Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள்

ஊசிப்போன இடியாப்பத்தை பிரியாணியை போன்று ருசித்துச் சாப்பிட்ட அற்புதம்
மஹான் பாபா அவர்களும் அவர்களுடைய மகனார் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களும் ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக டிக்கெட் பதிவுசெய்ய சென்னைக்கு செல்லும்போது முகவையிலுள்ள பாபாவுடைய நேசர் ஆயிஷாம்மா அவர்கள் ஒரு மலேசிய அடுக்கு டிபன் கேரியர் நிறைய இடியாப்பத்தை சுட்டுக் கொடுத்தார். அதை எடுத்துச்சென்ற நாங்கள் இடியாப்பம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து விட்டோம். தினந்தோறும் பிரியாணியாகவே சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் மூன்று நாட்களுக்குப் பிறகே அப்பெண்மணி தந்த இடியாப்பம் நினைவுக்குவர, அதை திறந்து பார்த்தபோது அது வெண்பூசணம் பூத்து கெட்டுப்போய் துர்நாற்றம் வீசிற்று. மஹான் பாபா அவர்கள் ஒரு கோப்பையை தந்து அது நிறைய பால் வாங்கி வருமாறு சொல்லி நான் வாங்கி வந்தேன். அவர்கள் அப்பூசணத்தை மேலாக எடுத்துவிட்டு பாலைஊற்றி முகம் கோணாமல் ருசியான பொருளை சாப்பிடுவது போல சாப்பிடத் துவங்கினர். எனக்கும் ஒரு இடியாப்பத்தை கொடுத்து இதை நாம் சாப்பிட்டால் தான் ஹஜ்ஜூக்கு டிக்கெட் கிடைக்குமென்று கூறினர். அதை ஒவ்வொரு முறையும் எடுத்து வாயில் வைக்கும் போதெல்லாம் எனக்கு குடல் முழுவதும் குமட்டிக்கொண்டு வாந்தி வந்துவிடும் போல் இருந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அந்த ஒரு இடியாப்பத்தை சாப்பிட்டு முடித்தேன். ஆனால் மஹான் பாபா அவர்களோ புதிதாக சமைத்த உணவை சாப்பிடுவது போல சாப்பிட்டு விட்டு தொழுவதற்காக சென்றனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
       குறிப்பு: வலிமார்களுக்கு ஊசிப்போன இடியாப்பம் கூட ருசியான பிரியாணி போன்றுதான் இருக்கும். காரணம் அவர்கள் தமது ஐம்பலன்களை விட்டும் நீங்கியிருப்பதே இதற்கு காரணமாகும்.
காஜா ரோஜாவை எடுத்துச் சென்ற அற்புதம்
ஹஜ்ஜிலிருந்து நானும் மஹான் பாபா அவர்களும் திரும்பிய பின் பம்பாயிலிருந்து அஜ்மீருக்கு ஸியாரத்துச் செய்வதற்காக சென்று கொண்டிருந்தோம். அப்போது மஹான் பாபா அவர்கள் 'காஜா இப்போது அங்கே இல்லை. வெளியே போய் விட்டார்கள். என்றனர். பின்னர் அங்கே சென்று ஸியாரத்துச் செய்தபின் அங்குள்ளவர்கள் நேர்ச்சை எழுதுமாறு நோட்டை நீட்ட, காஜா அவர்கள் பத்துரூபாய் மட்டும்தான் கொடுக்குமாறு கூறுகிறார்களென என்னை சொல்லுமாறு கூறினார். அதற்கு ஸாபுமார்கள் அப்படிச் சொல்லாதீர்கள். அப்படிச் சொல்லாதீர்;களென்று சொல்ல சிறிது தொகையை கொடுத்துவிட்டு எதிரிலிருந்த ஒரு அறையில் வந்து அமர்ந்தோம். அங்கே ஒரேயொரு ஓலைபாய் மட்டுமே கிடந்தது. இருவர் மட்டுமே தங்குவதற்குரிய இடமாகவும் அது இருந்தது. நான் வெளியேசென்று பத்துபைசா கொடுத்து ஒரு ரோஜாமலரை வாங்கி வந்தேன். அதை மஹான் பாபாவுக்கு முன்னால் கொண்டுவந்து வைத்து பார்த்துக்கொண்டிருந்த போது சிறிதுநேரத்தில் அந்த