Saturday, 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 8

வாய்வுக்கு வாத்துமுட்டை வைத்தியம்
       மஹான் பாபா அவர்கள் தமது மகனார் முபாரக் ஆலிமுடன் ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக சென்னை வந்தபோது கிடங்குத்தெரு பள்ளிவாசலில் ஜூபஹூ தொழுகைக்குப் பின்னும் மஃரிப் தொழுகைக்குப் பின்னும் திக்ரு மஜ்லிஸை நடத்துவர் அதில் நானும் கலந்து கொள்வது வழக்கம். ஒருநாள் பாபா அவர்களும் நானும் டாக்ஸியில் போய் கொண்டிருந்தோம். அப்போது பாபா அவர்கள் என்னை நாற்பது நாட்கள் வாத்துமுட்டை சாப்பிடுமாறு கூறினர். அதைக்கேட்ட நான் சிறிது யோசித்தேன். இதையறிந்த பாபா அவர்கள் என்னயோசனை? என்று கேட்க நான் வாத்துமுட்டை வாய்வு ஆயிற்றே என்றேன். உடனே பாபா அவர்கள் உங்கள் உடலிலுள்ள நோய்களனைத்தையும் சொல்லி விடுவேன் நீங்கள் பயந்து விடுவீர்கள். அதனால் சொல்ல மாட்டேனென்று சொன்ன வார்த்தை இன்னும் என்காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
எனது நண்பரின் கடந்த கால நிகழ்ச்சியை கூறிவியப்பில் ஆழ்த்திய அற்புதம்
       எனது நண்பர் ஒருவரோடு பாபா வலியுல்லாஹ் அவர்களை பார்க்க பனைக்குளத்திற்கு சென்றேன். எனது நண்பர் ஒரு பிரபலமான வியாபாரி அப்போது பாபா அவர்கள் எனது நண்பரை தனியே அழைத்துச்சென்று அவரது கடந்தகால நிகழ்ச்சிகளையெல்லாம் கூறி அவரை வியப்பில் ஆழ்த்தி விட்டனர். இதை எனது நண்பர் என்னிடம் கூறி மிகவும் ஆச்சரியப்பட்டதோடு பாபா அவர்களை புகழவும் செய்தார்
               அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
நேரில் வந்தால்தான் குணப்படுத்த முடியுமா?
       மஹான் பாபா அவர்கள் எனக்கு பலமுறை வைத்தியம் செய்து எனது நோய்களை குணப்படுத்தியுள்ளனர். சென்னையில் எனக்கு வேண்டியவர்கள் பலருக்கு வைத்திய ஆலோசனைகளை கூறி அவர்களின் நோய்களை குணப்படுத்தியுள்ளனர். ஒருமுறை அவர்கள் அபிராமத்திற்கு வந்திருந்த போது பஸ்ஸூக்கு நேரமாகி விட்டதென்று கூறி எழுந்துவிட அப்போது ஒருவர் வந்து தனது மகளுக்கு சுகக்குறைவாக உள்ளதை கூறினார். தண்ணீர் ஓதித் தருவதாகக் கூறினர். ஆனால் அவர் பாபா அவர்கள் ஒருமுறை வந்து தனது மகளை நேரில் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தினார் உடனே பாபா அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு நேரில் வந்துதான் பார்க்க வேண்டுமோ? இங்கிரு;தே பார்த்து குணப்படுத்த முடியாதோ? எனக்கூறியது இன்னும் எனது சிந்தையை விட்டு அகலவில்லை
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
குளிர் ஜூரத்திற்கு இளநீரைக் கொடுத்து குணப்படுத்திய அற்புதம்
       பாhபவின் மிக நெருக்கமான நேசர் பேயன் ஷரீபுக்கு ஒருநாள் கடுமையான குளிர் ஜூரம் வந்து நடுங்கினார். அப்போது அவர் பாபாவுடைய இல்லத்திற்கு வந்து பாபா அவர்களிடம் தமது குளிர் ஜூரத்திற்கு ஓதிப் பார்க்குமாறு வேண்டினார். அதைக்கேட்ட பாபா அவர்கள் ஒருவரை அழைத்து இளநீரை பறிக்கச்சொல்லி ஒரு கோஸ் கோப்பை நிறைய இளநீரை ஊற்றி அதை ஓதி சாப்பிடுமாறு ஷரீப் அவர்களிடம் கொடுக்க அவரும் அதைவாங்கி மிகவும் சிரமப்பட்டு குடித்தார். அதன்பின் இன்னொரு கோஸ் கோப்பை நிறைய இளநீரை வெட்டி நிரப்பச் சொன்னார்கள்.
       அதைக்கண்ட ஷரீப் அங்குள்ள சிறுவர்களுக்காகத்தான் இளநீரை வெட்டச் சொல்கிறார்களென்று நினைத்தார். அந்த இளநீரையும் பாபா அவர்கள் ஓதி மீண்டும் ஷரீப் அவர்களை நோக்கி இதையும் குடித்து விடுங்களென்று கொடுக்க முன்பு குடித்ததே திணறிக் கொண்டிருக்கும் போது இன்னொரு கோப்பை இளநீரை எப்படிச் சாப்பிடுவது? மேலும் குளிர்ஜூரம் கண்ட நாம் இளநீரை சாப்பிட்டதால் என்னவாகுமோ? என திகைத்துக் கொண்டிருந்தவருக்கு திரும்பவும் இளநீரை கொடுத்து குடிக்கச் சொன்னதும் பயந்தே போய்விட்டார். அதேநேரம் பாபா அவர்களின் Nபுச்சை என்றுமே மறுக்காத அவர் சரி உயிர் Nபுhனாலும் பரவாயில்லை பாபாவின் சொல்லை தட்டக்கூடாதென்று நினைத்தவர் இரண்டாவது கோப்பை இளநீரையும் மிகவும் கஷ்டப்பட்டு குடித்து முடித்தார். அவர் சுயநிலையில் இல்லை அப்போது பாபா அவர்கள் ஷரீபை பார்த்து நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள் அரைமணி நேரம் கழித்து நான் வருகிறேன். நான் வரும்வரை எதுவும் சாப்பிடக் கூடாதென்று சொல்லியனுப்பினர்.
       ஷரீப் அவர்களின் உள்ளத்தில் நாம் வீடுபோய் சேருவதற்குள் நிச்சயம் இறந்து விடுவோமென்று எண்ணி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வீட்டை வந்தடைந்ததும் அவருடைய குளிர் ஜூரமெலலாம் பஞ்சாய் பறந்து விட்டது. அடுத்து தாங்க முடியாத பசிவந்து பாபாவின் உத்திரவில்லாமல் சாப்பிடக் கூடாதே என பாபாவுக்காக காத்திருந்தார் அதேநேரம் பசி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்திற்குப் பிறகு பாபா அவர்கள் வந்து உணவு கொடுதத்னர். இந்நிலையில் அவருக்கிருந்த காய்ச்சல் பாபா அவர்களின் அதிசயமான பக்குவத்தால் பறந்தே போய்விட்டது.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
அம்மை நீஙக முட்டை வைத்தியம்
       நான் ஒருமுறை இராமநாதபுரத்தில் அம்மைநோய் வந்து ஈஸா பள்ளிவாசலிருந்து இரயில்வே ஸ்டேஷனுக்குக் கூட வரமுடியாமல் மெதுவாக இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து இரயில் ஏறி வலாலந்தரவைக்கு வந்து இறங்கி நடக்க முடியாமல் எப்படியாவது ஊருக்குப் போய் சேர்ந்துவிட வேண்டுமென்று மிகவும் சிரமப்பட்டு பனைக்குளம் கண்மாய் வரை வந்தவன் அதற்குமேல் ஒரு எட்டுக்கூட எடுத்துவைக்க முடியாமல் அங்கிருந்த உடை மரத்தடியில் படுத்து விட்டேன். பிறகு நீண்ட நேரத்திற்குப்பின் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். ஆனால் அதற்குள் எனக்கு மோசமான நிலை ஏற்பட்டு விட்டது. அப்போது வீட்டுக்கு வந்த பாபா அவர்கள் எனது நிலையைப் பார்த்து முக்கால் கோஸ் கோப்பை நிறைய முட்டையை அடித்துத்தந்து முழுவதையும் குடிக்கச் செய்தனர். அதை குடித்து விட்டு படுத்து எழுந்தபோது அம்மை நோய் எங்கே போனதென்றே தெரியவில்லை. புதுத்தெம்போடு பாபா அவர்களின் துஆவால் திகழலானேன்.
