Saturday 19 November 2011

மஹான் பாபாவின் கராமத்துக்கள் பாகம் 3

மஹான் பாபா எட்டு வயது குழந்தையாகவும், மஹன் பாபாவாகவும் காட்சிதந்த அற்புதம்
       நான் ஒருமுறை மாலைநேரம் அழகன்குளத்pற்கு சென்றேன் சிறிதுதூரும் சென்றதும் எனது அண்ணன் செய்யிது முஹம்மது தெரிகின்றனர். நான் தலையில் துண்டை போட்டுக்கொண்டு நிதானமாக பார்க்கும்போது அவர்கள் சுமார் எட்டுவயது குழந்தையாகவும் தெரிகின்றனர். இவ்வாறு எனது அண்ணனை போன்றும் குழந்தையை போன்றும் மாறி மாறி தெரிந்து கொண்டிருந்ததை கண்டு நான் திகைத்துப்போய் சுமார் நூறு அடி தூரத்தில் சென்று பார்த்துக்கொண்டிருக்க, எதிரே அழகன்குளத்திலிருந்து ஒரு பெண் எனது அண்ணனை தாண்டி வந்தார். வந்தவர் என்னிடம் வந்து அதோ தெரிகிறாNரு அவர் உங்களுடைய அண்ணனா? என்று கேட்க, நர்ன ஆம் அவர்கள் எனது அண்ணனை போலவும், எட்டுவயது குழந்தையை போலவும் தெரிகிறார்கள் என்றேன் அதுகேட்ட அப்பெண் எனக்கும் அப்படித்தான் தெரிகிறது. அதனால்தான் உங்களிடம் கேட்டேன் எனக் கூறிவிட்டு சென்று விட்டார். நானும் வேறு பாதையில் சென்று விட்டேன்.
அறிவிப்பாளர்: பாபா தம்பி முஹம்மது நுஃமான்
மஹான் பாபா பெட்டி நிறைய அத்தர் வாங்க பணம் வந்த அதிசயம்
       மஹான் பாபா அவர்கள் வேலூர் பாக்கியாத்தில் அரபிக்கல்வி பயின்று கொண்டிருக்கும் போது ஒரு அரபிநூலை வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றனர். அங்குள்ள கடையில்  வாசைனை பொருட்களும் விற்று வந்தனர் கடையில் நூலை வாங்க பார்த்துக் கொண்டிருக்கும் போது தபால்காரர் ஒருபார்சலை கடைக்காரரிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் சென்றார். அதைக்கண்ட பாபா அவர்கள் இதுஎன்ன? என்றுகேட்க இது ஒரு திருமணத்திற்காக வரவழைக்கப்பட்ட மிகமிக உயர்வான அத்தர். இதனுடைய விலை ஒருபாட்டில் ஐநூறு ரூபாய். மூன்று பாட்டில் மட்டும்தான் வந்துள்ளது என்று கூறினார். அக்காலத்தில் ஐநூறு ரூபாய் என்பது பெரிய தொகையாகும். இருந்தும் பாபா அவர்கள் இந்த மூன்று பாட்டில்களையும் எனக்குக் கொடுத்து விடுங்கள் அவர்களுக்கு வேண்டுமானால் வேறு அத்தரை வரவழைத்துக் கொடுங்களென்று கூறினர். அப்போது பாபா அவர்களிடம் அறவே பணமில்லை இருந்தும் இம்மூன்று பாட்டில்களையும் எனக்கே தந்து விடுங்களென்று கேட்டனர். அதற்கு கடைக்காரர் கல்யாண காரியத்திற்கு ஒருபாட்டில் எனது சொந்த உபயோகத்திற்கு ஒருபாட்டில் மீதி ஒருபாட்டில் உள்ளது. அதை வேண்டுமானால் தாங்கள் வாங்கிக் கொள்ளுங்களென்று கூறினார். ஆனால் அம்மூன்று பாட்டிலக்ளும் தனக்கே வேண்டுமென வற்புறுத்தினர் பாபா. எனவே கடைக்காரர் எனது உபயோகத்திற்காக உள்ளதையும் வேண்டுமானால் சேர்த்து நீங்களே வாங்கிக் கொள்ளுங்களென்று பெருந்தன்மையோடு சொல்ல அதுகேட்ட பாபா அவர்கள் வேண்டாம் நான் ஒன்றை மட்டும் வாங்கிக் கொள்கிறேனென்று வாங்கியவர்கள் நான் மத்ரஸாவுக்குப் போய் பணம் எடுத்து வருகிறேனென்று கூறிச் சென்றனர். மத்ரஸாவுக்கு சென்றதும் நான் இப்பணத்தை எவ்வாறு கொடுக்கப் போகிறோமென்று யோசித்துக்கொண்டே பெட்டியை திறந்தால் பெட்டிக்குள் நூறு ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அல்லாஹ்வை புகழந்தவர்களாக அதிலிருந்து ஐநூறு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு போய் கடைக்காரிடம் கொடுத்தனர்.
