Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 5

காலராவுக்குரிய காரணத்தை கண்டறிந்த மஹான் பாபா
       பனைக்குளத்தில் ஒருமுறை காலரா ஏற்பட்டு நிறையபேர் இறந்து கொண்டிருந்தனர். தொழவைக்க நியமிக்கப்பட்டவர்கள் கூட தொழவைக்க வருவதில்லை. ஜனாஸாவை தூக்கிச் செல்லும் நான்கு நபர்களைத் தவிர வேறுயாரும் வருவதில்லை. இந்நிலையில் மஹான் பாபா அவர்கள்தான் பல ஜனாஸாக்களுக்கு தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒருநாள் மஹான் பாபா அவர்கள் அங்குள்ள தைக்கா ஊரணியில் ஓழுச்சென்று விட்டு குளக்கரையோரம் அதாவது மேட்டுப் பகுதியிலுள்ள கூரைக் கொட்டகை பள்ளிவாசலில் அமர்ந்து யா அல்லாஹ் காலரா என்றால் என்ன? என்பதை எனக்குக் காண்பித்துக்கொடு என துஆ கேட்டுவிட்டு ஓதிக கொண்டிருந்தனர்.
       நாம் கண்ணை மூடிக்கொண்டு சிறிதறவு திறந்து பார்த்தால் நூல் நெளிது போன்று தெரியும். அதேபோல பாபா அவர்கள் விழித்திருக்கும் போதே ஒருசிறிய காற்று அவர்களுடைய மூக்கை மூன்று முறை வளையம் சுற்றி இடது மூககில் நுழைந்தது. அதற்குள் மஹான் பாபா அவர்களுக்குனுப் பலமுறை வெளிக்குப் போய் விட்டது. பலமுறை பேதிக்குப் போய் விட்டதால் திரும்பத் திரும்ப ஓழுச்செய்து அக்கூரை கொட்டகை பள்ளிவாசலில் அமர்ந்து யா அல்லாஹ் நான் காலரா என்னவென்பதை கண்கூடாகக் கண்டு கொண்டேன். அதை நிறுத்திவிடு என துஆ கேட்டுவிட்டு மறுபடியும் எதையோ ஓதிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களுடைய வயிற்றுப் போக்கு நின்றுவிட்டது. இதை மஹான் பாபா அவர்கள் பலமுறை என்னிடம் கூறியுள்ளனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மேன்மைமிகு மஹான் பாபா அவர்களை மரிக்க நினைத்த ஷைத்தான்
       மஹான் பாபா அவர்கள் ஒருநாள் அழக்குளத்திலிருந்து பனைக்குளத்துக்கு இரவு நேரத்தில் புறப்பட்டனர். அப்போது கையில் அரிக்கன் விளக்கை கொடுத்து இதை கொண்டு செல்லுங்கள் என வரிசை முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளைகளில் ஒருவர் (ஆலிம்) கூறினார்.
       அதை மஹான் பாபா அவர்கள் வேண்டாமெனக் கூறிவிட்டு பனைக்குளத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது மைதீன் காட்டுபாவா தோட்டத்திற்குக் கிழக்கே அரைப்பனை உயரத்தில் எண்ணெய் தேய்த்தால் உடல் எப்படி மின்னுமோ அப்படி மின்னிக்கொண்டு கன்னங்கரேலென ஒரு உருவம் தெரிந்தது அதனுடைய இரு விழிகளும் செக்கச் செவேலென்று கோவைப் பழம் போல் சுழன்று கொண்டிருந்தன. (இது யுத்த காலத்தில்)
       அதைக்கண்ட மஹான் பாபா அவர்களின் இரு கால்களும் பின்னவாரம்பித்தன. உடனே மஹான் பாபா அவர்கள் சுதாரித்தக் கொண்டு யோசித்தனர். நாம் உயர்ந்த ஆடையை அணிந்திருக்கிறோம். நிறைய பணம் வைத்திருக்கிறோம் நமக்கு முன்னால் தெரிவது கள்ளனாக இருந்தால் நாம் அணிந்துள்ள ஆடையையும், பணத்தையும் பறித்துக்கொண்டு ஓடிவிடுவான். அவ்வாறு பறித்துக்கொண்டு ஓடினால் ஓடட்டும் அவ்வாறின்றி கிறுக்கனால் இருந்தால் கடித்துக் குதறி விடுவான். கடித்துக் குதறினால் குதறிவிட்டுப் போகட்டும். ஒருவேளை ஷைத்தானாக இருந்தால் ஆயத்துல் குர்ஸியை ஓதினால் ஓடிவிடும் என்றென்னி ஆயத்துல் குர்ஸியை ஓதிக்கொண்டே அநத் உருவத்தை நோக்கி மஹான் பாபா அவர்கள் நடக்கத் துவங்கினர். பின்னர் அதை நெருங்கிப் பார்க்கும்போது பனையை வெட்டியபின் மீதமாக நிற்கும் ஒன்றரை அடி உயரமுள்ள பனந்த}ர் தான் அந்த இடத்தில் இருந்தது.
       அதன்பின் பனைக்குளம் வந்து விட்டனர். மறுநாள் அவர்கள் அழகன்குளம் சென்றபோது வருசை முஹம்மது ஷைகு வலியுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளையிடம் அன்றிரவு நடந்த சம்பவத்தை கூற அதற்கவர் உங்களை கண்டு அந்த ஷைத்தான் ஓடிவிட்டது. ஆனால் அதே இடத்தில் எத்தனையோ பேர் அதை பார்த்ததும் ரத்தம் கக்கி இறந்துள்ளனர் என்று கூறினார். மேற்கண்ட சம்பவத்தை மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபா அவர்கள் கூறிய முன்னெச்சரிக்கை
       மஹான் பாபா அவர்கள் ஒருநாள் புதுவலசை என்னும் ஊருக்குச் செல்வதற்காக பனைக்குளத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது கோப்பத்தப்பா தர்ஹா ஷரீபுக்கு சமீபமாக வந்தபோது புதுவலசையிலிருந்து ஒருவர் வந்தார்.
       அவரிடம் தா    ங்கள் நாற்பது நாள் சில்லா (தனித்து) இருக்க வேண்டுமென்று மஹான் பாபா அவர்கள் கூற அதற்கவர் நான் நாற்பது நாட்கள்வரை சில்லா இருந்தால் எனது குடும்பத்தை காப்பாற்றுவது யார்? என்னால் முடியாது. நான் அவ்வாறு இருக்கவும் மாட்டேனென்று கூறிவிட்டுப் போய்விட்டனர்.
       மஹான் பாபா அவர்கள் புதுவலசைக்கு போய்விட்டு பனைக்குளத்துக்கு திரும்பி வந்து விட்டனர். அந்த நபரை மறுநாள் கைது செய்துகொண்டு போய் நாற்பது நாட்கள்வரை சிறையில் வைத்திருந்து விட்டு பின்னர் அவரை விசாரித்தபோது அவர்கள் யாரை கைதுசெய்ய எண்ணியிருந்தார்களோ அவர் இவரல்ல என விடுதலை செய்து விட்டனர்.
       சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தபின் அவர் மஹான் பாபா அவர்களை சந்தித்து சிறையில் பட்ட வேதனையனைத்தையும் கூறி தாங்கள் சொல்லியவாறு நான் சில்லா இருந்திருந்தால் கைது செய்யப்படாது இருந்திருப்பேனென மிகுந்த வேதனையும் வருத்தமும் தோய்ந்த குரலில் கூறினார். இந்த விஷயத்தை மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தத்துவத் தவத்திரு மஹான் பாபா அவர்கள் மற்றோர் உலக விஜயம்
       யுத்தகாலத்தில் ஒருநாள் மஹான் பாபா அவர்கள் அழகன்குளம் பள்ளிவாசலில் ஜமாஅத்தோடு தொழுதுவிட்டு துஆ செய்வதற்கு முன்பே அவசர வேலையாக வெளியே இறங்கி வந்தனர். நாம்தான் முதலில் வெளியே வருகிறோமென்ற எண்ணத்தோடு வந்து கொண்டிருந்தனர்.
       இந்நிலையில் மஹான் பாபா அவர்களுக்கு முன்பே ஒருவர் படியில் இறங்கிக் கொண்ருந்தார். அதைக்கண்ட மஹான் பாபா அவர்கள் நமக்குமுன் இவர் எப்படி வெளியே வந்தாரென ஆச்சரியமடைந்தனர்.