அறிவிப்பாளர்: அப்துர்ரஷீத் ஆலிம், பாபாவின் மகனார்.
வெந்நீரின் சிறப்பு
       ஒரு மனிதன் நேமமாக சுடுதண்ணீர் குடித்து வந்தால் அது ஆயிரம் வியாதிக்கு மருந்து.
1.   சுடுதண்ணீர் குடித்து வந்தால் நேரடியாக குடலில் போய் செமிக்க வைத்துவிடும்.
2.   பச்சை தண்ணீரை குடித்தால் உணவை புளிக்க வைத்து அதன்பின் செமிக்கும்.
3.   தண்ணீரை சுட வைப்பதால் அதிலுள்ள கிருமிகளனைத்தும் செத்துப்போய் விடும். அதனால் தொத்து நேய்கள் வராது.
4.   தண்ணீரிலுள்ள களிமண் சத்து, உலோகப் பொருட்கள் அதனால் ஏற்படக்கூடிய வியாதியை நீக்கிவிடும்.
5.   சுடுதண்ணீர் சாப்பிடுவதால் அன்னக்குழாயில் சிக்கியிருக்கும் நெய், கொழுப்புச் சத்து போன்றவைகளை கரைத்து சுத்தப்படுத்தி குடலில் சேர்த்து விடும். பச்சை தண்ணீர் சாப்பிடுவதால் அன்னக்குழாயில் தேங்கியுள்ள நெய், கொழுப்புச் சத்து போன்றவை பாசி பிடித்தது போல் ஆகிவிடும். பல வியாதிகள் வருமென பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 7

பொன் செய்யும் ஆற்றலிருந்தும் எளிய வாழ்க்கை வாழ்ந்த ஏந்தலர்
       மஹான் பாபா அவர்களிடம் செல்வத்தை நாடி வந்தவர்கள் இன்று செல்வச்சீமான்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். நோய் நிவாரண் தேடி வந்தவர்கள் நோய் நீங்கி இன்று ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற கல்வியை தேடி வந்தவர்கள் இன்று மேதாவிகளாக திகழ்ந்து கொண்டுள்ளனர்.
       அல்லாஹ் தனது தூதர்களாகிய நபிமார்களுக்கு முஃஜிஸா என்னுமு; அற்புதங்களை கொடுத்தான். அதேபோல அவனது மெய்யடியார்களான வலிமார்களுக்கும் பல அற்புதங்களை வழங்கியிருக்கிறான். அதற்கு 'கராமத்' எனக் கூறப்படுகிறது. உதாரணமாக நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கொடுத்த முஃஜிஸாத்துக்களில் மிகச்சிறந்தது அவர்கள் தமது கையில் வைத்திருந்த கம்பை கீழே போட்டால் அது பெரிய பாம்பாக மாறிவிடும். இதுபோன்ற நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறந்தோரை உயிர்ப்பிப்பது. நோயிலிருந்து நிவாரணம் அளிப்பது போன்ற ஆற்றலை கொத்திருந்தான் இந்த வரிசையில் நமது நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அற்புதங்களில் எல்லாம் மிகப்பெரிய அற்புதம்நபியவர்கள் சந்திரனை இரு துண்டாக பிளக்கச் செய்ததாகும். இவ்வாறே வலிமார்களுக்கு கராமத் என்னுமு; அற்புதங்களை அல்லாஹ் அருள் புரிந்திருக்கிறான்.
       மஹான் பாபா அவர்களிடம் நிகழந்த அற்புதங்களில் நோய் நிவாரணமளித்தல் என்பது மிக மிகக் குறிப்பிடத்தக்கதாகும். எனக்குத் தெரிந்து எத்தனையோ பெரும் பெரும் மருத்துவர்களாலும் கூட நீர்க்க முடியாத நோய்களை எல்லாம் பாபா அவர்கள் சுகப்படுத்தியிருக்கின்றனர். பாபா அவர்களின் தந்தை வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம் போன்றவற்றில் மாபெரும் நிபுணராக இருந்தனர். இராமநாதபுரம் ராஜாவுக்குக் கூட ஜாதகம் எழுதிக் கொடுத்துள்ளனர்.
       அதே நேரம் பாபா அவர்கள் அனைத்துக் கலைகளிலும் தலைசிறந்தவர்களாக இருந்தும் அல்லாஹ் ரசூலுக்கு பிடித்தமில்லாததை எப்போதுமே செய்ததில்லை. அல்லாஹ் பாபா அவர்களுக்குத் தந்திருந்த சில விசேஷத்தன்மைகளில் ஒன்று அவர்கள் இரும்பு போன்ற உலோகங்களை சில மூலிகைகளின் மூலம் தங்கமாக மாற்றுவதாகும்.
       ஒருமுறை பாபா அவர்களும் அவர்களை போலிருந்த மற்றொரு பெரியாரும் பேசிக்கொண்டிருக்கும் போது இவ்விபரத்தை நான் தெரிந்துகொண்டேன்.
       ஒருபோது பாபா அவர்கள் மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததை கண்ட நான் பாபா அவர்களிடம் தாங்கள் இத்தனை கஷ்டப்படும் போது உங்களுடைய சொந்த செலவுக்காகவாவது நிங்கள் கூறிய முறைப்படி தங்கத்தை செய்து கொண்டாலென்ன? என்று கேட்டேன். அதற்கு பாபா அவர்கள்எனது ரசூல் அவ்வாறு செய்யவில்லை. எனக்கூறி மறுத்து விட்டனர். நபியவர்களின் வாழ்க்கையும் வாழக்கையையும் தமது சொந்த வாழ்க்கையில் பிரதிபலிக்கச் செய்த செம்மல் பாபா என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையா என்ன?
       அறிவிப்பாளர்: எஸ்.ஏ.அஹ்மத் தமீம், பனைக்குளம்
தர்மம் பலாப் முஸீபத்துக்களை அகற்றும்
       ஒருமுறை மஹான் பாபா அவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது நாள் ஒன்றுக்கு தேனீருக்காக என்று நான்கைந்து ரூபாய் செலவு செய்வார்கள். அப்போது நான் கேட்டேன் இந்த நிலையிலும் தேனீருக்காக இத்தனை பணத்தை செலவு செய்து மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டுமா? என்று அதற்கு பாபா அவர்கள் நீங்கள் கூறியவாறு ஐந்து ரூபாயை மிச்சப்படுத்தினால் ஐம்பது ரூபாய்க்குச் செலவு வருகிறது. இதில் எது மிச்சமெனக் கூறுங்களென்று கேட்டனர். தர்மம் தனக்கு வரக்கூடிய பலாய் முஸீபத்துக்களை தடுப்பதோடு விதியையும் மாற்றியமைக்கும் என்னும் பெருமானாரின் வாக்குக்கு விரிவுரையாக தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர் பாபா அவர்கள்.
