Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 4

ஏழுமைல் தூரத்தை பத்து நிமிடத்தில் கடந்த அற்புதம்
       1945ம் ஆண்டு ஒருநாள் பனைக்குளத்திற்குச் சென்று பாபா அவர்களின் நற்போதனைகளில் ஒருவாரம் திளைத்திருந்தேன். திடீரென ஒருநாள் பேரையூருக்கு செல்லலாம் வாருங்களென்று என்னை அழைத்துக்கொண்டு வாலாந்தரவை இரயில்வே ஸ்டேஷனுக்கு மணல்பாதை வழியாக பாபா அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர்.
       மணல்பாதை வழியாக நாங்கள் இருவரும் நடந்து போய் கொண்டிருக்கும் போது இப்போது வரும் மெயில் வண்டியில் (போட்டோ மெயில்) ஏறி நாம் பரமக்குடி வரை செல்ல வேண்டுமெனக் கூற நான் வாலாந்தரவையில் வண்டி நிற்காது என்றேன். நாம் போகும்போது ஏன்நிற்காது? அந்த மெயிலில்தான் போக வேண்டுமெனக் கூறினர் பாபா அவர்கள்.
       இவ்வாறு பேசிக்கொண்டே வாலந்தரவை ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தோம் மெயில் வரும்நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பரமக்குடிக்கு இரண்டு டிக்கெட் எடுக்கச் சொன்னார்கள் நான்போய் டிக்கெட் கேட்க மெயில் இங்கே நிற்காது. மெயிலுக்கு இங்கே டிக்கேட் கொடுக்க மாட்டோம். இராமநாதபுரத்தில் தான் மெயில் நிற்குமென்று ஸ்டேஷன் மாஸ்டர் கூறிவிட்டார்.
       இதனை நான் மஹான்பாபா அவர்களிடம் வந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே மெயிலும் வந்துவிட்டது திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம் மெயில் அங்கே நின்றது. ஏன் நின்றது? என்ன காரணம்? யாருக்கும் தெரியாது சற்று நேரத்தில் மெயில் புறப்பட்டு இராமநாதபுரத்தை நோக்கிச்செல்ல நாம் இந்த மெயிலில் தான் பரமக்குடிக்கு செல்ல வேண்டும் ஆதலால் என்னை திரும்பிப் பாராமல் இராமநாதபுரத்தை நோக்கி நடங்களென்று பாபா அவர்கள் சொல்ல,
       நானும் அவர்கள் கூறியவாறே திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். பாபா எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தனர். சிறிது நேரம்தான் நான் நடந்திருப்பேன் அதற்குள் இராமநாதபுரம் வந்துவிட்டது. வேகமாக பள்ளிவாசலுக்குச் சென்று ஒழுச்செய்யுங்களென்று மஹான் பாபா அவர்கள் கூறினர்.
       பள்ளிவாசலுக்கு வந்து ஒழுச்செய்தோம் ளுஹருடைய நேரம். தொழுது விட்டு இராமநாதபுரம் இரயில்வே ஸ்டேஷனும் சென்றோம். அப்போது தான் அந்த இரயில் வந்து கொண்டிருந்தது டிக்கெட் எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறி அமர்ந்ததும் பாபா அவர்கள் என்னை பார்த்து இந்த மெயிலில் செல்ல முடியாது என்றீர்களே பார்த்தீர்களா? இதே மெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோமென்று கூறினார்கள். இது எனக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது.
       காரணம் நாங்கள் மணல்பாதை வழியாக நடந்து வரும்போது மெயிலில் நாம் பயணம் செய்ய வேண்டுமென்று பாபா கூறினார்கள். ஆனால் வாலாந்தரவையில் மெயில் நிற்காது என்றேன். ஏன் நிற்காது? நிற்கத்தான் செய்யும் என்றனர். அவ்வாறே மெயிலும் வந்து நின்றுவிட்டு புறப்பட்டுப் போனது. மெயில் புறப்பட்ட பின் வாலாந்தரவையில் இருந்து இராமநாதபுரத்திற்கு நடந்து வந்தோம். சுமார் ஏழுமையில் தூரத்தை இத்தனை விரைவாக (பத்து நிமிடங்களில்) கடந்து வந்து விட்டோம். இது மட்டுமா? இராமநாதபுரத்தில் ளுஹரும் தொழுதுவிட்டு இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து அதே மெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் எனில் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது?
அறிவிப்பாளர்: ஆ.கா.ஷம்ஜூகான் அம்பலம், பேரையூர்
குழந்தை பாக்கியம்: முன்னறிவிப்பு
என் மகளுக்கு புத்திர பாக்கியம் இல்லாதிருந்தது. அதுபற்றி நான் மஹான் பாபா அவர்களிடம் சொல்ல, அதற்கவர்கள் திருமணமாகி எத்தனை வருடமாகிறது என்று கேட்டனர். நான் ஆறு வருடங்களாகிறது என்றேன். ஏழு வருடங்கள் சென்றபின் தான் வைத்தியம் செய்ய வேண்டுமெனக் கூறிவிட்டனர். அவர்கள் கூறியவாறு ஏழு வருடங்கள் கழித்தபின் ஒரு பழத்தை ஓதிக் கொடுத்து சாப்பிட்டு வருமாறு கூறினர். அல்லாஹ்வின் கிருபையால் கர்ப்பம் தரித்து பாபாவின் துஆ பரக்கத்தால் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் எனது மகனார் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
மஹானை கண்டார் குணமடைந்தார்
       காரைக்காலை சேர்ந்த ஒருவர் மலேசியாவில் ஜொஹீர் என்னுமிடத்தில் பெரிய வியாபாரியாக இருக்கிறார். அவர் கூறுகிறார். பல ஆண்டுகளாக நான் ஒருநோயால் பாதிக்கப்பட்டு இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலெல்லாம் பல டாக்டர்களிடம் மருத்துவம் செய்தும் குணமாகாமல் கவலையும் அவதியுமுற்ற நிலையில் ஒருநாள் இரவுநேரம் உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது நடுநிதியில் ஒரு பெரியார் எனது கனவில் தோன்றி இன்ன மருந்தை சாப்பிடுங்கள் குணமாகி விடுமென்று கூறிச் சென்றனர். மறுநாள் அவர்கள் கூறியவாறு அந்த மதுந்தை நான் சாப்பிட பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவர்களாலும் தீர்க்கமுடியாத அந்நோய் என்னை விட்டும் முழுமையாக நீங்கி இப்போது நான் நலமாக இருக்கிறேன். அந்த மஹான் நான் அதிகமான துன்பத்தில் உழலும் போதெல்லாம் எனது கனவில் அவ்வவ்போது தோன்றி எனக்குத் தேவையான விளக்கங்களையும் கூறுவதுண்டு.
       இந்நிலையில் இப்பெரியார் யார்? என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருந்தது. மீண்டும் அவர்கள் எனது கனவில் தோன்றியபோது எனக்கு இத்தனை உதவிகளை செய்யும் தாங்கள் யார்? என்று நான்கேட்க அதற்கவர்கள் எனதுபெயர் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் பனைக்குளம் பள்ளிவாசலுக்கு தெற்குப் பக்கமாக அடங்கியுள்ளேன். என்று கூறி மறைத்தனர். ஆனால் பனைக்களம் என்ற ஊரை இதுவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. பல நபர்களிடம் விசாரித்தபோது ஜூஹீரிலேயே பனைக்குளத்தை சேர்ந்தவர்கள் இருப்பதை அறிந்து அவர்களில் ஒருவரிடம் உங்களுடைய ஊரின் பள்ளிவாசலுடைய தெற்குப்பக்கமாக அடங்கி இருப்பவர்கள் யாரென்று கேட்க, அதற்கவர் எங்களுடைய ஊரின் பெரிய ஆலிம்ஷா அவர்கள் மாபெரும் இறைநேசர் என்றும் கூறினார். அதைக்கேட்ட நான் அவர்களை ஸியாரத்துச் செய்ய வேண்டுமென ஆவல்கொண்டு மீண்டும் அவர்களை கனவில் கண்டபோது தங்களை ஸியாரத்துச் செய்வதற்கு அனுமதி தரவேண்டுமென்று கேட்க, அவர்கள் அனுமதி வழங்கியதோடு என்னை ஸியாரத்துச் செய்துவிட்டு. எனது வீட்டிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமல் அங்கிருந்து நேராக ஏர்வாடிக்குச் சென்று அங்கேயும் ஸியாரத்துச் செய்துவிட்டு எங்கேயும் போகாமல் நேராக மலேசியாவுக்கு திரும்பி வந்துவிட வேண்டுமென உத்திரவு கொடுத்தார்களென்று அவர் என்னிடம் கூறினார்.
