Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 6

கமகமவென்று வாசமடித்தது நபிகளார்நம்மோடு வருகிறார்கள், பார்த்தீர்களா? என்றனர்
       நானும் மஹான் பாபா வலியுல்லாஹ் அவர்களும் ஒருநாள் இரவு ஏழரை மணியளவில் அழகன்குளத்திற்கு போய் கொண்டிருந்தோம். அப்போது திடீரென நான் எப்போதும் நுகராத புதுமையான வாசம் கமகமவென்று வீச பாபா அவர்கள் 'நபியவர்கள் நம்மோடு வருகிறார்கள் பார்த்தீர்களா'? என்று கேட்டனர். ஒரே வாசமாகத்தான் இருந்தது. ஆனால் யாரையும் காணவில்லை பாபா மறுபடியும் 'இதோ வருகிறார்கள்' என்று சொல்ல அதற்க நான் நாம் இருவர் மட்டும்தானே இருக்கிறோம் என்றேன். அதுகேட்ட பாபா நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்டனர். அப்போதும் அந்த ணம் வீசிக் கொண்டேயிருந்தது நாங்கள் பேசிக்கொண்டே அழகன்குளம் வருசை முஹம்மது ஷைகப்பா தர்ஹாவுக்கு வந்து சேர்ந்தோம் அப்போது எனது அண்ணன் பாபா அவர்கள் நீங்கள் ஊருக்குச் செல்லுங்களென்று என்னைபார்த்துச் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது. நீங்களும் வாருங்கள் என்றேன். அதைக்கேட்ட அவர்கள் பயப்படாமல் 'அல்லாஹ், முஹம்து அடியார் தூதர்' எனக் கூறிக்கொண்டே செல்லுங்கள் என்றனர். நானும் அவ்வாறே சொல்லிக்கொண்டு ஓடிவரும்போது எனக்கு முன்னால் ஒருவர் போய் கொண்டிருந்தார் நான் அவரை பிடித்து விடலடிதமன்று ஓடியும் பிடிக்க முடியவில்லை பனைக்குளம் தைக்காவுக்கு வந்துவிட்டேன். அத்துடன் பள்ளிவாசல் பக்கமாக போனேன். அங்கே எனது அண்ணன் பாபா அவர்கள் இருப்பதைக் கண்டு பேராச்சரியமடைந்து அவர்களிடம் எதுவு; கேட்காமல் வந்து விட்டேன்.
அறிவிப்பாளர்: பாபாவின் தம்பி முஹம்மது நுஃமான்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே மெய்ஞான மாமேதை பாபா அவர்கள் வரும்பொருள் உரைத்தமை
       'பாபா' நான் ஒற்றை சம்பளம் வாங்கி கஷ்டப்படுகிறேன். எனது மனைவிக்கு ஹிந்தி பண்டிட் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் நாங்கள் இருவரும் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது சிரமமில்லாமல் இருந்தது என்றேன். அதுகேட்டு தமிழ்நாட்டில் இனி ஹிந்தி கற்பிக்க ஆசிரியர் நியமனம் நடக்குமென்றா நினைக்கிறீhகள்? என என்னிடம் கேட்டனர்.
       அப்போது எனது மனதில் இவர்கள் ஓதியுணர்ந்த ஆலிம் தான் ஆனால் உலகியல் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் என எனது சிற்றறிவிற்குப் பட்டது ஹமாரா ராஷ்ட்ரீய பாஷா ஹிந்தி ஹை என தேசமெங்கும் சொல்லப்படுகிற காலத்தில் அவ்வாறு நினைத்தேன்.
       அவர்களுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் வீட்டிலிருந்து பிள்ளைகளை பேணி வளர்ப்பார்கள் அத்துடன் தாங்கள் உயர்ந்த பதவியிலும் அமர்ந்து கைநிறைய சம்பாதிப்பீhக்ள் அல்லாஹ்வின் பேரருளாலும் அவனது ஹபீபின் துஆ பரக்கத்தாலும் நல்ல நிலையில் இருப்பபீர்களென்றும் கூறினர் அதைக்கேட்டு மனநிறைவடைந்த நான் எனது மனைவிக்கு ஆசிரியப் பயிற்சிக்கு அரசில் இடஒதுக்கீடு கிடைத்ததும் அனுப்பாது வீட்டிலேயே மனையாட்டியாக குடும்ப நலம் பேணச்செய்தேன்.
       பாபா அவர்கள் இவ்வாறு கூறி நாலைந்து மாதங்களில் தேர்தல் வந்தது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அரசு மும்மொழித் திட்டத்திற்குப் பதிலாக இருமொழித் திட்டத்தை செயல்படுத்திற்று இறையருளால் மஹான் பாபாவின் கூற்றுக்கிணங்க நானும் எட்டு ஆண்டுகாலம் அரசினர் உயர்நிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய பின் முதுகலை பட்டங்கள் பெற்று கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முதல்நிலை தமிழாசிரியராக பதிவிபெற்று பதினெட்டு ஆண்டுகாலம் பணிபுரிந்து அதன்பின் கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேனிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவிபெற்று உயர்ந்த மாநில விருதுபெற்ற பின்னர் மத்திய அரசின் தேசிய விருதை ஜனாதிபதியின் கரத்தால் 1997ல் பெற்றுப் புகழடைந்தேன். அல்ஹம்துலில்லாஹ் கடல் கடந்து உலகின் பல நாடுகளுக்கும் சென்று இலக்கியச் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றிக் கொண்டிருக்கிறேன். இறைவனின் திருவருளால் பாபாவின் துஆ பரக்கத்தால் இன்று நிறைவான வாழக்கைக்கு சொந்தக்காரர்களாக இருந்து பாபா அவர்கள் சொல்லிக் கொடுத்த ஸலவாத்தை தொடர்ந்து ஓதிக்கொண்டும் தொழுது வணங்கிக்  கொண்டும் அல்லாஹ்வின் நல்லடியார்களாக வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் மேலும் தெளிவுபெற்று இறுதிவரை நீடிக்க இருகரமேந்தி இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.
அறிவிப்பாளர்: தேசிய விருதாளர், பெரும்புலவர், அல்ஹாஜ்
ஏ.முஸ்தபா ஆ.யு.இஆ.யு.இடீ.நுன.இபேரையூர், இருப்பு: கீழக்கரை
வரும் பொருள் உரைத்தமை
       எனக்குத் திருமணமாகி ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒருநாள் மஹான் பாபா அவர்களிடம் சென்று பாபா எனக்கு நல்ல குழந்தை கிடைக்க துஆ செய்யுங்கள் என வேண்டி நின்றேன் உடனே அவர்கள் உங்களுக்குச் சிறப்பான பெண்குழந்தை பிறக்கும் என்றனர். பாபா நான் ஒருவன் மட்டும் சம்பளம் வாங்கும் நிலையில் முதலில் பெண் குழந்தையா? என்று கேட்டேன்.