       மஹான் பாபா அவர்கள் அல்லாஹ் ரசூலுடைய கட்டளைக்கிணங்க நடந்தார்கள். மார்க்கம் அனுமதித்ததை செய்தார்கள் தடை செய்யப்பட்டவைகளை தடுத்தார்கள். இப்போது அவர்கள் நமது புறப்பார்வையை விட்டு மறைந்து விட்டாலும் கூட அல்லாஹ் நம்மை அவர்கள் நடந்த வழியில்தான் நடத்திக் கொண்டிருக்கிறான். அவ்வாறே நடத்திச் வெல்வானாக.
       அறிவிப்பாளர்: எஸ்.ஏ.அஹ்மத் தமீம், பனைக்குளம்
மஹான் பாபாவை எங்களிடம் தான் அடக்க வேண்டுமென வேண்டிய பாபாவின் மாணவர்
       மஹான் பாபா அவர்கள் மறைந்த அன்று அவர்களுடைய மாணவர் அ.சி.இப்ராஹிம் என்பார் பாபா அவர்களை தப்லே ஆலம் பாதுஷா தர்ஹாவுக்கு அடுத்துள்ள எங்களுடைய இடத்தில் தான் அடக்க வேண்டுமென மிகவும் வேண்டினார். அத்துடன் அந்த இடத்தை பததிரம் பதிவுசெய்து தருவதாகவும் கூறினார். பள்ளிவாசலில் அடக்குவதா? அல்லது அ.சி.இப்ராஹீம் அவர்களுடைய இடத்தில் அடக்குவதா? என திருவுளச் சீட்டு போட்டுப் பார்த்ததில் பள்ளிவாசல் என்று வந்ததால் பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டனர். பாபா அவர்கள் மறைந்து நாற்பது நாட்களுக்குப் பின் அந்த இடத்தில் ஆடு, மாடுகள் நடமாடுவதைக் கண்டு பாபாவுடைய தர்ஹாவைச் சுற்றி வேலி அடைத்தார் அ.சி.இப்ராஹீம் அப்போது அவர் மேற்குத்தெரு முஸ்லிம் ஜமாஅத் செயலாளராகவும் இருந்தார். அதன்பின் பாபா அவர்களின் மாணவர் கலவடை அப்துல்ஜப்பார் என்பார் பாபாவுடைய மக்பராவை அழகாகக் கட்ட வேண்டுமென்று நாடினார். அதற்காக ஊரிலிருந்த பெரியவர்களிடம் நாம் எல்லோரும் ஒன்றாகக் சேர்ந்து சிறப்பாகக் கட்டுவோமென்று கூறி அடிக்கல்லும் நாட்டினார்கள். ஒருசில காரணங்களால் அதுநின்று போயிற்று பாபாவின் மாணவர் அப்துல்ஜப்பார் பாபா அவர்கள் ஹஜ்ஜூக்குப் போவதற்கு மிகவும் தூண்டுதலாக இருந்து ஒத்தாசையும் செய்தார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஒரு போஸ்ட் மாஸ்டர் பாபாவின் மீதுகொண்ட நேசம்
       பனைக்குளத்தில் சுப்ரமணியம் என்பவர் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அவரிடம் பாபா அவர்கள் ஒருபெரிய பொட்டலத்தை கொடுத்து இதிலுள்ள ரூபாய் முழுவதையும் உங்களுடைய தேவைக்காக வைத்துக் கொள்ளுங்களென்று கூறினர். அதற்கவர், எனக்குப் பணம் தேவையில்லை ஆலிம்ஷா என்றுசொல்ல அதற்கு பாபா அவர்கள் தேவையருந்தால் செலவுசெய்து கொள்ளுங்கள் அல்லது வைத்திருங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேனென்று கூறிவிட்டு சென்று விட்டனர். அதை அவர் திறந்துபார்க்க அதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள் இருந்ததைக் கண்டு அதை அவர் அப்படியே கட்டிவைத்துவிட்டார். சில நாட்களுக்குப் பின் ஒருநாள் பாபா அவர்கள் வந்து அந்தப் பணத்தை செலவு செய்து விட்டீர்களா? என போஸ்ட் மாஸ்டரிடம் கேட்க, அதற்கவர் இல்லை ஆலிம்ஷா அப்படியே தான் வைத்திருக்கிறேன் என்று கூறி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட பாபா அவர்கள் மீண்டும் அவரிடம், இந்தப்பணம் தேவையில்லையா? என்றுகேட்க அதற்கவர் தேவையில்லை என்று கூறினார். இந்நிலையில் பாபா அவர்கள் மறைந்ததற்குப் பின் போஸ்ட்மாஸ்டர் குத்புத்தீன் ஆலிம் அவர்களை சந்தித்து எனது பிற்காலத் தேவைக்காக பேங்கில் நான் பணம் போட்டு வைத்திருக்கிறேன். பாபா அவர்களுக்கு மக்பரா கட்டும்போது சொல்லுங்கள் அதை எடுத்துத் தருகிறேனென்று அன்போடு கூறினார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்,
அல்ஹாஜ் குத்புத்தீன் ஆலிம்
மறுமையில் தங்களோடு இருக்க வேண்டும்
      1967ல் மஹான் பாபா அவர்களும் அவர்களது மகானர் அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம் அவர்களும் புpனத ஹஜ்ஜூக்குச் செல்வதற்காக சென்னைக்கு வந்திருந்த போதுபல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களை தேடிவந்து அவரவர் தேவைக்கேற்ப துஆ செய்யுமாறும். சீமானாக வாழ வழி கூறுமாறும் வேண்டி நின்றனர். அப்போது அபிராமத்தை சேர்ந்த மௌலானா அஹ்மத் இப்ராஹீம் அவர்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்வதுண்டு. எல்லோரும் எதெதெற்கோ துஆசெய்ய வேண்டுமென கேட்கின்றனர். ஆனால் ஏழ்மையிலு; கஷ்டத்திலும் இருந்த அவர், என்னுடைய கஷ்டம் நீங்க வேண்டும். நான் செல்வச் சீமானாக வாழ வேண்டும் என்றெல்லாம் எதுவுமே கேட்கவில்லை அதற்குமாறாக நாளை இறுதிநாளில் தங்களோடு இருக்க வேண்டுமென்று வேண்டினார். அப்போது பாபா அவர்கள் எனது தோளில் உங்களுடைய முகத்தை வைத்துப் பாருங்களென்று சொல்ல அவரும் வைத்துப்பார்க்க அவரது வேண்டுகோளுக்கிணங்க அற்புதமான காட்சியை கண்ட மனநிறைவு பெற்று அமைதியானார்.
