரந்தமாகிய இன்ஸான் காமிலில் ஒருசில
பக்கத்தை படித்தால் கூட பாமரர்கள் அதற்குச்
சரியான விளக்கம் தெரியாமல் குழம்பிப்போய் விடுவார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
கூட்டாக
வியாபாரம் செய்யலாமா?
மஹான் பாபாவின் மாணவர் ஆசி முஹம்மது
இப்ராஹீம் அவர்களுக்குக் கூறிய நல்லுரை: தொழில்
செய்தால் கூட்டாகச் செய்யக்கூடாது அப்படியே கூட்டாகச் செய்வதென்றால் முழுப்பொறுப்பையும் உங்களிடம் ஒப்படைத்தால் செய்யலாமென மஹான்பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அ.சி. இப்ராஹீம்
மஹான் பாபாவின் மாணவர், பனைக்குளம்
இருட்டில்
இருக்க வேண்டாம்
மஹான் பாபா பேயன் செய்யிது
முஹம்மது அவர்களை நோக்கி தாங்கள்
எப்பொழுதும் இருட்டில் இருக்க வேண்டாமெனக் கூறியிருந்தார்கள்.
மஹான் பாபா ஒரு சமயம்
புழு ஊரணியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள் நான்
ஐக்கிய முஸ்லிம் சங்கத்திற்கு கிழக்கிலுள்ள ரவுண்டானாவில் அமர்ந்திருந்தேன். மஹான் பாபாவைக் கண்டதும்
சட்டென்று எழுந்து அருகிலுள்ள வேலிக்குப்
பக்கத்தில் இருட்டில்போய் சிறுநீர் கழிப்பதுபோல மறைந்து கொண்டேன். அங்குவந்த
மஹான் பாபா அவர்களுடைய டார்ச்லைட்டை
நான் மறைந்திருந்த இடத்திற்கு சற்று தூரத்தில் அடித்து
இங்கே பாருங்கள் என்றார்கள். அங்கே ஒரு நாகப்பாம்பு
படமெடுத்து நின்று கொண்டிருந்தது. அதைக்கண்டு
நான் திடுக்கிட்டுப் போனேன். அதனால்தான் தங்களை
நான் இருட்டிலிருக்க வேண்டாமெனக் கூறியிருந்தேன் என்றார்கள். இவர் பாபாவுடைய காரியங்களில்
மிகத்தெளிவாகவும் உதவியாளராகவும் இருந்தார்.
அறிவிப்பாளர்:
பேயன் செய்யிது முஹம்மதிடம் கேட்டு
அறிவிப்பது
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
வீட்டுக்குள்
நுழையும்போது ஸலாம் கூறி நுழைய
வேண்டும்
ஒருநாள்
நான் மஹான் பாபா அவர்களின்
இல்லத்;திற்கு சென்றேன். ஸலாம்
சொல்லிவிட்டு வீட்டுக்குள் வாருங்களென்று முபாரக் ஆலம் சொன்னார்கள்.
நானும் ஸலாம் சொல்லி விட்டுத்தான்
வந்தேனென்று சொல்லி சமாளித்தேன். மறுநாள்
மஹான் பாபா கனவில் தோன்றி
ஸ்லாம் சொல்லி விட்டுத்தான் வீட்டுக்குள்
வர வேண்டுமென்று கட்டளையிட்டார்கள். கனவில் மஹான் பாபா
அவர்கள் ஸலாம் சொல்லிவிட்டுத்தான் வீட்டுக்குள்
வரவேண்டுமெனக் கட்டளையிட்டதையும், முதல்நாள் ஸலாம் சொல்லாமல் நான்
வீட்டுக்குள் வந்ததற்கு வருத்தத்தையும் மஹான் பாபா அவர்களின்
மகனார் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களிடம்ட
தெரிவித்துக்கொண்டேன். இதுபோன்று மஹான் பாபா அவர்கள்
நூற்றுக்கணக்கான நல்லுரைகளை எனக்கு தேவைப்படும் போதெல்லாம்
வழங்வி வந்தார்கள்.