       அல்லாஹ்வின் அருளால் உங்களுடைய வாழ்வில் ஒளிருகின்ற பெண் முத்து ஒன்று பிறக்கப் போகிறது. இன்ஷா அல்லாஹ் அடுத்து ஆண் மக்களையும் சிறப்பாகப் பெறுவீhக்ள் என்று கூறினர்.
       அவர்களின் துஆ பரக்கத்தால் எனக்கு ஒருமகள், இரு மகன்கள் ஆகிய மூன்று மக்கள் செல்வங்களையு; அவர்களுக்கான வாழ்க்கை துணைவர். துணைவியரான நன் மருமக்கள் மூவரையும் இறைவன் அருளியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ் அவர்களும் நன்மக்கள் செல்வங்களை பெற்று நலமாக வளமாக வாழ்ந்து வருகின்றனர். மென்மேலும் நல்லடியார்களாக வாழ இறையருள் பொழிவதாக ஆமீன்!
அறிவிப்பாளர்: தேசிய விருதாளர், பெரும்புலவர், அல்ஹாஜ்
ஏ.முஸ்தபா ஆ.யு.இஆ.யு.இடீ.நுன.இபேரையூர், இருப்பு: கீழக்கரை

பொதுவான விஷயங்கள்
மஹான் பாபா ஒரு செல்வச் சீமான்
       அல்ஹாஜ் அஹ்மத் தமீம் சாஹிபிடம் ஒரு சீமான் செய்யிது முஹம்மது ஆலிம் இப்பஞ்சமான காலத்தில் சித்தார்கோட்டையில் இருந்துகொண்டு முன்னூறு அறநூறு என தினந்தோறும் செலவு செய்வதாகக் கேள்விப்பட்டேன். இது நிஜம்தானா என்று கேட்டாராம். அதற்கவர் அதுபற்றி எனக்குத் தெரியாது ஆனால் ஒருமுறை பாபா அவர்கள் என்னிடம் இந்த ஊரிலேயே நான்தான் பெரிய சீமானென்று சொன்னார்கள் என்று சொல்ல அதுகேட்ட அந்த சீமான் அப்படியே உறைந்து போனாராம்
அறிவிப்பாளர்: ளு.யு.அஹ்மமத் தமீம், சில்லான்குட்டி
முஹ்யித்தீன் ஆண்டகையவர்கள் ஓதப்போகச் சொன்னார்கள்
       மஹான் பாபா அவர்கள் சிறுவராக இருக்கும்போது சில சமயங்களில் வெளித்திண்ணையில் உறங்குவார்களாம் அவ்வாறு ஒருநாள் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் வந்து பாபா அவர்களை எழுப்பி உங்களுடைய தந்தையிடம் சொல்லிவிட்டு வேலூருக்கு ஓதப் போங்களெனக் கூறினார்களாம் அப்பெரியார் யாரென்று நான் கேட்டபோது அவர்கள் தான் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரழியல்லாஹூ அன்ஹூ என பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: கதீஜாபீவி பின்த் செய்யிது மீரா, சித்தார்கோட்டை
கஷ்டப்படுவோர்க்கு தமது வீட்டு மடாவிலிருந்து தர்மம் செய்தனர்
       பாபா அவர்களின் தந்தை பல மடாக்களில் தங்க நாணயங்களை கட்டி வைத்திப்பார்களாம். சிலசமயம் அந்த நாணயங்களில் மஞ்சள் தடவி காயவைத்து மடாக்களில் வைப்பார்களாம். இதை தெரிந்து வைத்திருந்த பாபா அவர்கள் எவரேனும் பசி பட்டினியாக இருப்பதாகக் கூறினால் அந்த நாணயங்களில் ஒருசிலவற்றை எடுத்து கொடுப்பார்களாம். இதுபோல் செய்வது பாபாவின் வழக்கமாகவும் இருந்ததாம். பானையில் தங்க நாணயங்கள் குறைந்ததை அறிந்த பாபாவின் தந்தை நாணயங்கள் இருந்த பானையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டார்களாம்.
அறிவிப்பாளர்: கதீஜா பின்த் செய்யிது மீரா, சித்தார்கோட்டை
முஹ்யித்தீன் ஆண்டவர்களின் சிறப்புமிக்க பதவியைப பெற்ற மாமஹான் பாபா
       மஹான் பாபா அவர்கள் ஒருமுறை ஊரின்மீது வெறுப்பு கொண்டு ஊரைவிட்டு வெளியாகி விட வேண்டுமென்று எண்ணி புறப்பட்டனர். ஊருக்குத் தெற்கேயுள்ள ஆற்றுக்கரைக்கு பாபா அவர்கள் வந்து கொண்டிருக்கும் போது ஒருபெரிய மனிதர் எதிரில் வந்து நெஞ்சில் கைவைத்து என்பதவி வேண்டுமென்றால் ஊருக்கே திரும்பிப் போங்களென்று கூறினர். அதைக்கேட்ட பாபா அவர்கள் ஊருக்கே திரும்பி வந்துவிட்டனர். அந்த மனிதர் முஹ்யித்தீன் ஆண்டவர்களென்று பாபா கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்,
அல்ஹாஜ் ளு.யு.அஹ்மத் தமீம், பனைக்குளம்
பலகோடி சொத்தையும் அழகான பெண்ணையும் மணமுடிக்க மறுத்த மஹான் பாபா
       எங்கள் ஷைகுல் காமில் செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்கள் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் மார்க்கக்கல்வி பயின்று கொண்டிருக்கும் போது அவ்வூரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருபெரிய கோடீஸ்வரர் பாபா அவர்களின் கல்வி ஞானத்தையும், ஒழுக்கங்களையும் பழக்க வழக்கங்களையும் பண்பையும் நெடு நாட்களாக கவனித்து வந்தவர் இவர்தான் நமது ஒரே மகளுக்கு சரியான சிறப்பான மாப்பிள்ளை என யோசித்தவர் எப்படியாவது இவரை நமது மருமகனாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று முடிவுசெய்து ஒருநாள் தமது வீட்டுக்கு அழைத்துச்சென்று விதவிதமான உணவு வகைகளையும் பாதர்த்தங்களையும் பாபா அவர்களின் மனம் விரும்பும் வண்ணம் பரிமாறி உண்டபின் தனது ஆஸ்திகளையும், செல்வச்சிறப்பையும் எடுத்துக்கூறி அவர்களது உள்ளத்தில் ஆசை ஏற்படும் வண்ணம் நயமாகவும் பக்குவமாகவும் பேசியவர் இச்சொத்துக்களையும் வியாபாரக் கடைகளையும் பாதுகாக்கக் கூடிய ஒருநல்ல மாப்பிள்ளை எனது ஒரே மகளுக்கு வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பொருத்தமானவராக தங்களைத்தான் பார்க்கிறேன் தாங்கள் இதற்கு சம்மதிக்க வேண்டமென்று வேண்டினார்.
