Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 2


பேசமுடியாத பெண்ணை ஈத்தம்பழத்தை கொடுத்து பேசவைத்த அற்புதம்
       முகவை மாவட்டம், அபிராமம் என்ற ஊரில் தமது மகளுக்கு இரு செல்வந்தர்கள் சம்பந்தம் செய்து கொண்டனர். சிலகாலம் சென்றபின் அப்பெண் பேசமுடியாமலாகி விட்டார். பல டாக்டர்களிடம் காட்டி பல லட்சங்களை செலவு செய்தும் குணமாகவில்லை. இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் பேசாத பெண் எனக்குத் தேவையில்லை எனக்கூறி அப்பிரச்சனையை ஜமாஅத்திலும் பஞ்சாயத்து வைத்துவிட்டார். ஜமாஅத்தினரோ தலாக்கொடுப்பதற்கு அப்பெண்ணின் கணவருக்கு அனுமதி கொடுக்க மறுத்தனர். இந்நிலையில் மீண்டும் மதுரைக்குச் கொண்டுபோய் பல டாக்டர்களிடம் காட்டினர். ஆனால் குணமாகவில்லை அப்போது பனைக்குளத்தை சேர்ந்த ஒருவரை அப்பெண்ணின் சிறியதந்தை பார்த்தார். அவர் சொன்னார். எங்களுடைய ஊரில் பெரிய ஆலிம்ஷா ஒருவர் இருக்கிறார். அவர் பலபேருக்கு வைத்தியம் செய்து குணமாகியுள்ளது. ஒருவேளை அவர்களிடம் காட்டினால் குணமாகலாம் என்று சொல்ல அப்பெண்ணை உடனே அவரது சிறியதந்தை பனைக்குளத்துக்கு அழைத்துவந்து ஒரு வீட்டில் வைத்துவிட்டு மஹான் பாபா அவர்களை கண்டு அப்பெண்ணின் பேசமுடியாத நிலையை எடுத்துக் கூறினார். அதுகேட்ட பாபா அவர்கள் நிங்கள் உங்களுடைய ஊருக்கு செல்லுங்கள் நான் பிறகு ஒருநாள் உங்களுடைய ஊருக்கு வருகிறேன் என்றனர். அதைக்கேட்ட அவர் தாங்கள் இப்போது அப்பெண்ணை ஒரு தடவையாவது பார்க்க வேண்டுமெனக் கெஞ்சினார். ஆனால் பாபா அவர்கள் மறுத்துவிட்டனர். அதற்குப்பின் சிலநாட்கள் சென்று பாபாவும் அவர்களுடைய மகனார் முபராக்கும் அபிராமத்திற்குப் போய் அப்பெண்ணுடைய தந்தையிடம் விபரம் கேட்க அதற்கவர் எனது மகள் மிகவும் அழகானவள் எல்லா செல்வங்களும் எங்களிடமிருந்தும் எனது மகள் பேசாமலாகி விட்டதுதான் எனக்கு பெரும் வேதனையாக உள்ளது. இந்நிலையில் எனது மருமகனும் என்னுடைய பெண்ணை வேண்டாமென்று சொல்கிறார். தாங்களாவது அவரிடம் கூறி தலாக்குக் கொடுக்க வேண்டாமென்று சொல்லுங்களென்று கூறினார்.
       அப்பெண்ணை இந்த ஆலிமால் பேசவைக்க முடியாதென்னும் எண்ணத்தில் தான் அவர் இவ்வாறு கூறினார். இருப்பினும் பாபா அவர்கள் அப்பையனை அழைத்து வருமாறு சொல்ல அவரும் தமது வீட்டிலிருந்து வந்தார். மாப்பிள்ளையை பார்த்து பாபா அவர்கள் ஏன் உங்களுடைய மனைவியை வேண்டாமென்று சொல்கிறீர்கள்? என்று கேட்க அதற்கவர் கோபத்தோடு பேசமுடியாத பெண்ணோடு எப்படி வாழமுடியும் என்று கேட்டார். அதுகேட்ட மஹான் பாபா அவர் மறுபடியு; பேசினால் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்க அதற்கவர் மிக்க சந்தோஷம். நாங்கள் ஒன்றாக வாழுவோம் என்று கூறினார். அப்படியானால் ஆறு மாதங்கள்வரை பாருங்கள் பேசாவிட்டால் அவரை தலாக் சொல்லி விடுங்கள் என்றனர் மஹான் பாபா அவர்கள். அதைக்கேட்டு மாப்பிள்ளை சந்தோஷமடைந்தாலும் பெண்ணின் தந்தையோ மிகவும் வேதனைப்பட்டார். ஊர் ஜமாஅத்தே தலாக்சொல்லக் கூடாதெனக் கூறியிருக்க, இந்த ஆலிம்ஷா என்னவென்றால் ஆறுமாதம் வரை பார் பேசாவிட்டால் தலாக் சொல்லிவிடு எனக் கூறுகிறாரே எனக்கோபப்பட்டவர் வேதனையுமடைந்தார். அதன்பின் அங்கிருந்தோரை நோக்கி பாபா அவர்கள் பேரீத்தம்பழம் வாங்கி வருமாறு சொல்ல பேரீத்தம்பழம் வந்ததும் அதை ஓதிக்கொடுத்து இதை தினந்தோறும் நாற்பது நாட்களுக்கு கொடுங்கள். உங்களுடைய மகள் பேசுவாள் என்றனர். அங்கிருந்த பெண்களுக்கு பாபாவுடைய சொல்லில் நம்பிக்கை இருந்ததால் நாற்பது நாட்கள் வரை அப்பழத்தை அப்பெண்ணுக்கு சாப்பிடக் கொடுத்தனர். நாற்பத்தோறாவது நாள் அப்பெண் வாய்திறந்து பேச அவ்வீட்டிலிருந்த அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்துப் போனதோடு அளவிலா மகிழ்ச்சியும் அடைந்தனர்.