       அவரைப் பார்த்தால் ஒரு முஸாபிராகத் தெரிந்தது. அவருக்கு மதியஉணவு வாங்கிக் கொடுக்கலாமே என Nhயசித்தவர்கள் ஒருவேளை வேறு யாராவது அவருக்கு விருந்துக்குச் சொல்லி அந்த இடத்திற்குத்தான் வேகமாக போய் கொண்டிருக்கிறாரோ இவர் எங்கேதான் போகிறாரென்று பார்ப்போம். எங்கேயாவது சாப்பிடச் சென்றால் சரி இல்லையென்றால் நாம் அவரை அழைத்துக்கொண்டுபோய் உணவு வாங்கிக் கொடுப்போமென நினைத்தவர்கள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அவர் சிறிது நேரத்தில் பல சந்துகளை கடந்து சென்றார். பாபா அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர் கடைத்தெருவில் நுழைந்து முன்சீப் விட்டு வழியாக நடந்தார் சிறிது தூரம் நடந்ததும் காடு வந்துவிட்டது.
       காட்டு வழியாக அவர் நடந்துபோய் கொண்டிருந்தனர். பாபா அவர்களும் அவரைப் பின்தொடர்ந்து செல்ல அப்போது மஹான் பாபா அவர்கள் தமது உடலைப்பார்க்க அவர்களுடைய தேகம் அவர்களுடைய கண்களுக்குத் தெரியவில்லை. பின்னர் முன்னால் சென்ளவரை பார்க்க அவரும் மறைந்து போய் விட்டார்.
       சில வினாடிகள் மேற்கொண்டு நடக்க ஒரு கடற்கரையருகே வந்த நின்றனர். அக்கடலினுள்ளே ஒரு பாதை போவது தெரிந்தது. அதைக்கண்ட மஹான் பாபா அவர்கள் இதில் இறங்கி சிறிதுதூரம் நடந்து பார்ப்போமே என சிலஅடி தூரம் சென்றனர். சில அடிகள் சென்றதும் கடலின் மற்றொரு கரைக்கு வந்து விட்டனர். அங்கே பெரும்பெரும் வலிமார்களும் நபிமார்களும் குழுமியிருந்தண். அவர்களனைவம் குசுகுசுவென பேசிக்கொண்டிருந்தனர். வேறு சிலர் வணக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
       ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் ஒவ்வொரு நபி வந்து தொழ வைத்தார்கள். அவர்களுக்குப் பசித்த போதெல்லாம் அவர்கள் முழங்காலளவு கடல்நீரில் வந்து வின்று மீன்களை கையால் பிடிக்கிறார்கள். அதை பிடித்துப் பிடித்து தின்கிறார்கள் மீன்ளும் பிடிகொடுக்கின்றன.
       மஹான் பாபா அவர்களும் அதேபோல மீனைப் பிடித்துத்தின்ன அது பொறித்த மீனைப்போல மிகவும் ருசியாக இருக்கிறது. அங்குள்ளவர்கள் பசி வந்ததும் இதுபோன்ற தான் மீன்களை பிடித்துத் தின்றனர். பாபா அவர்களும் அதேபோல மீனைப்பிடித்து தின்று கொண்டிருந்தனர். அங்குள்ளவர்கள் மலஜலம் கழிக்கச் செல்கின்றனர். அவர்கள் கழித்த இடத்தை சென்று பார்த்தால் அங்கே மலஜலம் எதுவுமேயில்லை அதேபோல மஹ  hன் பாபா அவர்களும் மலஜலத்திற்குச் சென்றனர். அவர்கள் சென்றபின் பார்த்தால் ஒன்றையும் காணவில்லை.
       அவர்கள் இருந்த இடம் மென்மையான மணலுள்ள கடற்கரை ஓரமாகவும், பள்ளிவாசலுள்ள இடமாகவும் இருந்தது. அவர்களோடு சேர்ந்து மஹான் பாபா அவர்களும் வணங்குவதும் அவாகள் செய்கின்ற இபாதத்துக்களை செய்வதுமாக ஆறுமாத காலத்திற்கு மேல் அவர்களுடனேயே இருந்து வந்தனர்.
       அவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் கடற்கரை ஓரமாக மஹான் பாபா அவர்கள் நின்று கொணடிருந்தனர். அப்போது முன்னைப்போலவே கடலினுள்ளே ஒருபாதை போவது தெரிந்தது. இதிலும் முன்போலவே சிறிதுதூரம் நடந்து பார்ப்போம் என்றெண்ணி அந்தப் பாதையில் சில அடிகள் எடுத்து வகை;க ஒரே வினாடியில் பனைக்குளம் கடற்கரைக்கு வந்துவிட்டனர். இச்சம்பவத்தை மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறினர்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபா அவர்கள் ஐந்துமணி நேரம் பஸ்ஸை நிறுத்தினர்
       ஒருமுறை நான் மத்ரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் போது விடுமுறை எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்திருந்தேன். வந்தவன் விடுமுறை முடிந்து மத்ரஸாவுக்கு செல்ல எண்ணி நாளை மத்ரஸாவுக்கு போகிறேனென மஹான் பாபா அவர்களிடம் கூறினேன் சரிஎன்றனாத். அப்போது இராமநாதபுரத்திற்குச் செல்ல காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக இரண்டு பஸ்கள் மட்டுமே இருந்தன.
       நான் மத்ரஸாவுக்குச் செல்ல வேண்டிய நாளன்று கப்ஹூ தொழுதுவிட்டு திக்கு செய்தபின் என்னையும், இன்னொருவரையும் பெருங்குளம் என்ற ஊருக்குப் போய் ஒருவரிடம் பணம் வாங்கி வருமாறு மஹான் பாபா அவர்கள் கூறினர்.
       பஸ்வரும் நேரமாகி விட்டதே எப்படி பெருங்குளத்திற்குப் போய்விட்டு வந்து ஆறரை மணி பஸ்ஸூக்கு செல்ல முடியுமென்று பாபாவிடம் கேட்டேன்.
       சீக்கிரம் சென்று வாருங்கள் ஆறரை மணி பஸ்ஸூக்கே போய்விடலாமென்று மஹான் பாபா அவர்கள் கூறினர். அதைக்கேட்டு நாங்கள் இருவரும் புறப்பட்டு ரோட்டுக்கு வந்தபோது ஆறரை மணி பஸ் வந்துவிட்டது. நாங்கள் பெருங்குளத்திற்கு போய் வருவதென்றால் சுமார் இரண்டு மணி நேரமாவது ஆகும்.
       அப்போது பஸ் ஊரைவிட்டு புறப்படத் தயாராக திடீரென ஒரு சக்கரம் மணலில் இறங்கி மாட்டிக்கொண்டது. அப்போது நான் என்னுடன் வந்தவரிடம் பஸ் மண்ணில் மாட்டிக் கொண்டது அதற்குள் நாம் பெருங்குளத்திற்கு போய்விட்டு வந்து விடலாமெனக் கூறியவன். பெருங்குளத்திற்கு போய் பணத்தையும் வாங்கிக்கொண்டு சுமார் பத்து மணிக்குத்தான் பனைக்குளத்திற்கு வந்து சேர்ந்தோம். அதுவரை அந்த பஸ்ஸை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது மஹான் பாபா அவர்கள் பள்ளிவாசலில் இருந்தனர். அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டு அதோ பஸ் நிற்கிறது மணலில் மாட்டிக்கொண்டது. நான் வீட்டுக்குப்போய் சாமான்களை எடுத்துக்கொண்டு வருகிறேனென்று மஹான் பாபா அவர்களிடம் கூறினேன்.
அதுகேட்ட பாபா அவர்கள் நீங்கள் மெதுவாகச் சென்று சாமான்களை எடுத்து வாரு ங்கள் நீங்கள் சென்ற பிறகுதான் பஸ் புறப்படுமென்று கூறினர். அதன்பின் நான் சாமன்களை எடுத்துக்கொண்டு சுமார் பத்தரை மணியளவில் பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்தேன்.