       அவர் கூறியதைக்கேட்ட பாபா அவர்கள் நான் இங்கே மார்க்கக்கல்வி கற்கத்தான் வந்தேன். இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எனது பெற்றோரிடம் தான் கேட்க வேண்டும் என நாசூக்காகக் கூறினர். ஆனால் அந்த சீமான் பாபா அவர்களுக்கு பல ஆசை வார்த்தைகளை காட்டி எப்படியும் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் அதுவரை இங்கேயே இருக்கச் செய்ய வேண்டுனெ எண்ணி அவரது காரை கொடுத்து ஊரை சுற்றிப் பார்த்துவிட்ட வாருங்களென்று கூறியனுப்பினார். அதன்படி பல இடங்களை பார்த்துக்கொண்டு வரும்போது ஒரு பள்ளிவாசல் வந்தது. இவரிடமிருந்து நாம் எப்படியாவது தப்பிவிட வேண்டுமென்று எண்ணிய பாபா அவர்கள் இந்தப் பள்ளிவாசலருகே வண்டியை நிறுத்துங்கள் நான் சிறுநீர் கழிக்க வேண்டுமெனக் கூறியவர்கள் பள்ளிவாசலுக்கு சென்று சிறுநீர் கழித்துவிட்டு பள்ளியின் மறுவாசல் வழியாக செளியே வந்து மத்ரஸாவுக்கு வந்து சேர்ந்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
அல்ஹாஜ் அஹ்மத் தமீம், சில்லான்குட்டி
மஹான் பாபா சுற்றுத்தந்த அற்புதச் சிறப்பு
       நான் ஒருசமயம் பனைக்குளம் கோப்பத்தப்பா தர்ஹாவுக்கு அருகே ஒருதோப்பில் சில வாலிபர்களுக்கு சிலம்பு விளையாட்டு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது பாபா அவர்கள் புதுவலசைக்கு போவதற்காக வந்தவர்கள் தோப்புக்குள் வந்து ஜைனுல் ஆபிதீன் அலிப் அடி தெரியுமா? பே அடி தெரியுமா? தே அடி தெரியுமா? என்று கேட்டுவிட்டு என்னிடமுள்ள சிலம்புக் கம்பை வாங்கி அலிப் அடி முதல் லாம் அலிப் ஹம்ஸா அடி வரை கம்பை சுழற்றி சொல்லிக் கொடுத்தனர். நான் திகைத்துப்போய் சிலம்பு விளையாட்டில் கத்தி கேடயம், சுருள், வாள், மடுக்கட்டை, ஜல்லக்கம்பு, வானாக்கம்பு, நாலுபந்தம், பதினாறுபந்தம், சங்கிலி பந்தம் போன்ற விளையாட்டுக்களை அறிந்திருந்த எனக்கு இந்த அலிப் அடி பே அடி தே அடி என்னும் நூதன முறையைக் கண்டும் கேட்டுமிராத நிலையிலிருந்தேன். பாபா அவர்கள் தலைப்பாகை மற்றும் ஜூப்பாவை போட்டிருந்த நிலையிலேயே கம்பை எடுத்து கற்றுத்தந்த விதத்தை கண்டு வியந்து போனேன். ஸைனுளுல் ஆபிதீன் நீங்கள் என்னிடம் தான் ஓதினீர்கள். அதனால் இனிமேல் இதுபோன்று கற்றுக் கொடுங்கள் இதுதான் சுன்னத்தான விளையாட்டுட. ஆதலால் இதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுங்களென்று சொல்ல அவ்வாறே மற்றவர்களுக்கும் அலிப் அடி தே அடி என்று கற்றுக் காடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அறிவிவப்பாளர்: பக்கீர் சாஹிப் ஸைனுளுல் ஆபிதீன் பின் கபூர் முஹ்யித்தீன்
மஹான் பாபா அவர்கள் ஏழைகள் மீது கொண்ட இரக்கம்
       மஹான் பாபா அவர்கள் என்னிடம் பல சமயங்களில் குடை டாhத்ச்லட் போன்றவைகளை கொடுத்து அவற்றை பழுது பார்த்துத் தருமாறு கூறுவர். நான் அவர்களுக்கு இலவசமாக செய்து கொடுக்கவே விரும்புவேன். ஆனால் அதை பழுது பார்த்து கொண்டுபோய் கொடுக்கும்போது இதற்கு ஹதீயா என்னவென்று கேட்பர். அதற்கு நான் இது நாலனா பெறாத வேலை. இதற்கு ஒன்றும் வேண்டாமென்று கூறுவேன். அப்படிக் சொல்லாதீர்கள் நான் வேல செய்யச் சொல்லி நீங்கள் வேலைசெய்து கொடுத்துள்ளீர்கள். 50, 100, 1000 கேளுங்களென சந்தோஷமாகக் கூறுவர் அப்போதும் நான் இது நாலனா பெறாத வேலை இதற்கு ஒன்றும் வேண்டாமென மறுப்பேன். அதற்கு பாபா அவர்கள் காசு தந்தால் டீ, கேக் வாங்கி சாப்பிட்டு விடுவீர்கள் பெட்டியை எடுத்து வாருங்களென்று அரிசிக் கடைக்கு அழைத்துச் சென்று மூன்றுபடி அரிசி வாங்கிக் கொடுத்து உங்களுடைய பிள்ளைகளுக்கு கொண்டுபோய் கொடுங்களென்று ஒவ்வொரு முறையும் என்னை அனுப்பிவைப்பர். அத்துடன் என்மீது அளப்பரிய அன்பும் காட்டி வந்தனர்.