250 பவுன் நகையை வேண்டாமெனக் கூறிய மஹான் பாபா
       அதன்பின் வாய்பேச முடியாதிருந்து பேசிய அப்பெண்ணின் தந்தை ஹஜ்ஜூக்கு செல்ல, அவரை காண்பதற்காக மஹான் பாபாவும் சென்றனர். அப்போது அவர் சுமார் பத்து கைலியும், நான்கைந்து மக்கா துண்டும், அப்பெண் போட்டிருந்த 250 பவுன் நகைகளையும் கழற்றி ஒரு சஹனில் வைத்து பாபாவிடம் இரு தங்களுக்குரிய காணிக்கையென்று கொண்டுவந்து கொடுக்க பாபா அவர்கள் ஒரு மக்கத்துத்துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு கைலி நகைகளனைத்தையும் கொண்டு போகுமாறு கூறிவிட்டனர். ஆனால் அந்த முதலாளியோ பாபாவிடம் அந்த நகைகளை தாங்கள் நேர்ச்iயாகவாவது எடுத்துக்கொள்ள வேண்டமென மிகவு; மன்றாடினார். அத்துடன் அவர் என் மகளுக்கு இதைவிட மூன்று பங்கு நகையை நான் செய்துபோட்டு விடுவேனென்றும் கூறினார். அதுகேட்ட மஹான் பாபா அவர்கள் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதை கண்டு பேசாதிருந்து இப்போது பேசிக் கொண்டுள்ள உங்களுடைய பெண் மீண்டும் பேச வேண்டுமா? வேண்டாமா என்று கேட்க அதுகேட்ட அவர் திடுக்கிட்டுப் போனவராக என்மகள் பேச வேண்டுமென்று சொல்ல அப்படியானால் அப்பெண்ணுடைய நகைகளை அவருக்கே போட்டு விடுங்களென்று கொடுத்துவிட்டனர். அவ்வாறே அந்த நகைகளை அப்பெண்ணுக்Nகு போட்டு விட்டனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
துர்ருல் முக்தார் நூலை மஹான் பாபா மனனமாகக் கூறினார்
       ஒருசமயம் மஹான் பாபா அவர்கள் அவர்களின் சிஷ்யரான அபுல்காசிம் ஆலிம் என்பாரிடம் துர்ருல் முக்தாரிலுள்ள ஒரு சட்டத்தை கூறினர். அதுகேட்ட அவர் தாங்கள் கூறுவது போல் இல்லையே வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறதென்று கூறிதுர்ருல் முக்தாரை எடுத்துக் காண்பித்தார். அதைப் பார்த்து மஹான்பாபா அவர்கள் அபுல்காசிம் ஆலிம் அவர்களை பல வீடுகளுக்கும் அழைத்துச் சென்று அபுல்காசிம் ஆலிம் அவர்கள் ஒரு முக்கியமான சட்டத்தை எடுத்துக் காட்டினார்களென்று அங்கிருந்தோரிடமெல்லாம் அவரைப் புகழ்ந்து கூறினர். அதன்பின் அன்று மாலை பனைக்குளத்திலிருந்து முதுகுளத்தூருக்கு போவதற்காக இருவரும் ஆற்றை கடந்து சென்றனர். ஆற்றின் கரைக்குச் சென்றதும் மஹான் பாபா அவர்கள் அபுல்காசிம் அவர்களே நான் துர்ருல் முக்தாரை மனப்பாடமாக சொல்கிறேன். தாங்கள் சரியா என்று பாருங்களெனக் கூறி சொல்லத் துவங்கினர். இக்கரையிலிருந்து அக்கரைவருவதற்குள் துர்ருல் முக்தார் முழுவதையும் மஹான் பாபா மனனமாகக் கூறி முடித்தனர். அதைக்கேட்ட அபுல்காசிம் ஆலிம் அவர்கள் வியந்து போனவராக இனிமேல் மார்க்க விஷயத்தில் பாபாவிடம் வாதிக்க மாட்டேனென உறுதி பூண்டார்.