அறிவிப்பாளர்: அல்ஹாஜ் முஹம்மது முபாரக் ஆலிம், ளு.யு.அஹ்மத் தமீம்
எங்கள் குடும்பத்தின் நிலையை முன்னறிவிப்புச் செய்த பாபா
       எங்களுடைய வாழ்நாளில் மிகவும் கஷ்டமான காலக்கட்டத்தில் மஹான் பாபா அவர்கள் எங்களுடைய கஷ்டம் நீங்கி எங்களுக்கு செழிப்பான வாழ்க்கை கிடைக்க பலமுறை துஆ செய்துள்ளனர். பின்னர் நீங்கள் நன்றாக வாழ்வீர்களென்றும் பலமுறை கூறியுள்ளனர். அதற்கு நாங்கள் என்ன ஆலிம்ஷா சும்மா சொல்கிறீர்கள் இத்தனை கஷ்டப்படக் கூடிய எங்களுக்கா நல்வாழ்வு கிடைக்கப் போகிறது என்போம் அப்படிச் சொல்லாதீர்களம்மா அல்லாஹ் உங்களுக்கு உர்வான வாழ்வை அருள்வான் என்பார்கள் மஹான் பாபா அவர்கள்.
       மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் எங்களின் சிறப்பான நல்வாழ்வுக்காக அழுதமுது துஆ செய்வார். இன்னும் சிலகாலம் சிறப்பான வாழ்வுக்குப்பின் உங்களுக்கு சிறிது சிரமம் வரும் பின்னர் அதுவும் அகன்று மேலான வாழ்வை பெறுவீர்கள் என்றும் கூறினர்.
       அதேபோல எங்களுக்கு நலவாழ்வும், சிறப்பான மேன்மையும் கிடைத்தது. பாபா அவர்கள் கூறியது போல இடையே சிறிது சிரமங்கள் வந்து நீங்கியபின் முன்பைவிட சிறப்பான வாழ்க்கையும் மேன்மையும் கிடைத்தது. பல சந்தர்ப்பங்களில் நாங்கள் கஷ்டப்படும் போதெல்லாம் வந்து பணம் வேண்டுமா என்று கேட்பார்கள். ஆம் மிகவுமு; கஷ்டமாக இருக்கிறது ஆலிம்ஷா என்று கூறுவேன். இன்ஷாஅல்லாஹ் பணம் வரும் வரும் வந்தால் எனக்குத் தருவாயா? என்று கேட்பார்கள். தருகிறேன் என்று கூறுவேன் அவர்கள் கூறியவாறே அடுத்தடுத்த நாட்களில் பணம் வந்துவிடும். சிறிது ரூபாயை தந்து தங்களுடைய செலவுக்கு வைத்துக்கொள்ளுங்களென்று கூறுவோம். அதை எங்களையே வைத்துக்கொள்ளுமாறு கூறி விடுவார்கள். மற்றோர் சமயம் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டமான நேரத்தில் ஆலிம்ஷா வந்தார்கள் உங்களுக்கு பண் வேண்டுமா? என்று கேட்டார்கள் ஆம் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறினோம். அப்படியானால் எனக்கு பத்துரூபாய் தாருங்கள் என்றனர். நாங்களே சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் Nபுhது எங்களால் எப்படித்தர முடியுமென்று கேட்டோம். உங்கள் மாமி அதிகமாகப பணம் வைத்துள்ளார் அவரிடமிருந்து வாங்கி வாருங்கள் என்றனர். அதன்படி அவரிடமிருந்து பத்துரூபாய் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். நானே உங்களுக்கு பணம் வருமென்று கூறிவிட்டுச் சென்று விட்டனர். அவ்வாறே மறுநாள் வந்து பணம் வந்து விட்டதா? என்று பாபா அவர்கள் Nகுட்க நான் ஆம் என்றுசொல்ல போதுமா? என்று கேட்டனர். அதற்கு நான் காணாது என்று சொல்ல இன்ஷாஅல்லாஹ் வரும் என்று கூறிவிட்டுப் போய்விட்டனர். மறுநாள் வந்தவர்கள் வாசல் படிக்கட்டிலேயே மேற்கு நோக்கி நிற்வர்களாக இரு கரத்தையும் உயர்த்தி அழுதழுது நீண்டநேரம் துஆச் செய்தபின் நீங்கள் நன்றாக இருப்பீர்களென்று பலமுறை கூறினார்.