அங்கேயிருந்து மஹான் பாபா அவர்களும் நானும் வேறு சிலரும் பஸ் நிற்குமிடத்தை நோக்கி நடந்து சென்றோம். நாங்கள் பஸ்ஸை நெருங்கி பஸ் நின்றிருந்த ரோட்டில் காலை வைத்ததும் மணலில் மாட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் நின்றிருந்த பஸ்ஸை திடீரென்று மணலை விட்டு எடுத்து விட்டனர். பின்னர் அதே பஸ்ஸில் நாங்கள் இராமநாதபுரத்திற்கு சென்று அங்கிருந்து இரயிலில் மத்ரஸாவுக்கு வந்து சேர்ந்தோம்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்

மஹான் பாபா சிறிய ஸ்டேஷனில் மெயிலை நிறுத்தினர்
       ஒருநாள் மஹான் பாபா அவர்களும் அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களும் வெளியூருக்குப் போய்விட்டு வரும் வழியில் பரமக்குடி என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தோம். அப்போது மஹான் பாபா அவர்கள் இப்போது நாம் வரும் மெயிலில் ஏறிவாலாந்தரவை என்னும் சிறிய ஸ்டேஷனில் இறங்கி ஊருக்குச் செல்வோமென்று கூறினர்.
       ஆனால் அந்த மெயில் இராமநாதபுரம் விட்டுப் புறப்பட்டு இடையேயுள்ள வாலாந்தரவை என்னும் சிறிய ஸ்டேஷனில் நிற்காமல் மண்டபம் போய்தான் நிற்கும். இந்நிலையில் நாம் வாலாந்தவையில் எப்படி இறங்க முடியுமென்று பாபா அவர்களிடம் கேட்டேன். அதற்கு பாபா அவர்கள் அதெல்லாம் நிற்கு; வாருங்களென்று கூறி இரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கே மண்டபத்திற்கு இரண்டு டிக்கெட் எடுத்தனர்.
       அப்போதது நான் வாலாந்தரவையில் மெயில் எப்படி நிற்குமென்று பலமுறை வாதிட்டேன். அதற்கு பாபா அவர்கள் கண்டிப்பாக நிற்கும். உங்கள் அல்லாஹ்வா எங்கள் அல்லாஹ்வா பார்ப்போம் என்றனர்.
       மெயில் வந்தது வண்டியில் ஏறி அமர்ந்தோம். வண்டி வாலாந்தரவை வந்ததும் திடீரென நின்று விட்டது. நாங்கள் இறங்கிவிட்டோம். வண்டியை விட்டு இறங்கி நடந்து கொண்டிருக்கும் போது மஹான் பாபா அவர்கள் உங்கள் அல்லாஹ்வா? எங்கள் அல்லாஹ்பா? பார்த்தீர்களா இரயில் வாலாந்தரவையில் நின்று விட்டதே என்றனர். இது எனக்கு பிரமிப்பாக இருந்தது. அதன்பின் நாங்கள் அங்கிருந்து நடந்தே பனைக்குளம் வந்து சேர்ந்தோம்.
புளித்த பழங்கள் இனித்தன
       ஒருநாள் மஹான்பாபா அவர்களும் நானும் சித்தார்கோட்டையில் இருந்து பனைக்குளத்திற்கு வந்து கொண்டிருந்தோம். வழியில் அத்தியூத்து என்னும் கிராமத்தில் கொடை ஆரஞ்சுப்பழம் சுமார் இரண்டு டஜன் வாங்கிக்கொண்டு நடக்கவாரம்பித்தோம். வழியில் ஆரஞ்சுப்பழங்களை சாப்பிட எண்ணி பாபா அவர்கள் ஒன்றும் நான் ஒன்றுமாக உரித்துச் சாப்பிட்டோம். நான் உரித்த பழம் அளவுக்கதிகமாகவே புளித்தது. ஆனால் பாபா அவர்கள் நான் உரித்த பழம் மிகவும் தித்திப்பாக இருக்கிறதென்று கூறினர்.
       நீங்கள் விளையாட்டுக்காக அப்படிச் சொல்கிறீர்கள் என்றேன் அப்படியா? இதோ சாப்பிட்டுப் பாருங்களென்று கூறி ஒரு களையை என்னிடம் தந்தனர். அது மிகவும் தித்திப்பாக இருந்தது. அதன்பின் மீண்டும் ஒரு பழத்தை நான் உரித்துச் சாப்பிட்டேன். அதுவும் புளிப்பாக இருந்தது. இந்தப்பழமும் புளிக்கிறது என்றேன் எனக்காக உரியுங்கள் என்று கூறினர் பாபா. அவர்களுக்காக உரிக்கும் போதெல்லாம் எனக்குத் தருவார்கள் அது மிகவும் இனிப்பாக இருந்தது. இவ்வாறு அப்பழங்களனைத்திலும் எனக்காக உரிக்கப்பட்டவை அனைத்தும் புளிப்பாக இருக்க பாபாவுக்காக உரிக்கப்பட்டவை அனைத்தும் இனிப்பாக இருந்தன.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
பணமே இல்லாதிருந்த நிலையில் ஐந்து பாக்கெட்டிலும் பணம் நிறைந்திருந்த அதிசயம்
       ஒருநாள் மஹான் பாபா அவர்களை சோதிப்பதற்காக பனைக்குளத்திலுள்ள சிலநபர்கள் பாபா அவர்களிடம் சென்று நீங்கள் அந்த ஊர்களையெல்லாம் உங்களுடைய செலவில் அழைத்துச் சென்று எங்களுக்குக் காட்டுகிறீர்களா? என்று கேட்டனர்.
       அதுகேட்ட மஹான் பாபா அவர்கள் சரி எப்போது வேண்டுமானாலு; போகலாமென்று கூறினர். இந்நிலையில் திடீரென ஒருநாள் அவர்கள் பாபாவிடம் வந்து இன்று எங்களை அழைத்துச் செல்லுங்களென்று சொல்ல அன்று பாபா அவர்களிடம் பணமேயில்லை இருப்பினும் சரியென்று கூற அவர்களனைவரும் புறப்பட்டு பள்ளிவாசலுக்கு வந்ததும் அவர்களை பள்ளிவாசலுக்கு வெளியே நிற்குமாறு கூறிவிட்டு பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று தமது ஐந்து பாக்கெட்டுகளையும் பார்க்க ஐந்து பாக்கெட்டுகள் நிறைய வெறும் பணமாக இருந்தது.
       அதன்பின் பாபா அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளியே வந்து வாருங்கள் போலாமென அவர்களை அழைத்துக்கொண்டு அவர்கள் பார்க்க விரும்பிய ஊர்களையெல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு ஊருக்கு திரும்பும்வரை அவர்களுடைய ஐந்து பாக்கெட்டுக்களிலும் பணம் இருந்து கொண்டேயிருந்தது.
       பனைக்குளம் வந்ததும் பள்ளிவாசலுக்கு உள்ளே சென்று அவர்களின் ஐந்து சட்டை பாக்கெட்டுக்களையும் பார்க்க முன் போலவே காலியாக இருந்தது. இவ்விபரத்தை பாபா அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபா பெய்யென்றதும் பெய்தமழை
       மேகமே இல்லாத நிலையில் கொளுத்தும் வெயில் நேரத்தில் கூட சிலசமயம் மஹான் பாபா அவர்கள் இன்று மழை பெய்ய வைப்போமா? என்று கேட்பார்கள் அப்போது வீட்டிலுள்ளோர் சரி எனக் கூறுவார்கள். உடனே வீட்டிலுள்ள பிள்ளைகளை குறிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கூறுவார்கள் அவர்களும் அந்த வெயிலில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க அதைவாங்கி நின்றுகொண்டே முற்றம் முழுவதும் நனையும் வரை பாபா அவர்கள் மழைபெய்ய வைத்திருக்கிறார்கள்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபாவின் உதவியால் இரயில் கவிழாமல் நின்றது
      ஒருநாள் நானும் எனது அண்ணன் குத்புத்தீன் ஆலிம் அவர்களும் நீடூர் அரபிக்கல்லூரி மத்ரஸாவில் விடுப்பு எடுத்துக்கொண்டு பனைக்குளத்திற்கு வந்திருந்தோம். ஊரில் சிலநாட்கள் தங்கியிருந்த பின் மீண்டும் மத்ரஸாவுக்கு புறப்பட்டோம். புறப்படும் தினத்தன்று நாங்கள் மெயிலில் போகிறோமென்று பாபா அவர்களிடம் எண்ணன் கூறினார்கள். அதற்கு பாபா அவர்கள் இரவு இரயிலில் தான் போக வேண்டுமெனக் கூறிவிட்டனர்.
       நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அந்த வண்டியில்தான் போக வேண்டுமென்று கூறிவிட்டனர். மேலும் இந்த இரவு வண்டியில் செல்வது உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் மக்களில் பலருக்கு அதனால் பயன்டு என்றும் கூறினர்.
       அவர்கள் கூறியவாறே நாங்கள் இரவு வண்டியில் பயணமானோம். வண்டி செட்டிநாடு வந்ததும் இரயிலின் முன் சக்கரம் ஒருபாலத்திற்கு முன்பாக கழன்று விழுந்து விட்டது சக்கரம் கழன்று விழுந்ததும் வண்டி அதே இடத்தில் நின்று விட்டது. அப்போது சுமார் இரவு இரண்டு மணி இருக்கும். காலையில் பெரிய பெரிய அதிகாரிகளெல்லாம் வந்து அந்த இரயில் ஓட்டுநரை மிகவும் பாராட்டினர்.
       நீர் எப்படி இரயிலை சக்கரம் கழன்றதும் நிறுத்தினீர்? என வியப்போடு கேட்டனர். மேலும் நீர் வண்டியை நிறுத்தியிருக்காவிட்டால் வண்டியிலிருந்த நிறையபேர் இப்பாலத்தினுள்ளே விழுந்து இறந்திருப்பார்களென்றும் கூறினர்.
       அதுகேட்ட வண்டியின் ஓட்டுநர் வண்டியை நான் நிறுத்தவில்லை. இந்த வண்டியில் கடவுளின் அனுக்கிரஹம் பெற்றவர்கள் யாரே இருந்திருக்கின்றனர். அதனால்தான் வண்டி நின்றது என்று கூறினார்.
       இதைகேட்டுக் கொண்டிருந்த நாங்கள் உண்மையில் இறையருட் செல்வராம் மஹான் பாபா அவர்கள் கூறியவாறு இந்த இரயிலில் வந்திருக்காவிட்டால் உண்மையிலேயே இந்த இரயில் கவிழ்ந்திருக்குமென்று நினைத்துக் கொண்டோம். அல்ஹம்து வில்லாஹ்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தபாலை பார்க்காமலே அதிலுள்ள விபரத்தை கூறிய மஹான் பாபா
       மஹான் பாபா அவர்களுக்கு ஒருநாளைக்கு சுமார் 30 தபால்களுக்கு மேல் வருவரு வழக்கம். நான் ஊரிலிருக்கும் போது வருகிற தபால்களை நானே உடைத்து பார்த்துவிட்டு அதிலுள்ள விஷயங்களை பாபாவிடம் கூறுவது வழக்கம்.
       ஒருநாள் தபாலொன்று வந்தது. அதை அனுப்பியவர் மன்பொரு முறை பாபா அவர்களிடம் வந்து தனது கஷ்டத்தை சொல்லி முன்னூறு ரூபாய் வாங்கிச்சென்றவர். அந்தப்பணம் முழுவரும் செலவாகிவிட்டது இன்னுமு; 300 ரூபாய் அனுப்ப் வேண்டுமெனக் கேட்டு எழுதியிருந்தார். அந்தத்தபாலை பாபா அவர்களிம் காட்டினால் மீண்டும் பணம் அனுப்பி விடுவர்களே என எண்ணியதோடு மேலும் இவர் ஏமாற்றுபவர் போல் தெரிகிறதே என்றும் நினைத்தவனாக அந்தத்பாலை பாபா அவர்களிடம் காட்டாமலிருந்து விட்டேன்.
       பாபா அவர்களும் நானும் வெளியூர் செல்வதற்காக புறப்பட்டு பஸ்ஸில் போய் கொண்டிருந்தோம் மண்டம் ரோடு வந்ததும் எப்படி பாபா அவர்களுக்கு வந்த தபாலை பற்றி சொல்லாமலிருப்பது என யோசித்தவன் பாபா தங்களுக்கு ஒருவர் தபால் எழுதியிருக்கிறார். அதை நான் தங்களிடம் சொல்லவில்லை என்று சொன்னதுமே அவர் கள்ளப்பிள்ளை அவர்களுக்கு நான் பணம் அனுப்ப மாட்டேன். நீங்கள் பயப்பட வேண்டாம் என தபாலை பார்க்காமலேயே கூறினர்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
என் இதயத்தில் உள்ளதை இயம்பிய ஏந்தலர் பாபா
       ஒருநாள் மஹான் பாபா அவர்கள் பள்ளிவாசலுக்கு மேலே நின்று கொண்டிருந்தனர். இன்னொருவர் பள்ளிவாசலுக்கு கீழே ஓரமாக நின்றுகொண்டு பாபா அவர்களை பார்த்து ஆத்திரமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பாபா அவர்கள் அமைதியாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
       அப்போது அங்குவந்த நான் அவருக்கு அருகே சென்று நின்று கொண்டேன். மீண்டும் அவர் ஏசுவதைக் கேட்ட எனக்கு ஆத்திரம் தாங்காமல் அவரை ஓங்கி ஒருஅறை கொடுக்க எண்ணி கையை உயர்த்தக்கூட இல்லை. அதற்குள் முபாரக் என ஒரு அதட்டல் போட்டு அந்தப்பக்கம் தள்ளிப் போங்கள் என்றார்கள் பாபா. உடனே நான் நடுநடுங்கி பின்வாங்கிப் போய்விட்டேன். இச்சம்பவம் அப்போது நடந்து முடிந்து விட்டது. அதேநாள் மதியம் ஏசிய அந்த நபர் பாபா அவர்களிடம் வந்து நான் ஆற்றங்கரையில் விழுந்து விட்டேன் எனக்கு ஓதிப் பாருங்கள் என்றார்.
       மஃரிப் தொழுகைக்குப்பின் திக்ரு செய்துவிட்டு பாபா அவர்களை ஏசிய நபருக்கு பாபா அவர்கள் கேக் மற்றும் பல பலகாரங்களை வாங்கிக்கொடுத்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தனர். அவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
       அவர் போனபின் பாபா அவர்களிடம் ஏன்? இவருக்கு இதையெல்லாம் வாங்கிக்கொடுத்தீர்கள்? இவர் தங்களை காலையில் ஏசியவராயிற்றே? என்று கேட்டேன் அதற்கு பாபா அவர்கள் ஒரு சம்பவத்தை கூறினர். அதாவது ஒரு ஷைகுக்கு அயிரக்கணக்கான முரீதுகள் இருந்தார்கள். இந்நிலையில் அந்த ஷைகை ஒருவர் எங்கே பார்த்தாலும் ஏசித்திரிந்ததை அவர்களுடைய முரீதுகளில் ஒருவர் பலமுறை பார்த்து கோபமடைந்து ஷைகிடம் சென்று இன்னமனிதர் தங்களைபற்றி எப்போது பார்த்தாலும் ஏசிச்கொண்டே இருக்கிறார் எனக்கு கோபம் தாங்க முடியவில்லை தாங்கள் அனுமதி கொத்தால் அவரை இப்போதே கொன்று விடுகிறேன் என்றார்.
       அதுகேட்ட ஷைகவர்கள் அவரையும் இன்னும் சிலரையும் கடைதெருவுக்கு அனுப்பி பலதட்டுக்கள் நிறைய ஹல்வாவும், பழங்களும் வாங்கி வருமாறு கூறினர்.
       அவற்றை வாங்கி வந்ததும் ஷகை ஏசியவரிடம் கொண்டுபோய் இதையெல்லாம் கொடுத்து மேலும் மேலும் என்னை அதிகமாக அவரை ஏசுமாறு சொல்லுங்கள் அவரப்போன்ற சீதேவி வேறு யாருமில்லை. அவர் திட்டுவதால் என்னுடைய பாவங்களெல்லாம் என்னைவிட்டு கழிந்து கொண்டிருக்கின்றன எனக் கூறியதாக மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறிவிட்டு நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்று கேட்க வாயை மூடிக்கொண்டேன்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
எங்கள் செல்வநிலையை எங்களுடைய வறுமையிலேயே கூறிய வள்ளல்
       புகழுக்குரியவனும் புகழப்படுபவனும் புகழுக்குட் புகுந்த புகழாகவும் உவமைக்கு அப்பாற்பட்டவனும் அங்கிக்கெனாதபடி எங்கும் நிறைந்து நித்திய ஜோதியை நிலைத்தரசு புரியும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
       அல்லாஹ் ரப்புல் இஸ்ஸத் எத்தனையோ நபிமார்களையும் வலிமார்களையும் உலகுக்கு அனுப்பி மனிதர்களை நேர்வழிப்படுத்தி இருக்கிறான். இதில் வலிமார்களது வரிசையில் மஹான் பாபா அவர்களும் சிறப்புமிக்க ஒருவராவர். அப்படிப்பட்ட மஹானோடு ஓரளவுக்கு ஒட்டி உறவாட வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் இங்கே சொல்லப்படப் போகும் நிகழ்ச்சிகளனைத்தும் என்கண் முன்N னநடந்தவைகளாகும். யாரும் சொல்லக் கேட்டவைகளல்ல.