அறிவிப்பாளர்: அபுல்காசிம் ஆலிம் நூரி
அல்ஹம்து குறாவுக்கு மட்டும் ஆறுமாதம் விளக்கம் சொன்ன அற்புதம்
       மஹான் பாபா அவர்கள் மைதீன் உஸ்தாது என்பாருக்கு அல்ஹம்து குறாவுக்குரிய விளக்கத்தை தொடர்ந்து ஆறுமாதம் வரை கூறினார். இதில் விளக்கம் சொல்லும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதுப்புது விளக்கங்களை கூறினர். முதல்நாள் கூறியது போன்று மறுநாளும் கூறாமல் புதுப்புது விளக்கங்களை மஹான்பாபா அவர்கள் கூறி வந்தனர். இதை கற்றுக்கொண்ட மைதீன் உஸ்தாது மஹான் பாபா அவர்கள் மாபெரும் கல்விக் கடலாக இருப்பதை அறிந்து ஆச்சரியடைந்தார். அத்துடன் தமது பிள்ளைகளிடம் செய்யிது முஹம்மது ஆலிம் அவர்கள் கூறுகின்ற விளக்கத்திற்கு மாற்றமாக வேறு எதையும் கூறக்கூடாதெனவும் எச்சரித்தாராம்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மூன்று நாட்கள் ஒருசிறிய ஆயத்திற்கு விளக்கம் கூறிய அற்புதம்
       இராமநாதபுரம் ஈஸா பள்ளிவாசலில் பெரியபட்டிணம் அப்துல் ஃகப்பார் ஆலிம் என்பார் இமாமாக இருக்கும்போது ஒரு ஐந்தாறு உலமாக்கள் அமர்ந்துகொண்டு குர்ஆனில் கூறப்படும் ஹூருல்ஈன் பெண்களுக்கும் நபியவர்களின் மனைவிமார்களான அஸ்வாஜ10 முதஹ்ஹராத்துக்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்னவென்று மஹான் பாபா அவர்களிடம் கேட்டார்களாம். அதற்கு பாபா அவர்கள் நான் விளக்கம் சொன்னால் இருந்து கேட்பீர்களா? என்றுகேட்க அதற்கவர்கள் என்ன? சிறிதுநேரம் விளக்கம் சொல்வார்களென்று எண்ணி, சரி கேட்கிறோம் என்றனர் அதன்பின் பாபா அவர்கள் மேற்கூறப்பட்ட வசனத்திற்கு மூன்று நாட்கள் அதே இடத்திலிருந்து தொழுகையை மட்டும் நிறைவேற்றி உணவையும் அங்கேயே வரவழைத்துக் கொடுத்து வித விதமான விளக்கங்களை கூறினர். அதைக்கேட்ட ஃகப்பார் ஆலிம் அவர்களும் மற்றவர்களும் பேராச்சரியமடைந்து மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
அறிவிப்பாளர்: மௌலானா மௌலவி அல்ஹாஜ் அப்துல் ஃகப்பார் ஆலிம், பெரியபட்டிணம்
நினைத்த போதெல்லாம் மஹான் பாபா வந்த அற்புதம்
       அழகன்குளதi;த சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பாரின் மனைவிக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியமில்லாதிருந்தது. அதற்கு மஹான் பாபா அவர்கள் சில பக்குவங்களை கூறி செய்து வருமாறு கூறினர். அப்போது அவர் தங்களிடம் ஏதேனும் விளக்கம் கேட்க வேண்டுமெனில் தங்களை அழைத்துவர எனது வீட்டுக்காரரால் முடியவில்லை. மேலும் தோதாக கையன்களும் கிடைப்பதில்லை. இந்நிலையில் நான் என்ன செய்வேன்? என்று கேட்க, அதற்கு பாபா அவர்கள் நீங்கள் ஒழுச் செய்துவிட்டு முஸல்லாவில் நின்றுகொண்டு என்னை நினையுங்கள். நான்வந்து வீடவேனென்று கூறினர். அதன்பின் அவர் பாபாவை பார்க்க நினைக்கும் போதெல்லாம் முஸல்லாவில் நின்று நினைப்பாராம். அதே சமயத்தில் பாபா அவர்கள் வாசல்கதவை வந்து தட்டுவார்களாம் இதேபோல பல சந்தர்ப்பங்களில் நடைபெற்றுள்ளது. அத்துடன் பாபா அவாக்ள் கூறியவாறு நடந்து குழந்தை பாக்கியத்தையும் பெற்றார்.