அறிவிப்பாளர்: அஹ்மத் இப்ராஹீம்
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சவுக்கடி பெற்ற சீமான்
       ஒரு ஊரில் சீமான் ஒருவர் இருந்தார். ஒருநாள் தனது செல்வம் முழுவதையும் ஊராருக்கு பங்கிட்டுக் கொடுக்குமாறு கணக்குப் பிள்ளைக்கு உத்திரவிட்டார். அதற்கேற்ப ஊரிலிருந்தோரின் பட்டியல் முழுவதும் எடுத்துக் கொடுக்கப்பட்டது. அதில் ஏழுகுமருள்ள விதவைக்கு மட்டும் கிடைக்கவில்லை. அதை அப்பெண்மணி ஒரு பெரியாரிடம் கூறினார். அதுகேட்ட அவர்கள் இரவு இரண்டு மணிக்கு நபில் தொழுதுவிட்டு உங்களுடைய குறையை அல்லாஹ்விடம் முறையிடுங்களென்று கூறினர். அவ்வாறே அப்பெண்மணியும் செய்தார். அதே நேரம் அச்சீமான் உறங்கிக் கொண்டிருக்க அவரது கனவில் நான்கைந்து சிப்பாய்கள் வந்து அப்பெண்ணுக்கு மட்டும் ஏன் கொடுக்கவில்லை? என்று கேட்டு சவுக்கால் அடித்தனர். அவர் சவுக்கடி தாங்க முடியாமல் துள்ளியெழுந்து முன்சீப்பை கூப்பிட்டு ஏன் அப்பெண்ணுக்கு மட்டும் கொடுக்கவில்லை என்று கேட்டார். அதற்கவர், நான் எல்லோருக்கும் கொடுத்து விட்டேனென்று சொல்ல, பட்டியலை எடுத்துவந்து பார்த்தபோது அதில் அப்பெண்ணுக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருப்பது தெரிந்ததும் அப்பெண்ணுக்குரிய பங்கில் ஏழுபங்கை அதிகமாகக் கொடுத்துவிட்டு வருமாறு உத்திரவிட்டார்;. அப்பெண்ணும் அதனை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் அவ்வேழை பெண்ணுடைய கடைசி மகன் அம்h இந்த நஜீஸூக்காகவா துஆ செய்தீhக்ள்? ஈமான் ஸலாமத்துக்காக துஆ செய்திருந்தால் எவ்வளவு நான்றாக இருந்திருக்கும் என்று கூறினார். பாபா அவர்கள் சொல்லக்கேட்டு...
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்
ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவை சந்தித்தால்?
       மஹான் பாபாவுடையை சிஸ்யர் அப்துல்லாஹ் பாய் பாபாவின் மீது அளப்பரிய நேசரம் கொண்டவர். அவர் உடல் நலமில்லாது இருந்தபோது அதைப்பற்றி பாபா அவர்களிடம் பல நபர்கள் மூலமாக சொல்லியனுப்பிக் கொண்டே இருந்தார். அவருக்குத் தேவையானவை அனைத்தையும் பாபா அவர்களும் கொடத்தனுப்பிக் கொண்டே இருந்தனர். அத்துடன் அரது உதவிக்காக இவர்களுடைய மகனார் அல்ஹாஜ் குத்புத்தீன் ஆலிம் அவர்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் பாபா அவர்கள் மட்டும் செல்லவில்லை. இதுபற்றி பாபா அவர்கள் என்னிடம் ஒருநாள் சொல்லும்போது அப்துல்லாஹ் பாய் என்மீது அதிகமாக நேசம் கொண்டவர். அவரை நாம் சந்தித்தால் அவரது ரூஹூம் நம்முடைய ருஹூம் ஒன்றாகி விடும். அப்போது அவருக்குள்ள நிலை நமக்கு வரும். அதனால்தனர் நாம் சந்திக்கப் போகவில்லை என்று கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சர்க்கரை நோயுள்ள ஒருவர் மஹான் பாபாவைக் காண வந்தார்
       மஹான் பாபா அவர்கள் சித்தார்கோட்டையிலிருக்கும் போது பள்ளிவாசலுக்கு சென்று சிறுநீர் கழித்தனர். அவர்கள் சிறுநீர் கழித்த இடத்தில் அதிகமான எறும்புகள் கூடிவிட்டன. அதைக்கண்ட பாபா அவர்கள் நமக்கு இந்த நோய் இல்லையே ஏன் இப்படி வந்தது? என Nhயசித்தவர்கள் ஒழுச் செய்துவிட்டு சிறிது நேரம்வரை ஓதிக் கொண்டிருந்தனர். அதன்பின் மீண்டும் சிறுநீர் கழிக்கச் சென்றனர். மறுபடியும் எறும்புகள் கூடிவிட்டன. அதைக்கண்ட அவர்கள் மீண்டும் ஓழுச் செய்துவிட்டு ஓதத்துவங்கினர். அப்போது தேவிபட்டணம் ரோடு வழியாக வெளியூரைச் சேர்ந்த ஒருவர் பாபா அவர்களைக் காண வந்தார். அவர் வந்ததும் மீண்டும் பாபா அவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றனர். அப்போது எறும்புகள் எதுவும் வரவில்லை. அதன்பின் வந்தவரை பார்த்து என்ன விஷயமாக வந்தீர்கள்? என்று பாபா அவர்கள் கேட்க அதற்கவர் எனக்கு நீண்ட நாட்களாக இனிப்பு நீர் உள்ளது. அதற்குப் பக்குவம் கேட்டு வந்தேனென்று கூறினார். இதனை பாபா அவர்கள் என்னிடம் கூறும்போது அவர் ரோட்டில் இறங்கியது முதல் நம்மையே நினைத்துக்கொண்டு வந்ததால் அவரது ரூஹூம் நமது ரூஹ10ம் ஒன்றாகக் கலந்து விட்டதால் அவருக்கிருந்த இனிப்பு நீர் நம்மிடம் வந்துவிட்டது. பின்னர் அவர் நம்மிடம் வந்து சேர்ந்ததும்அது நம்மை விட்டும் நீங்கி விட்டதென்று கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
எச்சரிக்கை
அல்லாஹ்வுடைய கோபப் பார்வையை (சுஹ்ரை) பயந்து கொள்ளுங்கள்
       ஒருசமயம் மஹான் பாபா அவர்களும் நானும் மற்றொருவரும் சீனியப்பா தர்ஹாவுக்கு சென்றிருந்தோம் அங்கிருந்த ஒருவர் பாபா அவர்கள் பல்வேறு நோய்களுக்கு பக்குவம் சொல்வார்களென்று அங்கே முராதுக்கு வந்திருந்தோரிடம் சொல்ல, பள்ளிவாசலில் தங்கியிருந்த பாபாவிடம், ஒருவர் பின் ஒருவராக வரத்துவங்கி எல்லோருமே வந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும் அங்கிருந்த புங்கமரத்தின் இலையையும், வேறொரு பொருளையும் கூறி சாப்பிட்டு வாருங்கள் குணமாகி விடுமென்று கூறியனுப்பினர். இன்னும் சிலருக்கு உங்களுக்கு சீனியப்பா உத்திரவு தந்து விட்டார்கள் ஊருக்குப் போங்களென்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர். ஆனால் நான்காவதாக வந்த நபருக்கு மட்டும் உங்களுக்கு சீனியப்பா உத்திரவு தரவில்லையென்று கூறி விட்டனர். அவர் கடைசிவரை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தும் பாபா அவருக்கு ஒன்றுமே கூறவில்லை. இதெல்லாம் முடிந்து நாங்கள் ஊர் வருவதற்காக பஸ்நிற்கும் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்த போது பாபா அவர்கள் நான் அவருக்கு மட்டும் ஏன் பக்குவம் சொல்லவில்லை தெரியுமா? எனக்கேட்டவர்கள் அவர்மீது அல்லாஹ்வுடைய கோபப்பார்வை உள்ளது. அதனால்தான் நான் ஒன்றும் சொல்லவில்லை என்று கூறினர். அல்லாஹ்வுடைய சுஹ்ரை நீக்கவும் முடியாது நீக்கவும் கூடாதென்று கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
சோதனை எதனால் வரும்?