       சிலபோது சிறுவர்கள் சிலரை தம்மோடு அழைத்து வந்து சல்ஹா அம்மா கஞ்சியிருக்கிறதா? என்று கேட்பார்கள் நாங்கள் மிகவும் சஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலம். சில முடைந்த பாய்களை விற்று அதில் கிடைக்கும் சொற்பக்காசில் கால்படி அரைப்படி அரிசி வாங்கி கஞ்சி காய்ச்சி நாங்களும் குழந்தைகளும் குடித்துவிட்டு ஒருசில பருக்கை மட்டுமே பானையில் கிடக்கும். இப்படிப்பட்ட சூழ்நிழையில் தான் பாபா அவர்கள் கஞ்சி கேட்டு வருவார்கள் அப்போது நான் கஞ்சியெல்லாம் குடித்து முடிந்துவிட்டதே என்று கூறுவேன். அதைக்கேட்டு பாபா அவர்கள் அந்த கஞ்சிப் பானையையும் சில கோப்பைகளையும் கொண்டுவந்து தனக்கு முன்னால் வைக்குமாறு கூறுவர். அதற்கேற்ப நானும் கொண்டுவந்து வைத்ததும் எங்கள் குழுந்தைகளையும் வந்த குழந்தைகளையும் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு பானையிலிருந்து கோப்பை நிறைய கஞ்சஷியை அள்ளியள்ளி வயிறார சாப்பிடக் கொடுப்பார்கள். இது எனக்கு பேராச்சரியமாக இருக்கும் அதன்பின் பானையில் கஞ்சியும் மீதமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் எங்களின் நல்வாழ்வுக்காக பாபா அவாக்ள் அழுதழுது துஆ செய்வார்கள். இவைகளெல்லாம் எங்களுக்கு மறக்க முடியாத சிறப்பான துஆக்களாகும். முன்னர் நாங்கள் கொஞ்சங்கூட நினைத்துப் பாராத சிறப்பான வாழ்வை அல்லாஹ் எங்களுக்கு பாபாவின் துஆவைக் கொண்டு வழங்கினான். தமது குழுந்தைகளை போல் எண்ணி எங்களுக்கு முன்பும் ஏன் இப்போதும் கூட வருங்காலத்திற்குத் தேiவாயன நல்ல புத்திமதிகளையும் அறிவுரைகளையும் கூறி வந்தனர். இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அறிவிப்பாளர்: சல்ஹா அம்மாள்
எனது மகளின் கை ஒடியுமென முன்னறிவிப்புச் செய்த மஹான் பாபா
       ஒருசமயம் எனது மகள் பள்ளியிலிருந்து கை ஒடிந்து வந்தாள். நான் ஆலிம்ஷாவிடம் சென்று முறையிட, அவர்கள் மீண்டும் ஒருமுறை கை முறியும் அதன்பின் அதுவும் குணமாகி நல்லபடியாக வாழும் எனக் கூறினர். மற்றோர் முறை திடீரென அஸர்நேரம் வீட்டுக்கு வந்தனர் வந்தவர்கள் உனது மகள் எங்Nகு எனக்கேட்க மீன்கடைக்கு போயிருக்கிறாள் என்றேன். ஓடிப்போய் பார் என்றனர். போய் பார்த்தால் இரண்டர் முறையாக கை ஒடிந்திருந்தது. பரவாயில்லை குணமாகி விடுமென்று அதற்காக துஆ செய்தார்கள்.