அறிவிப்பாளர்: சிமெண்ட் கடை அப்துல் குத்தூஸ் மனைவி, அழகன்குளம்
சிரங்கை அரிக்கும் சூடைமீனை கொடுத்து குணப்படுத்திய அற்புதம்             
       தஞ்சை ஜில்லா, திருவாரூரைச் சேர்ந்த ஒரு ஆலிம் மஹான் பாபாவிடம் வந்தார். வந்தவர் தமக்கு நீண்ட நர்களாக கடுமையான சிரங்கு இருக்கிறதென்றும், அதை தாங்கள் தான் குணப்படுத்த வேண்டுமென்றும் வேண்டினார். அன்று மதியச் சாப்பாடு சாப்பிட ஒரு வீட்டுக்கு அவரை பாபா அவர்கள் அழைத்துச் சென்று அவருக்கு உணவு கொடுக்குமாறு கூறினர். அதுகேட்ட அவர்கள் அத்தா சூடைமீன் ஆனம்தானே உள்ளது என்றுசொல்ல அதற்கு பாபா அவர்கள் அவர் நன்றாக சாப்பிடுவார் கொடங்கள் என்றனர். சூடைமீன் சாப்பிட்டால் அரிப்பு அதிகமடாகி விடுமேயென்று அந்த ஆலம் பயந்தாராம். ஆனால் மஹான் பாபா அவர்கள் அந்த வீட்டில் சட்டி நிறையவுள்ள சூடைமீன் முழுவதையும் கொண்டு வரச்சொல்லி இந்த மீன் முழுவதையும் சாப்பிட்டால் தான் உங்களை பிடித்துள்ள சிரங்கு வியாதி நீங்குமென்று சொல்ல அவர் எல்லா மீன்களையும் சாப்பிட்டாராம் அன்று முதல் அவரது சிரங்கு வியாதி நீங்கி பல ஆண்டுகள் நலமாக வாழுகிறேனென்று அவரே கூறினார்.
              அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
தமது மறைவுக்குப்பின் தனது மறைவை தன்நேசரிடம் கூறிய மஹான் பாபா
       நான் மலேசியாவில் இருக்கும்போது மஹான் பாபா அவர்கள் மறைந்த அன்று அதே நேரத்தில் சீனி முஹம்மது நான் மறைந்த விட்டோம் என்று மஹான் பாபா கூறினார்.
அறிவிப்பாளர்: சீனி முஹம்மது, ளுஃழ. அப்துல்வருசை, பனைக்குளம்
வயிற்றில் குழந்தை தரித்ததும்  'முஹம்மது மகீனுத்தீன்' எனப் பெயர் சூட்டிய பாபா
       அப்துல் ஹக்கீம் என்பாரின் மனைவிக்கு ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லை. மஹான் பாபாவிடம் கூற அவர்கள் சில பக்குவங்களை செய்யுமாறு கூறினர். அதன்பின் சில மாதங்கள் சென்று உங்களுக்கு ஆண்குழந்தை தரித்துள்ளது. அக்குழந்தைக்கு முஹம்மது மகீனுத்தீன் எனப பெயர் வையுங்கள் அத்துடன் இப்பெயரை சுவற்றில் இப்போதே எழுதி வையுங்கள் என்றும் மஹான் பாபா அவர்கள கூறனினர். எழுதப்பட்டுள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தாலும் குழந்தை உண்டானதற்குரிய அறிகுறி ஏதும் எனக்குத் தெரியவில்லையே என்றும் கூறினார். இந்நிலையில் சிலமாதங்கள் கழித்து டாக்டரிடம் காட்டியபோது டாக்டர் வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது அதை ஆபரேஷன் செய்து அகற்ற ணே;டுமென கூறினார். அப்போதும் கூட குழந்தை வயிற்றில் இருப்பதற்கான அசைவோ அறிகுறிகளோ எதுவுமில்லை. ஆனால் பாபா உறுதியாகக் கூறிவிட்டனர். ஆண்குழந்தை தான் பிறக்கும் அதற்கு முஹம்மது மகீனுத்தீன் என்று பெயர் வையுங்கள். இதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என்பதாக அல்லாஹ்வின் கிருபையால் பாபாவுடைய துஆ பரக்கத்தால் பத்து மாதம் கழித்து அழகான ஆண்குழந்தை பிறந்தது அதற்கு முஹம்மது மகீனுத்தீன் எனப் பெயரும் சூட்டப்பட்டது. அதைக்கேட்டு அவ்வூர் மக்களெல்லாம் ஆச்சரியமடைந்தனர்.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம் முஹம்மது மகீனுத்தீன், பேரையூர்
மஹான் பாபா தனது சிஷ்யருக்கு யானைக்கால் வியாதி வராமல் காப்பாற் றிய அற்புதம்  