       வறுமையின் கோரக்கரங்கள் எங்களை இறுகத் தழுவியிருந்த காலத்தில் வறுமையின் கொடுமை தாளாது நானும், எனது நண்பர் செய்யிது அபூதாஹிர் (அழகன்குளம்) அவர்களும் மஹான் பாபா அவர்களிடம் வந்து எங்களுடைய வறுமையை பற்றி முறையிட்டோம்.
       எங்களின் நிலையை அறிந்த பாபா அவர்கள் சீனியப்பா தர்ஹாவுக்குச் சென்று ஸியாரத்துச் செய்வோம் வாருங்களென்று அழைத்தனர். அதன்படி சீனியப்ப தர்ஹாவுக்குச் சென்று கடற்கரை ஓரமாக சீனியப்பா தர்ஹாவை நோக்கி நின்றுகொண்டு சுமார் இருபது நிமிடங்கள் வரை துஆ கேட்டனர். துஆ கேட்டுக்கொண்டிருக்கும் போதே அஹமத் என அழைத்தனர். என்ன மாமா என்றேன். பின்பு செய்யிது அபூதாஹிர் என அழைத்தார்கள். என்ன ஆலிம்ஷா என்றார் அதன்பின் எங்கள் இருவரையும் பார்த்து நீங்கள் இருவரும் மலேசியாவில் சுங்கை பெசாரில் (சிலாங்கூர்) கடைவைத்து முதலாளிகளாக இருந்து வியாபாரம் செய்வதை இப்போது எனது கண்ணால் காண்கிறேன் என்று கூறினர். அதுகேட்ட நானும் எனது நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டோம். இந்த நல்வாக்கை எங்களுடைய உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டவர்களாக ஸியாரத்தை முடித்துக்கொண்டு திரும்பினோம்.
       சில நாட்களுக்குப் பின் நானும் எனது நண்பரும் மலேசியாவுக்கு சென்றோம் ஆனால் மலேசியாவில் அவர் வேறொரு இடத்திற்குச் சென்றார். நான் சிறியதாக ஒரு வியாபாரம் செய்தேன் பல ஆண்டுகளாக எனக்கும் அவருக்குமிடையே எந்தவொரு சந்திப்பும் இல்லை.
       என் வியாபாரம் மூன்று ஆண்டுகளுக்குப்பின் சீர்குலைந்து என்னால் சமாளிக்க முடியாமல் வேறொருவரிடம் வியாபாரத்தை ஒப்படைத்தேன். எனக்கு ஒன்றும் புலப்படாமல் சிந்தனையில் குழம்பிய குட்டையானேன். எனது நிலையை அறிந்த சொந்தபந்தம் யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை.
       திக்கற்றோரின் குரலை செவிமடுப்பவன் அல்லாஹ் எனத் திருமறை கூறுகிறது. மஹான் பாபா அவர்கள் அன்று கூறிய கூற்று அல்லாஹ்வின் பேரருளால் எனது நினைவுக்கு வந்தது. ஒரு நண்பரிடம் சுங்கை பெசாருக்குச் செல்லத் தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு இறைவன்மீது நம்பிக்கை வைத்தவனாக பாபா அவர்கள் முன்பு கூறிய ஊருக்குப் புறப்பட்டேன். எங்காவது தங்க இடம் கிடைத்தாலும் சரி வியாபாரத்தோது ஏற்பட்டாலும் சரி செய்யலாம் என்பதே எனது நோக்கம். சித்த சுவாதீனமற்றவன் போல பலநாட்கள் அலைந்தேன். இறுதியில் சுங்கை பெசாருக்கு வந்து சேர்ந்தேன்.
       சுங்கை பெசாரில் எனது நண்பர் செய்யிது அபூதாஹிர் ஒரு கடையில் சம்பளத்திற்கு இருந்தார். அவரைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட மகழிச்சிக்கு அளவேயில்லை. ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம் அவருடைய முதலாளி என்னை பார்த்ததோடு உபசரித்தார். அவர் எ;னை அவருடைய கடையிலேயே வேலைக்கு இருக்குமாறு எனத நண்பர் மூலம் கேட்டு அனுப்பினார் நான் அவருக்கு எநத பதிலும் சொல்லாமல் சில நாட்களை கழித்தேன்.
       எனது நிலையை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த நல்ல மனிதர் ஒருவர் என்னிடம் வியாபாரம் செய்வதற்குரிய லைசென்ஸ் இருக்கிறது. நீங்கள் வியாபரம் செய்யுங்களென்று கூறி லைசென்ஸை தந்தார் எனக்கு பல நாட்களாக வியாபாரத்திற்கு இடம் தருவதாக சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது தர மாட்டாரென்ற எண்ணம் வரவே சுங்கை பெசாரை விட்டுப் போய் விடுவதென்று புறப்படுவதற்குரிய ஆயத்தங்களை செய்தேன் புறப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன் அந்த நபர் வியாபாரம் செய்வதற்கு இடம் தந்தார்.
       மகிழ்ச்சியோடு வியாபாரம் செய்யத் துவங்கினேன். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பொருமைக்காரர்கள் என்னை அங்கிருந்து விரட்டி அடிக்க நினைத்தனர். அல்லாஹ்வின் கிருபையாலும் பாபா அவர்களின் துஆ பரக்கத்தினாலும் அவர்களின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.
       இதனடியில் எனது நண்பர் செய்யிது அபுதாஹிர் அவர்களும் அவர் வேலை செய்த கடையிலிருந்து விலகி தனியாக வியாபாரம் செய்ய துவங்கினார். அளவற்ற அருளானனாகிய அல்லாஹ்வின் கிருபையாலும் மாபெரும் உதவியாலும் கன்னியமிக்க பாபா அவர்களின் நல்லாசியாலும் நானும் எனது நண்பரும் இன்று நல்ல நிலையில் சுங்கை பெசாரில் முதலாளிகளாக இருந்து வருகிறோம்.
       எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் நடந்தாலும் கூட மஹான் பாபா அவர்கள் அன்று கண்ணால் கண்டதாகக் கூறியதை இன்று மெய்யாக நான் மட்டுமல்ல எனது நண்பர் மட்டுமல்ல எங்கள் பரம்பரையினரே கண்டு அனுபவித்து வருகிறோம். சீனியப்பா தர்ஹாவில் மஹான் பாபா அவர்கள் துஆ கேட்கும்போது அன்னாரின் மகனார் அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களும் எங்களோடு தான் இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ஹாஜி எஸ்.ஏ.அஹமத் தமீம்
சு.ளு.பதி தைலத்தை கொடுத்த குணப்படுத்திய மஹான் பாபா
       மஹான் பாபா அவர்கள் ஒருமுறை எங்களுடைய ஊருக்கு வந்திருந்தனர். அப்போது எங்களுடைய உறவுக்கார குழந்தைகளுக்கு மிகவும் உடல்நிலை சுகமில்லாதிருந்தது. பாபாவிடம் முறையிட்டேன் அவர்கள் ஒரு பாட்டில் சு.ள.பதி தைலத்தை ஓதிக்கொடுத்து இந்தத் தைலம் முழுவதையும் அக்குழந்தைக்கு குடீக்கக் கொடுங்களென்று கூறினர். அவ்வாறே கொடுத்தோம் சிறிது நேரத்தில் அக்குழந்தை கையை காலை வெட்டிக்கொண்டு இறந்து விட்டது. நான் பள்ளிவாசலுக்கு வந்தேன் பள்ளிவாசலில் இருந்த பாபா அவர்கள் என்ன காசிம்? என்று கேட்க நான் முடிந்து விட்டது என்றேன்.அதைக்கேட்ட அவர்கள் என்னை கேட்காமலா போகும்? எனக் கடுமையாகச் சொன்னவர்கள் நான்அழைத்தேனென்று கூப்பிடுங்கள் என்றனர். அதன்படியே நான் சென்று பாபா அவர்கள் கூப்பிட்டார்களென்று சொல்ல அக்குழந்தை உடனே கையை காலை அசைத்துக்கொண்டு எழுந்து விட்டது. இதைக்கண்ட நாங்கள் பிரமித்துப் போனோம் அல்ஹம்துலில்லாஹ்.