அறிவிப்பாளர்: சல்ஹா அம்மாள்
கடலில் படகில் சென்ற குழந்தைகள் கவிழ்ந்து விட்டார்கள் என்பதை அறிவித்த மஹான் பாபா
       மற்றொரு சமயம் வீட்டுக்கு வந்த உனது பிள்ளைகளெல்லாம் எங்கே எனக்கேட்டனர். உங்களுடைய மகன் இம்தாதுல்லாஹ் வெளியே கூட்டிச் சென்றார்கள் என்றேன். அவர்களனைவரும் கடலில் வத்தையிலிருந்து கவிழ்ந்து விட்டார்கள் என்றனர். நான் திடுக்கிட்டுப்போய் என்ன? என்றேன் இப்போது ஊடையில் விளையாடிக் கொண்டுள்ளனர். போய்பார் என்றனர் Nபுhய் பார்த்தால் கடலில் வத்தை கழிழ்ந்து கரைவந்து சேர்ந்து (கடற்கரை அருகிலுள்ள) ஓடையில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அறிவிப்பாளர்: சல்ஹா அம்மாள்
நீங்கள் தர்ஹாவுக்குச் சென்றால் தங்காது வந்துவிட வேண்டும்
       சல்ஹாம்மா நீங்கள் தர்ஹாவுக்குச் சென்றால் உடனே தங்காமல் வந்துவிட வேண்டுமென்ற கூறினர். அப்போது தர்ஹாவுக்குப் போகும் பழக்கம் என்னிடம் இல்லை. இதை ஏன் நம்மிடம் கூறுகிறார்களென்று நினைத்தேன். பின்னர் நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் தர்ஹாவுக்கு போக நேர்ந்தது. இதை முன்பே அறிந்துதான் பாபா அவர்கள் நம்மிடம் அவ்வாறு கூறினர் என்பதை அறிந்து தர்ஹாவுக்குச் சென்ற நான் தங்காமல் உடனே வந்து விட்டேன்.
அறிவிப்பாளர்: சல்ஹா அம்மாள்
மேற்குப்பக்கம் வாசல் வைக்க வேண்டாம்
       உனக்கு மிகுந்த கஷ்டமாக உள்ளது. அதனால் மேற்குப்பக்கம் வாசல் இருப்பது கூடாது வடக்குப் பக்கமாக வையுங்கள் என்றனர் அவ்வாறே செய்து சிறப்பான வாழ்வை பெற்றோம்.
அறிவிப்பாளர்: சல்ஹா அம்மாள்

மஹான் பாபா மறைவுக்குப் பின் கண் விழித்துப்பார்த்த அற்புதம்
  மஹான் பாபாவின் மறைவுக்கு வந்திருந்தோம். பெண்கள் ஒரு வரிசையாகவும் ஆண்கள் ஒரு வரிசையாகவும் பார்த்துக் கொண்டு சென்றனர். வரிசையில் நான் வந்து பார்த்தபோது பாபா அவர்கள் தமது கண்களை திறந்து திரும்பவும் மூடிக்கொள்ளும் காட்சியை கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். இதுவரை இதை தங்களைத் தவிர வேறுயாரிடமு; கூறவில்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா பீவி, றுஃழ. முஹம்மது ஹூசைன்,
சின்னக்கடை, இராமநாதபுரம்.
சென்னையில் சொந்தக்கடை வைத்து சிறப்புப்பெறுவீர்களென்ற முன்னறிவிப்பு
       மஹான் பாபா அவர்கள் ஹஜ்ஜூக்குப் போய்விட்டு திரும்பிய பின் எங்களுடைய ஊருக்கு வந்திருந்தனர். பாபாவை காணஅவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றேன். உங்களுடைய வீட்டுக்காரர் (கணவர்) என்ன செய்கிறாரென்று கேட்டனர். அதற்கு நான் சும்மாதான் இருக்கிறாரென்று சொல்ல, அப்படியா சரி நான் பணம் தருகிறேன். உடனே சென்னைக்குப் போய் கடைவைக்கச் சொல்லுங்கள். முன்னுக்கு வந்து விடுவாரென்று கூறினர். உண்ண உணவும் உடுக்க ஆடையும் எங்களுக்குக் கிடைக்க துஆ செய்யுங்களென்று நான்சொல்ல அங்கே மௌலூது ஓதிவிட்டு வைத்திருந்த பூவை அள்ளித்தந்து உங்களுடைய பெட்டியில் போட்டு வையுங்கள் என்றனர். மீண்டும் துஆ செய்யுமாறு பாபாவிடம் வேண்டினேன் பாபா பூவை கையில் வைத்துக் nhண்டு மாலை மாலையாக கண்ணீர் வடிய தேகமெல்லாம்  நடுங்க துஆ செய்தனர். அதன்பின் என்னைநோக்கி உங்களுடைய கணவர் சென்னைக்குச் சென்று சொந்தக்கடை வைப்பாரென்று கூறினர். அதைக்கேட்ட நான் இனிமேல் நல்ல் நிலைக்கு வருவதா? என விரக்தியோடு சொல்ல அதற்கு பாபா அவர்கள் அப்படிச் சொல்லாதீர்;களம்மா உண்மையிலேயே சென்னைக் சென்று சொந்தக்கடை வைப்பார். இது உண்மையென உறுதியாகக் கூறினர். அதன்பின் சென்னை சென்று பெரியகடை வைத்து மிகச்சிறப்பாக வாழ்ந்தோம் கடைசியில் எனது கணவர் கிடைத்த செல்வங்களை முறையாகப் பயன்படுத்தாதிருந்து விட்டார்.