       மரியாதைக்குரிய தரக்குடி ஹாஜியாரப்பா அவர்களின் பேரரும், மஹான் பாபா அவர்களின் முதன்மை சிஷ்யருமான அல்ஹாஜ் அப்துல்லாஹ் பாய் அவர்களை அழைத்துக்கொண்டு மஹான்பாபா அவர்கள் கேராளிவிலுள்ள கொச்சிக்கு சென்றான். அங்கே அவர்களுஐடய நண்பரின் அறையில் தங்கியிருந்தனர். நடுஇரவில் அப்துல்லாஹ் பாய் அவர்களுக்கு குளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. உடனே எதிரிலிருந்த குளத்திற்கு குளிப்பதற்காக எழுந்து சென்றார். அப்போது பாபா அவர்கள் விழித்துக்கொண்டு அப்துல்லாஹ்பாய் எங்கே போகிறீர்களென்று கேட்க, அதற்கவர் குளிப்பதற்காக என்று சொன்னார். அதுகேட்ட பாபா அவர்கள இந்தக்குளத்தில் குளித்தால் யானைக்கால் வியாதி வருமென்று கூறியவர்கள் இங்கே வாருங்களென்று கூறி அவர்கள் தங்கியிருந்த அறைக்கு எதிரேயிருந்த வெட்டவெளியில் நிற்கச் சொல்ல அவர் வந்து பாபா கூறிய இடத்தில் நின்றதும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் துவங்கிற்று நன்றாக தேய்த்துக் குளியுங்கள் என்று பாபா சொல்ல அவரும் குளித்து முடித்தார்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பாய் கேட்டு நல்லகனி ராவுத்தர்
மகனுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதென இருமுறை கூறிய அற்புதம்
       மஹன் பாபா அவர்களை சந்திப்பதற்காக ஒருமுறை  நான் பனைக்குளத்திற்கு போயிருந்தேன். நான் எதையும் பாபாவிடம் சொல்லுமுன் அவர்கள் உங்களுடைய மகனுக்கு ஒருபெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு இன்னபெயரை வையுங்களென்று கூறி ஒரு பெயரையும் கூறினர். அதுகேட்டு நான் வியப்படைந்தேன். இதேபோன்று மற்றொரு முறை நான் பாபாவை பார்ப்பதற்காக பனைக்குளம் போயிந்தேன் அப்போதும் பாபா அவர்கள் என்னைநோக்கி உங்களுடையள மகனுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்துள்ளது. அதற்க இந்த பெயரை வையுங்களென்று ஒரு பெயரைக் கூறினார். இருமுறை அவர்கள கூறியதைக் கண்டு நான் மறைவானவற்றை எல்லாம் அல்லாஹ்வைக் கொண்டு அறிவித்துதுத் தரப்படும் ஒரு மாபெரும் வலியாக பாபா அவர்கள இருப்பதை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
அறிவிப்பாளர்: முத்தவல்லி நல்லகனி ராத்தர், ளு.தரக்குடி
இரண்டு மணி நேரத்தில் பொள்ளாச்சியிலிருந்து சித்தார்கோட்டை திருமணத்திற்கு மஹான் பாபா அவர்கள் வந்த அற்புதம்
       பாபாவின் சிஷ்யரான் சித்தார்கோட்டையை சேர்ந்த தையூப்பானின் மகளுக்கு திருமணம் நடைபெற இருந்ததால் பாபா அவர்களை அழைத்து வருமாறு பனைக்குளத்திற்கு ஆள் அனுப்பியதில் பாபா அவர்கள் ஊரில் இல்லையென அழைக்கச் சென்றவர் வந்து கூறினார். அதைக்கேட்டு அவர் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார். திருமணம் வெள்ளிக்கிழமையன்று ஜூம் ஆவுடைய நேரம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின் தையூப்பான்  பள்ளிவாசலின் தெற்குப்பகுதியிலுள்ள வராண்டாவுக்குச் செல்ல அங்கே பாபா அவர்கள் இருப்பதைக் கண்டு மகிழந்தவராக தங்களை அழைத்துவர ஆள் அனுப்பியிருந்தேன் தாங்கள் ஊரில் இல்லையென்று திரும்பி வந்த விட்டாரென்று கூறினார். அதுகேட் பாபா அவர்கள் இன்று நான் 11 மணிவாக்கில் பொள்ளாச்சியில் இருக்கும்போது தான் நிக்காஹ் என்று தெரிந்தது. நிக்காஹ்வுக்கு போய்விட வேண்டுமென்று வந்துவிட்டேன் என்று கூறினர். அதன்பின் இருவருமாக வீட்டுக்குச் சென்றனர்.