       மஹான் பாபா அவர்கள் பள்ளிக்கு வரும் ஏழை எளியோருக்கு எல்லாம் அது இரவு நேரமாக இருந்தாலும் கூட அவர்களுக்கு உணவு வாங்கிக்கொடுத்து அவர்கள்மீது அளவிலாத அன்பு செலுத்துவார்கள். அவர்கள் என்ன தேவையை குறித்து வருகிறார்களோ அத்தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அவர்களுக்கு உதவி செய்து அனுப்புவதில் பாபா பெரும் மகிழ்வும் நிறைவுடையவர்
அறிவிப்பாளர்: பக்கீர் சாஹிப் ஸைனுல் ஆபிதீன் பின்
சபூர் முஹ்யித்தீன், பனைக்குளம்
பாபா வலியுல்லாஹ்வின் சொல்லை கேட்டார் சிறப்பான வாழ்வை பெற்றார்
       ஒருவர் பர்மா செல்வதற்காக தனது தாயாரிடம் பணம் கேட்டார். அவர் என்னிடம் பணம் எதுவுமில்லையே என வருத்தத்துடன் கூறியவர் வேண்டுமானால் பனைக்குளம் சென்று பாபா அவர்களிடம் கேட்டுப்பார் என அனுப்பி வைத்தார். அவர் ஒருநாள் பகல் ஒருமணிக்கு நல்ல வெயிலில் வாலாந்தரவையில் இறங்கி மணல் பாதையில் நடந்து பனைக்குளம் வந்துசேர்ந்தார். பாபா அவர்கள் பள்ளிவாசலில் தென்புற மேற்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, எங்கே வந்தீர்;கள்? என்று கேட்க அதற்கவர் நான் பர்மா போவதற்கு சொல்ல வந்தேன் என்றார். நல்லது நல்லபடியாக சென்று வாருங்களென்று கூறி வந்து காலோடு நின்ற நிலையிலேயே அனுப்பி விட்டனர்.
       கூப்பிடும் தொலைவுக்கு போனாதும்,பாபா அவரது பெயரைக் கூறி திரும்பவும் அழைத்தனர். அவர் பாபாவுக்கு அருகில் வந்ததும் தாங்கள் ஓதியிருக்கிறீர்களா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம் என்று கூறினார். ஓதியவர்களை உடனே போகச் சொல்வது பெரிய பாவமென்று சொல்லி போய் ஓழுச்செய்து விட்டு குர்ஆன் ஓதுங்களென்று கூறினர். அவர் சென்று ஓழுச்செய்து விட்டு துர்ஆனை ஓத, அவர் ஓதிய இனிமையை கேட்டு பாபா அவர்கள் மெய்மறந்து போய் விட்டனர். அதன்பின் ஒருவாரம் வரை அவரை தம்மோடு தங்கவைத்து தினந்தோறும் கறி சாப்பாடு கொடுத்து இப்போது நல்லபடியாக போய் வாருங்களென்று கூறினர். அதற்கவர் பர்மா செல்ல என்னிடம் பணமில்லை. தங்களிடம் பணம் வாங்கி வருமாறு எனது தாயார் கூறினார்களென்று சொல்ல இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று பாபா அவர்கள் கேட்க அதற்கவர் தாங்கள் நான் வந்தவுடன் திரும்பிப் போகுமாறு சொன்னதும் அதைச்சொல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றார். அதுகேட்ட பாபா உங்களுடைய தாயார் தருவார் போங்களென்று திரும்பவும் கூறினர். அவர் மீண்டும் மீண்டும் என் தாயாரிடம் பணமில்லை தாங்கள் தான் தர வேண்டுமென்று கேட்க பாபா அவர்களும் திரும்பத்திரும்ப உங்களுடைய தாயார் பண்ம தருவார்களென்று கூறினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதன்பின் அவருக்கு சி நல்லுபதேசங்களை கூறி அனுப்பி வைத்தனர். எங்கேயும் சம்பளத்திற்கு இருக்கக் கூடாது கூட்டுத் தொழிலும் செய்யக்கூடாது நான் சொல்வது போன்று செய்தால் சிறப்பும் மேன்மையும் பெறுவீர்கள் என்றும் அறிவுறுத்தினர். அவர் தமது ஊருக்குப் போய் சேருவதற்குள் அவருடைய வீட்டு வாசலை ஒருவர் வந்து தட்டுகிறார். அவரது தாயார் கதவை திறந்து பார்க்க ஒரு பெரியார் கைத்துண்டு பொட்டலம் ஒன்றை அவரிடம் கொடுத்து இதைக்கொண்டு உங்களுடைய மகனை பர்மாவுக்கு அனுபபி வையுங்களென்று கூறுகிறார். அதற்கந்த பெண்மணி தாங்கள் யார்? என்றுகேட்க அதை உள்ளே வைத்துவிட்டு வந்து பார்க்கும்போது அவருடைய மகன் வந்து கொண்டிருந்தார் அப்பெரியாரை கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவில்லை அதன்பின் வந்த மகனை போன விஷயம் குறித்து கேட்க.
       பாபா அவர்களிடம் போன விஷயமனைத்தையும் கூறிவிட்டு அவர்களிடம் பலமுறை நான் திரும்பத் திரும்ப பணம் கேட்டேன். ஆனால் அவர்கள் உங்களுடைய தாயார் தருவார்களென்று கூறிவிட்டரென்று கூறினார். அதைக்கேட்ட அவரது தாயார். இப்போது தான் ஒரு பெரியார் வந்து ஒரு கைத்துண்டில் பொட்டகம் ஒன்றை தந்து இதைக்கொண்டு உனது மகனை பர்மாவுக்கு அனுப்பிவை என்று கூறிவிட்டுப் போனாரென்று கூறினார். பின்னர் இவவரும் அப்பொட்டலத்தை பிரித்துப் பார்க்க அதில் பர்மாவுக்குப் போகத் தேவையான பணம் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் அப்பணத்தை கொண்டு டிக்கெட் மற்றும் இதரச் செலவுக்ள போக மீதியிருந்த பணத்தில் நான்கு கைலிகளை வாங்கிக்கொண்டு பர்மாவுக்க போய் அவரது உறவுக்காரரின் கடைக்குப் பக்கத்தில் நடைபாதையில் கயிற்றால் ஒருகொடியை கட்டி அந்நான்கு கைலிகளையும் விரித்துப்போட்டு வியாபாரம் செய்ததில் ஒரே நாளில் பதினாறு கைலிகளாக உயர்ந்தது. இவ்வாறு வியாபாரம் செய்து நல்லபடியாக பரக்கத் உண்டாகி சொந்தமாக ஒரு கடையையும் திறந்து வியாபாரம் செய்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தார். அதன்பின் அவரது சொந்தக்காரர் மூலம் பாபா அவர்களுக்கு ஒரு கைலி அனுப்பினார். அதை பாபா அவர்களிடம் கொண்டுவந்து கொடுக்க அதற்கு பாபா இந்தக் கைலி அவரிடம் இருந்தால் பல லட்சம் அவருக்குக் கிடைக்கும் என்னிடம் இருந்தால் கிடைக்காதென்று சொல்லி வந்தவரிடமே திருப்பிக் கொடுத்து கொண்டுபோய் கொடுத்து விடுமாறு கூறி விட்டனர்.