ரோஜா காணாமல் போய்விட்டது. அறை முழுவதும் தேடிவிட்டேன். அங்கே கிடந்த பாயைகூட எடுத்து தட்டிப் பார்த்துவிட்டேன் கிடைக்கவில்லை. அதன்பின் அப்பாயை எடுத்து விரித்து நானும் மஹான் பாபாவும் அமர்ந்து கொண்டோம். இவையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பாபா அவர்கள் 'நான் காஜா அவர்கள் இங்கே இல்லை. வெளியூர் சென்று விட்டார்களென்று கூறியதை தாங்கள் நம்பாததால் தான் காஜா அவர்கள் அந்த ரோஜாமலரை எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள்' என்று கூறினர். இருபது நிமிடம்வரை நானும் பாபாவும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென நாங்கள் தட்டிப்பார்த்த பாயில் எனது முதுகுக்குப் பின்னால் அந்த ரோஜா பாயின்மீதே இருந்ததை கண்டு ஆச்சரிமடைந்தேன். இப்போது தான் காஜா அவர்கள் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனார்களென்று மஹான் பாபா அவர்கள் கூறினர். நாங்கள் அஜ்மீரை விட்டுக் கிளம்பும்வரை காஜா அவர்கள் அஜ்மீருக்கு வரவேயில்லையென பாபா கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
என்னை காண வருவீர்களென முன்னறிவிப்புச் செய்த பாபா
       நான் மஹான் பாபா அவர்களை பனைக்குளம் சென்று பார்க்க அனுமதி கேட்டு வருமாறு எனது கணவரை பலமுறை அனுப்பினேன். அப்போதெல்லாம் பாபா அவர்கள் எனது கணவரிடம் என்னை சந்திக்கும் நாள் வரும் அப்போது நீங்களே பனைக்குளத்திற்கு வருவீர்களென்று சொல்லியனுப்பி விடுவார்கள். ஒருநாள் மஹான் பாபா அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்த செய்தியறிந்து எனது ஊர்மக்கள் பலரும் அவர்களுடைய நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக பனைக்குளத்திற்கு சென்றனர். அப்போது நானுமு; எனது ஐம்பதுநாள் கைக்குழந்தையோடும் எனது கணவரோடும் பனைக்குளத்திற்கு புறப்பட்டோம். ஆண்களும் பெண்களுமாக பலரும் மெய்ஞான மாமேதை மஹான் பாபாவின் திருமுகததை பார்த்து கண்ணீர் மல்கச் சென்று கொண்டிருந்த அந்நீண்ட பெண்கள் வரிசையில் நானும் சென்று கொண்டிருந்தேன். பாபாவுக்கு அருகில் சென்று நான் பணிவோடு அவர்களின் முகத்திற்கு நேராக ஸலாம்சொல்ல அவர்கள் இடுப்பு வரை எழுந்து உயிரோடுள்ளவர்களை போல எனக்கு பதில் ஸலாம் கூறிய காட்சியை கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். அதுபோது பின்னாலிருந்த பெண்கள் என்னை முன்னால்போ எனத் தள்ளிவிட்டனர். நான் ஒன்றும் புரியாத நிலையில் நடக்கலானேன். இதை யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? என யோசித்தவள் எனது பிள்ளைகளிடமும், கணவரிடம் மட்டும் கூறினேனேயன்றி வேறு யாரிடமு; இதுவரை நான் சொன்னதில்லை. அல்லாஹ் தனது பேரருளாலும், நபிகள் நாயம் அவர்களின் நல்லாசியாலும் அம்மா மஹானுடைய துஆ பரக்கத்திற்கு எம்மை உரித்தானவர்களால் ஆக்கி வைப்பானாக ஆமீன்.
அறிவிப்பாளர்: பண்டிட் ஜனாபா ஆ. ஸல்மத் பர்வீன் றுஃழ.தேசிய விருதாளர் பெரும்புலவர் எச்.முஸ்தபா ஆயு.இஆயு.இடீ.நுன.இபேரையூர், முகவை மாவட்டம்.