அறிவிப்பாளர்: தையூப்பானின் மனைவி ஆயிஷா அம்மாள்
தரக்குடி ஹாஜியாரப்பா பேரர் அப்துல்லாஹ்சாஹிபுக்குக் கிடைத்த மிலான ஷைகு
       தரக்குடி ஹாஜியாரப்பா பேரர் அப்துல்லாஹ் பாய் நீண்ட நாட்களாக தாம் ஒரு காமிலான ஷைகிடத்தில் முரீது பெற வேண்டுமென்று ஆசையும் ஆர்வமும் கொண்டிருந்தார். ஒருமுறை மதுரை சங்கம் பள்ளிவாசலில் 85 வயது நிரம்பிய நல்லார் ஒருவர் ஆன்மீகம் நிறைந்த சிறப்பானதொரு பயானை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பாய், இவர்கள்தான் நம்மை நேர்வழியில் நடத்தக்கூடிய ஷைகு என்றும், இவர்களிடமே நாம்பைஅத் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றுமு; ஆசை கொண்டார். அனைவரும் அப்பெயாரிடமு; முஸாபஹா செய்தனர். அப்துல்லாஹ் பாயும் முஸாபஹா செய்யும்போது ஹஜ்தரத் தாங்கள் எந்தஊர் என்றுகேட்க அதற்கவர்கள் பனைக்குளம் என்று கூறினர். உடனே பனைக்குளம் பெரிய ஆலிம்ஷா என ஒரு பேப்பரில் அப்துல்லாஹ் பாய் குறித:துக்கொண்டார். அதன்பின் அப்பெரியாரை ஒருவர் காரில் அழைத்துச்சென்று விட்டதால் அவர்களிடம் மேற்கொண்டு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் அஸரில் சந்திக்கலாமென எண்ணியவர் அஸர் தொழுகைக்கு வந்துகேட்டபோது அவர்கள் ஊருக்குப் போய் விட்டார்களென்று கூறினர்.
       பின்னர் அப்துல்லாஹ் பாய் சில மாதங்களுக்குப் பின் நாம் பனைக்குளத்திற்குப் போய் அந்த ஷைகிடம் பை அத்துப் பெற்று வரலாமென பனைக்குளம் வந்து அங்கிருந்தோரிடம் பெரிய ஆலிம்ஷா எங்கேயென விசாரிக்க ளுஹருக்க வருவார்களென்று கூறினர். ளுஹரை தொழுதுவிட்டு அப்துல்லாஹ் பாயும் பள்ளிவாசலில் காத்திருந்தார். அப்போது மஹான் பாபா அவர்கள் அப்துல்லாஹ் பாயிடம் வந்து என்னை தேடினீர்களாமே என்று கேட்க அதற்கவர் நான் பெரிய ஆலிம்ஷாவை தேடி வந்துள்ளேன் என்று கூறினார். அதுகேட்ட பாபா அவர்கள் சரி நான் தொழுதுவிட்டு வருகிறேனெனக் கூறிவிட்டு தொழச்சென்று விட்டனர். தொழுதுவிட்டு வந்தபின் தாங்கள் யாரை பார்க்க வேண்டும்? என விபரமாகக் கேட்டனர். அதற்கவர் நான் இங்குள்ள பெரிய ஆலிம்ஷாவை தான் பார்க்க வந்துள்ளேன் என்று சொல்ல அதற்கு பாபா அவர்கள் அவர்களை நீங்கள் எங்கே பார்த்தீர்கள்? என்று கேட்க அதற்கவர் நான் மதுரையில் பார்த்தேனென்று கூறினார். அதைக்கேட்ட பாபா அவர்கள் இங்கே நம்மைத்தவிர பெரிய ஆலிம்ஷா என வேறு யாருமேயில்லையே என யோசித்தவர்கள் ஒருவேளை தாங்கள் ஊரை மறதியாகப் புரிந்து கொண்டீருப்பீர்;கள் என்று கூறியவர்கள் அழகன்குளத்தில் ஒருபெரிய ஆஆலிம் இருக்கிறார்கள் அவர்கள் இருந்தாலும் இருக்கலாம். வாருங்கள் நாம் சாப்பிட்டு விட்டுப் போய் அவர்களை பார்க்கலாமென்று கூறி அவரை சாப்பிட அழைத்துச் சென்றனர்.