அறிவிப்பாளர்: ஷரீபாம்மா றுஃழ.N.P.ஆ.முஹம்மது ஹூசைன்
ஸலவாத்தின் மகத்தான பலன்
       ஹோட்டல் வைத்து வியாபாரம் செய்தார். வீட்டுக்கு வராமல் அங்கேயே தங்கிவிட்டார் பாபாவிடம் முறையிட்டோம் கீழ்கண்ட ஸலவாத்தை ஓதுமாறு கூறினர்.
       தினமும் ஆயிரம் முறை அவர்கள் கூறியவாறு ஓதி வந்தேன். சிலநாட்கள் இவ்வாறு ஸலவாத்து ஓதியபின் பாபா அவர்கள் மேலும் ஸலவாத்தை ஓதுமாறு கூறினர். இன்னும் அவர் வரவில்லையே என பாபாவிடம் நான்கேட்க அதற்கு பாபா அவர்கள் எல்லா ஸலவாத்துக்களும் என்னிடம் வருகின்றன. ஆனால் உங்களுடைய ஸலவாத்து மட்டும் என்னிடம வரவில்லையெனக் கூறி அனுப்பி விட்டனர். அப்படியானால் அல்லாஹ் ரசூலின் மீது தவக்கல் வைக்காது ஓதி விட்டோமோ என்றெண்ணி வருத்தினேன்.
       அல்லாஹ் சசூலே முஹ்யித்தீனே நான் ஓதிய ஸலவாத்துக்களே ஏற்றுக்கொள்ளுங்கள் நான் என்ன தவறு செய்திருந்தாலும் அதனை மன்னித்துக் கொள்ளுங்களென்று கூறிவிட்டு திரும்பவும் உறுதியோடு ஓதிவந்தேன். அப்போது எங்களுடைய அண்ணன் காசிம் அவர்கள் பனைக்களம் போக அவரிடம் அவர்கள் ஓதிய ஸலவாத்து வந்துவிட்டது. அவர்களின் துஆ கபூலாகி விட்டதென்றுபோய் சொல்லுங்களென்று சொல்லியனுப்பினர். அதற்குப்பின் எனது கணவர் அவராகவே வீட்டுக்கு வந்துவிட்டார். இதுபோன்று பல்வேறு அற்புதங்களையும் சிறப்புக்களையும் பாபா அவர்களிடம் நான் கண்டுள்ளேன்.
அறிவிப்பாளர்: ஷரீபாம்மா றுஃழ.N.P.ஆ.முஹம்மது ஹூசைன்
(யு.மு.அப்துல்ஹக்கீம் அவர்களின் சகோதரி)
மஹான் பாபாவின் நல்வாக்கால் கிடைத்த பெண்குழந்தை
       எனது மகன் ஸைனுல் ஆபிதீனை பீடித்திருந்த கடுமையான வியாதிக்கு பாபா அவர்கள் பல்வேறு பக்குவங்களை செய்து குணப்படுத்தினர். திருமணம் முடிந்து நீண்ட நாடகளாகியும் குழந்தை பாக்கியமில்லை. அதை பாபா அவர்களிடம் முறையிட அவர்கள் என்னை ஒரு வருடத்திற்கு ரொட்டி சாப்பிட்டு வருமாறு கூறியவர்கள் அதன்பின் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்றனர். பெண் குழந்தையா என எனது மகன் கேட்க அதுதான் முஹயித்தீன் ஆண்டவர்கள் வர்க்கமென்று கூறியனுப்பினர்.
       நான் ஒருமுறை பனைக்குளத்திற்கு போயிருந்த போது பாபா அவர்கள் என்னை நோக்கி உடனே ஊருக்கு செல்லுங்கள் உங்க்ள மகனுக்கு பெண்குழந்தை பிறந்துள்ளதெனக் கூறினர். அதைக் கேட்டு உடனே நான் ஊருக்கு வந்து பார்த்தபோது பாபா அவர்கள் கூறியவாறு பெண்குழந்தை பிறந்திருந்தது.