அறிவிப்பாளர்:
ளுஆ. முஹம்மது யாஃகூப், கமுதி
யாருக்கு
ஆடை கொடுத்தாலும்
புத்தாடையாகக்
கொடுங்கள்
மஹான் பாபா அவர்களிடம் எவரேனும்
அவர்கள் அணிந்துள்ள ஆடையை கேட்டால் அவர்களை
கடைக்கு அழைத்துச் சென்று நல்ல புத்தாடையாக
வாங்கிக் கொடுப்பார்கள். அத்துடன் அவர்கள் பிறர் அணிந்த
ஆடையை வாங்கி நீங்கள் அணியாதீர்கள்
நீங்கள் அணிந்துள்ள ஆடையை பிறருக்கும் கொடுக்காதீர்கள்.
யாருக்குக் கொடுத்தாலும் புத்தாடையாகவே கொடுங்கள். பிறர் அணிந்த ஆடையை
நாம் அணிந்தால் அவர்களுடைய கஸ்டநிலை நமக்கு வந்துவிடுமென்று மஹான்
பாபா எச்சரித்துள்ளார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தலையணையை
மிதிக்க வேண்டாமென எச்சரித்தனர் மஹான் பாபா
தலையணையையோ,
பழைய துணிகளையோ மதிக்க வேண்டாம் அதனால்
கடுமையான நோய் வருமென்று மஹான்
பாபா அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சோதனையில்
சிக்க வேண்டாம்
சனி, ஞாயிறு நகம். ரோம்
எடுக்க வேண்டாம் கண்டிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் எடுக்க வேண்டாமென்று மஹான்
பாபா கூறினார்கள். இதை ஒரு பெரியார்
தனது சிஷ்ணரிடம் கூறும்போது அப்படி எடுத்தால் சோதனை
வருமென்று கூறினார்கள். அதை சோதித்துப் பார்க்க
வேண்டுமென்று தொடர்ந்து நாற்பத்தோறு வாரம்வரை அவர் நகம் மற்றும்
ரோமத்தை எடுத்து வந்தார் திடீரென்று
ஒருநாள் அவரது விரல் துண்டிக்கப்பட்டதென்று
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சகல தீங்குகளை விட்டும், ஷைத்தானுடைய
தீங்கை
விட்டும் பாதுகாப்பு வேண்டுமா?
மஹான் பாபா அவர்கள் குல்ஹூவல்லாஹ்,
குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின்
நாஸ் ஆகிய இம்மூன்று குறாக்களையும்
ஓதி கையில் ஓதி முகம்,
உடம்பு, கை, கால் முழுவதும்
தடவிக் கொள்ளவும், படுக்குமுன் இதேபோல் ஓதி மூன்றுமுறை
தடவிக்கொண்டால் சகல தீங்குகளை விட்டும்
ஷைத்தானுடைய தீங்கை விட்டும் பாதுகாக்கப்படுவீர்களென
மஹான் பாபா என்னிடம் கூறினார்கள்.
எனது ஷைகு மஹான் பாபா
அவர்கள் கூறியது போன்று நான்
தினமும் ஓதி தடவி வருகிறேன்.
இத்தனை வயதுவரை எந்தத் துன்பமும்,
கஷ்டமு; இன்றி நலமாக இருக்கிறேறென்று
நூறு வயதை நெருங்கிய நல்லகனி
ராவூத்தர் தெம்புடனும் தெளிவுடனும் கூறினார். இவர் நீண்டகாலமாக பள்ளிவாசல்
டிரஸ்டியாகவும், முஸ்லிம்லீக் தியாகி மெல்பெற்ற முஸ்லிம்லீக்
ஊழியராகவும் இருந்து மறைந்தார்.
அறிவிப்பாளர்:
நல்லகனி ராவூத்தர் ளு.தரைக்குடி, சாயல்குடி
வழி
செல்வச்
சீமானாக வேண்டுமா?
தன்னைவிட
சிறந்தவர் யாருமில்லையென என்ன வேண்டும். ஆனால்
வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது. பிறரிடமிருந்து
வாங்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கக்கூடாது. பிறருக்குக்
கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்க வேண்டும்.