       சாப்பிட்டபின் அழகன்குளம் சென்று பீரங்கி ஆலிம்ஷாவை சந்திரத்தனர். அவர்களும் இல்லையென அப்துல்லாஹ் பாய் கூறிவிட்டார். பின்னர் அநத் ஆலிமிட்ம வெகுநேரம் பேசிக்கொண்டிருந்ததில் நீங்கள் அணிந்துள்ள செருப்பை எங்கே வாங்கினீர்களென்று அப்துல்லாஹ் பாயிடம் பீருங்கி ஆலிம் அவர்கள் கேட்க அதற்கவர் இது பர்மா செருப்பு என்றவர் அடுத்தமுறை நான் வரும்போது இதேபோல ஒரு புதிய செருப்பு ஒன்றை வாங்கி வருகிறேனென்று கூறினார். அதுகேட்ட பாபா அவர்கள் இந்தச் செருப்பு நன்றாகத்தானே இருக்கிறத இதை கொடுத்து விடுங்கள் நீங்கள் ஊருக்கு போய் வேறொன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல அதற்கு பீரங்கி ஆலிம் அவர்கள இல்லையில்லை புதிதாகவே வாங்கி வரட்டும் என்று கூறினர். அதன்பின் இருவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வரும்போது பாபா அவர்கள அப்துல்லாஹ் பாயிடம் நீங்கள் அடுத்தமுறை வரும் போது புதிய செருப்பு ஒன்றை வாங்கி வருவீhக்ள். ஆனால் அதை அவர்கள் அணிய மாட்டார்களென்று கூறினர். இந்நிலையில் அப்துல்லாஹ் பாய் அவர்கள் ஊரிலிருந்து வரும்போது பனைக்குளத்திலுள்ள பெரிய ஆலிம்ஷாவை பார்த்துவிட்டு அப்படியே கீழக்கரைக்கும் ஏர்வாடிக்கும் போய்விட்டு வரவேண்டுமென்று எண்ணி வந்ததை பாபாவிடம் சொல்ல அதற்கு பாபா அவர்கள் வேண்டாம். உடனே ஊருக்குச் செல்லுங்கள் அங்கே உங்களை அவசரமாக உதிர்பார்த்துகு; கொண்டள்ளனர். மண்டபம் ரோட்டில் ஒரு பஸ்ஸூம் இராமநாதபுரத்திற்கு போனதும் ஒரு பஸ்ஸூம் நீங்கள் செல்வதற்கு தயாராக உள்ளது என்று கூறினர். அதன்படி இரு இடங்களிலும் பஸ் ரெடியாக இருந்தது. அவர் ஊருக்கு வந்து சேர்ந்தபோது குழந்தைக்கு மிகவும் முடியாமலாகி மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்வதற்குக் கூட ஆண் துணையின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.
       சில மாதங்களுக்குப்பின் பாபாவையும் பீரங்கி ஆலிம் அவர்களையும் பார்த்து வரலாமென எண்ணிய அப்துல்லாஹ் பாய் செருப்பையும் வாங்கிக்கொண்டு பனைக்குளம் வந்து சேர்ந்தார். அங்கே பாபாவிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு, வாருங்கள் அழகன்குளத்திற்கு போய் பீரங்கி ஆலிம்ஷாவை பார்த்துவிட்டு அவர்கள் கேட்ட பாபா அவர்கள், பீரங்கி ஆலிம்ஷா நேற்றே இறந்து விட்டார்கள். வேண்டுமானால் நாம்போய் ஸியாரத்துச் செய்துவிட்டு வருவோம் என்றனர். அத்துடன் பாபா அவர்கள் அப்துல்லாஹ் பாயை நோக்கி தாங்கள் செருப்பு வாங்கி வருவீர்கள். ஆனால் அதை அவர்கள் அணிய மாட்டார்களாதலால் தாங்கள் அணிந்துள்ள செருப்பை இப்போதே கொடுத்து விடுங்களென்று நான் சொன்னேனல்லவா தாங்கள் தான் கேட்கவில்லை என்று கூறினர். அதைக்கேட்ட அப்துல்லாஹ் பாய் அவர்களுக்கு ஆச்சரியமான இம்முன்னறிவிப்பும் பஸ் ரெடியாக இருக்கிறதென்று கூற பஸ் ரெடியாக இருந்ததும், வீட்டில் அவசரமாக எதிர்பாக்கிறார்கள் நேராக ஊருக்குச் செல்லுங்கள் என்று சொல்ல ஊருக்குப் போனதும் தன்னை வீட்டிலிருந்தவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததும் ஆகு இவையனைத்தையும் பார்க்கும்போது நமக்கு மதுரையிலிருந்து சைக்கினை செய்யப்பட்டவர்கள் இவர்கள்தான் என்பது உறுதியாக அதன்பின் பாபா அவர்களையே தனது ஷைகாகவும் வழிகாட்டியாகவும் அப்துல்லாஹ் பாய் தேர்ந்தெடுத்துக் கொண்டார். பின்னர் எந்தவொரு கரிhயமாயினும் பாபாவின் அனுமதியுடனேயே செய்து வந்தார்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பாய், ளு.தரக்குடி