1.   தான் செய்த பாவங்களுக்கு தண்டனையாக வரும் அதை நீக்கவும் செய்யலாம். அதாகவும் நீங்கலாம்.
2.   வலிமார்களின் கோபப்பார்வையால் வரும் அதை நீக்வும் செய்யலாம். அதாகவும் நீங்கலாம்
3.   அல்லாஹ் ஒருவரின் பதவியை உயர்த்துவதற்காக சோதனையாக வரும் அதில் அவர்பொறுமையாக இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள அதை நீக்கவும் செய்யலாம் அதாகவும் நீங்கலாம்.
4.   அல்லாஹ்வுடைய கோபப்பார்வை (சுஹ்ர்) அதை நீக்கவும் கூடாது. நீக்கவும் முடியாது என பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
நல்லோரை துன்புறுத்தாதீர்
       ஒருசமயம் ஒருவர் மஹான் பாபா அவர்களை கொலை செய்வதற்காக கத்தியோடு பாhபவிடமே வந்து எங்கே செய்யிது முஹம்மது ஆலிம்? என்று கேட்டார். இங்கேதானே இருக்கிறார்கள் எனக்கூறியவர்கள் அந்த இடத்தை விட்டு உடனே வெளியாகி விட்டனர். அதன்பின் அவர் குஷ்டரோகம் வந்து மிகவும் கஷ்டப்பட்டார். பாபாவிடம் மன்னிப்பு வாங்கித் தாருங்களென்று பலரிடமும் முறையிட்டார். இறுதியில் பாபா அவர்களை நேரில் கண்டு மன்னிப்புக்கேட்டு தமது நோய் குணமாக வேண்டினார். காரியம் மிஞ்சி விட்டதால் இப்போது ஒன்றும் செய்ய இயலாதெனக் கூறிவிட்டனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் அஹ்மத் தமீம், சில்லான்குட்டி, பனைக்குளம்
பதிமூன்று ஆண்டுகள் பாபா அவர்கள் பனைக்குளத்தை விட்டு ஹிஜ்ரத்
       மார்க்கத்திற்கு மாற்றமாக நாடகக்கச்சேரி ஒன்றை ஒருவர் செய்தார். அதைச் செய்ய வேண்டாமென பாபா அவர்கள் எடுத்துக் கூறியும் அவர் அதை கேட்பதாக இல்லை. அப்படியானால்நான் இந்த ஊரைவிட்டுப் போக வேண்டி வருமென எச்சரித்தனர். இதன்பின் பதிமூன்று ஆண்டுகள் பனைக்குளத்தை  விட்டு சித்தார்கோட்டைக்கு சென்று விட்டனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் அஹ்மத் தமீம், சில்லான்குட்டி, பனைக்குளம்
       நம்மையோ அல்லது நம்மை சார்ந்தவர்களையோ யாராவது அடித்தாலோ, திட்டினாலோ அவரை நாம் அடிக்கத் தேவையில்லை அல்லாஹ் அடித்து விடுவான். நாம் அடித்தால் மனித சக்திக்குட்பட்டுத் தான் அடிப்போம். ஆனால் அல்லாஹ் அடிப்பது பேரடியாக இருக்குமென்று பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: ளு. முஹம்மது குத்புத்தீன் ஆலிம் (பாபாவின் மகனார்)
மஹான் பாபா அவர்களின் மருத்துவம் மருத்துவரால் இறந்து விடுவாரென கைவிடப்பட்டவர் பாபாவின் துஆவினால் குணமடைந்தார்
       பனைக்குளத்தை சார்ந்த மஹான் பாபாவுடைய நேசரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்துல்லாஹ் மருத்துவ மனையில் கொண்டுபோய் காட்டினார்கள். நீண்ட நாட்கள் வைத்தியம் செய்தும் பலனளிக்காமல் இன்னும் சிலநர்களில் இறந்து விடுவாராதலால் இவரை ஊருக்குக் கொண்டுபோய் விடுங்களென்று சொல்ல, அழைத்துச்செல்ல வாகனம் பிடிப்பதற்காக அவரது தந்தை வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்து கொண்டிருந்த பாபா அவர்களை கண்ட அவர் தனது மகனுடைய நிலையகை; கூறி அழுதார். அதைக்கேட்ட பாபா அவர்கள் கவலைப்படாதீர்கள் ஒருவீசை ஈத்தம்பழம் வாங்கி வாருங்கள் என்றுசொல்ல அவ்வாறே அவரும் வாங்கிக் கொண்டுவந்து கொடுக்க தரக்குடி ஹாஜியாரப்பா தர்ஹாவில் வைத்து பாத்திஹா ஓதி இந்த ஈத்தம்பழத்தை உங்களுடைய மகனுக்கு சாப்பிடக் கொடுங்கள் குணமாகி விடும் என்றனர். அதன்படி ஊருக்கு வந்ததும் அந்த ஈத்தம்பழத்தை மூன்று நாட்கள் சாப்பிடக் கொடுத்தனர். அல்லாஹ்வின் கிருபையாலும் அவ்லியாக்களின் துஆ பரக்கத்தாலும் அற்புதமாக குணமாகி விட்டது.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
அம்பலம் பாயின் இருபது வருட வயிற்றுவலி தீர்ந்த புதுமை
       நான் பாபா வலியுல்லாஹ் அவர்களோடு வெகுநாட்கள் இருந்துபணி செய்திருக்கிறேன். அவர்களின் நல்ல துஆவையும் நல்லுபதேசத்தையும் கேட்டு இன்புற்றுக் கொண்டேயிருக்க வேண்டுமென்னும் ஆசையில் நான் எனது ஊரில் அதிகமாக தங்காமல் பெரும்பாலான நாட்கள் அவர்களுடனேயே இருப்பேன் பாபா அவர்களும் என்னை எங்கே சென்றாலும் தம்முடனேயே அழைத்துச் செல்வார்கள். செல்லுமிடம் எல்லாம் ஆயிரக்கணக்கானோரை பீடித்திருக்கும் பலகாலம் சென்ற பிணிகளை கூட ஒருசில தினங்களில் குணபப்டுத்துவதை பார்த்துக் கொண்டிருந்த நான் எனக்கு இருபது வருடங்களாக இருந்த வயிற்றுவலியைப் பற்றி அவர்களிடம் முறையிடும் போதெல்லாம் நீங்கள் அவ்லியாவோடு இருக்கும்போது எதற்காக அவரசப்படுகிறீர்கள் என்பார்கள் இந்நிலையில் ஒருநாள் எனக்கு கடுமையான வயிற்றுவலி வர பாபா அவர்களிடம் முறையிட்டேன்.