அறிவிப்பாளர்: மௌலவி இம்தாதுல்லாஹ் ஆலிம்,
பாபாவின் மகனார்
என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கூறியனுப்பி விட்டு
எனக்குமுன் வீட்டுக்கு எதிரில் நின்ற அற்புதம்
       பாபா வலியுல்லாஹ் அவர்களை ஒருமுறை எனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தேன். அதற்கு பாபா அவர்கள் தாங்கள் முன்னால் செல்லுங்கள் நான் வருகிறேனென்று கூறினர். அதைகேட்டு விரைவாக எனது வீட்டை நோக்கிச் சென்றேன் எனது வீட்டை அடைய முக்கால் பர்லாங் தூரம் இருக்கும்போது எதிரே எனது கண்ணுக்குத் தெரிந்த எனது விட்டை பார்க்க எனது வீட்டுக்கு எதிரே பாபா அவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு நான் ஆச்சரியப்பட்டு வேகமாக சென்றேன். இக்காட்சியை கண்ட எனக்கு மஹான் பாபா அவர்களின் மகத்துவழும் மாட்சிமையும் நன்கு வளங்கிற்று.
அறிவிப்பாளர்: முஹம்மது இப்ராம்ஷா, பனைக்குளம்
கடுமையான வெயிலிலும் மழை வருமென்று எச்சரிக்கை செய்த பாபா
திண்டுக்கல்லை சேர்ந்த ஷர்புத்தீன் ஹஜ்ரத் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் அசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த போது பாபா அவர்களின் மீதிருந்த நேசத்தால் அவர்களை சந்திப்பதற்காக பனைக்குளத்திற்கு வந்து ஒருவாரம் வரை தங்கியிருந்தனர். இந்த ஒருவாரத்தில் ஹஜ்ரத் அவர்களுக்கு தேவைப்பட்ட பொருட்களைனைத்தையும் அவர்கள் மனதில் நினைத்த மாத்திர்தில் பாபா அவர்கள் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். இச்சமயத்தில் ஒருநாள் கடற்கரையை பார்ப்பதற்காக ஷர்புத்தீன் ஹஜ்ரத் அவர்கள் இக்கடுமையான வெயில் நேரத்தில் மழை எப்படி வரும் என்று கேட்க, அதற்கு பாபா அவர்கள் கண்டிப்பாக மழைவரும் என பலமுறை கூறியும் அவர்கள் குடையை எடுத்துக்கொண்டு போகவில்லை. அதைக்கண்ட பாபா அவர்கள் தமது மகனார் குத்புத்தீன் ஆலிம் அவர்களை அழைத்து கண்டிப்பாக மழைவரும் நீங்களாவது குடையை எடுத்துக்கொண்டு போங்களென்று சொல்ல அவர்கள் மட்டும் குடையை எடுத்துக்கொண்டு போனார்கள்.. மூவரும் கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்க குத்புத்தீன் ஆலிம் அவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கொஞ்சம் ஒதுங்க, மற்ற இருவரும் அரை பர்லாங் தூரத்திற்கு முன்னால்சென்றுவிட அப்போது பார்த்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் துவங்கி விட்டது. குடை இல்லாத இருவரும் நனைந்தபோது அப்போதுதான் மஹான் பாபா அவர்களின் தீர்க்கதரிசனத்தை உணர்ந்த ஷர்புத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் கு-கு குத்புத்தீன் ஆலிம்,
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நாம் நினைக்கிறோம் அவர்கள் கூறுகின்றனர்
இதுபோன்ற ஷர்புத்தீன் அவர்கள் பாபாவோடு சேர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கும் போது 'ஒரு வாரமாகி விட்டது. ஊருக்குச் செல்ல வேண்டும்' என நினைக்கின்றனர். சாப்பிட்டு முடித்ததும் பாபா அவர்கள் ஹஜ்ரத் அவர்களை நோக்கி இன்று நீங்கள் ஊருக்கு போகலாமென்று சொல்ல ஹஜ்ரத் அவர்களுக்கு பேராச்சரியமாகி விட்டது. நாம் நினைக்கிறோம் அவர்கள் கூறுகின்றனர். இதென்ன விச்தையாக இருக்கிறதே என்று தமது உள்ளத்தில் யோசித்ததை ஹஜ்ரத் அவர்கள் பாபாவிடமே கேட்கிறார்கள். நான் நினைப்பதை எல்லாம் தாங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? அதற்கு பாபா அவர்கள் தாங்கள் இந்த ஒருவாரமும் எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிடுகிறீர்கள் இதன்பொருள், தாங்கள் இடம்விட்டு இடம் மாறுவதன் மூலம் ஊருக்குப் போக எண்ணி விட்டீர்களென விளக்கம் தந்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சில வினாடிகளில் பலமைல் தூரத்தை கடந்த அற்புதம்
ஒருமுறை நான் பாபா வலியுல்லாஹ் அவர்களோடு மஃரிப் தொழுது விட்டு திக்ரும் செய்தபின் இஷாவுடைய தொழுகைக்கு பா       ங்குசொல்ல ஐந்துநிமிடம் இருக்கும்போது பாபா அசர்கள் என்னிடம் வாருங்கள் சீனியப்பா தர்ஹவுக்கு போய் வரலாமென்று என்னை அழைத்துக்கொண்டு பனைக்குளம் பள்ளிவாசலை விட்டு இறங்கி சிறிதுதூரம் நடந்தவர்கள் சட்டென்று எனது கையை பிடித்துக் கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் இருவரும் சீனியப்பா தர்ஹாவுக்கு அருகில் நின்று கொண்டிருந்தோம். அங்கே அப்போது தான் இஷாவுக்கு பாங்கு சொல்லிக் கொண்டிருந்தனர். இவ்வற்புதமான செயலை காணும் பாக்கியத்தை நல்கிய அல்லாஹ்வை நான் மனதாரப் புகழ்ந்தேன். அல்ஹம்து லில்லாஹ்.