அறிவிப்பாளர்: ஸபுர்ஹான் அம்மாள் னுஃழ. சம்சுத்தீன்
பாபாவிடம் கண்ட அதிசய ஒளிவிளக்கு
       மஹான் பாபா அவர்கள் ஒருநாள் என்னை அழைத்துக்கொண்டு கோப்பத்தப்பா தர்ஹா, தப்லே ஆலம் பாதுஷா தர்ஹா அழகன்குளம் வருசை முஹம்மது (ஷேகப்பா) தர்ஹா போன்றவைகளுக்கு வரிசையாகச் சென்று ஸியாரத்துச் செய்துவிட்டு அழகன்குளத்திலிருந்து பனைக்குளத்திற்கு வரும் வழியில் நடுக்காட்டில் இரவு சுமார் ஏழு முப்பது மணியளவில் கடுமையான இருளில் என்னை பாதையில் இருங்களென்று கூறிவிட்டு பனை உடையும் அடர்ந்த காட்டுக்குள் சென்றனர். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் திகைத்துப் போனவனாக எழுந்து பாபா அவர்கள் சென்ற வழியை பார்த்தேன். அங்கே மூன்று குத்துவிளக்கு வெளிச்சத்தை போல் தெரிவதைக் கண்டு ஆச்சரியமும் அதிசயமுமாக பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென என்ன? ஸைனுல் ஆபிதீன் பயந்து விட்டீர்களோ என பாபா அவர்கள் கேட்பதை கேட்டு இலலை என்றேன். பின்னர் நாங்கள் இருவரும் பனைக்குளத்திலுள்ள வெட்டிலி அப்பா தர்ஹாவுக்கு வந்து அங்கேயும் ஸியராத்துச் செய்துவிட்டு அதன்பின் பள்ளிவசாலிலுள்ள ஆலியார் ஷேகப்பா தர்ஹாவுக்குச் சென்று ஸியாரத்துச் செய்தபின் என்னை வீட்டுக்கு போகுமாறு கூறினர்.
அறிவிப்பாளர்: சிலம்புச் செல்வர் ஸைனுல் ஆபிதீன், சபூர் முஹயித்தீன், பனைக்குளம்
மஹான் பாபா மூவராகக் காட்சி தந்த அற்புதம்
       மஹான் பாபா அவர்களிடம் பள்ளிவாசலில் அமர்ந்து அவர்கள் கூறிய நல்லுரைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென மஹான் பாபா அவர்கள் மூன்று உருவமாகக் காட்சியளித்தனர். இதை நான் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போ நான் ஆலிம்ஷா ஒருவராகத்தானே இருந்தனர். இப்போது மூவராகக் காட்சியளிக்கி;றனரே அவர்களோடு இருப்பவர்கள் வலிமார்களாக இருக்குமோ? அல்லது வானவர்களாக இருக்குமோ? என்ற எண்ணத்தில் கால்மணி நேரம்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். அதன்பின் பாபா அவர்கள் ஒருவராக மட்டும் காட்சி தந்தனர். பின்னர் நான் படுத்துக்கொள்ள பாபா அவர்கள் நீங்கள் இருங்களென்று சொல்லிவிட்டு ஒரு மணிநேரம் வரை படுத்திருந்தனர். அப்போது அவர்களுடைய கல்புதிக்ரு செய்து கொண்டிருந்த சப்தம் எனக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒருமணி நேரத்திற்குப்பின் என்னை போக அனுமதித்தனர்.
அறிவிப்பாளர்: பக்கீர் சாஹிப் ஸைனுல் ஆபிதீன் பின் சபூர் முஹ்யித்தீன்
உறுப்புக்கள் தனித்தனியாக இருந்த அற்புதம்
       செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களிடம் பேயன் ஷரீப் என்பார் மிகநேசமான சீடராக இருந்து வந்தார். அவர் எப்போதும் ஆலிம் அவர்களுடனேயே இருப்பவர். நான் ஒருமுறை அவரிடம் நீ;கள் ஆலிம்ஷாவுடனேயே இருக்கிறீர்களே அவர்களிடம் என்ன அற்புதத்தை கண்டீர்களென்று கேட்க அதற்கவர் நான் எந்த அற்புதத்தையும் காணவில்லை. அவர்கள் சொல்வதை கேட்பதுதான் எனதுவேலை சிலபோது என்னை நடுஇரவில் தைக்கா ஊரணிப்பக்கமாக அழைத்துப்போய் ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள் நணிடு நேரமாகக் காணோமே என்று எழுந்து பார்த்தால் அவர்களுடைய உடல் உறுப்புக்களனைத்தும் தனித்தனியாக கழன்று கிடப்பதை கண்டு திகைத்துப் போவேன். அதன்பின் அவர்களுடைய உறுப்புக்களனைத்தும் ஒன்றாக இணைந்துவிடும் என்னும் சம்பவத்தை அவரே என்னிடம் கூறினார்.