பொன்னானியில் ஆறு மாதம் சோறு தண்ணீர் சாப்பிடாமல் மஹான் பாபா ஓதிய அற்புதம்
       மஹான் பாபா அவர்கள் வேலூரில் ஓதிக் கொண்டிக்கம் போது அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் உணவருந்தும் போது விக்கல் ஏற்பட்டு அதில் இறந்து போனார். அதைக்கண்ட மஹான் பாபா அல்லாஹ் ரசூலுடைய பாடம் படிப்பதை தமது நண்பருடைய விஷயத்தில் அந்த உணவுதான் தடுத்து இறக்கச் செய்து விட்டதென்று, எண்ணியவர்கள் உணவு கொடுக்காமல் ஓதிக்கொடுக்கும் மத்ரஸா எங்கேயுள்ளது? என்று கேட்டனர். அப்போது பொன்னானியில் உள்ள மத்ரஸாவில் தான் உணவேதும் கொடுக்க மாட்டார்கள். நாமாகத்தான் உணவை தேடிக்கொள்ள வேண்டுமென்றும், அத்துடன் அங்கே ஒருசிறந்த ஞானவான் ஒருவர் மார்க்கக் கல்வியை கற்றுக்கொடுக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டு அங்கே ஓதுவதற்காக சென்றனர். பாபா அவர்கள் சோறு தண்ணீர் எதுவும் சாப்பிடாமல் ஆறு மாதங்கள் வரை ஓதினர். அவர்கள் சோறு தண்ணீர் எதுவும் சாப்பிடால் இருப்பதை அறிந்த சில மாணவர்கள் பாபா அவர்கள் வெளயில் செல்லும் போதெல்லாம் சோறு தண்ணீர் சோறு தண்ணீர் என்று அவர்களை கேலி செய்வார்களாம். அதைக் கேட்டு அல்லாஹ் எனச் சப்தமிட்டவர்களாக பாபா அவர்கள் மத்ரஸாவுக்கு ஓடிவந்து விடுவார்களாம். இந்நிலையில் பாபா அவர்கள் உணவேதும் உண்ணாதிருப்பதை பெரிய உஸ்தாதிடமும் கூறிவிட்டனர். அவர்கள் பாபாவை அழைத்து இப்படியெல்லாம் சாப்பிடாமல் இருக்கக் கூடாதென கண்டித்து அனுப்பி வைத்தனர். அதன் காரணமாக பாபா அவர்கள் மத்ரஸாவை விட்டு வெளியே எங்கேயும் செல்வதில்லை. இதையும் அறிந்த பெரிய உஸ்தாது அவர்கள் பாபாவை அழைத்து வெளியே கடைக்குப்போய் சிலபொருட்களை வாங்கி வருமாறு சொல்ல. பாபா வாங்கி வந்தனர். அப்போது பெரிய உஸ்தாது அவர்கள் பாபாவை பார்த்து நீங்கள் கடைக்குப்போய் வாங்கி வந்தீர்களா? அல்லது வேறு யாரையாவது வாங்கிவரச் சொன்னார்களா? என்று கேட்க அதற்கு பாபா அவர்கள் வேறொருவரை வாங்கிவரச் சொன்னேன் எனக்கூற நீ;கள் ஏ; வெளியில் செல்வதில்லை? என பெரிய உஸ்தாது டே;க அதற்கு பாபா வெளியே சென்றால் சிலர் என்னை சோறு தண்ணீரென்று கேலி செய்கின்றனர். அதனால்தான் வெளியே நான் செல்வதில்லை என்றனர்ஃ அதுகேட்ட உஸ்தாது அவர்கள் இன்னுமாநிங்கள் சாப்பிடுவதில்லை? என்றுகேட்க பாபா ஆம் என்று கூறினர். இல்லை கண்டிப்பாக நீங்கள் சாப்பிட வேண்டமென பரிய  உஸ்தாது கூறினார். அதைகேட்ட பாபா அவர்கள் தமது பெரிய உஸ்தாதை நோக்கி, எனது நண்பரை இந்த உணவுதான் சாகமடித்தது. அதற்கும் தாங்கள் உறுதி கொன்னால் சாப்பிடுகிறேன். என்றுசொல்ல அதுகேட்ட பெரிய உஸ்தாது அவர்கள் நீங்கள் சாப்பிடவில்லை எனில் மத்ரஸ்ரீhவை விட்டு உங்களை நீக்கி விடுவேனென கடுமையாக எச்சரித்தனர் அதற்குப்பின் பெரிய உஸ்ததாவின் கட்டளைகிணங்க மீண்டும் சாப்பிடத்துவங்கினர் பாபா அவர்கள் கூறுகிறார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முகபாரக் கலிம் அல்லாஹ் ளுளு. குக்புத்தீன் ஆலிம்