கேட்டு அறிவிப்பவர்: அப்துர்ரஷீத் ஆலிம்
விழிப்பில் பாபா வலியுல்லாஹ்வை கண்டார்
நமது பாபா ஷைகுனா அவர்களின் உறவினர் ஒருவர் மலேசியாவில் தினமும் வேலை முடிந்ததும் தாமதிக்காது உடனே வீட்டுக்கு வந்துவிடுவார். ஒருநாள் அவர் ஒரு இடத்திற்கப் போய்விட்டு திரும்ப இரவு ஒரு மணியாகி விட்டது. அந்த நடுநிசியில் அவர் தனது காரை ஒட்டிக்கொண்டு பயங்கரமான காட்டு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரது காரை வழிமறித்து நிறுத்தி காரில் ஏதாவது பெட்ரோல் இருக்கிறதா? என்றுகேட்க இல்லை என்றார். அப்படியானால் சமீபத்தில் பெட்ரோல் எங்கே கிடைக்குமென்று கேட்க அவர் கிடைக்குமிடத்தை கூறினார். உடனே அவர்களும் காரில் ஏறி அமர்ந்துகொண்டு அங்கே சென்று டின்னில் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு தாங்கள் ஏறிய இடத்திலேயே மீண்டும் தங்களை கொண்டுபோய் விடுமாறு சொல்ல அவரும் அவ்வாறே கொண்டுவந்து வட அவர்கள் இறங்கிப் போய்விட்டனர். அப்போது அவர் பிரமை பிடித்தவர் போல் ஸ்டியரிங்கை பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார். சட்டென்று அவருடை முதுகில் யாரோ தட்டுவதை கண்டு உணர்வுபெற்று விழித்துப்பார்க்க காருக்கு வெளியே மஹான் பாபா அவர்கள் சிரித்துக்கொண்டு நிற்பதைக் கண்டு நாம் விழிப்பில் இருக்கிறோமா? அல்லது உறக்கத்தில் இருக்கிறோமா? என்று புரியாமல் தனதுதொடையை தானே வேகமாக கிள்ளிப் பார்த்தார். வலித்ததை கண்ட அவர் தாம் விழிப்பில்தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு கதவைதிறந்து மாமா எனச் சப்தமிட்டவராக அவர்களை கட்டிப்பிடிக்க வேகமாக ஓடினார் ஆனால் அதற்குள் பாபா வலியுல்லாஹ் அவர்கள் மறைந்து விட்டனர். அதன்பின் அவரை பற்றியிருந்த பயமனைத்தும் நீங்கி அசாதாரணமான ஒரு தைரியம்வர காரை எடுத்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்தார்.
ஆலிமாக வருவாரென முன்னறிவிப்புச் செய்த மஹான் பாபா
       எங்களுடைய உறவினர் ஒருவர் அழகன்குளத்திலிருந்து தன மகனை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டார். சில நாட்களில் மலேசியாவுக்கு அழைத்துச் செல்லவிருந்தார். இந்நிலையில் மஹான் பாபா அவர்கள் அவரது இல்லத்திற்கு செல்ல அவர்களிடம் எனது மகனை மலேசியாவுக்கு அழைத்துச் செல்கிறேன். தாங்கள் அவனுக்காக துஆ செய்ய வேண்டுமென்று சொல்ல அதுகேட்ட பாபா அவர்கள் உங்களுடைய மகன் மலேசியாவுக்கு செல்ல மாட்டார். ஓதுவதற்குத்தான் போவாரென பலமுறை கூறினர்.ஏற்பாடுகளனைத்தும் முடிந்துவிட்டது. நாளை மறுநாள் அழைத்துச் செல்லப் போகிறேனென்று அவர் த்pரும்பவும் சொல்ல மீண்டும் பாபா அவர்கள் கண்டிப்பாக அவர் ஓதுவதற்குத்தான் போவாரெனக் கூறி விட்டனர். ஓரிரு நாட்களில் பதினெட்டு வயதுடையவர்கள் மலேசியாவுக்கு வரலாமென்று சட்டத்தை மலேசிய அரசு பனிரெண்டு வயதாகக் குறைத்துவிட அவர் போக முடியாமல் போய்விட்டது. பாபா அவர்களின் துஆவாலும் நல்லாசியாலும் அவர் ஓதி நிறைவு செய்து சாதிக்குல் ஆமீன் ஆலிம் என்னும் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
எங்கள் ஷைகுனா எமக்குக் காட்டிய அற்புதம்
       பாபா அவர்களை பார்ப்பதற்காக பனைக்குளத்திற்க வந்தேன். ஒருவாரம் வரை அவர்களுளோடு இருந்தபின் ஒருநாள் பாபா அவர்கள் நான் சொல்வது போன்று நடக்கிறீர்களா? என்று கேட்க, சரி என்றேன். கையில் எவ்வளவு ரூபாய் வைத்துள்ளீர்களென்று கேட்டனர். ஆனால் பஸ்ஸோ இரயிலோ ஏறக்கூடாது நடந்தே செல்லவேண்டும். ஒவ்வொரு ஊருக்குப் போனதும் ஓழுச்செய்துவிட்டு இரண்டு ரக்அத் நபில் தொழுதபின் புர்தாஷரீயை ஓதவேண்டும். யாரிடமும் உணவோ அல்லது வேறு பொருளோ எதுவும் கேட்கக் கூடாது உணவு தானாக வரும் யாரும் கேட்டால் நான் ஓதிக்கொடுக்கும் வேலைதேடி வந்துள்ளேனென்று கூறுங்கள் ஆனால் மோதினார் பேஷ்இமாம் வேலை பார்த்தால்தான் ஓதிக்கொடுக்கும் வேலை கிடைக்கும் என்பார்கள். அதை ஒப்புக்கொள்ளக் கூடாதென்று பாபா அவர்கள் கூறினர். பாபா அவர்கள் கூறியவாறே நடந்து ஒரு ஊருக்கு வந்ததும் ஓழுச்செய்து இரண்டு ரக்அத் நபில் தொழுதுவிட்டு புர்தாவை ஓதுவேன். பல ஊர்களில் பாபா அவர்கள் கூறியபடி பேஷ் இமாம் மோதினார் வேலையும் சேர்த்துப் பார்த்தால் தான் ஓதிக்கொடுக்கும் வேலை கிடைக்குமென்று கூறினர். நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளு; ஒரு ஊருக்கு வந்ததும் ஓழுச்செய்து இரண்டு ரக்அத் நபில் தொழுது விட்டு புர்தா ஷரீபை ஓதினேன். இது முடிந்ததும் யாராவது உணவு கொண்டுவந்து தருவார்கள். அதை சாப்பிட்டு விட்டு மீண்டும் பயணமாகி விடுவேன் இவ்வாறே இருபத்தொன்பதாவது நாள் கும்பகோணம் வந்துசேர்ந்தேன். பாபா கூறியவாறு ஓழுச்சென்று இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு புர்தாஷரீபை ஓதி முடித்தபின் அங்கிருந்த பேஷ்இமாம் என்னிடம் வந்து எங்கே வந்தீர்களென்று கேட்டார்ஃ நான் ஓதிக்கொடுக்கும் வேலைதேடி வந்துள்ளேன் என்றேன். ளுஹர் தொழதபின் சாப்பிடுவதற்கான ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சாப்பிட்ட பின் வீட்டுக்காரர் சொன்னார் நாளைக்கு தம்பி வருவார் அவரோடு நாச்சியார் கோவிலுக்கு போய் ஓதிக் கொடுக்குமாறு கூறினார். அங்கே போய் சேர்ந்து இரண்டு வருடம் வரை ஓதிக்கொடுத்தேன். நான் வரும் வழியெல்லாம் யாரிடமும் கேட்காமலேயே எனக்கு உணவு கிடைத்ததும். ஓதிக் கொடுக்கும் வேலை மட்டும் கிழடைத்ததும் மஹான் பாபா அவர்களின் அற்புதமாகும்.