இத்தகைய எண்ணமிருந்தால் அவன் செல்வச் சீமனாகி
விடுவான் என மஹான் பாபா
கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபாவின் அன்புநேசர் தையூப்கானுக்கு கூறிய நேர்வழி
ஒருசமயம்
மஹான்பாபா அவர்கள் கோப்பத்தப்பா தர்ஹாவுக்கு
அருகில் நின்று கொண்டிருந்தார்கள். சித்தார்கோட்டையில்
இருந்து அப்துல்காதர் என்பவர் எதிரே வந்தார்.
அவரிடம் மஹான் பாபா கேட்டார்கள்.
அதோ போகிறாரே அவர் தையூப்கான் தானே
என்று. அவர் ஆம் என்று
கூறினார். அதற்கு பாபா அவர்
தனது மகனுடைய விஷயத்தில் மிகவும்
கவலையாக இருக்கிறார். எல்லா விஷயத்தையும் (எனது
மகன்) முபாரக் ஆலிமிடம் கூறியுள்ளேன்.
அவர்களிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று அந்த அப்துல்காதரிடம் மஹான்
பாபா கூறினார்கள். இந்நிலையில் அந்த அப்துல்காதர் ஒருநாள்
கனவு கண்டார். அதை அதிகாலையில் எழுந்ததும்
பாபாவுடைய சிஷ்யர் தையூப்கானிடம் சென்று
கூறினார். மஹான் பாபாவின் மகனார்
முபாரக் ஆலிம் அவர்கள் மூன்று
மாதங்களுக்குப் பின் ஊருக்கு வந்தபோது
அப்துல்காதர் கண்ட கனவை தையூப்கான்
அவர்களிடம் சொன்னார்.
கனவை கண்ட அப்துல்காதரை
நேரில் சந்தித்து முபாரக் ஆலிம் விபரம்
கேட்டார். நான் உண்மையில் இப்படித்தான்
கனவு கண்டேனென்று சொன்னார். தையூப்கானிடம் முபாரக் ஆலிம் கேட்டார்கள்.
பாபாவின் நேசர்களில் பலருக்கு பல தேவைகள் உள்ளன.
தங்களுக்கு இவ்வாறு சொன்னதற்குரிய காரணமென்ன?
அதற்கு தையூப்கான், மஹான் பாபா அவர்களை
எனது ஷைகாக நான் ஏற்றுக்கொண்டது
முதல் ஒவ்வொரு நாளும் நான்
உறங்கப்போகு முன் பாபா கூறிய
உம்மமி ஸலவாத்தை முப்பது முறை ஓதி
அதை பாபாவுக்கு ஹதியா (அன்பளிப்பு) செய்யாமல்
நான் ஒருபோதும் உறங்கியதில்லை என்று கூறினார். அதைக்கேட்ட
முபாரக் ஆலிம், தங்களுக்கு பாபா
சொல்ல நீங்கள் தகுதியானவர் தான்
என்று கூறினார்கள். அதன்பின் நீண்டநாள் உடல் நலமின்றி பல
வைத்தியங்கள் செய்தும் பலனில்லாது போன அவரது மகனுக்கு
மஹான் பாபா கூறிய பக்குவப்படி
பாபாவின் மகனார் தையூப்பானுடைய மகனுக்கு
வைத்தியம் செய்தார். மஹான் பாபா அவர்களின்
துஆவைக் கொண்டும் அல்லாஹ்வுடைய பேரருளை கொண்டும் அவர்
குணமடைந்து இன்றுவரை நன்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஷரீ அத்திற்கு மாறான செயல் நடக்கும்
இடங்களுக்கு மஹான் பாபா அவர்கள்
செல்ல மாட்டார்கள்
வாஹித்
பஸ் அதிபர் மஹான் பாபாவின்
மீது மிக அதிகமான நேசம்
கொண்டவர். அவரது மகனாரின் திருமணத்திற்கு
நாங்கள் மதுரை சென்றோம். சுங்கம்
பள்ளிவாசலில் இருந்துகொண்டு மஹான் பாபா வந்துள்ள
செய்தியை ஒருவர் மூலம் சொல்லியனுப்பினார்கள்.