அறிவிப்பாளர்: ஆ.ளு.யு.மன்சூர், பனைக்குளம்
ஒரே நாளில் இரு ஊர்களில் இருந்த அற்புதம்
       பேரையூரை சேர்ந்த ஒருவர் ஆலிம்ஷா அவர்களை தனது மகளின் திருணமத்திற்காக அழைக்க வந்தவர். ஆலிம்ஷா அவர்கள் ஊரிலில்லை என்பதை அறிந்து பேயன் ஷரீபிடம் கண்டிப்பாக எனது மகளின் திருமணத்திற்கு வருமாறு சொல்லி விடுங்களென்று கூறிவிட்டுப் போய்விட்டார். இதை நானும் Nகுட்கக் கொண்டிருந்தேன். பேரையூரை சேர்ந்த அவர் பத்து நாட்களுக்குப்பின் மீண்டும் பனைக்குளத்திற்கு வந்தார். வந்தவர் பேயன் ஷரீபை பார்த்து நல்லவேளை தாங்கள் பாபாவிடம் சொன்னதால் எனது மகளுடைய திருமணத்திற்கு அவர்கள் வந்து விட்டார்களென்று சொல்ல, அதைகேட்டு கொண்டிருந்த நான் ஷரீபிடம் இவர் குறிப்பிடும் நாளில் பாபா அவர்கள் பனைக்குளத்தில் தானே இருந்தார்கள் என்றேன் அவரும் ஆம் என்றார் பின்னர் பேயன் ஷரீபிடம் நீங்கள் அவர்கூறிய விஷயத்தை பாபாவிடம் கூறினீர்களா? என்றுகேட்க அதற்கவர் நான் மறந்து விட்டேன் என்று கூறினார். ஒரே நாளில் பனைக்குளத்திலும் பேரையூரிலும் மஹான் பாபா அவர்கள் இருந்தது கேட்டு நாங்கள் இருவரும் ஆச்சரியப்பட்டோம்.
அறிவிப்பாளர்: ஆ.ளு.யு.மன்சூர், பனைக்குளம்
மஹான் பாபாவின் துஆவால் குழந்தை பாக்கியம் பெற்றார்
       நான் பர்மாவிலிருந்து ஊருக்கு வந்தேன். நான் எங்கிருந்து வந்தாலும் போனாலும் நேராக பனைக்குளம் வந்து பாபாவை பார்த்துவிட்டுச் செல்வது தான் வழக்கம். இம்முறை எனக்கு குழந்தை பாக்கியத்திற்காக பாபாவிடம் போய் துஆ செய்யர் சொல்லிவிட்டு வா என எனது தாயார் கூறினார். அதன்படி பனைக்குளம் வந்து பாபாவை சந்தித்து குழந்தைக்காக துஆ செய்யுமாறு வேண்டினேன். போங்கள் கிடைக்குமென்று நல்வாக்குக் கூறி அனுப்பினர். பிறகு இரண்டு நாட்களுக்குப் பின் பேரையூருக்கு வந்தனர். தாங்கள் குழந்தை வேண்டும் என்றீர்களே வாருங்கள் போவோமென்று அழைத்தனர். ஆனால் எனக்குப் பிடிக்காதவர்களுடைய வீட்டுக்கு அழைத்தனர். நான் போகத் தயங்கினேன். அதைக்கண்ட பாபா குழந்தை வேண்டுமென்றால் வாருங்கள் என்று கூறி அழைத்துச் சென்றனர். அந்த வீட்டிலிருந்தவர்கள் நாகூர் நேர்ச்சையை பாபாவுக்கு முன்னால் கொண்டுவந்து வைக்க, யாசீன் குழந்தை இல்லையெனக் கூறுகிறார். அவருக்கு இந்த நேர்ச்சையை கொடுக்கலாமா? என்று பாபா வீட்டாரிடம் கேட்க அவர்கள் சரியென்று கூறினர். அதன்பின் பாபா அவாக்ள் அதிலிருந்து மூன்று சாத்துக்குடி பழங்களை எடுத்துக்கொடுத்து மடியில் கட்டிக் கொள்ளுங்கள் யாருக்கும் தெரியாமல் உங்களுடைய மனைவியிடம் கொண்டுபோய் கொடுங்கள் என்றனர். அதை கொண்டுபோய் எனது மனைவியிடம் கொடுக்க பாபா அவர்களின் துஆவைக் கொண்டு பெண் குழந்தை