அறிவிப்பாளர்: P.N.மு.அப்துர்ரஸ்ஸாக், பேரையூர்
பிரிட்டிஷ்காரர்கள் தான் ஜெயிப்பார்கள் மஹான் பாபாவின் முன்னறிவிப்பு
       யுத்தகாலத்தில் பத்திரிக்கையை வாய்விட்டுப் படிப்பதும், அதிலுள்ள செய்திகளை பிரபலப்படுத்துவதும் சட்ட விரோதமாகும். நாளிதழை நாம் மனதுக்குள் மட்டும் படித்துக் கொள்ளலாம் அக்காலக்கட்டத்தில் இலங்கையிலிருந்து ஒரு செய்தித்தாளும், இங்கி (இந்தியாவிலி)லிருந்து ஒரு செய்தித்தாளும் வந்து கொண்டிருந்தன. அவ்வப்போது பாபா அவர்கள் வந்து பத்திரிக்கை செய்திகளை கேட்டுவிட:டுப் போவார்கள். ஒருநாள் பாபா அவர்கள் வந்தனர். அப்போது பிரிட்டிஷ்காரர்களுக்கும், பிரான்ஸ் ஜெர்மனிக் காரர்களுக்கும் பிரான்ஸிலுள்ள (சேனல்) கணவாயில் கடும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. எதிரிகள் (பிரான்ஸ்) முன்னேறிக் கொண்டிருந்தனர். முதல்நாள் வரை மிகப்பெரும் வெற்றி கிடைத்துக் கொண்டே வந்தது. பிரிட்டிஷ்காரர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். இன்றே அல்லது இன்னும் சிறிது நேரத்திலோ கணவாயை விட்டுவிட்டுப் போய் விடுவார்களென்று செய்தித்தாளில் தெளிவாக செய்திகள் வெளிவந்த வண்ணமிருந்தன. பிரிட்டிஸ் படைகளை நாஜிப்படைகள் நாலாபுறமும் சுற்றி வளைத்து விட்டன. பிரிட்டிஷார் சரணடைந்து விடுவார்கள் இல்லாவிட்டால் நிரி;மூலமாக்கப்படுவார்கள் என்னும் பயங்கரநீலை.
       அப்போது பாபா அவர்கள் தம்பி பிரான்ஸ்காரர்களும் ஜெர்மானியர்களும் வெற்றிபெற மாட்டடார்களென்று கூறினர். என்ன ஹஜ்ரத் பேப்பரில் பிரிட்டிஷ்காரர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் நாட்டை விட்டே ஓடிப்போய் விடுவார்களென்று போட்டுள்ளதே என்று சொல்ல அதற்கு மஹான் பாபா அவர்கள் பேப்பர் கிடக்கட்டும் பிரிட்டிஷ்காரர்கள் தான் ஜெயிப்பார்கள் எங்களுடைய உலமாக்களும் வலிமார்களும் சண்டை செய்து கொண்டுள்ளனர். எங்களுடைய உஸ்தாதுமார்களும் போர்முனைக்கு போய் விட்டனர் என பாபா சொல்ல அப்படியா என ஆச்சரியமுற்றவர் பிரிட்டிஷ் காரன் தான் ஜெயிபப்hனென்றா சொல்கிறீர்கள்? நிச்சயம் பிரிட்டிஷார் தான் வெற்றி பெறுவார்கள் இப்போது எங்களுடைய உலமாக்கள் ஸாலிஹீன்கள். ஸாதிக்கீன்கள் போன்றோரெல்லாம் யுத்தகளத்திற்கு போயுள்ளனர். வெள்ளைக்காரர்கள் நியாயமான வர்களென்றா? அவர்களுக்கு நியாயம் தெரியுமா? ஆனால் மறுநாள் காலை சுப்ஹூ தொழுதுவிட்டு பாபா அவர்கள் அழகன்குளத்திற்கு வந்து என்னசெய்தி என்றுகேட்க பிரிட்டிஷ் படைகள் முன்னேறுகின்றன. ஜெர்மானியப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றனர். நாஜிகளுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதென்று சொல்ல பாபா கூறினர். அங்குதான் இன்னும் எங்களுடைய ஹஜ்ரத்மார்கள் இருக்கின்றனர். இக்கடைசி நேரத்தில் நாங்கள் போகாவிட்டால் அது எங்களுடைய வெற்றிக்கு அறிகுறியாகாது என்றனர் அதுமுதல் பிரிட்டிஷ்காரர்கள் வெற்றி பெற்றனர்.
அறிவிப்பாளர்: முஹம்மது கான் மகன் அப்துல்லஹாப், அழகன்குளம்
ஆண் குழந்தை பிறக்கும் அன்வர் எனப் பெயர் வையுங்களென்று முன்னறிவிப்புச் செய்த பாபா
       மஹான் பாபா அவர்களின் மேன்மையை சிறப்பை பற்றி நான் பர்மாவிலிருக்கும் போதே மிக அதிகமாக கேள்விப்பட்டுள்ளேன். நமது ஷைகுனா அவர்களை கண்டு எனது நாட்டங்களை எல்லாம் அவர்களிடம் கேட்க வேண்டுமென்று பேரையூர் ஷம்ஸூகான் அம்பலம் அவர்களும் நானும் இந்தியாவுக்கு புறப்பட்டு வந்து சில நாட்களுக்குப்பின் பனைக்குளத்திற்கு வந்து பள்ளிவாசலில் பாபா மஸீஹூல் அனாம் (பிணி தீர்ப்பவர்) அவர்களை சந்தித்தோம் என்ன நோக்கத்pற்காக வந்தீர்;களென்று மிகுந்த வாஞ்சையோடு வினவினர். அதற்கு நான் எனக்குத் திருமணமாகி ஒன்பது ஆண்டுகளாகின்றன. ஆனால் இதுவரை குழந்தை பாக்கியமில்லை தங்களின் துஆ பரக்கத்தை பெற்றுச் செல்வதற்காக வந்தேன் என்றேன். அதுகேட்ட பாபா அவர்கள் என்பெயர் தாய் தந்தையர் பெயர், மனைவியின் பெயர், அவரது தாய் தந்தையர் பெயர் அனைத்தையும் கேட்டனர். நான் அனைவரின் பெயரையும் சொல்ல அதுகேட்ட பாபா அவர்கள் உங்களுடைய மனைவிக்குத்தான் உடம்பில் வியாதியுள்ளது அவர்கள் ஒன்பது மாதங்க்ள வரை மருந்து சாப்பிட வேண்டுமென்று கூறி சில பக்குவங்களை கூறினர். மேலும் இந்த மருந்தை அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை நிங்கள் பர்மாவுக்கு போய் இருங்கள். பின்னர் நீங்கள் திரும்பி வந்ததும் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் அதற்கு அன்வர் என்று பெயர் வையுங்களெனக் கூறி அனுப்பி வைத்தனர். அவ்வாறே நான் பர்மாவுக்குச் சென்று ஒன்றரை வருடத்திற்குப் பின் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அதன்பின் பாபா குத்புஸ்ஸமான் அவர்களின் அளப்பரிய துஆவைக்கொண்டு ஒருஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பாபா அவர்கள் கூறியதற்கேற்ப அன்வர் எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தோம் அடுத்த குழந்தை பிறக்கும் தருவாயில் கனவில் வந்து குழந்தை நல்லபடியாக பிறக்குமென்றும் கூறினர். அவ்வாறே நலமாக ஒரு ஆண்மகவு பிறந்தது. அதற்கும் பாபா அவர்களே ஒருநல்ல பெயரை கூறினர்.
       மற்றோர்முறை முகவை மாவட்டத்திலுள்ள சித்தார் கோட்டைக்கு நானும் பாபா அவர்களும் போயிருந்தபோது என்னை பள்ளிவாசலில் இருக்குமாறு கூறிவிட்டுப் போய்விட்டனர். அப்போது சிறிதுநேரம் உறங்கி விட்டேன். இப்ராஹீம் கவலைப் படாதீர்;கள் பிறக்குப்போவது பெண்குழந்தை என்ற சப்தம் கேட்டு கண்களை விழித்து நாலாபுறமும் பார்த்தன். அச்செய்தியை கூறிய பாபா அவர்களை காணவில்லை. சிறிது நேரத்திற்குப் பின் வந்தனர். நான்கண்ட கனவை பாபாவிடம் சொல்ல அவர்கள் பயனை காணும்வரை யாரிடமும் கூறவேண்டாம் என்றனர். என் மனைவி கர்ப்பம் தரித்திருப்பது அதுவரை எனக்குத் தெரியாது. அந்தக் குழந்தைக்கும் பாபா அவர்களே பெயர் கூட்டினர். பாபாவின் மறைவுக்குப்பின் அவர்களுடைய மகனார் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களே தாம் விரும்பும் பெயர்களை மற்ற குழந்தைகளுக்கும் சூட்டி வந்தனர். ஒருமுறை எனது மனைவியின் விருப்பத்திற்கேற்ப ஒரு பெயரைக்கூறி அப்பெயரை வைக்குமாறு சொல்ல முஹம்மது முபாரக் ஆலிம் அவர்கள் வேறொரு பெயரை வைக்குமாறு கூறினர். அக்குழந்தை மட்டும் இறந்துபோனது மற்றவர்களனைவரும் நல்லபடியாக உள்ளனர்.