மஹான் பாபாவை உண்மையான வலியாகக் கண்டேன்
  பனைக்குளத்தை சேர்ந்த ஷேக்தாவூத் என்பார் மலேசியாவிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். அப்போது மஹான் பாபா அவர்கள் சித்தார்கோட்டையில் இருந்தனர். பாபாவைப் பார்ப்பதற்காக பலரிடமும் பாபா பனைக்குளம் வந்தார்களா? என்று விசாரித்தார். நேற்றுதான் வந்தார்கள், இப்போதுதான் வந்து விட்டுப் போனார்கள் என பலரும் கூறினர். இவ்வாறு ஆறுமாதம் வரை பாபாவை தேடினார் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் மலேசியா செல்வதற்குரிய நாள் வந்தது. எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு பள்ளிவாசலுக்கு வந்து தஹஜ்ஜத்தை தொழுதுவிட்டு பணயம் புறப்படவிருந்தவர். நம்முடைய செ;யிது முஹம்மது ஆலிம் அவர்கள் ஒரு உண்மையான வலியாக இருந்தால் நாம் புறப்படுவதற்கு முன் அவர்களை பார்த்துவிட வேண்டுமென நிய்யத்தும் வைத்திருந்தார். அன்று தஹஜ்ஜத்துத் தொழுவதற்காக இரவு மூன்று மணியளவில் மஸ்ஜிதுக்கு வந்து ஒழுச்செய்து கொண்டிருந்தார். ஒழுச்செய்த பின் மோதினாரை கண்டு அவரிடம் செய்யிது முஹம்மது ஆலிம்ஷாவை பார்த்தீர்களா? என்று கேட்க இதோ உள் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல அதைக்கேட்டு ஆச்சரியத்தோடு உள் பள்ளிவாசலுக்குள் விரைந்தார். வாசலுக்கு அருகில் மஹான் பாபா அவர்கள் நின்றுகொண்டு ஷேக்தாவூத் தங்களை பயணம் அனுப்பி வைக்கத்தான் வந்துள்ளேன் என்று கூறினர். அதைக்கேட்ட அவர் பாபா அவர்கள் உண்மையிலேயே ஒருபெரிய வலிதான் என்பதை நம்பினார்.
அறிவிப்பாளர்: ஷேக்தாவூத், மேற்குதெரு, பனைக்குளம்.
என்னை நம்பாதே அலலாஹ்வை நம்பு
       அபிராமத்தை சேர்ந்த P.ளு.அப்துல்காதர் என்பவர் நீண்ட நாட்களாக உடல் நலமின்றி இருந்து பல டாக்டர்களிடம் காண்பித்தும் சுகமடையாமல் மஹான் பாபா அவர்களிடம் தமக்கு வைத்தியம் செய்யுமாறு வேண்டினார். அத்றகு பாபா அவர்கள் ஈத்தம்பழத்தை ஓதிக்கொடுத்து இதை சாப்பிடுங்கள் உங்களுடைய வியாதி நீங்கி விடுமென்று சொல்ல அவரும் சாப்பிட்டு வந்தார். ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு எழுந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டு இந்த பேரீத்தம்பழத்தை எல்லாம் சாப்பிட்டால் பல டாக்டர்களாலும் குணப்படுத்த முடியாத என்வியாதி குணமாகிவிடுமா? அல்லாஹவாகப் பார்த்து குணமாக்கினால் தான் குணமாகுமென்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரோ வாசல்கதவை தட்டும் சப்தம்கேட்டு யார்? என்று கேட்டார் என்னை நம்பாதே அல்லாஹ்வை நம்பு என பாபா சொல்வதை கேட்டவர் ஓடிச்சென்று வாசல்கதவை திறந்து பார்த்தால் வாசலில் ஒருவரும் இல்லை. அதன்பின்னரே பாபாவின் மீது அவர்களுடைய வைத்தியத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டு பாபா சொன்னவாறு சாப்பிட்டு குணமுமடைந்து அதன்பின் சில வருடங்கள் வரை வாழ்ந்து வந்தார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்

No comments:

Post a Comment