அறிவிப்பாளர்: யு.மு.யு.முஹம்மது காசிம், பேரையூர்
ஷரீ அத்தை சரியாகப் புரிந்து நடக்க வேண்டும்
       ஒருநாள் நல்ல நிலவில் பள்ளிவாசலிலிருந்து புழு ஊரணிக்கு இஷா தொழுகைக்குப் பின் நானும் மஹான் பாபாவும் சங்கத்திற்கு கிழக்கேயுள்ள பாதையில் சென்று கொண்டிருக்கும் போது பாபா அவர்கள் அந்த நிலவிலும் டார்ச்லை;டை அடித்துக்கொண்டே வந்தனர். அப்போது நான் நினைத்தேன் பாபா அவர்கள் ஷரீ அத்தில் பெரிய மேதையென்றும் பெரிய வலியுல்லாஹ் என்றும் எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் பட்டப்பகல் மாதிரியுள்ள இந்த நிலவுடைய வெளிச்சத்தில் டார்ச்லைட்டை அடித்துக்கொண்டு வருகிறார்களே இது (இஸ்ராஃப்) வீண் விரயமென்று அவர்களுக்குத் தெரியாதா? என்று நினைத்தேன் குளத்திலிருந்து திரும்பும்போதும் டார்ச்சலைட்டை அடித்துக்கொண்டு தான் வந்தனர். அப்போது அந்த வழியில் பூவரசமரம் ஒன்று இருந்தது. அதனுடைய நிழல் வரும்வழியில் தரையில் நிழலை கொட்டிக்கொண்டிருந்தது. அந்த நிழலில் பாபா அவர்கள் லைட் வெளிச்சத்தை காட்டி இதை பாருங்கள் எனக்கூற அங்கே ஒரு நல்லபாம்பு படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தது. அப்போது பாபா அவர்கள் குத்புத்தீன் இதை போகச் சொல்லுங்கள் என்றனர். நான் பாம்பின் மீது கொஞ்சம் மண்ணை அள்ளிப்போட அது வேலிப்பக்கமாக சென்று விட்டது.
அதன்பின் மஹான் பாபா அவர்கள் என்னை நோக்கி பாபா பெரிய அவ்லியாவோ ஷரீஅத் மேதையோ அல்ல பட்டப்பகல் போலுள்ள இந்த நிலவுடைய வெளிச்சத்தில் லைட்டை அடித்து வருவது வீண்விரயம் என்பது பாபாவுக்கு தெரியாதா? என்றெல்லாம் சிலர் நினைக்கின்றனர் என்று கூற நான் நினைத்ததை அப்படியே பாபா அவர்கள்  சொல்லிக் காட்டியதும் அதிர்ந்து போனேன். மேலும் பாபா அவர்கள் என்னைப் பார்த்து இப்போது இந்த லைட்டை நாம் அடித்துக்கொண்டு வந்திருக்காவிட்டால் அந்தப் பாம்பை மிதித்திருப்போம் அதுவும் நம்மை தீண்டியிருக்கும் அதனால் நாம் இறந்தும் போயிருப்போம் கையில் லைட்டை வைத்திருந்தும் அதை நாம்அடித்துக்கொண்டு வராததால் பாம்பு தீண்டி நாம் இறந்து போனால் நான்தந்த அமானத்iதான உயிரை நீ ஏன் மாய்த்தாய்? என்று அல்லாஹ் நம்மை கேள்விகேட்டு தண்டிப்பான் நீங்கள் நினை;க்கலாம் எல்லா இடத்திலும் லைட்டை அனைத்து விட்டு இந்த இருட்டுள்ள இடத்தில் மட்டும் அடித்தால் என்னவென்று யோசிச்கலாம் வெளிச்சமுள்ள இடத்திலெல்லாம் லைட்டை அடிக்காமல் வரும் நாம் இச்சிறிய இருளை பெரிதாகக் கருதாமல் இங்கேயும் லைட்டை அடிக்காமல் தான் வந்திருப்போம் அப்போதும் இந்த பாம்பு நம்மை தீண்டியிருக்கும் ஆதலால் நாம் மார்க்கத்தை தெளிவாக புரிந்து செயல்பட வேண்டுமென பாபா கூறினார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது குத்புத்தீன் ஆலிம்
என் மனதிலுள்ள கேள்விக்கு பிறருக்குச் சொன்ன பதில் மூலம் பதிலளித்த அற்புதம்
       எங்கள் அறையிலிருந்த அபிராமத்தை சேர்ந்த அஹ்மத் இப்ராஹீம் என்பார் அவசியமின்றி வெளியே செல்லமாட்டார். இந்நிலையில் ஐந்து நாட்களாக தனது தொழிலைகூட கவனிக்காது யாரோ ஒரு பெரியாரை காணச் செல்வதாகக் கூறிக்கொண்டு வெளியே செல்கிறார். நாமும்தான் சென்று பார்ப்போமே எனப்புறப்பட்டு கிடங்குத்தெரு பள்ளிவாசலுக்குப் போய் பார்க்கும்போது அப்பெரியார் தொழ வைத்துக் கொண்டிருந்தனர். எண்பத்தைந்து வயதுள்ள பாபா அவர்கள் இருபத்தைந்து வயதுள்ள ராணவ வீரனைப் போல மிகவும் சுறுசுறுப்பாக கை, கால்களை தாங்காமல் தொழ வைத்துக் கொண்டிருந்ததை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதை நான் கண்டபோது நிச்சயம் இவர்கள் ஒரு பெரியாராகத்தான் இருக்க வேண்டுமென்றும் நம்பினேன். அவர்கள் கிடங்குத் தெருவிலுள்ள ஒருவீட்டில் தங்கியிருந்தனர். நானும் அங்கே போனேன். பலபேர் அங்கே இருந்தனர். அப்போது பாபாவிடம் பலரும் பல விஷயங்களை குறித்து கேட்டுக்கொண்டிருந்தனர். அதைக்கண்ட நான் என்னுடைய தம்பி திடீரென இறந்து விட்டான். ஏன் இறந்தான் என்பது இதுவரை தெரியவில்லை என கேட்கலாமென நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஒருவர்வந்து என்னுடைய முதலாளி மகன் பம்பாய் போனவர் இறந்து விட்டதாக தந்தி வந்துள்ளது. இது உண்மையாக இருக்குமா? என்று கேட்டார் அதற்கு பாபா அவர்கள் இன்ன கிழமை பிறந்த குழந்தைக்கு சொற்ப வயது அகால மரணமும் என்றனர். அதைக்கேட்ட அவர் போய் விட்டார். இந்நிலையில் என்தம்பி பற்றி நான்கேட்க நினைத்ததற்கு பாபா அவர்கள் தெளிவாக பதில் தந்து விட்டனர். ஏனெனில் எனது வீட்டிலள்ளவர்கள் என் தம்பியை பற்றிய குறிப்பில் அவ்வாறு தான் எழுதி வைத்துள்ளனர். பின்னர் எனது உடல் நலனுக்கு ஏதாவது ஓதித்தருமாறு கேட்டேன். ஒருசாமான் வாங்க வேண்டும் ஆயிரம் ரூபாய் கொண்டு வருவீர்களா? எனக் கேட்க நானும் சரியென்றேன்.