       அதைக்கேட்ட அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு அழகன்குளத்திற்கு சென்றார்கள் அங்கே பனிரெண்டு பெரிய ஆற்றங்கரை ஒருசான் நீளமுள்ள வாழைப்பழங்களை வாங்கி எனது துண்டில் பத்திரமாக சுற்றிவைத்துக் கொள்ளுமாறு கூறினர். அதன்பின் பனைக்குளம் பள்ளிவாசலுக்கு மஃரிபுடைய நேரத்தில் திரும்பி வந்தோம். பள்ளியின் தென்பகுதி வரண்டாவில் மேற்குப்பகுதி முனையிலிருந்து கொண்டு அம்பலம்கடைக்குப் போய் ஒரு கத்திரி சிகரெட் பாக்கெட்டும் ஒரு தீப்பெட்டியும் வாங்கி வாருங்களென்று கூறினர். இது யாருக்காக இருக்கும்? பாபா அவர்களும் சிகரெட் சாப்பிடுவிதில்லை. நானும் சாப்பிடுவதில்லை அப்படியானால் இது யாருக்காக இருக்குமென்று யோசித்தவன். யாருக்காக இருந்தால் நமக்கென்ன? பாபா என்ன சொல்கிறார்களோ அதை செய்வதுதான் நம்முடைய வேலையென்று சிகரெட்டும் தீப்பெட்டியும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்ததும் பாபா அவர்கள் என்னை அவர்களுக்கு முன்னால் அமரச்செய்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து வாயில்வைத்து வேகாக உறிஞ்சி புகையை வெளியே விடாமல் விழுங்கு என்று சொல்ல நானும் அவ்வாறே புகையை வெளியே விடாமல் குடித்தேன். அது முடியும் தருவாயில் இன்னொரு சிகரெட்டை கொளுத்தி அதையும் முன்போலவே புகையை குடிக்கச் சொன்னார்கள். இப்படியே ஒன்பது சிகரெட்டையும் குடிக்கச் செய்தார்கள். எனது வயிறு பெரிதாக வீங்கி கண் பார்வையெல்லாம் மங்கிப்போய் திணறிவிட்டேன். அதன்பின் ஒருசிகரெட் கூட என்னால் குடீக்க முடியாதென்று சொல்ல அதற்கு பாபா அவர்கள் இடுப்பில் கைலி இருக்கிறதா? என்று கேட்க நான் ஆம் என்றேன். அதன்பின் என்னை தெற்குப்பக்கம் பள்ளிக்கு நேராகவுள்ள புளு ஊரணிக்கு அழைத்து சென்று தண்ணீரில் இறங்கி உட்காரச் சொன்னார்கள் என்னால் உட்கார முடியில்லை அதைக்கண்ட பாபா அவர்கள் எனது கையை பிடித்து தண்ணீரில் உட்கார வைத்தனர் அப்போது கழுத்தளவு நீரில் நான் அமர்ந்திருந்தேன். என்னை மீன்கள் கடித்து கொண்டிருந்தன. நான் பொறுமையோடு இருந்தேன் ஒருமணி நேரத்திற்குப்பின் வெளியே வாருங்கள் என்றனர். ஒருமணி நேரத்திற்குப் பின் நான் வெளியே வந்தபோது எனது உப்பிலிருந்த வயிறு முழுவதும் கரைந்து கடுமையான பசி ஏற்பட்டு விட்டது.
       ஆடைகளை மாற்றியபின் ஊரணிப் பள்ளியில் அமரவைத்து எனது துணியில் சுற்றி வைத்திருந்த அந்த ஒருசாண் நீளிமுள்ள வாழைப்பழத்தை எடுத்து ஒவ்வொன்றாக உரித்துத் தந்தனர். நான் எல்லா பழங்களையும் சாப்பிட்டு விட்டேன். ஆவென்று வாயைத் திறந்தால் தின்றவையனைத்தும் வெளியே வந்துவிடும் போலிருந்தது. என்னை அங்கேயே படுத்திருக்குமாறு சொல்லிவிட்டு பாபா அவர்கள் வீட்டுக்குச் சென்று விட்டனர். மறுநாள் காலை ஒருபெரிய பெட்டியில் சுமார் ஐம்பது ஆப்பங்களை கொண்டுவந்து ஒருபையன் என்னிடம் தந்தார். இதுயாருக்கு என நான்Nகுட்க அதற்கந்த பையன் இதை ஆலிம்ஷா உங்களிடம் தருமாறு சொன்னர்களென்று கூறினான். சிறிது நேரத்தில் பாபா அவர்கள் வந்தனர் வந்தவர்கள் என்னைநோக்கி இந்த ஆப்பங்களனைத்தையும் சாப்பிட்டு விடுங்களென்று கூறிவிட்டு மீண்டும் வெளியே சென்று விட்டனர். இவ்வளவையும் எப்படிச் சாப்பிடுவதென்று நான் மலைத்துப் போனேன். இருப்பினும் பாபா சொல்லி விட்டார்களே என்பதற்காக எல்லா ஆப்பங்களையும் சாப்பிட்டு விட்டேன். கடுமையான தாகம் ஏற்பட்டும் தண்ணீர் மட்டும் சாப்பிடவில்லை அதன்பின் பாபா அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு மீன் பஜாரிலுள்ள டீக்கடைக்கு வந்து இவர்களுக்கு அதிகமாக பசிக்கிறது நான்கு ரொட்டு கொடுங்களென்று சொல்ல நான் திகைத்துப் போனேன். இருப்பினும் அதையும் சாப்பிட்டேன். பின்னர் அதிரசமிருந்தது இதையும் இவர் மிகவும் பிரியமாக சாப்பிடுவார் இதையும் கொடுங்களென்று கூறிவிட்டு பள்ளிவாசலுக்கு சென்று விட்டனர். நான் அதையும் சாப்பிட்டு விட்டு பள்ளிவாசலுக்கு சென்றேன். அன்றுமுதல் எனது வயிற்றுவலி என்னை விடடும் பறந்தே போய்விட்டது.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் யு.மு.ஷம்ஜூகான அம்பலம், பேரையூர்
மஹான் பாபாவை கண்டார்;: நோய் தீர்ந்து உண்மை சிஷ்யரானார்
       சித்தார்கோட்டையை சேர்ந்த தையூப்கான் அவர்கள் சென்னைக்கு போகும் போதெல்லாம் மாஜ்கான் சாவடி, பள்ளிவாசலில் ஓதிக்கொடுத்துக் கொண்டிருந்த ஹாபிஸ் நூருல்லாஹ் என்னும் பெரியாரை சந்தித்து அவர்களிடம் பல நல்ல விஷயங்களை கேட்டு நல்லுணர்வு பெற்று வருவது வழக்கம். ஒருமுறை அப்பெரியார் தாங்கள் ஏன் அடிக்கடி சிரமப்பட்டு வந்து என்னை பார்க்கிறீர்;கள் தங்களுடைய ஊருக்கு அருகில் செய்யிது முஹம்மது என்றொரு பெரியார் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆதலால் உங்களுக்கு தேவைப்படும் விஷயங்களை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களென்று கூறினர். அதுகேட்ட தையூப்கான் அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்களென்று கேட்க உங்களுடைய ஊருக்குப் பக்கத்தில் தானென்று கூறினர். அப்படியென்றால் கீழக்கரையிலுள்ள செய்யிது முஹம்மதா? என்று கூறியவர் இன்னுமு; பல ஊர்களுடைய பெயர்களையெல்லாம்  சொல்லிஅந்த ஊர்களில் இருக்கிறார்களா? என்று கேட்டார். இல்லையென அப்பெரியார் கூறினர். இறுதியாக பனைக்குளத்தில் செய்யிது முஹம்மது ஆலிம் என்றொருவர் இருக்கிறார்கள் அவர்களா? என்று கேட்க அவர்கள் தானென அப்பெரியர் கூறினர். அதன்பின் ஊருக்கு வந்து பாபா வலியுலலாஹ் அவர்களை பனைக்குளத்தில் சந்தித்து அப்பெரியார் கூறியதைக் கூறி தங்களுக்கு அவர்களை தெரியுமா? என்று தையூப்கான் கேட்hர் அதற்கு பாபா அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை அன்றிலிருந்து தையூப்கான் பாபா அவர்களை தனது ஞான குருவாகவும் உஸ்தாதாகவும் ஏற்றுக்கொண்டு நடக்கத் துவங்கினார். ஹாபிஸ் நூரல்லாஹ் என்னுமு; பெரியாரை தையூப்கான் சந்தித்தபோது அவாகள் தையூக்பானை சிகரெட் பிடிக்குமாறு சொல்ல மரியாதை நிமித்தமாக மறுத்து விட்டார். அவர்கள் மீண்டும் வற்புறுத்தவோ அவர்களின் வற்புறுத்தலுகு;கு இணங்கி ஒரேயொரு முறை பற்றி வைக்கிறேன் என்று கூறி பற்ற வைத்தார். சிறிது நேரத்தில் அதுவும் அணைந்து விட்டது அதன்பின் பற்றவைக்க வில்லை இவ்வாறே பாபா அவர்களின் மீது நேசமுற்று அவர்களிடம் இருக்கும்போது பாபா அவர்கள் தையூப்கானை நோக்கி உங்களுடைய தேகத்திற்கு சூடு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை சாய்த்து விடுமென்று கூறினர். மேலும் பாபாவுக்கு முன்னால் யாருமே சிகரெட் குடித்தது கிடையாது. ஆனால் அவர் மட்டும் சிகரெட் குடித்துக் கொண்டேயிருப்பார். பாபா அவர்கள் கூறியவாறு தொடர்ந்து தேகத்திற்கு சூடு கொடுத்துக் கொண்டிருந்ததால் தேக ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தார். பின்னர் பதினைந்து நாட்கள் சிகரெட் குடிப்பதை நிறுத்தவே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இளைவனடி சேர்ந்து விட்டார்.