எம்மாமத்தா வருகையை முன்னரே அறிவித்த அற்புதம்
மலேசியாவிலிருந்து வந்த ஒரு முக்கியமான கடிதத்தை பற்றி ஆலேசானை கேட்பதற்காக பாபா அவர்களைக் காண நாங்கள் பனைக்குளத்pற்கு சென்றோம். கடிதத்தை பாபாவின் கையில் கொடுத்ததும் அக்கடிதத்தை பார்க்காமலேயே அதிலுள்ள விஷயத்தை கூறி அந்த விஷயம் நல்லபடியாக நடக்குமென்று கூற அவ்வாறே நடந்தது. கடிதத்தை பார்க்காமலேயே அதிலுள்ள விஷயமனைத்தையும் கூறி எங்களை ஆச்சரியமடையச் செய்தனர். மற்றோர் சமயம் எங்களுடைய இல்லத்திற்கு வந்திருந்து நீண்டு நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். மஹான் பாபா அவர்கள் அப்போது தீடீரென எதிர் திண்ணையில் ஒருபாயை எடுதது விரிக்குமாறு கூறினர். இப்போது உங்களுடைய மாமத்தா மலேசியாவிலிருந்து வந்து கொண்டிருக்கிறார் என்றனர். அவர்கள் வருவது பற்றி எந்தத்தகவலும் வராத நிலையில் பாபா அவர்கள் சொன்னதை கேட்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஐந்து நிமிடங்களில் எனது மாமத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். எனது வாழ்நாளில் எந்தவொரு வலியுடைய கராமத்தையும் காணாத நான்பாபா அவர்களின் இவ்விரு கராமத்துக்களையும் கண்டு வியந்தேன்.
அறிவிப்பாளர்: ஷேக் ஸபியுல்லாஹ், 529,
வடக்குத்தெரு, அழகன்குளம்
பாபாவை கத்தியை காட்டி பயமுறுத்தியவர் பாபாவின் உயிர் நேசரானார்
       ஒருமுறை மஹான் பாபா அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றிருந்தனர். அங்குள்ள மக்களெல்லாம் பாபா அவர்களை அவர்களுடைய இல்லத்திற்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு ஆடு அறுத்து விருந்தளித்து கௌரவித்தனர். அப்போது அங்குள்ள ஓர் பெரியம்மா தனது மகனை அழைத்து நம்முடைய ஊருக்க ஒரு பெரிய மஹான் வந்துள்ளனர். ஊரிலுள்ள எல்லோரும் ஆடு அறுத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து தங்களின் நல்வாழ்வுக்காக துஆ செய்யுமாறு வேண்டிக் கொண்டிருக்கின்றனர். நீ ஒருவீசை இறைச்சியையாவது வாங்கிவா. நாமும் விருந்து கொடுத்து நமது நல்வாழ்வுக்காக துஆ செய்யச் சொல்வோம் என்று கூறினார். அதுகேட்ட அப்பெண்ணுடைய மகன், உனக்கென்ன பைத்தியமா? நமக்கே சாப்பாட்டுக்கு வழியில்லாத போது வருவேன் போவோருக்கெல்லாம் விருந்து கொடுக்கச் சொல்கிறாயே என கோபித்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு வந்தார். பள்ளிவாசலில் பத்துப் பதினைந்து பேருக்கு மத்தியில் மஹான் பாபா அவர்கள் அமர்ந்திருந்தனர். அவர் பள்ளிவாசலுடைய தாழ்வாத்தில் நின்றுகொண்டு பாபா அவர்களை பார்த்து நீதான் பாபாவோ உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று கத்தியை உயர்த்திக் காட்டிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் மஹான் பாபா அவர்கள் அன்றே ஊருக்குத் திரும்பி விட்டனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே ஊருக்கு போனபோது பாபா அவர்களிடம கத்தியை எடுத்துக் காட்டியவருக்கு தீசுட்ட புண்போல அவரது சிவந்த முகமெல்லாம் கருப்பு வட்டமாக ஆகிவிட்டது. இதில் அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அவ்வூர்வாசிகள் நீ பாபாவிடம் தவறாக நடந்து கொண்டதால் தான் உனக்கு இப்படி ஆகியுள்ளது பேசாமல் பாபாவிடம் போய்சொல் குணப்படுத்தி விடுவார்களென்று கூறினர்.
       அதைக்கேட்ட அவர் உடனெ பள்ளிவாசலுக்கு புறப்பட்டு வந்து பாபாவை கண்டு இதைக் குணப்படுத்த முடியுமா? என அதட்டலாகக் கேட்டார் பாப அவர்களும் அதற்குமேல் தமது சப்தத்தை உயர்த்தி நான் சொல்வதை கேட்க முடியுமா? என அதட்டலாகக் கேட்டனர். அவரும் சரியென்று சொல்ல அப்படி யானால் போய் தலைமுடியை இறக்கிவிட்டு வாரும் என்றனர். அன்படி அவர்போய் தலைமுடியை இறக்கிவிட்டு பள்ளிவாசலுக்கு வந்தார் அப்போது அவரிடம் ஒரு கண்ணாடியை கொடுத்து அதில் அவரது முகத்தை பார்க்கச்சொல்ல, அவரும் அக்கண்ணாடியில் தமது முகத்தை பார்த்துவிட்டு முகம் முழுவதும் தீசுட்ட புண்போல இருக்கிறதென்று சொன்னார். போய் ஓழுச் செய்துவிட்டு வாரும் என பாபா அவர்கள் கூற என்ன முதலி;ல் முடியை இறக்குமாறு கூறினீர்கள் இப்போது ஓழுச்செய்து விட்டு வருமாறு கூறுகிறீர்களெ என்று அதட்டும் தொனியில் அவர்கேட்க பள்ளிவாசலில் அமர்ந்திருந்தவர்களெல்லாம் அவரைப்பேசி பாபா சொல்வது போல் செய் என்று கூறினர். அதன்பின் அவர் ஓழுச்செய்துவிட்டு வந்தார். அப்போது மீண்டும் பாபா அவர்கள் அவரிடம் கண்ணாடியை கொடுத்து திரும்பவும் முகத்தை பார்க்கச்சொல்ல கண்ணாடியை பார்த்தவர் அதிர்ந்து போனார். ஆம் என்ன ஆச்சிரியம் அவருடைய முகத்தில் இப்போது ஒருபுள்ளி கூடஇல்லை. எவ்வித வடுவுமின்றி தெளிவாக பழைய முகத்தை போலவே இருப்பதை கண்டார். அதன்பின் அவர் பாபா அவர்களின் சிறந்த சிஷ்யராகவும், நேசராகவும், பாபா அவர்களின் சொல்லை சிறிதும் தட்டாத நல்லவராகவும் கடைசிவரை வாழ்ந்து சிறப்பும் பெற்றார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்

ஒருசொட்டுத் தண்ணீர் தந்தாலும் நன்றியுள்ளோர் நன்றியுள்ளொராகவே இருப்பர்
       இராமநாதபுரம் ஜில்லா, அபிராமம் என்ற ஊரில் ஒரு வீட்டில் நானும் பாபா அவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு சிறிய கோப்பையில் திரும்பத் திரும்ப கூறிகொண்டு வந்து வைத்தனர். பாபா அவர்களுக்க மட்டும் மரியாதைக்காக ஒரு பெரிய கோப்பையில் அதிகமாக கறியை கொண்டு வந்து வைத்தால் என்ன? எனநான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே பாபா அவர்கள் என்னிடம நன்றி இல்லாதோருக்கு மலையளவு பொன்னை கொடுத்தாலும் என்னத்தை கொடுத்தார்கள் என்று தான் கூறுவார்கள். அவர்களுக்கு விசுவாசம் இருக்காது ஆனால் நன்றியுள்ளோருக்கு ஒருசொட்டுத் தண்ணீர் கொடுத்தாலும் அவர்களுக்கு விசுவாசத்தோடு நன்றியுள்ளோராகவே எப்போதும் இருப்பார்கள். இதை பாபா அவர்கள் என்னிடம் கூறியபோது நாம் ஏன் இப்படி நினைத்தோமென்று என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போலிருந்தது.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்