அதைகேட்டு எங்களை அழைத்துச் செல்ல
ஒருவர் வந்தார். நாங்கள் மஹான் பாபாவுடன்
புறப்பட்டு அவரது இல்லம் நோக்கிச்
சென்றோம். அப்போது ரேடியோ சப்தமும்,
கொட்டுவாத்திய சப்தமும் கேட்டது. இது எங்கேயிருந்து வருகிறது
என பாபா கேட்டார்கள். வாஹித்
பஸ் அதிபர் கௌஸ் ராவுத்தர்
வீட்டில் தான் கேட்கிறது என்று
ஒருவர் கூறினார். அதுகேட்ட பாபா அவர்கள் ஒருகுதிரை
வண்டியை அழைத்து அதில் ஏறிக்கொண்டு
பாபா ஊருக்குப் போய் விடடார்களென்று சொல்லி
விடுங்களென்று கூறியவர்கள் நேராக பஸ் நிலையத்திற்கு
வந்து சேர்ந்தார்கள். அங்கே வந்து பார்த்தால்
பஸ் அதிபர் கௌஸ் ராவுத்தர்
நின்று கொண்டிருக்கிறார். பாபாவை கண்டதும் ஓடோடி
வந்த பஸ் அதிபர் சிறுவர்கள்
றியாத்தனமாக ரேடியோ வைத்து விட்டார்கள்
இப்போது அநத் ரேடியோவும் வாத்தியமும்
போய்விட்டன. ஆதலால் தாங்கள் அவசியம்
திருமணத்திற்கு வரவேண்டுமென்று அழைத்துச் சென்றார். திருமணமும் சிறப்பாக நடந்தேறிற்று இதேபோன்று எத்தனை பெரிய கோடீஸ்வரருடைய
இல்லத்தில் ரேடியோ, வாத்தியங்கள் இருந்தாலும்
செல்ல மாட்டார்கள் பாபா. எங்கள் பகுதியில்
திருமணம் நடக்குமிடங்களில் வாத்தியங்கள் இருந்தால் அங்கும் செல்ல மாட்டார்கள்.
இந்நிலையில் மஹான் பாபா வருகிறார்கள்
என்றறிந்தால் அங்குள்ள ரேடியோ வாத்தியங்களை உடனடியாக
நிறுத்தி விடுவார்கள். ஷரீ அத்தின் படி
நடப்பதில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
n
தொழில்
தெரிந்தபின் சம்பளத்திற்கு இருப்பது ஹாரம்
நாம் தொழில் கற்றுக்கொள்ளும்வரை சம்பளத்திற்கு
இருக்கலாம். கற்றுக்கொண்டபின் சம்பளத்திற்கு இருப்பது ஹராம் என்று மஹான்
பாபா கூறியுள்ளார்கள். நாம் சம்பளத்திற்கு இருந்தால்
நமக்கு வரவேண்டிய இரணமும், செல்வமும் அந்த முதலாளிக்குப் போய்
கொண்டிருக்கும். நாம் ஒருசிறிய பெட்டிக்கடை
வைத்திருந்தால் கூட அந்தச்சிறிய கடை
மூலம் நமக்கு வரவேண்டிய பலகோடி
செல்வமும் நமக்கே அத்தொழில் மூலம்
வந்து விடுமென்று மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக்
ஆலிம்
கோதுமையின்
சிறப்பு
ஒரு உளுத்துப்போன கோதுமை ஒரு பவுனாக
இருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிடவும்
என்று மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
பெண்கள்
வாசலில் அமர வேண்டாம்
உலக (உலக வாழ்க்கை) வேண்டாம்
என்பவர்கள் தான் வாசலில் அமர்வார்கள்
என்று மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
கழக கத்ரை அறிந்தவர்கள் மஹான்
பாபா
கழா கத்ரை அறிந்த மிகப்பெரும்
ஞானியாகவும், பணத்தின் மீது ஆசையில்லாத ஆலிமாகவும்
நான் மஹான் பாபாவைத்தான் கண்டேன்.