அறிவிப்பாளர்: தையூப்கானிடம் கேட்டு அறிவிப்பவர்
அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
ஒரு பாட்டில் R.S.பதி தைலம் முழுவதையும் சாப்பிடக் கொடுத்து வைத்தியம் செய்தல்
       எனது மனைவி முஃமினா பீவி வயிற்றில் கட்டிபோல திரண்டுகொண்டு வயிற்று வலியால் வெகுநாட்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதைப்பற்றி பாபா வலியுல்லாஹ் அவர்களிடம் முறையிட்டோம். அவர்கள் ஒருபாட்டில் சு.ளு.பதி தைலம் முழுவதையும் ஒரே தடவையில் குடிக்கச் சொன்னார்கள் இதை குடீத்ததிலிருந்து இன்றுவரை வயிற்றுவலி இல்லை. அல்லாஹ்வின் கிருபையாலும், பாபா அவர்களின் துஆ பரக்கத்தாலும் எனது மனைவி வயிற்றுவலியை விட்டும் சுகமடைந்து நிம்மதி பெற்றார்.
அறிவிப்பாளர்: நாகூர்;கனி அம்பலம், முஃமினாபீவி, பேரையூர்
கனவில் எனது வயிற்றுவலி நீங்க வழிசொன்ன மஹான் பாபா
       நான் மலேசியாவில் மிகவும் சிரமத்தோடு வேலை பார்த்து வரும்போது என்னை வயிற்றுவலி மிகவும் கஷ்டப்படுத்திக் கொண்டேயிருந்தது. ஒருநாள் மிகுந்த வேதனையோடு படுத்திருக்கும் போது ஆலிம்ஷா அவர்கள் எனது கனவில் தோன்றி வாயைத்திற எனக் கூறியவர்கள் ஒரு கலயத்திலிருந்து தண்ணீரை எனது வாயில் ஊற்றினர். அன்றுமுதல் பனிரெண்டு ஆண்டுகளாக இருந்து வந்த எனது வயிற்றுவலி என்னை விட்டும் நீங்கி விட்டது. இவ்வாறே என்னுடைய மகன் நஜ்முத்தீனுக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்தது. ஆலிம்ஷா அவர்கள் வயிற்றில் கைவைத்து தடவியதும் அப்போதை குணமாகி விட்டது.
       ஒருமுறை ஆலிம்ஷா அவர்கள் கூறினர். உனக்கு ஏதாவது உடம்புக்கு சரியில்லாவிட்டால் மருந்தை வாங்கி நான் தந்தேனென்று என்னை நினைத்துக்கொண்ட சாப்பிடு குணமாகி விடும் என்றனர். அதன்பின் எனக்கு இனிப்புநீரும், இரத்தக் கொதிப்பும் வந்தபோது மருந்தை வாங்கி ஆலிம்ஷா தந்தார்களென்று சாப்பிட்டேன். அல்லாஹ்வின் கிருபையாலும் பாபா அவர்களின் துஆ பரக்கத்தாலும் பூரணமாகக் குணமாகி விட்டது.
அறிவிப்பானர்: பனைக்குளம் கண்ணுள்ளான் இப்ராஹீம் கனி
வாந்தியை நிறுத்திய அற்புதப் பக்குவம்  
       பாபா அவர்களை கேட்காமல் எங்களுடைய வீட்டிலுள்ளோர் எதுவும் செய்ய மாட்டோம் எதைச் செய்தாலும் அவர்களை கேட்டுத்தான் செய்வோம். எங்களுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும் வேறு காரியமானாலும் பாபா அவர்கள் தான் எங்களுக்கு பக்குவமும் வழியும் கூறுவர். எனக்குக் குழந்தை தரித்து ஐந்து மாதங்கள் வரை எந்த உணவை வாயில் வைத்தாலும் உடனே வாந்தி வந்துவிடும் இதுபோல பல குழந்தைகளுக்கும் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வந்தேன். இதனை பாபா அவர்களிடம் முறையிட்ட போது அவர்களே இருந்து சுக்காணம் போல கருவாட்டு ஆனம் காய்ச்சி ஓதித் தந்தனர். ஒரு கவளம் கூட சாப்பிட முடியாதிருந்த நான் அந்த உணவை ஒருதட்டு நிறையச் சாப்பிட்டேன். அன்றுமுதல் வேறு ந்தக் குழந்தைக்கும் வாந்தி வரவில்லை.
அறிவிப்பாளர்: ஷரீபா அம்மாள்
றுஃழ. N.P.ஆ.முஹம்மது ஹூசைன், பேரையூர்
மஹான் பாபா அவர்களால் மூன்று நாட்களில் டைபாய்டு குணமான அற்புதம்
       எனக்கு கடுமையான டைபாய்டு காய்ச்சல் கண்டு இராமநாதபுரத்தில் ஒருபெரிய டாக்டரிடம் காட்டி நான் பிழைக்க மாட்டேனென்று ஊருக்குக் கொண்ட வந்து விட்டனர். அதுசமயம் பாபா அவர்கள் ஊருக்கு வந்திருந்தனர். அவர்களிடம் இதை முறையிட இஞ்சிச் சாறையும், தேனையும் மூன்று நாட்களுக்க ஓதித் தந்தனர். அல்லாஹ்வின் பேரருளாலும் பாபா அவர்களின் பரக்கத்தாலும் மூன்றே நாட்களில் குணமடைந்தேன்.
அறிவிப்பாளர்: ஹவ்வாபீவி, னுஃழ.மதார் ராவுத்தர், பேரையூர்
நல்லாரை தொடர்ந்தவர் நலமுற்றார்
       மஹான் பாபா அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் நான் அவர்கள்மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தேன். அவர்களை அடிக்கடி சந்தித்து அவர்களது நல்லுபதேசங்களை கேட்பது வழக்கம் இந்நிலையில் எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு அறிஞர்கள் நல்லோர்கள் போன்றோரை புகழ்ந்து பேசுவதெல்லாம் பிடிக்காது. திடீரென அவருக்குக் கடுமையான டைபாய்டு ஜூரம் கண்டு சென்னையில் பல டாக்டர்களிடம் காட்டினார்கள். டாக்டர்கள் ஊருக்குப்போய் பத்தியமாக இருந்து வருமாறு கூறி அனுப்பி விட்டனர். அதன்படி நடந்து அவருக்கு சிறிது குணமானபின் நாம் இருவரும் எங்கவாது வெளியே போகலமா? என்று கேட்டார். என் கருத்துத்ததான் உனக்குப் பிடிக்காதே என்றேன். சரி சொல் அப்படியே நடப்போம் என்றார். அதைக்கேட்ட நான் அதிக நாட்கள் வீட்டிலேயே இருந்துவிட்டு வெளியே புறப்படும்போது முதலில் ஒருபெரியாரை போய் பார்ப்பது தான் நல்லதென்று சொன்னேன். அதை அவரும் ஒப்புக் கொண்டார்.