அப்போது பத்து இருபது ரூபாய் புரட்டுவதே கஷ்டம். இதில் பாபா அவர்கள் ஆயிரம் ரூபாய் கொண்டு வருவீர்களா? என்று கேட்டதும் நானும் அசட்டுத்தமாக சரியென்று சொல்லி விட்டேன். அதன்பின் ஒருசாமானின் பெயரைக்கூறி வாங்கி வருமாறு கூறினர். அவர்கள் கூறிய பொரளின் விலை என்னவென்று விசாரித்தபோது வெறும் பதினோரு ரூபாய்தான் தேவைப்பட்டது. அதை வாங்கிவந்து கொடுத்தேன். ஓதித் தந்தார்கள் அதன்பின் உடல்நலம் பெற்றேன். அவர்களின் துஆ இல்லாவிட்டால் எனது நிலை எப்படி இருந்திருக்குமென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவர்களின் சிறப்பான துஆவைக் கொண்டுதான் நானும் எனது குடும்பத்தாரும் இன்று நலலபடியாக இருக்கிறோம். மஹான் பாபா அவர்கள் மறைந்த பின்னரும் கூட இப்போதும் எனது முக்கியமான தேவைகளின் போதெல்லாம் எனது கனவில் வந்து அதற்குரிய பழியை காட்டிக்கொண்டு தானிருக்கின்றனர். நாம் இருக்கிறோம் என்போர்க்கு நாம் இருக்கிறோம் நாம் இல்லை என்போர்க்கு நாம் இல்லையென அவர்களுடைய ஜீவியத்திலும் கூறினர். மறைந்த பின்னரும் கூறுகின்றனர். பாபா அவர்களின் மகனார் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்கள் சென்னை வரும்போதெல்லாம் எனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைப்பேன். வேலைகள் அதிகமாக இருப்பதால் வர வாய்ப்பில்லையென பலமுறை கூறி அவசியமான காரியனெ;றால் வருகிறேன் என்பார்கள். அதனால் அவர்ளுடைய தம்பியை விருந்துக்கு அழைத்துக் செல்வேன் ஒருநாள் மஹான்பாபா அவர்களையும் அவர்களுடைய மகனார்அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களையும் கனவில் கண்டேன். பாபா அவர்கள் முபாரக் ஆலிம் பக்கமாக கையை நீட்டி இவர் யார் தெரியுமா? எனக்கேட்டு விட்டு இவர் நாம்தான் எதுவும் தேவையெனில் இவரிடம் கேட்டு ஓதி சாப்பிடுங்கள் என்றனர். அதற்கேற்ப அவர்களிடம் தான் எதையும் ஓதிக்கேட்டு சாப்பிடுவேன். மற்ற விஷயங்களையும் அவர்களிடம் கேட்டுத்தான் செயல்பட்டு வருகிறேன்.
அறிவிப்பாளர்: ளு.ஆ. முஹம்மது யஃகூப், கமுதி
நான் எண்ணியது போல அற்புதமாக பேரையூர் வந்து எனக்கு மருந்து ஓதிக்கொடுத்த பாபா
ஒருசமயம் எனது உடல் நலனுக்கு மருத்துவம் கேட்டு மஹான் பாபாவைக் காண பனைக்குளம் சென்றேன். அப்போது ஒரு மரத்தை கண்டேன். அதன் இலையைத்தான் மருந்தாகத் தருவார்களென்று எண்ணினேன். அதன்படி பாபாவும் அந்த மரத்தின் இலையை மருந்தாகச் சாப்பிடச் சொன்னார்கள். அதைபாபா அவர்களே தமது கரத்தால் கரைத்து ஓதித்தந்தால் நன்றாக இருக்குமென்றும் எண்ணினேன். அன்று பனைக்குளத்திலிருந்து இராமநாதபுரத்திற்கப் புறப்படும் கடைசி பஸ்ஸில் என்னை அனுப்பி வைத்தனர் அதுபோன்றே அன்று முதுகுளத்தூர் செல்லும் கடைசி பஸ்ஸூம் எனக்குக் கிடைத்தது. முதுகுளத்தூரிலும் பேரையூர் போகும் கடைசி பஸ்தான் எனக்குக் கிடைத்தது. நேராக பள்ளிவாசலுக்குச் சென்று அன்று தொழ வேண்டிய தொழுகைகளையும் இஷா தொழுகையையும் தொழுதுவிட்டு வீட்டுக்குச் சென்றேன் அதன்பின் சுப்ஹூக்கு பாங்கு சொல்லியதும் பள்ளிவாசலுக்கு வந்தேன். அங்கே பாபா அவர்கள் இப்பதை கண்டு பேராச்சரியம் அடைந்தேன் பனைக்குளத்திலிருந்து நான்வந்த பஸ்தான் கடைசி பஸ். இந்நிலையில் பாபா அவர்கள் எப்படி வந்தார்களென்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுப்ஹூ தொழுதுவிட்டு வந்ததும் ஹபீப் முஹம்மது வாருங்கள் மருந்து சாப்பிடப் போகலாமென்று என்னை அழைத்துக்கொண்டு எங்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். மருந்து அரைத்து தயாராக இருந்தது. பாபா அவர்கள் அவர்களின் கையாலேயே கலக்கி ஓதித் தந்தனர். நான் நினைத்தது போல பாபா அவர்கள் அற்புதமாக வருகைதந்து எனக்கு மருந்தை ஓதி கலக்கித் தந்தது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே
அறிவிப்பாளர்: ஏ.ஏ.ஆ.ஹபீப் முஹம்மது அவர்கள் கூறக்கேட்டு அவர்களின் மகனார் ஏ.ஏ.ஆ.ர்.கதீஜா பானு, ஏ.ஏ.ஆ.ர்.புக்ரான் முஹம்மது, பேரையூர்.
எங்களின் செழிப்பான வருங்காலத்தை முன்னறிவிப்புச் செய்த
மஹான் பாபா
       நான் மலேசியாவில் சிறந்த தொழில் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக வியாபாரம் செய்து வரும்போது மஹான் பாபா அவர்களை ஊரில்வைத்து சந்தித்தபோது பாபா அவர்கள் என்னை நோக்கி என்ன செய்கிறீர்கள் என்று கேட்க ஒருபெரிய கடையில் பங்குதாரராக வியாபாரம் செய்து வருகிறேன். நன்றாக நடைபெற்று வருகிறது என்றேன். அதைக்கேட்ட பாபா அவர்கள் தாங்கள் கூட்டு வியாபாரம் செய்ய வேண்டாம் தனியாக வியாபாரம் செய்யுங்கள் செழிப்பாக வருவீர்களென்ற கூறினர். உலமாக்களுக்கு தொழிலைப்பற்றி என்ன தெரியும்? லாபம் கிடைத்து வரும் கூட்டுத்தொழிலை விட்டுவிட்டு தனியாக வியாபாரம் செய்யச் சொல்கிறார்களே அந்தத் தொழிலில் லாபாமும் வராலாம் நஷ்டமு; வரலாமென்று யோசித்தவன் பேசாமல் இருந்து விட்டேன். சிறிது காலத்திற்குப் பின் அக்கடையை விட்டு விலகி தனியாக வியாபாரம் செய்யத் துவங்கினேன். அல்லாஹ்வின் கிருபையாலும், பாபா அவர்களின் துஆவாலும் எங்கள் தொழில் இப்போது மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. பாபா அவர்கள் கூறிய காலத்தில் நான் தனியாக தொழில் செய்யத் துவங்கியிருந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் செல்வந்தனாகியிருப்பேன் என்று எனது பிள்ளைகளிடம் சொல்லிக் காட்டி வருகிறேன் என அச்செல்வ்நதர் என்னிடம் கூறினார்.
       அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
எனது மகன் காணாமல் போய்விட்டார்
       எனது மகன் கமுதிக்குப் போனவர் காணாமல் போய்விட்டார். பலபேரிடம் விசாரித்தும் எதுவும் தெரியவில்லை மஹான் பாபா அவர்களிடம் சென்று முறையிட்டேன். நீங்கள் ஊருக்குச் செல்லுங்கள் உங்களுடைய மகன் வருவார் என்றனர். அதன்படி நான் ஊருக்கு வந்தபோது எனது மகனுடைய தபாலை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் பாபா கூறியவாறு தபாலையும் கண்டு ஆச்சரியமும் அடைந்தேன்.
அறிவிப்பாளர்: மு.நு. அப்துல்ரஹ்மான், பேரையூர்
கேட்டு அறிவிப்பவர்: மு.நு.யு.பஷீர் அஹ்மத்
மஹான் பாபா எங்களுடைய இல்;லத்திற்கு வந்தனர் அற்புதம் நிகழ்ந்தது
       மஹான் பாபா அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் சென்ற வீடுகளெல்லாம் அற்புதமான மாளிகைகளாக கட்டப்பட்டு அவ்வீட்டிலுள்ளோர் செல்வச்செழிப்போது வாழ்ந்து வருகின்றனரே நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நமது வீட்டுக்கு ஒருமுறை கூட அவர்கள் வராது போய்விட்டார்களே நமது வீடு அரே பழைய நிலையில்தான் உள்ளதென்று பலமுறை வேதனைப்பட்டேன்.