       கைலி அவரிடம் கிடைத்த சிலநாட்களில் அவர் ஒருநாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது முன்பின் தெரியாத ஒரு ஐரோப்பிய அவரது முதுகில் தட்டி, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்றுகேட்க அவர் தாம் செய்து கொண்டுள்ள தொழிலை கூறினார். அதற்கவர் என்னிடம் மூன்று லட்சம் அலுமினியஷீட் உள்ளது. அதை விற்றுப் பணம்தா என்றுசொல்லி அவரது முகவரிகார்டை கொடுத்து விட்டுப் போய்விட்டார். முன்பின் அறியாத இவரிடம் நாம் ஏன் செல்ல வேண்டும்? நமக்கு எதற்கு அலுமினிய ஷீட் என யோசித்தவர் போகாதிருந்து விட்டார். பதினைந்து நாட்கள் கழித்து அதே வெள்ளைக்காரர் மீண்டும் வந்து அவரது முதுகில் ஒரு அடி அடித்து ஏன் வரவில்லை என அதட்டியதோடு அவரிடமிருந்து எந்தபதிலையும் எதிர்பாராமலேயே அவரை தமதுகாரில் ஏற்றிக்கொண்டு போய் அலுமினிய ஷீட் இருந்த இடத்தை காட்டினார். அத்துடன் அவரை நோக்கி ஒரு அலுமினிய வீட்டின் வில மூன்று ரூபாய்தான் இதை விற்று காசுதா என திரும்பவும் கூறினார். இது இவருக்கு வியப்பாக இருந்தது. சரி இதனுடைய விலை என்னவென்பதை அறிய மார்க்கெட்டுக்குச்சென்று விசாரிக்க ஒருஷீட் ஆறுரூபாய் என்றும் அதுவும் மிகக் கிராக்கியான சரக்காக இருப்பதையும் கண்டார். பின்னர் ஒரு இடத்தை பிடித்து அங்கே சரக்கு முழுவதையும் கொண்டுவந்து வைத்தவர் ஒரேநாளில் பிரித்து விற்று விட்டார். இதன் மூலம் ஒரே நேரத்தில் அவர் ஒன்பது லட்சம் ரூபாய் லாபம் பெற்றார் அதன்பின் பல தொழில்களை செய்து பர்மாவில் வாழ்ந்தார். இதேபோல் இந்தியாவிலும் பல்வேறு தொழில்களை செய்து பாபா அவர்களின் சொற்படி நடந்து சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார். பின்னர் அவருக்கு உடல் நலமில்லாத நிலையில் பாபாவின் சொல்லுக்கு மாற்றமாக நடக்க சிலர் அவரை தூண்டியதாலும் தமது தொழிலில் பலரை பங்குதாரர்களாக ஆக்கியதாலும் அவரது வியாபார நிறுவன் திவாலாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் அவர் இறந்தும் போனார். பாபாவின் சொல்லுக்கு மாறாக பங்குகேட்டவர் ஆறாண்டு காலமாக வெறும் கடையை திறந்து வைத்துக் கொண்டிருந்து கடையை விற்பனை செய்யவும் முடியாமல் பரிதவிப்பில் ஆழ்ந்தார்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபாவின் மகத்துவம் கூறும் குதிரை வண்டிக்காரர்
       ஒருமுறை நானும்பாபா அவர்களும் பனைக்குளத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு வந்தோம் அங்கிருந்த பரமக்குடிக்கு செல்லும் பஸ் ஸ்டாண்டிற்கு குதிரை வண்டியில் வந்தோம். பஸ் ஸ்டாண்ட் வந்தபோது பரமக்குடி செல்லும் பஸ் போய் விட்டதென்று கூறினர். அதைக்கேட்ட குதிரை வண்டிக்காரர் ஆச்சரியத்தோடு இவர்கள் வரும் போதெல்லாம் பஸ் தயாராக இருக்குமே இப்போது போய்விட்டதே என வியப்படைந்தார். பாபா வலியுல்லாஹ் அவர்களின் மகத்துவத்தை குதிரை வண்டிக்காரரும் தெரிந்து வைத்திருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டேன்.
அறிவிப்பாளர்: ளு.ழு.முஹம்மது காசிம், அபிராமம்
தமிழ் இலக்கணம் கற்றுக் கொள்ளுதல்
       உத்தமபளையதi;த சேர்ந்த பெரும் புலவர் ஒருமுறை பனைக்குளத்திற்கு வந்து பாபா அவர்களை சந்தித்தார். அப்போது பாபா அவர்கள் புலவரே தமிழ் இலக்கணத்தை எனக்குக் கற்றுத் தாருங்கள் அரபி இலக்கணத்தை நான் தங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன் என்றுசொல்ல அதுகேட்ட புலவர் அதனை ஒப்புக்கொண்டார். அதன்பின் தமிழ் இலக்கண புத்தகங்களை ரூபாய் பதினோராயிரத்திற்கு வாங்குமாறு புலவர் கூற அதற்கேற்ப அவற்றை வாங்கி பாபா அவர்கள் தமிழ் இலக்கணத்தையும், புலவர் அரபி இலக்கணத்தையும் கற்று வந்தனர். அப்போது தமிழ் இலக்கணத்திற்கு மூல இலக்கணம் அரபிதான் என்பதை மிகத்தெளிவாக பலமுறை புலவர் அவர்களுக்கு பாபா அவர்கள் விளக்கினர். பாபா ஒருசமயம் மதுரை வந்தவர்கள் எனi;ன அழைத்துக் கொண்டு உத்தமபாளையத்திற்கு போனார்கள் அங்கே பாபாவின் நேசராகிய பெரும் புலவரைப் பற்றி விசாரிக்க அவர் சிறிது காலத்திற்கு முன் இறப்பெய்தி விட்ட செய்தியை அங்கிருந்தோர் கூறினர். அப்போது தான் பாபா அவர்கள் மேற்குறிப்பிட்ட விஷயத்தை என்னிடம் கூறினர்.