நாங்கள் ஹஜ்ஜூக்குச் செல்வோமென பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிய மஹான் பாபா
       நாங்கள் ஹஜ்ஜூக்குச் செல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருசமயம் பள்ளிவாசலிலிருந்து புழுஊரணிணை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நான் மஹான் பாபா அவர்களிடம். நாம் ஹஜ்ஜூக்குப் போக வேண்டாமா? என்று கேட்க இன்ஷா அல்லாஹ் போவோமென்று கூறினர். அதற்கு நான் நானும் தானே என்றுகேட்க ஆம் என்றனர். இந்த ஆண்டே போவோமென்று நான்சொல்ல அதுகேட்ட பாபா அவர்கள் நான் ஹஜ்ஜூக்டகு சென்றால் முஹம்மது ஸல்லாஹூ அலைஹி வஸல்லமவர்களின் மீதுள்ள அன்பால் அழுதழுதே இறந்து விடுவேன். ஆதலால் சிறிதுகாலம் கழித்து செல்லலாமென்று கூறினர். நான் ஆறாவது ஸூம்ரா ஓதிக்கொண்டிருக்கும் போதே பாபா அவர்கள் ஹஜ்ஜூக்குப் புறப்பட தயாராகி விட்டனர். அப்போது மத்ரஸாவிலிருந்து லீவில் ஊருக்கு வந்திருந்தவன். என்னையும் அழைத்துச்செல்லுமாறு மஹான் பாபா அவர்களிடம் தொடர்ந்து வேண்டிக்கொண்டேயிருந்தேன். தங்களை அழைத்துச் சென்றால் தங்களின் படிப்புக் கெட்டுவிடும் என்று மறுத்துக்கொண்டே இருந்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஆலியார் ஷைகப்பா கூறுகின்றனர் முபாரக்கை ஹஜ்ஜூக்குக் கூட்டிப்போவது வஜிபாம்
       ஒருநாள் பனைக்குளம் பள்ளிவாசலில் கிழக்குப்பகுதியில் அடங்கியுள்ள ஆலியார் ஷைகப்பா தர்ஹா எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று மஹான் பாபா அவர்கள் ஆலியார் ஷைகப்பா கூறுகின்றனர். முபாரக்கை ஹஜ்ஜூக்குக் கூட்டிப்போவது வாஜிபாம். இல்லையென்றால் போக வேண்டாமெனக் கூறுகின்றனர். என்பதாக பாபா அவர்கள் கூறினர். அதன்பின்னரே என்னையும் ஹஜ்ஜூக்கு அழைத்துச் செல்ல மஹான்பாபா அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
அடுத்த ஆண்டு நாம் ஹஜ்ஜூக்கு போவோம் என்றிருந்தால் இந்த ஆண்டு போக மாட்டோம்
மஹான் பாபா அவர்கள் ஹஜ்ஜூக்குச் செல்லுமுன் அவர்களுடைய நேசர்கள் தங்களுக்க உடல்நிலை சரியில்லை ஆதலால் தாங்கள் அடுத்த ஆண்டு ஹஜ்ஜூக்கு செல்லுங்களென்று கூறினர். அதுகேட்ட பாபா அவர்கள் அடுத்த ஆண்டு நாம் செல்வோம் என்றிருந்தால் இந்த ஆண்டு போக மாட்டோம் என்றனர். அப்போது விமானத்தில் டிக்கெட் கிடைப்பதும் மிகமிகக் கஷ்டமாக இருந்தது. நாற்பது நபர்களுக்கு மட்டும்தான் அந்த ஆண்டு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்காயிரம் பேர் அதற்காக விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நமக்கு ண்டிப்பாக டிக்கெட் கிடைக்குமென்று பாபா கூறினர். அதன்படி அவர்களுக்கம் அவர்களுடைய மகன் முபாரக் ஆலிமுக்கும் கிடைத்தது. புதின ஹஜ்ஜை நிறைவு செய்துவிட்டு வந்தபின் பாபா அவர்களுக்கு திடீரென உடல்நலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அப்போது நான் (முபாரக் ஆலிம்) பாபா அவர்களை பார்ப்பதற்காக போயிருந்தேன். அச்சமயம் அவர்களை காண வருவோரிடமெல்லாம் பாபா அவர்கள் தங்களுடைய பெயர் என்னவென்று கேட்பார்கள் அவர்கள் பெயரை சொன்னதும் தேம்பித் தேம்பி சிறிதுநேரம் வரை அழுதுவிட்டு பின்னர் நிறுத்தி விடுவார்கள். ஒருநாள் நான் (முபாரக் ஆலிம்) ஏனத்தா யார்பெயரை கேட்டாலும் ஆழகிறீர்களென்று கேட்டேன் அதற்கவர்கள் அவர்களை பார்த்ததும் ரசூல்லாஹ்வின் நினைவு வந்து விடுகிறது. அதனால்தான் அழுகிறேன் என்றனர் ஹஜ்ஜூக்குச் செல்வதற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் ஹஜ்ஜூக்கு சென்றால் நபியவர்களின் மீதுள்ள பிரியத்தால் அழுதழுதே இறந்து விடுவேனென் கூறியிருந்ததும் அடுத்து ஆண்டு ஹஜ்ஜூக்குச் செல்ல முடியும் என்றிருந்தால் இந்த ஆண்டு ஹஜ்ஜூக்கு சென்றிருக்க மாட்டேனெனக் கூறியதும் அவர்கள் தமது நபியவர்களின் மீது எத்தனை அளவிலா நேசம் கொண்டிருந்தனர் என்பதற்கு இதுவே ஒரு எடுத்தக்காட்டாகும். அதேநேரம் அடுத்த ஹஜ் வருவதற்கு முன்பே இவ்வுலகை விட்டு மறைந்து விட்டனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபாவின் அற்புதக் கடிதம்
       பத்துர்ரு யஸ்தாது ஹூஸ்னவ் வஹூவ முன்தழிமி, வலைஜ யன்குஸூ கத்ரன் iஃகர முன்தழிமி என்னும் புர்தாவுடைய பைத்தை நான் மத்ரஸாவில் ஓதிக்கொண்டிருக்கும் போதே எனக்கு அதற்குரிய அர்த்தத்தை மஹான் பாபா அவர்கள் எழுதியிருந்தனர். முத்து கோர்வையாக இருக்கும்போது அதனுடைய பிரகாசம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். அதுவே தனித்திருக்கும் போது அதனுடைய பிரகாரம் குறைந்துவிடாது என எழுதியிருந்தனர். இதுபோன்ற தான் அற்புதமாக அவர்களுஐடய கடிதங்கள் அமைந்திருக்கும். அது யாருக்கு எழுதப்பட்டதோ அவருக்கு அதன் பொருள் தெளிவாக விளங்கும். மற்றவர்களுக்கு அது விளங்காது மஹான் பாபா அவர்களின் படித்தரம் என்னவென்பதை அறிவீர்களா? ஒருமுறை எனக்கு கடிதம் எழுதியபோது நான் தாத்துடைய பதவியில் இருக்கிறெனென்று எழுதியிருந்தனர். அல்லாஹ்வில் ஒன்றாகக் கலந்திருப்பதற்குப் பெயர்தான் தாத்துடைய பதவியாகும்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபா கண்ட யாஸீனின் மகத்தான பலன்
       மஹான் பாபா அவர்கள் முதுகுளத்தூரில் ஓதிக்கொண்டிருக்கும் போது ஒருநாள் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு கிதாபுகனை வரவழைத்தனர். அவை வந்தபின் அவற்றை எடுப்பதற்கு பாபா அவர்களிடம் பணமில்லை. பாபா அவர்களின் ஆசிரியர் பணம் கொடுத்து அக்கிதாபுகளை மஹான் பாபா அவர்களிடம் கொடுத்தனர்.