       திடீரென ஒருநாள் கனவில் மஹான் பாபா அவர்களும் அவர்களது மகனார்அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களும் எனது வீட்டு வெளித்திண்ணையில் வந்து அமர்ந்திருப்பதை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். வாழும் காலத்தல் வராவிட்டாலும் இப்போது கனவிலாவது வந்தார்களே என எண்ணி மனநிறைவு பெற்றேன். ஒருசில நாட்களில் எனது மகனார் வீடு கட்டுமாறு திடீரென தகவல் தந்தார். பாபா அவர்கள் கனவில் எனது வீட்டுக்கு வந்து பரக்கத்தால் உடனே வீடுகட்டும் பாக்கியம் கிடைத்தது. அல்லாஹ் எங்களுடைய வீட்டை நிரப்பமாக கட்டித்தந்து அருள்புரிந்தான். அல்ஹம்துலில்லாஹ்.
அறிவிப்பாளர்: அப்துல்காதர், பள்ளிவாசல் தெரு, பனைக்குளம்
கிழக்கு பாகிஸ்தான் வேறுநாடாகி விடும் மஹான் பாபா முன்னறிவிப்பு
       1965ல் அன்று கிழக்கு பாகிஸ்தானாக இருந்த (இன்றைய பங்களாதேஷூக்கு) சுற்றுப்பயணம் சென்றுவிட்டு திரும்பி வந்தேன். எனது தாயார் ஒரு நேர்ச்சையை தந்து மான் பாபா அவர்களிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வா என்றனர். நான் வந்தபோது பாபா அவர்களோடு பலர் உரையாடிக் கொண்டிருந்தனர். நான் அந்த நேர்ச்சையை கொண்டுபோய் கொடுத்ததும் என்னைப்பற்றிஅ ங்கிருந்தேரிடம் இவர் கிழக்கு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் போய்விட்டு வந்துள்ளார் எனக்கூறி அறிமுகப்படுத்தியவர்கள், அந்தநாடு வேறுநாடாகி விடும் என முன்னறிவிப்புச் செய்தனர். அதைக்கேட்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம் ஆம். பாபா அவர்கள் கூறிய முன்னறிவிப்பின் படி 1969ம் ஆண்டு பங்களாதேஷ் என்ற தனிநாடாக கிழக்கு பாகிஸ்தான் பிரிந்தது. இதையறிந்த நான் திகைத்துப் போனேன்.
அறிவிப்பாளர்: ஆ.அப்துல்மஜீத் பேரையூர்
ஆயிஷாம்மா வருகிறாரென முன்னறிவிப்புச் செய்த மஹான் பாபா
       ஒருநாள் மஹான் பாபா அவர்கள் தமது வீட்டிலிருக்கும் போது அவர்களிடம் அரிசி வாங்கிக் கேட்டனர். அதுகேட்ட பாபா அவர்கள் இதோ ஆயிஷாம்மா அரிசி காய்கறிகளெல்லாம் கொண்டு வருகிறார்களென்று சொல்ல, அரை பர்லாங்குக்கு அப்பால் நான்கு தெருதள்ளி வந்து கொண்டிருந்த ஆயிஷாம்மா அவர்களுக்கு பாபா அவர்கள் சொன்னது மிகத்தெளிவாகக் கேட்டது. சிறிதுநேரத்தில் ஆயிஷாம்மா அரிசி காய்கறிகளோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அறிவிப்பாளர்; ஆ.ஆயிஷாம்மா, முஹம்மது ஹூசைன் மகளார்,
கைக்கொள்வார் தெரு, சின்னக்கடை, முகவை
மறைந்த பின் கண் விழித்துப் பார்த்த மஹான் பாபா
       மஹான் பாபா அவர்கள் மறைந்த தினத்தன்று நாங்கள் அனைவரும் பனைக்குளம் வந்து பாபா அவர்களை வரிசையாகப் பார்த்து ஸலாம் கூறினோம். அப்போது நானும் வரிசையில் நின்று ஸலாம் சொல்ல அப்போது பாபா அவர்கள் தமது கண்களை திறந்து என்னை பார்த்தனர். நான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
அறிவிப்பாளர்: ஆ.யு.ளு.பாத்திமுத்து பீவி,
தஸ்லீம் முஹம்மது தாயார், பேரையூர், இருப்பு: அம்பத்தூர்
நட்டுவாக்களியை கடிக்கவைத்து என் வியாதியை
குணப்படுத்திய மஹான் பாபா
       நான் அரபு நாட்டில் வேலைபார்த்து வரும்போது கடுமையான குருக்கு வலியால் வேலைபார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். வந்தவன் பாபா அவர்களின் மக்பராவுக்குச் சென்று ஸியாரத்துச்செய்துவிட்டு எனது வியாதி நீங்க நிய்யத்துச்செய்து நாற்பது நாட்கள் வரை தங்கியிருக்க வந்தேன். அப்போது பாபா அவர்களின் மகனார் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் தங்கிச்செல்ல அனுமதி தந்தனர். நான்வந்த இரண்டாவது நாள் ஊரணிக்கு சிலரோடு சென்றேன். அப்போது எனது காலில் ஏதோ ஒன்று கடித்து விட்டது என்ன கடித்ததென்று லைட்டை அடித்துப்பார்க்க அங்கே ஒரு நட்டுவாக்களி இருந்தது. என்னோடு வந்தவர்கள் நான் நுரை நுரையாகக் கக்கி இறந்து விடுவேனெனப் பயந்து விட்டனர்.
       அல்லாஹ்வின் கிருபையாலும், பாபா அவர்களின் அற்புதமான துஆவினாலும் உடனே எனது குருக்குவலி என்னை விட்டும் நீங்கி விட்டது. எனக்கு எந்தத்தீங்கும் நேரவில்லை. அல்ஹம்து லில்லாஹ்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ்ளு.மஹ்மூது பக்கிரி, பேரையூர்
இருப்பு: சென்னை
தினமும் பிரியாணி சாப்பிடுங்கள்
       மஹான் பாபா அவர்கள் தமது சிஷ்யர்களில் ஒருவரான அப்துஸ்ஸலாம் (கத்தாழைபிச்சை) அவர்களுக்கு உடல் நலமில்லாதிருந்ததற்கு தினந்தோறும் மதியம் பிரியாணி சாப்பிட்டு வருமாறு கூறினர். சில வருடங்கள் கழித்து டாக்டரிடம் உடல்நலக் குறைவுக்காக காட்டச் சென்றபோது அவர் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டார். சில வருடங்களாக மதியம் பிரியாணி மட்டும் சாப்பிட்டு வருகிறேனென்று சொல்ல அதுகேட்ட அவர் ஆச்சரியமடைந்து இத்தனை நாட்கள் உங்களுடையள உடலுக்கு எந்தக்குறைவும் வரவில்லை, இனிமேலும் எந்த வியாதியும் வராதென்று கூறினார்.
அறிவிப்பாளர்: யு. அப்துல்ஹமீது, அப்துல் ஸலாம் மகனார், பேரையூர்
என் மாமா எப்போது வருவார்?
       மஹான் பாபா அவர்களை நான் மானாமதுரையில் திடீரென கொஞ்சமும் எதிர்பாராமல் முதன்முதலில் பார்த்தேன். அவர்களிடம் எதைக்கேட்டாலும் சரியாகச் சொல்வார்கள் என்பதை கேள்விப் பட்டிருந்த நான் பாபாவிடம் எனது மாமா எப்போது வருவார்களென்று கேட்க அதற்கவர்கள் விரைவில் வருவாரென்று கூறினர். அதன்பின் நான்கு நாட்கள் கழித்து ஒருவர் சொன்னார் உங்களுடைய மாமா வந்து விட்டாரென்று சொன்னதை கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். பாபா கூறியவுடன் வந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
அறிவிப்பாளர்: யு.மு.ளு.ளு. அமானுல்லாஹ், பேரையூர்
இருப்பு: அம்பத்தூர்

No comments:

Post a Comment