       அதன்பின் மறுநாள் மஹான் பாபா அவர்களை சந்திக்க பனைக்குளத்திற்கு புறப்பட்டோம். பாபா அவர்கள் ஊரில்ட இல்லாததால் அலைந்து திரிந்து இறுதியில் அவர்களை இராமநாதபுரத்தில் வைத்து சந்தித்தோம். பனைக்குளத்திற்கு வந்து பள்ளிவாசலில் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்று விட்டனர். அப்போது பாபா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில் பலர் அவர்களை சந்திப்பதற்காக பள்ளிவாசலில் காத்திருந்தனர். சிறிதுநேரத்தில் ஒருவர் வந்து காத்திருந்தவர்களின் பெயர்களை கூறி அவர்களையெல்லாம் பாபா அவர்கள் ஊருக்குச் செல்லுமாறு கூறினர் என்று சொல்ல அவர்களனைவரும் ஊருக்குச் சென்று விட்டனர் நாங்கள் இருவரும் மட்டும் இரந்தோம் அப்போது அவர் எங்களை சாப்பிட பாபா அவர்கள் அழைத்துச்செல்ல சொன்னதாகக் கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே மீன்குழம்பும் சோறும் கொடுத்தனர். குழம்பில் காரம் அதிகமாக இருந்தது. காரம் அறவே சாப்பிடாத எனது நண்பர் என்னைப் பார்க்க நான் பாபா அவர்கள் அன்போத தரும் சாப்பாடு இது பயப்படாமல் பிஸ்மி சொல்லி சாப்பிடு என்றேன். அவர் அளவுக்கு அதிகமாகவே சாப்பிட்டார். அதைப்பார்த்த எனக்கே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பின்னர் மாலையில் டீ சாப்பிட்டபின் ஊருக்கு போகுமாறு பாபா சொல்லியனுப்பினர். டைபாய்டு ஜூரம் வந்தவர் அதிகம் அலையக் கூடாது அறவே சாப்பிடக் கூடாதென்று டாக்டர்கள் வேறு அவர எச்சரித்திருந்தனர். இந்நிலையில் கடுமையான காரமும் அலைச்சலும் அலைந்த எனது நண்பருக்கு அதனால் எந்தக் கெடுதியும் ஏற்படவில்லை. மேலும் மறு நாளிலிருந்தே நல்ல ஆரோக்கியமுள்ளவர்கள் சாப்பிடும் எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடத் துவங்கினார். அன்றுமுதல் இன்றுவரை அல்லாஹ்வின் கிருபையாலும், பாபா அவர்களின் துஆ பரக்கத்தாலும் ஆரோக்கியமாக இருந்து வருகிறார். இன்னும் பாபா அவர்களின் வைத்திய முறையில் எந்தவொரு வியாதிக்கும் நேர்மாறானதையே சாப்பிடச் சொல்வாகளென கேள்விப்பட்டிருந்தேன். எனது நண்பருடைய விஷயத்தில் அதை நான் கண்கூடாகவே கண்டதால் அல்லாஹ்வின் நல்லடியார்களில் பாபா அவர்களும் ஒருவர் என்பது எனது உள்ளத்தில் ஆழமாகப பதிந்து விட்டது.
அறிவிப்பாளர்: வு.யு.ஆ.சிக்கந்தர் பாடசா, அபிராமம்
ளுஃழ.முஹம்மது ஹாஷிம்
மஹான் பாபாவின் அற்புத வைத்தியமுறை
-     ஒரு ஆலிம் வைத்தியரா?
பனைக்குளம் என்றதும் எங்களின் நினைவுக்கு வருவது ஹஜ்ரத் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்கள்தான். பாபா அவர்களுக்கும் எங்களுக்குமுள்ள ஆன்மீகத் தொடர்பினால் அவர்களை ஹயாத்துதடன் தரிசிக்க வந்தோம். இப்போத அவர்களது மறைவுக்குப்பின் அவர்களை ஸியாரத்துச் செய்ய வருகிறோம். இன்ஷா அல்லாஹ் வந்துகொண்டே இருக்போம் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எனது உறவினர் ஒருவர் சுகவீனமாக இருந்தார். சென்னையில் பல்வேறு பெரிய வைத்தியர்களிடமெல்லாம் காட்டியும் குணமடையவில்லை அதன்பின் பனைக்குளத்திற்கு பாபா வலியுல்லாஹ் அவர்களிடம் வந்தோம். இதுதான் எங்களின் முதல் சந்திப்பு அப்போது ஒரு ஆலிம் சாஹிப் வைத்தியரா? என நான் நினைத்தேன். ஆனால் அவர்களின் தோற்றமும் பேச்சும் எங்களை மெய்மறக்கச் செய்துவிட்டது. அதன்பின் அவர்களை எங்களுடைய ஊருக்கு அழைத்து வந்தோம். பேரீத்தங்காய், ஸைத்துன் எண்ணெய், புறா இரத்தம், புறா மாமிசம். வேப்பெண்ணெய், முட்டை ஆகியவற்றை கொண்டு வைத்தியம் செய்தனர். ஸரவாத்தை பகலில் ஆயிரம் முறை இரவில் ஆயிரம் முறை ஓதச் சொன்னார்கள். அல்லாஹ்வின் உதவியால் பாபா அவர்களின் துஆ பரக்கத்தால் பூரண சுகம் ஏற்பட்டது. அல்ஹம்து ஸில்லாஹ்.
அறிவிப்பாளர்: ளுஃழ.முஹம்மது காசிம், அபிராமம்
ஆளைப் பார்க்காமலே அவரது அடையாளங்களை கூறி மருத்துவம் செய்த அற்புதம்
எனது உறவுக்காரப் பெண்மணி ஒருவர் மாதவிடாய் கோளாறினால் அவதிப்பட்டார். அவர் என்னிடம் பாபா அவர்களிடம் சென்று தமக்கு வைத்தியம் செய்யுமாறு கேட்கச் சொன்னார். அதைக்கேட்ட நானும் பனைக்குளம் வந்து பாபா அவர்களை பள்ளிவாசலில் சந்தித்து விஷயத்தை கூறினேன். உடனே பாபா அவர்கள் அப்பெண்ணின் நிறம், உயரம் போன்ற அடையாளங்களை கூறி விட்டனர். இது என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது. அப்பெண்ணை அவர்கள் பார்த்ததே இல்லை. அதன் பின அப்பெண்ணுக்கு ஒரு மருந்து வாங்கி வருமாறு கூறியவர்கள் பஸ்ஸூக்கு நேரமாகி விட்டதென்று புறப்பட்டனர். இதை ஓதித் தரவில்லையே என்று கேட்டேன். அதற்கு பாபா அவர்கள் இதை கொண்டுபோய் கொடுங்கள் குணமாகி விடுமென்று கூறினர். அதன்படி கொண்டுபோய் கொடுத்தேன். குணமாகி விட்டது.
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்