       அறிவிப்பாளர்: அபூபக்கர் மகன், அப்துல்ரஹீம், மதுரை
தர்மத்தின் மூலம் ஆபத்தை தட்ட நினைத்த பாபா வலியுல்லாஹ்
       பாபா வலியுல்லாஹ்வின் மீது அளப்பரிய நேசம் வாஞ்சையும் கொண்டிருந்த முகவை மாவட்ட், அழகன்குளததை சேர்ந்த எனது மாமா ஒருமுறை பனைக்குளத்திற்கு சென்று ஐந்து மூட்டை நெல்லையும், ஒருபீஸ் மல் துணியையும் பாப அவர்களிம் கொடுத்துவிட்டு வருமாறு பணித்தனர். ஒரு வண்டியில் அவற்றை ஏற்றிச்சென்று பாபா வீட்டிற்கு வந்து இவைகளை மாமா தங்களுக்குத் தந்தார்கள் என்றேன். அதைக்கேட்ட பாபா அவர்கள் சிறிதுநேரம் வரை மௌனமாக இருந்தவர்கள் பின்னர் இந்த நெலலை நான் பெற்றுக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல எனக்கூறி விட்டு அந்தத் துணையை எடுங்கள் என்று கூறி அதிலிருந்து நான்கு முழத்தை மட்டும் கிழித்துக்கொண்டு மீதியை கொண்டுபோய் கொடுத்து விடுங்களென்று கூறினர். இதை ஏன் திரும்பக் கொண்டுபோய் கொடுக்கச் சொல்கிறீர்களென்று நான் கேட்க பிறகு கூறுவதகா பாபா அவர்கள் கூறினர். அதன்பின் அவற்றை கொண்டுவந்து எனது மாமாவிட் கொடுக்க அதற்கவர்கள் மிகவும் யோசனை செய்துவிட்டு அதெப்படி வேண்டாமெனச் சொல்வார்கள் தாங்கள் எதுவும் கூறினீர்களா? என்றுகேட்க நான் ஒன்றும் கூறவில்லை என்றேன். சிறிது நேரத்திற்குப்பின் அந்த நெல் முழுவதையும் வீட்டு வாசலுக்குக் கொண்டுபோய் பலருக்கும் அதை அளந்து கொடுத்தவர் துணியையும் மூன்றாகக் கிழித்து மூன்று நபர்களிடம் கொடுத்து விட்டார். இதுநடந்து ஐந்து நாட்களுக்குப் பின் நான் இலங்கைக்குச் சென்று விட்டேன். நான் சென்ற ஐந்தாவது நாள் எனது மாமா அவர்கள் இறந்துபோன செய்தி வந்தது. அதைக்கேட்ட நான் உடனே ஜனாஸாவில் வந்து கலந்து கொண்டேன். பாபா அவர்களும் வந்திருந்தனர். இதுநடநட:து சில நாட்களுக்குப்பின் பாபா அவர்கள் நான் அன்று நெல்லை வேண்டாமெனக் கூறியதற்குரிய காரணம் தங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் உங்களுடைய மாமாவை ஒரு பெரிய ஆபத்து சுற்றிக் கொண்டிருந்தது. தர்மத்தின் மூலமாகவாவது அல்லாஹ்விடம் வேண்டிஅதை தடை செய்யலாமென எண்ணியிருந்தேன். ஆனால் இறந்து போனார் மேலும் நீங்கள் இலங்கைக்குச் சென்றபின் உங்களுடைய மாமா திருநெல்வேலிக்கு போக வேண்டுமென்று என்னிடம் கூறினார். நான் சிறிது தாமதித்துப் போங்கள் என்றேன் அதை கேட்காமல் போய்விட்டு வரும்போதே வியாதியுற்ற நிலையில் வந்தார்.
       வந்தவர் மூன்று நாட்களில் இறந்து போனார். இதற்காகத்தான் நான் வேண்டாமென்று சொன்னேன் என மஹான் பாபா அவர்கள் கூறினர்.
       ஒருவரின் இறப்பை முன்னரே தெரிந்து அதைப்பற்றி முன்னறிவிப்புச் செய்ததைக் கண்டு அவர்கள் மாபெரும் வலி என்பதை தெரிந்து கொண்டேன்
அறிவிப்பாளர்: முஹம்மது கான் மகன் அப்துல் வஹ்ஹாப், அழகன்குளம்
மஹான் பாபா அவர்கள் நீண்ட காலம் வாழுவதற்காக தமது ஆயுளைத்தர முன்வந்த சிஷ்யர்
       எங்களுடைய ஷைகுனா மஹான் பாபா ஹஜ்ஜூக்குப் போய் வந்தபின் அவர்களுடைய உடல் நலமின்றிப் போனதால் சில தடைவ அவர்களை பார்க்கப் போனேன். இந்நிலையில் பாபா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைவதற்கு மூன்று நாட்களுக்கு முன் நான் சென்றபோது அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்டப்டிருந்ததை கண்டு பாபா அவர்கள் ஹஜ்ஜூக்குப் போகுமுன் கூறிய சில வார்த்தைகள் எனது சிந்தனைக்கு அப்போது வந்தன. இந்த ஆண்டு லட்சம் செலவு செய்தாகிலும் ஹஜ்ஜூக்குப் போக வேண்டும் அடுத்த ஆண்டு போவோம் என்பதற்கு உத்திரவாதமில்லை என முன்னர் கூறியதை எண்ணியவன் இப்போது அவர்களின் உடல்நிலை இருந்ததைக் கண்டு எனக்கு பயம் வந்துவிட்டது. பின்னர் பாபா எனக்கு என்ன கூறுகிறீர்களென்று பயந்துகொண்டே கேட்டேன். நாம் இறந்து விடுவோமென்று எண்ணாதீர்;கள். உங்களுடனேயே இருப்பதாக எண்ணிச் செயல்படுங்கள் நாம் சொல்லித்தந்த பாடங்களை முறையாகக் கடைபிடித்து வாருங்கள் என்று கூறினர். அதுகேட்ட நான் அவர்களிடம் நான் இருந்துபிரயோஜனமில்லை. நான் ஒரு சாதராணமானவன். மூன்று குழந்தைகளும் பெற்றாகி விட்டது. நீங்கள் இருந்தால் ஜனங்களுக்கு எவ்வளவோ பிரயோஜனம் கிடைக்கும். உங்களை கொண்டு பல்லாயிரம் பேர் பயனடைவார்கள். எனது ஹயாத்தை உங்களுக்குத் தந்து விடுகிறேன். உங்களுடைய வியாதியை எனக்குத் தந்து விடுங்களென்றேன். அதைக்கேட்ட பாபா அவர்கள் அப்படியெல்லாம் பேசக்கூடாதென எனது வாயைப்பொத்தி தடுத்துவிட்டு, அவரவருக்குரியதை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும் என்றனர். அதன்பின் ஊருக்குப் போய் விவசாய வேலையை முடித்துக்கொண்டு விரைவாக வந்து விடுங்களென்று கூறினர்.
அறிவிப்பாளர்: மௌலானா ஹாஜா அஹ்மத் இப்ராஹீம், அபிராமம்
துஆவின் மகிமை
1980ம் ஆண்டு பாபா அவர்களின் மறைவுக்குப் பின் மதுரை மாவட்டம் கம்பத்திற்கு வியாபார நிமித்தமாக சென்றிருந்தேன். அப்போது திடீரென எனக்கு மாரடைப்பு ஏற்பட்டு எனது நண்பர்கள் என்னை மதுரை மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்து விட்டனர். டாக்டரின் தீவிரமான சிகிச்சைக்குப்பின் இருபத்து நான்கு மணிநேரம் கெடுகொடுத்திருந்தனர். அனைவரும் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தனர். அன்றிரவு எனது கனவில் பாபா அவர்கள் வருகின்றனர். கனவிலேயே டாக்டர் எனக்கு சிகிச்சை அளிக்கிறார். பாபா அவர்கள் டாக்டரை எச்சரிக்கை செய்கின்றனர். அவனுக்கு ஒன்றுமில்லை. அவனை அனுப்பி விடுங்கள் எனக் கூறுகின்றனர். மறுநாள் காலை நான் பூரணமாக சுகமடைந்து எழுந்து விட்டேன். டாக்டருக்கு ஒரே ஆச்சரியம் இந்த நிலையில் இருந்தவர் சுகமடைதல் என்பது ஆச்சரியம் என்றவர் உங்களுக்கு யாரோ ஒரு பெரியாரின் துஆவினால் தான் சுகமாகியுள்ளது எனக்கூறி என்னை அனுப்பி விட்டார்.