அறிவிப்பாளர்:
வாஹித் பஸ் அதிபர் கௌஸ்
ராவுத்தர்
வலிமார்கள்
தான் பெரிய டாக்டர்
வலிமார்கள்
தான் பெரிய டாக்டர் என
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
முஹ்யித்தீன்
ஆண்டவர்களுக்கும் காசு தேவை
முஹ்யித்தீன்
ஆண்டவர்களுக்கும் காசுதேவை. அவர்களுக்கு பசி வந்தால் தனது
பாக்கெட்டிலிருந்து ஒரு குர்ஸை எடுத:துக் கொடுத்துத்தான் ரொட்டி
வாங்கிச் சாப்பிடுவார்கள் என மஹான் பாபா
கூறினார்கள்.
என்கருத்து: முஹ்யித்தீன் ஆண்டவர்களுக்கு மிக அற்புதமான சக்திகளையெல்லாம்
இறைவன் கொடுத்துள்ளான். அவர்கள் பணமோ, பொருளோ
வேண்டுமென நினைத்தால் நினைத்த மாத்திரத்தில் அவர்கள்
கேட்பதை அல்லாஹ் கொடுப்பான் என்பதை
நாம் தெரிந்துள்ளோம். அப்படிப்பட்ட சக்தி படைத்த முஹ்யித்தீன்
ஆண்டவர்களை நாம் நமது தேவைக்காக
அழைத்துவந்து தேவைமுடிந்ததும் முஹ்யித்தீன் ஆண்டவர்களுக்கு காசோ, பணமோ பயணச்
செலவுக்கு பணமோ தேவையில்லையென எண்ணி
அவர்களை அநேகர் பயணம் அனுப்பி
வைத்து விடுகிறார்கள். முஹ்யித்தீன் ஆண்டவர்கள் வாஎன்றால் வரும், போஎன்றால் போகும்.
அவர்களுக்கு நம்மைப் போன்று பணமெல்லாம்
தேவையில்லையென சிலர் எண்ணுகிறார்கள். அவர்கள்
வா என்றால் கோடான கோடி
பணமும் பொருளும் வரும் அதை நல்லவர்களுக்கும்,
ஏழைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விடுவார்கள். அதேநேரம் அவர்களுக்கு தேவையெனில் பசி வந்தால் அவர்கள்
தமது பாக்கெட்டிலிருந்து தான் பணத்தை எடுத்துக்
கொடுத்து ரொட்டி வாங்கி சாப்பிடுவார்கள்.
அவர்களுடைய தேவைக்கும் செலவு செய்வார்கள். இதுதான்
மஹான்களுக்குரிய வழிமுறை என்பதை நாம்
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தாய், தந்தையர் இருப்பது சங்கத்தின் பலம்
ஒன்றுக்கும்
முடியாத பலவீனமான தாய், தந்தை இருப்பது
அவர்களுடைய குழந்தைகளுக்கு ஒரு சிங்கத்திற்குரிய பலம்
இருப்பது போன்று பலம்பெற்று இருப்பார்கள்
என்று மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஆயிரம்
வியாதிக்கு மருந்து
ஒருசிறிய
வெங்காயப்பல் சாப்பிடுவது பேய், பிசாசு மற்றும்
ஆயிரம் வியாதிகளை நீக்கும் அருமருந்து என்று மஹான்பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
காசு பணம் மிஞ்சாது
காசு பணம் மிஞ்சாது (நிற்காது)
தாம் உண்ணும் பொருளில் குடிக்கும்
பொருளில் சிலர் கொஞ்சம்போல் வைத்து
விடுவார்கள் அவ்வாறு மிச்சம் வைப்பவர்களுக்கு
கையில் காசு தங்காது என்று
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
உதவி யாருக்குச் செய்ய வேண்டும்?