திருடர்களிடம் போகவிருந்த பணம் பாதுகாக்கப்பட்ட அற்புதம்
       பாபா வலியுல்லாஹ் அவர்களும் அஹ்மத் தமீம் என்பாரும் சீனியப்பா தர்ஹாவுக்கு ஸியாரத்துக்காக போகும்போது வழியில் பாபா அவர்கள் அஹ்மத் தமீமிடம், தாங்கள் இடுப்பில் கட்டிவைத்துள்ள பணம் உங்களிடமிருந்தால் திருட்டுப் போய் விடுவேனென்று கூறுகிறது. ஆகையால் அதை என்னிடம் தந்து விடுங்களென்று கூறி தாங்கள் வாங்கி வைத்துக்கொண்டனர். சீனியப்பா தர்ஹாவுக்குப் போய் ஸியாரத்தை முடித்துவிட்டு திரும்பும் போது இரவாகி விட்டது. ஆனால் நல்ல நிலவு அந்த நிலவு வெளிச்சத்தில் இருவரும் ஊரைநோக்கி வந்து கொண்டிருக்கும்போது திருடர்கள் கூட்டமாக ஒருவர்பின் ஒருவராக வந்து கொண்டிருந்ததை கண்டு பாபா அவர்கள அஹ்மத் தமீமிடம் தாங்கள் அவர்கள்மீது உரசாமல் கொஞ்சம் ஒதுங்கியே வாருங்களென்று கூற இருவரும் ஒதுங்கி வந்தனர். எதிர்த்தார்போல் வந்து அனைவரும் இவர்களை பார்த்தும் பாராhதது போல் போய் கொண்டிருந்தனர். ஒருமணல் மேட்டின் மீது இவர்கள் ஏறி போய் கொண்டிருந்தனர். ஒருமணல் மேட்டின் மீது இவர்கள் ஏறி போய் கொண்டிருந்தபோது இறுதியில் தனியாக ஒருவர் மட்டும் சிறிது தாமதித்து வந்தார். அவரும் இவர்களை பார்க்காதது போல சென்றவர் மணல் மேட்டின் மீது ஏறியபின் திருமபிப் பார்த்து அங்கே போவது யார் என்று அதட்டிக் கேட்க அதற்கு பாபா அவர்கள் நரிக்குளிப்பாட்டி சீனித்தம்பி மகன் என்றுசொல்ல அப்படியா சரி போங்கள் என்று அத்திருடர்களி; தலைவர்சொல்ல அச்சப்தத்தை முன்னால் சென்ற திருடர்கள் கூட்டம் கேட்டு என்ன? வரவா? என்று கேட்க தலைவர் அவர்களையும் போங்களென்று கூறியவர் அவரும் போய்விட்டார். அதன்பின் பாபா அவர்கள் அஹ்மத் தமீமை நோக்கி இந்தப்பணம் தங்களிடம் இப்போது இருந்திருந்தால் திருடு போயிருக்கும் என்று கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்,
அல்ஹாஜ் ளு.யு.அஹ்மத் தமீம்;, சில்லாண்குட்டி
மஹான் பாபா சிஷ்யர் அப்துல்லாஹ் பாய் இறந்து விட் செய்தியை யாரும் சொல்வதற்கு முன் சொன்ன பாபா
       அப்துல்லாஸ் பாய் இறந்துவிட்ட செய்தியை சொல்ல நானும் ஆஸிஸ் ஆலிமும் பனைக்குளம் பள்ளிவாசலுக்குப் போய் சேர்ந்த போது பாபா அவர்கள் துஆ ஓதி முடித்தபின் ஆலிம்ஷா அவர்கள் பாபாவுக்கு ஸலாம்சொல்ல, அதற்கு பதிலளித்த பாபா தாங்கள் வந்த விஷயம் தெரியும் நீங்கள் சென்று அவரை நல்லடக்கம் செய்யுங்கள் நான் வரவில்லையெனக் கூறிவிட்டனர்.
அறிவிப்பாளர்: முஹம்மது ஆபூபக்கர், காதர் மைதீன், பேரையூர்
அ.ப. ஷரீப், நத்தம் - அபிராமம்
மஹான் பாபாவின் அறையில் ஒளி சுடர் விட்டுக்கொண்டிருக்கும்
       எனது அண்ணன் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்கள் சிலசமயம் வெளியூருக்குப் போய் விடுவார்கள். அவர்கள் ஊருக்கு வரும் நாளன்று இரவில் எங்களுடைய வீட்டுத் தாழ்வாரத்திலிருந்து அவர்கள் இருக்கும் அறைக்குள் ஒரு பிரகாசமான ஒளி சுடர்விட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் விட்டுக்குள் வந்து சுமார் பத்து நிமிடங்கள் வரை அது அவர்கள் மீது பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். இதனை நான் பலமுறை கண்டிருக்கிறேன். மேலும் நான் இவ்வாறு பார்த்த அன்றே பாபா அவர்கள் ஊருக்கு வந்து விடுவார்கள்.
அறிவிப்பாளர்: முஹம்மது நுஃமான், பனைக்குளம் (மஹான் பாபாவின் தம்பி)

No comments:

Post a Comment