அறிவிப்பாளர்: சிக்கந்தர் பாஷா மகன் நைனா முஹம்மது அபிராமம்
பாவிகளுடன் நேசமாக இருக்கக் கூடாது
ஒரு ஊரில் மிகப்பெரும் வலி ஒருவர் இருந்தனர். அவர்கள் ஒருமுறை பாவியான ஒர காபிரோடு இணங்கி சந்தோஷமாக ஒரு நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதன் காரணமாக உடனே அவர்களுடைய வலித்துவம் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதை அப்பாவியான காபிருக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. அக்காபிர் வலியாக மாறிவிட்டார். இந்நிலையில் அக்hகபிர் முன்பு காட்டில் பன்றி மேய்த்துக் கொண்டு தவறான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அந்த இடத்திற்கு அந்த வலியை இடம் மாற்றிவிட அக்காபிர் செய்து கொண்டிருந்த தொழிலை இப்போது அந்த வலி செய்யத் துவங்கினார். இந்நிலையில் அந்த வலியுடைய மனைவியும் அவரிடத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டார். ஒருநாள் அந்த வலி தொழுகைக்குப் போகுமுன் அவசர அவசரமாக தமது மனைவியிடம் உணவு தருமாறு கேட்டார். அதைக்கேட்ட அவரது மனைவி உணவு தயாராக இருக்கும் போதெல்லாம் சாப்பிட்டு விட்டு தொழுகைக்குச் செல்லுங்களென்று கூறுவேன். ஆனால் தாங்கள் தொழுதுவிட்டு வந்த பிறகுதான் சாப்பிடுவேனென்று கூறுவீர்கள் இப்போது சிலநாட்களாக தொழப் போவதற்கு முன் உணவ கேட்கிறீர்களே? என்ன விஷயம்? என்று கேட்டார். அதைக்கேட்ட அந்த வலிக்கு அப்போதே சுயஉணவு வந்து குளித்து முழுகி பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்விடம் எனது நிலை ஏன் இவ்வாறு ஆயிற்று? என்றுகேட்க அழுது புலம்பி மன்னிப்புக் கேட்க அப்போது ஓர்அசரீரி நீர் ஒரு காபிரான பாவியிடம் நேசத்தோடு ஒரு நிமிடம் பேசியதால் உமதுபதவியை பறித்து அவருக்குக் கொடுக்கப்பட்டு அவரது நிலை உமக்குத் தரப்பட்டது எனக்கூறக் கேட்டு திகைத்துப் போனார்கள் அதன்பின் அல்லாஹ் அவர்களை மன்னித்து மீண்டும் அவருக்கு வலித்தன்மையை கொடுத்தான் என பாபா அவர்கள் கூறினர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாராக் ஆலிம், அப்துல் ஹக்கீம்
எனக்கு பாபா போன்று பேச்சு, நடையுடை வந்தபோது
என்னிடம் (அப்துல்ஹக்கீம்) பாபா அவர்களைப் போன்று பேச்சு நடையுடை எல்லாம் வந்தன. அதைக்கண்டு எனக்குள் பூரிப்பும் சந்தோஷம் ஏற்பட்டபோது அதைக்கண்ட பாபா அவர்கள் கீழ்காணும் சம்பவம் ஒன்றை என்னிடம் கூறினர். அது பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் எழுத்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாமவர்கள் கொண்டு வரும் வஹியைக் கூற அவரும் அதனை எழுதி வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்குப் பின் நபியவர்கள் அவரிம் வஹி வந்துள்ளது. அதை நான் முன்பே எழுதி விட்டேன் எனக்கூறத் துவங்கினார். அதைக்கேட்டு நபியவர்கள் அவ்வாறு எழுதக் கூடாதென பலமுறை எச்சரித்தும் அதை கேட்காமல் எழுதி வந்தார். அதனால் அவரை நபியவர்கள் எழுத்தர் பதிவியை விடடும் நீக்கியதோடு பூமி உமக்கு இடம் தராதென்றும் கூறிவிட்டனர். பின்னர்சில காலத்திற்குப்பின் அவர் இறந்துபோக அவரை ஜனங்கள் அடக்கம் செய்தபோது ஜனங்கள் ஏழுஅடி எடுத்துவைக்குமுன் அவரது சடலம் புதை குழியிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு விட்டது. இதைக்கண்ட அவர்கள் பலமுறை அடக்கம் செய்தும் பூமி அவரை வெளியே தூக்கியெறிந்து விட்டது. மாலைவரை அவர்கள் அவரை அடக்கம் செய்து பார்த்தனர் அவருடைய புதைகுழிக்கு மேல் பாறாங்கல்லை வைத்தும் கூட பூமி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வெளியே தூக்கி வீசிவிட்டது. இறுதியில் அவருடைய தேகத்தை பறவைகள் கொத்தித் தின்றன என பாபா அவர்கள் சொன்னதைக் கேட்டதும் நான் நடுநடுங்கிப் போய் விட்டேன். அதுமட்டுமல்ல என்னை பற்றியிருந்த பெருமையும் அகங்காரமும் அப்போதே என்னை விட்டும் அகன்று விட்டன.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்
குதூகலமாக நசுரா அடிக்கலாமா?
நான் ஒருநாள் எங்களுடைய ஊராகிய பேரையூரில் பாபா அவர்களோடு இருக்கும்போது எங்களுடைய ஊரைச் சேர்ந்தவர் வந்து ஒருவர் இறந்து விட்டதாகக் கூறினார். அதைக்கேட்டு நான் எங்களுடைய ஊர் வழக்கப்படி நகரா அடித்தேன். நான் நசுரா அடித்து முடித்தும் பாபா அவர்கள் என்னை கூப்பிட்டு இத்தனை குதூகலமாக நகரா அடிக்கிறீர்களே உங்களுடைய வீட்டில் இவ்வாறு ஏற்பட்டால் இப்படித்தான் நகரா அடிப்பீர்களா? என்று கேட்டனர்.