       அசிரியரிடமிருந்து வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க பணமில்லாத காரணத்தால் அவர்களுக்கு கொடுக்க பணம் வாங்குவதற்காக பனைக்குளம் வந்தனர். வந்தவர்கள் தமது தந்தையாரிடம் கிதாபுகளுக்கு பணம் தரவேண்டும் தாருங்களென்று கேட்க அதற்கவர்கள் என்னிடம் அத்தனை பணமில்லை, பொன்குளத்திற்குப் பக்கத்தில் ஒரு நிலமிருக்கிறது. அதை வேண்டுமானால் விற்றுத் தயார் செய்து கொள்ளுங்களென்று கூறிவிட்டனர். அந்த நிலம் அன்றிருந்த சூழ்நிலையில் சுமார் இருநூறு ரூபய் தான் பெறும் இதைவைத்து என்ன செய்வதென்று கூறிவிட்டு பாபா அவர்கள் சென்று விட்டனர்.
       பள்ளிவாசலை நோக்கிச் சென்றவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கூறா யாஸீனை ஓதினால் துக்கம், கவலை, கடன் போன்றவையனைத்தும் நீங்கி விடுமன பெருமானார் ஸல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளதை நினைத்தவர்கள் உடன பள்ளிக்கு உள்ளே சென்று தென்பகுதியிலுள்ள முதல் வாசல்படியில் அமர்ந்து யாஸீனை ஓதத்துவங்கினர். ஸூபஹூக்குப்பின் யாஸீனை ஓத்த துவங்கியவர்கள் வெகுநேரம் வரை ஓதிக்கொண்டேயிருந்தனர்.
       நீண்டநேரம் ஓதியும் ஒன்றும் கிடைக்கவில்லையே என எண்ணியவர்கள் மறுபடியும் ஓதத் துவங்கினர். சுமார் பத்தரை மணியளவில் தென்பக்கமாக ஒருவர் வந்து மஹான் பாபா அவர்களிடம் எனது பெரியம்மா ஐந்து ஜூஸ்வு குர்ஆனகள் ஐந்து வாங்கி வருமாறு கூறினார் என்றார். பாபா அவர்கள் யாஸூனை ஒத்த துவங்குமுன்பே ஐந்து ஜூஸ்வு குர்ஆன் ஐந்து கையில் வைத்திருந்தனர். யாஸீனை ஓதத் துவங்குமுன் அந்தக் குர்ஆன்கனை மிம்பர் படியில் வைத்துவிட்டு ஓதத் துவங்கியருந்தனர்.
       அவர் கேட்டதும் அந்த குர்ஆன் ஐந்தையும் எடுத்துக் கொடுத்தனர். அதற்காக அவர் சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து விட்டு இந்த குர்ஆன்களுக்கு இதைவிட மேலும் இருமடங்கு கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தார்களாம். ஆனால் இப்போது இவ்வளவு தான் இருந்தது இதை கொடுத்துவிட்டு மீதியை பிறகு தருவதாகக் கூறினார்களெனக் கூறி விட்டுச்சென்று விட்டார்.
       அவர் தந்த பணம் அவர்கள் கடனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை விட அதிகமாகவே இருந்ததால் உடனே முதுகுளத்தூருக்கு வந்து அவர்களுடைய ஆசிரியரிடம் கிதாபுகளுக்காக கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தனர். மேற்படி தொகையை தம்மிடம் தந்த பனைக்குளத்தை சேர்ந்தவரை மஹானவர்கள் சந்தித்து. தங்களிடம் இத்தொகையை கொடுத்தனுப்பியவர்யாரென்று கேட்க அதற்கவர் நான் தங்களை சந்திக்கவும் இல்லை பணமும் தரவில்லையே என்று கூறினார். மேற்கண்ட சம்பவத்தை பாபா அவர்கள் என்னிடம் கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
புத்தகத்தின் வாசகத்தை பாராமலேயே எடுத்துரைத்த அற்புதம்
       மஹான் பாபா அவர்கள் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரயில் கல்வி பயின்று கொண்டிருக்கும் காலத்தில் ஒருநாள் ஒருவீட்டில் உணவருந்தச் சென்றிருந்தனர். அப்போது அவ்வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
       அவ்வீட்டில் மஹான் பாபா அவர்கள் ஒருசிறிய பெஞ்சில் ஊரமாக அமர்ந்திருந்தனர். அந்த விருந்தாளி ஒரு பெரியபெஞ்சில் அமர்ந்து மேஜையின் மீது கால்களை போட்டுக்கொண்டு ஒரு புத்தகத்தை சப்தமாக படித்துக் கொண்டிருந்தார்.
       அப்போது மஹான் பாபா அவர்கள் அவரைநோக்கி அப்படியல்ல நீங்கள் படிப்பதென்று கூறினர். மீண்டும் இருமுறை அந்த விருந்தாளி அதைப் படிக்கலானார். இருமுறையும் நீங்கள் படிப்பது தவறென்று மஹான் பாபா அவர்கள் கூறினர்.
       அந்த நேரத்தில் வீட்டுக்காரர் வீட்டுக்கு உள்ளேயிருந்து வெளியே வந்தார். அவரைக் கண்டதும் அந்த விருந்தாளி தமது கையிலிருந்த புத்தகத்தை மேஜைமீது எறிந்துவிட்டு நான் படிப்பதை இவர் தவறென்று மூன்றுமுறை கூறினார். நீங்கள் பாருங்களென்று வீட்டுக்காரரிடம் கொடுக்க வீட்டுக்காரரும் அவர் படித்த இடத்தை படித்துவிட்டு ஓதும் பிள்ளையே என மெதுவாக பாபா அவர்களை அழைத்து அவர் கூறுவது போல தானிருக்கிறது என்று கூறினார்.
       அதைக்கேட்ட பாபா அவர்கள் அப்புத்தகத்தை வாங்கி அவ்விருவரும் படித்த வரியை படிக்க அவர்கள் இருவரும் படித்த வார்த்தைகள் இல்லாமல் வேறு விஷயம் இருந்தது.
       இவ்வற்புதத்தை கண்ட அவ்விருவரும் ஆச்சரியமடைந்தனர். அன்றிலிருந்து அந்த விருந்தினரான சேலம் அத்தூரைச் சேர்ந்த N. பீர்முஹம்மது அவர்கள் மஹான் பாபா அவர்களின் மெய்நேசராகி விட்டார். அவரும் நல்லோர்களின் அணியில் தம்மை இணைத்துக்கொண்ட விட்டார். இச்சம்பவத்தை மஹான் பாபா அவர்கள் என்னிடம் பலமுறை கூறியுள்ளனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
கையில் காசே இல்லாத நிலையில் கத்தை கத்தையாக பணத்தை காட்டிய அற்புதம்
       ஒருநாள் மஹான் பாபா அவர்களின் நேகர் ஆத்தூரைச் சேர்ந்த N.பீர்முஹம்மது மஹான் பாபா அவர்கள் வேலூர் அரபிக் கல்லூhயிpல் கல்வி பயின்று கொண்டிருக்கும் போது வியாபார விஷயமாக வெளியூருக்குச் செல்லும் போதெல்லாம் பாபா அவர்களையும் தம்மோடு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு பாபா அவர்களை ஒருமுறை அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு வேண்டியவர்களின் கடைக்கு வியாபார நிமித்தமாக அழைத்துச் சென்றார்.