நல்லவர்களுக்கும்,
நல்லவைகளுக்கும் உதவி செய்யுங்கள் இவ்வாறே
தீயவர்களுக்கும், தீமைகளுக்கும் உதவி செய்ய வேண்டாம்
என்றும் அதற்கரிய திருமறை வசனத்தை மஹான்
பாபா அவர்கள் அடிக்கடி எடுத்துச்
சொல்வார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஏழை ஜாதிப் புத்தி வேண்டாம்
நாம் இயலாது முடியாது என்று
கூறினால் நீங்கள் ஏழை ஐhதியா? இயலாத முடியாத
அல்லாஹ்வையா நீங்கள் ஈமான் கொண்டுள்ளீர்கள்?
சர்வ வல்லமையும் சக்தியும் படைத்த அல்லாஹ்வை ஈமான்
கொண்டவர்கள் இவ்வாறு சொல்லக்கூடாது என
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சேருவார்
தோஷம் பொல்லாதது
ஒருசமயம்
ஒரு மஹானவர்கள் தமது சிஷ்யர்களுக்கு நற்போதனை
செய்து கொண்டிருக்கும் போது சேருவார் தோஷம்
பொல்லாததென்று கூறினார்கள். அதைக்கேட்ட அவர்களுடைய சிஷ்யர்களில் ஒருவர் நாம் சாதாரணமாக
ஒருவரிடம் பழகுவதால் அவரது தீங்கு நம்மை
எப்படி வந்து தீண்டும்? என்று
ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கந்த ஷைகு நீர் சோதித்துப்பாரும்
என்றார்கள். அதுகேட்ட சிஷ்யர் ஆளில்லாத காட்டில்
நாற்பது நாட்கள்வரை தவம் செய்துவந்தார். அவர்
தவம் செய்து வந்த ஊரணிக்கு
அருகில் யாரும் வருவதில்லை நாற்பது
நாட்கள் முடிந்ததும் அவர் தமது ஷைகிடம்
வந்து என்னிடம் என்ன மாற்றம் தெரிகிறதென்று
கேட்டார் அதுகேட்ட ஷைகவர்கள் உம்மிடம் மாட்டுப்புத்தி உள்ளது என்றார்கள். அதைக்கேட்டு
ஆச்சரியமடைந்த சிஷ்யர் அதை எப்படி
என்னிடம் கண்டீர்கள்? என்று கேட்க உமது
முகத்தில் கொசு ஒன்று வந்து
அமர்ந்தது அதை விரட்டுவதற்கு நீர்
உமது தலையை ஆட்டினீர் இது
மாட்டின் குணம் மனிதர்கள் கொசுவை
கையால்தான் விரட்டுவார்கள் என ஷைகவர்கள் கூறியதைக்கேட்ட
அந்த சிஷ்யர் ஆச்சரியப்பட்டார். ஆம்
நாம் இருந்த காட்டில் மனிதர்கள்
யாரும் வரவில்லை ஆனால் ஒரு எருமைமாடு
மட்டும் மாலை நேரத்தில் சிறிதுநேரம்
மேய்வதற்காக வரும். அதை கண்களால்
மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு அதனுடைய பழக்கம்
வந்து விட்;டதே என்பதை
யோசித்தவர் அதனுடைய குணம் தனக்குள்
வந்துள்ளதை உண்மை தானென தமது
ஷைகிடம் அவர் ஒப்புக்கொண்டார் என
மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
வாகனத்தில்
பாதுகாப்பாக செல்ல வேண்டுமா?
41 முறை
யாநாஃபிவு 41 முறை
யா குத்தூஸ்
என வாகனத்தில் பயணம்
செய்யும்போது ஓதி வந்தால் அந்த
வாகனம் சுக்குநூறாக உடைந்து போனாலும் நமது
உயிருக்கு ஆபத்து எதும் நேராது
என்று மஹான் பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மரியாதை
செய்வதன் அவசியம்
நாம் அமர்ந்திருக்கும் போது ஒருவர் வந்தால்
வந்தவர் நம்மால் மரியாதை செய்யத்
தகுதி வாய்ந்தவரல்ல என்று தெரிந்தாலும் ஒப்புக்காகவாவது
எழுந்து மரியாதை செய்யுங்கள் என்று
மஹான் பாபா கூறினர்.
அறிவிப்பாளர்:
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
No comments:
Post a Comment