அறிவிப்பாளர்: யு.மு.மு.அப்துல்ஹக்கீம், பேரையூர்
மார்க்கச் சட்டத்தில் தமது தந்தைக்குக் கூட சலுகை காட்டாது ஷரீ அத்தை எடுத்தியம்பிய பாபா
       மஹான் பாபா அவர்கள் சத்திய வேதம் கூறிய பாதையில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். தமது தந்தைக்குக் கூட மார்க்க விஷயங்களில் விட்டுக்கொடுத்து நடந்ததிலலை. மேலும் மார்க்கத்தை அவரவர் விருப்பத்திற்குத் தக்கவாறு எல்லாம் மாற்ற முடியாதென்றும் மாற்றக் கூடாதென்றும் கூறியவர்கள் அவ்வாறே வாழ்ந்தும் காட்டினர்.
       ஒருநாள் மஹான் பாபா அவர்களும் நானும் பனைக்குளம் பள்ளிவாசலில் எதிரெதிரே அமர்ந்திருந்தோம் அப்போது பாபா அவர்கள் ஏதோவொரு அரபி நூல் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பாபா அவர்களின் தந்தையார் அவர்களுக்கு அருகே அமர்ந்து தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து கையிலேந்தி யா அல்லாஹ் எனது வயிற்றில் இப்படிப்பட்ட உன்னதமான பிள்ளை பிறந்ததற்காக எனது பாவங்களை பொறுப்பாயாக என துஆ செய்து கொண்டிருந்தனர்.
       ஆனால் பாபா அவர்களோ தாம் பார்த்துக் கொண்டிருந்த நூலிலிருந்து தமது பார்வையை அகற்றவில்லை அப்போது பாபா அவர்களின் தந்தை அவர்களை நோக்கி நான் தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று சொல்ல..
       அதுகேட்ட பாபா அவர்கள் என்னத்தா என நூலை மூடினர். என்னால் நன்றுதொழ முடியவில்லை உட்கார்ந்து தொழுவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்க அதைக்கேட்ட பாபா அவர்கள் தமது தந்தையாரை பார்த்து ஒருவர் உங்களிடம் ஐந்து ரூபாயை கொடுத்து இராமநாதபுரத்திற்குப் போய் ஒருபத்திர வேலையை முடித்துத் தாருங்களென்று சொன்னால் தாங்கள் என்ன செய்வீர்களென்று கேட்க அதற்கவர்கள் எனதுவேலை அதுதானே முடித்துத் தான் கொடுப்பேனென்று சொல்ல அதுகேட்ட பாபா அப்படியானால் நீங்கள் நின்றுதான் தொழ வேண்டும். உட்கார்ந்து தொடக்கூடாதென்று தொன்னூற்றைந்து வயதை தொட்டிருந்த தமது தந்தையை பார்த்துக் கூறினர். இங்கே உண்மை எத்தனை கசப்பாக இருந்தாலும் உண்மையை மட்டும் கூறுக என்னும் நபிமொழிக்கிணங்க நபியவர்களின் வாக்கை நடைமுறைபடுத்தியவர்கள் நமது பாபா அவர்கள்
       மஹான் பாபா அவர்கள் சன்மார்க்கச் சட்டத்தையோ அவர்கள் செய்துவந்த நற்கிரியைகளையோ யாருக்காவும் எதற்காகவும் பயந்து செயல்படுத்த மறந்ததுமில்லை. மறுத்ததுமில்லை அவ்வாறு தடுத்தவர்களை கண்டு அவர்கள் அஞ்சியதுமில்லை.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் எஸ்.ஏ.அஹ்மத் தமீம்
மாளிகை வேண்டாமெனக் கூறிய மனிதப் புனிதர்
       மஹான் பாபா அவர்களை தேடிவருவோர் மிகப்பெரும் பணக்காரர்களாக இருந்தாலும் கூட அவர்களிடம் பாபா அவர்கள் எப்போதும் எந்தவிதமான உதவியையும் கேட்டதில்லை. ஒருமுறை பாபா அவர்களின் நெருங்கிய தோழர்களில் ஒருவரான பீர்முஹம்மது அவர்கள் பாபா அவர்களை பார்த்துச் செல்வதற்காக பனைக்குளத்திற்கு வந்திருந்தார்.
       பாபா அவர்களும் பீர்முஹம்மதும் நானும் வேறுசிலரும் பாபாவின் வீட்டுக்குச் சென்றோம். பாபா அவர்களின் வீடுகளிமண்ணால் கட்டப்பட்டிருந்தது. மேற்கூரை தென்னங்கீற்றுக்களால் வேயப்பட்டிருந்தது. நாலாபுறமும் காம்பவுண்டுக்குப் பதிலாக பனைஓலைகள் கொண்டு அடைக்கப்பட்டிருந்தது. வீட்டுவாசல் ஓலைகளைக் கொண்டு சாத்தி வைக்கபட்டிருந்தது. வீட்டுவாசல் ஓலைகளைக்கொண்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒருவர் உள்ளே செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு ஓலையாக எடுத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். அந்த ஓலைகள்தான் அவ்வீட்டுக்கு கதவாகவும் இருந்தது. (இதே வீட்டில்தான் அன்னார் தமது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தபோதும் அதே நிலையில்).
       பாபா அவர்களுடைய வீட்டில்நாங்களனைவரும் விருந்து சாப்பிட்டோம். அதன்பின் என்னையும் பீர்முஹம்மதையும் தவிர மற்ற அனைவரையும் பாபா அவர்கள் போகுமாறு கூறி விட்டனர். அப்போது பீர்;முஹம்மத் பாபா தங்களிடம்ட நான் ஒன்று கேட்க வேண்டும் அதற்கு அனுமதி தாருங்களென்று கேட்க அதுகேட்ட பாபா அவர்கள் சரி என்ன கேட்க வேண்டும். கேளுங்களென்று சொல்ல அதற்கவர் இந்த வீட்டை கட்ட எனக்கு அனுமதி தர வேண்டுமென்று கூறினாரோ இல்லையோ பாபா அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.
       பீர்முஹம்மத் நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்;களோ அதை மட்டும் முடித்துக்கொண்டு செல்லுங்கள் இடையில் வந்த எண்ணம் உங்களுக்கில்லை எனக்கூறி மறுத்து விட்டனர்.
       பணம் என்றல் எல்லோருமே ஆசைப்படும் இக்காலத்தில் பணத்தை கண்டு இறைநேசர்கள் மயங்க மாட்டார்கள் என்பதை நிரூபித்தனர் பாபா அவர்கள்
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் எஸ்.ஏ.அஹ்மத் தமீம்
அல்ஹாஜ் குத்புத்தீன் ஆலிம், அல்ஹாஜ் முபாரக் ஆலிம்

No comments:

Post a Comment