       அப்போது அக்கடையில் உயரமான கல்லாப்பெட்டிக்கு முன்hனல் முதலாளி அமர்ந்திருந்தார். மஹான் பாபா அவர்கள் கல்லாப்பெட்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தனர். பீர்முஹம்மது உள்ளே முதலாளியுடைய மகனுக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
       அப்போது முதலாளியின் மகன் பீர்முஹம்மதை நோக்கி, இந்தப் பிச்சைக்காரங்களை கூட்டிக்கொண்டு அலைவதுதான் உன்வேலையா? என்றும் இன்னும் பல தகாத வார்த்தைகளாலும் பாபா அவர்களை பற்றிக் கூறினார்.
       அப்போது மஹான் பாபா அவர்கள் பீர்முஹம்மதை நோக்கி அவர் என்ன கேட்கிறாரென்று கேட்க அதற்கு முதலாளியின் மகன் ஒரு காலணாவை காண்பி என்றார். போதுமா? என மஹான் பாபா அவர்கள் திருப்பிக்கேட்க அதற்கவர் இல்லை நூறுரூபாயை காண்பி என்றார்.
       அதைக்கேட்ட மஹான் பாபா அவர்கள் நூறுரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக எடுத்து கல்லாப் பெட்டியின்மீது வைக்க அதைக்கண்ட முதலாளியும் அவருடைய மகனும் ஆச்சரியத்தில் பிரமித்துப் போயினர்.
       அத்துதடன் முதலாளியின் மகன் இன்றிலிருந்து உலமாக்களை நான் ஒன்றும் சொல்ல மாட்டேடென்று கூறி மஹான் பாபா அவர்களையும், பீர்முஹ்மதையும் பலநாட்கள் வரை தம்மோடு தங்கவைத்து பல விருந்துகளும் கொடுத்து மஹான்பாபா அவர்களிடம் மன்னிப்பும் கேட்டு கண்ணியத்தோடு அனுப்பிவைத்தார். இதனை மஹான் பாபா அவர்கள் என்னிட் கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்

செம்மல் மஹான் பாபாவுடைய துஆவின் பொருட்டு சீமானனார்
       மஹான் பாபா அவர்களும், பீர்முஹம்மதும் அவர்களும் ஒருநாள் வெளியூருக்குப் போய்வபிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போது இடையில் ஒரு ஊரில் காலை உணவருந்துவதற்காக ஒரு சிறிய ஹோட்டலுக்கு மஹான் பாபா அவர்கள் அவரை அழைத்துச் சென்றனர். இங்கே வேண்டாம் பெரிய ஹோட்டலுக்குப் போகலாமென பீர்முஹம்மது கூறினார்.
       அதற்கு மஹான் பாபா அவர்கள் இல்லையில்லை இந்தக் கடையில்தான் சாப்பிட வேண்டுமென்று கூறி உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது அந்த ஹோட்டல் முதலாளி உறங்கிக் கொண்டிருந்தார். அவரை மஹான் பாபா அவர்கள் எழுப்ப இந்த தரித்திரம் பிடித்த கடையில் சாப்பிட வேண்டாம் போவோமென்று பீர்முஹம்மது கூறினார். கண்டிப்பாக இங்கேதான் சாப்பிடவேண்டுமென்று கூறியவர்கள் சாப்பிட என்ன இருக்கிறது? என்று கேட்டனர்.
       அதற்கு அக்கடைக்காரர், இட்லி இருக்கிறதென்று கூறி காய்ந்த இட்லியை கொண்டுவந்து வைத்தார். அதை சாப்பிட்டு விட்டு காசு கொடுப்பதற்காக கல்லாவுக்கு அருகே வந்து காசை நீட்ட கடைக்காரர் காசை வாங்கமால் தேம்பித் தேம்பி அழுதார்.
       ஏன் எழுகிறீhக்ள்? என மஹான் பாபா அவர்கள் கேட்க அதற்கவர் எனக்கு ஏழு குமருகள் உள்ளனர். நானும் இருபத்தேழு வருடங்களாக இந்தக்கடையை தான் நடத்தி வருகிறேன். இன்றுள்ள இந்த நிலையிலிருந்து இருபத்தேழு வருடங்களாக எந்த முன்னேற்றமும் ஏற்படாது இப்படியே தான் இருக்கிறேன். இந்த நிலையில் அந்த ஏழு குமுருகளையும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை. தங்களை பார்த்தால் பெரிய சீதேவியாகத் தெரிகிறது. ஆதலால் எனது முன்னேறத்திற்காக ஏதாவது எழுதிக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டுமென மிகவு; கெஞ்சினார்.
       அதைக்கேட்ட மஹான் பாபா அவர்கள் அவருக்குக் கொடுக்க வேண்டிய காசை கொடுத்துவிட்டு ஒரு ஆயததை எழுதிக்கொடுத்து இதை வைத்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு எல்லா உதவியும் செய்வானெனக் கூறிவிட்டுச் சென்று விட்டனர்.
       சில வருடங்களுக்குப் பின் மஹான் பாபா அவர்களும் பீர்முஹம்மது அவர்களும் வெளியூருக்குச் சென்றுவிட்டு திருமபி வரும்போது ஒருபெரிய ஹோட்டலுக்கு உணவருந்துவதற்காக சென்றனர். அப்போது சப்ளையர்கள் அனைவரும் கேட்காத பொருட்களையெல்லாம் கொண்டுவந்து வைத்து நான்றாக சாப்பிடுங்களென அன்போடு உபசரித்தனர்.
       அவர்கள் சாப்பிட்டு முடித்தபின் சாப்பிட்டதற்குரிய பில் கொடுக்கவில்லை அதனால் கல்லாவுக்கு போய் பணத்தை கொடுக்கலாமென கல்லாவுக்குச் சென்றபோது கல்லாவிலிருந்த முதலாளி இறங்கி ஓடிவந்து மஹான் பாபா அவர்களை பார்த்து என்னை தெரிகிறதா? என்று கேட்டார்.
       நீங்கள் யார்? என மஹான் பாபா அவர்கள் அவரை திருப்பிக் கேட்க. அதற்கவர் நீங்கள் ஒருநாள் என்கடைக்கு வந்து என்னை தட்டி எழுப்பி காலை உணவருந்தி விட்டு ஒரு ஆயத்தை எழுதிக்கொடுத்து விட்டுப் போனீhக்ளே அக்கடையின் முதலாளி நான்தான். அன்று நீங்கள் எழுதிக்கொடுத்த நாள்முதல் வியாபாரத்தில் ஏற்பட்ட பரக்கத்தின் காரணமாக சில வருடங்களுக்குள்ளே இப்பெரிய ஹோட்டலுக்கு நான் முதலாளியாகிவிட்டேன். எனது ஏழு குமருகளுக்கு திருமணமும் செய்து கொடுத்துவிட்டேன். நல்ல வசதியான இடத்தில்தான் எனது பெண்களை கொடுத்திருக்கிறேன் என மகிழ்ச்சிபொங்க நன்றி பெருக்கோடு கூறினார்.
       இத்தனையும் கூறியவர் மஹான் பாபா அவர்களை நோக்கி தாங்களும் தங்களோடு வந்திருப்பவரும் இருந்து தங்கிவிடடுப் போக வேண்டுமென வலியுத்த அவர்கள் தங்காமல் அப்போதே புறப்பட்டு விட்டனர். இச்சம்பவத்தையும் மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறினார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்

No comments:

Post a Comment