பிறந்தது நமக்குப் பெண்குழந்தை பிறந்தால் இன்னபெயர் வைக்க வேண்டுமென நினைத்திருந்தேன். நான் சென்னையில் இருக்கும் போது திடீரென என் மகளுக்கு பாபா அவர்கள் நான் நினைத்திருந்த பெயரில் சிறிது மாற்றத்துடன் (யாரும் அவர்களிடம் சொல்லாமலேயே) பெயர் வைத்து விட்டனர். இதோர் பேராச்சரியமே நான் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது சென்னை தவிர கல்கத்தா பம்பாய் போன்ற இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்ய எண்ணியிருந்தேன். அதற்கான வடஇந்திய துணிகளையும் தைத்து வைத்திருந்தேன். இதை நான் யாரிடமும் கூறவில்லை நான் வியாபாரத்திற்காக புறப்படத் தயாராகி பாபாவிடம் சென்று துஆ வாங்கிக்கொண்டு செல்ல பனைக்குளத்திற்கு வந்திருந்தேன் பாபாவிடமும் நான் எந்த விபரமும் சொல்லவில்லை பயணம் அனுப்பிவைத்த பாபா அவர்கள் என்னை நோக்கி சென்னையை தவிர வேறு எங்கும் போகக் கூடாதெனக் கூறியதை கேட்டதும் எனது உள்ளத்தில் நான் மறைத்து வைத்திருந்த எண்ணத்தை அவர்கள் அப்படியே பிரதிபலித்ததை கண்டு அதிர்ந்து போனேன். பின்னர் அவர்கள் கூறியவாறே நடந்தேன்.
அறிவிப்பாளர்: ஏ.கே.எஸ்.முஹம்மது யாசீன் காக்கா அல்ஹாஜ் ஏ.கே.ஷம்ஸூகான் அம்பலம் அவர்களின் மகன
பிஸ்மியின் மகத்துவத்தால் வழக்கு தள்ளுபடி
       நான் ஊரில் வைத்திருக்கும் போது அதிகாரிகள் வந்து என்மீதும் வேறு சிலர்மீதும் வழக்குத் தொடுத்து விட்டனர். தொடர்ந்து நாங்கள் வாய்தாவுக்கு போய் கொண்டிருந்தோம். நான் எப்போது போய்விட்டு வந்தாலும் பாபாவை சந்தித்து விட்டுத்தான் ஊருக்குப் போவேன். சுமார் பத்து வாய்தா முடிந்துவிட்டது வழக்கு இன்னும் முடியவில்லையென சாப்பிடப் போகும்போது கூறினேன். அதைக்கேட்ட பாபா அவர்கள் மிகப்பலமாக சப்தமிட்டு பிஸ்மி சொல்லி ஒவ்வொரு பிடி உணவையும் சாப்பிடச் சொன்னார்கள் அத்துடன் இதுதான் வழக்கு ஜெயிக்க வழக்காடுவது என்றும் கூறினர். அதன்படியே மிகச் சப்தமிட்டு பிஸ்மி சொல்லி சாப்பிட்டேன். அந்தமுறை எனது வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றவர்களின் வழக்கு இன்றும் பல வாய்தாவுக்கு பின் அபராதத்துடன் முடிந்தது.
அறிவிப்பாளர்: ஏ.கே.எஸ். முஹம்மது யாசீன் காக்கா
ஹஜ்ரத் அடுத்த மாதம் சம்பளம் வாங்கி பணம் தந்து விடுவார்களா?
       பாபா வலியுல்லாஹ் அவர்களை மிகப்பெரும் சீமானாகக் கருதிய ஒரு அரபிக் கல்லூரியின் முதல்வாரன ஹஜ்ரத்தவர்கள் சிறிது பணம் கைமாற்றுக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார் அத்துடன் அடுத்த மாதம் சம்பளம் வாங்கித் தந்து விடுவதாகவும் எழுதியிருந்தார். அக்கடிதத்தை படித்த பாபா அவர்கள் தேம்பித் தேம்பி அழுதனர். ஹஜ்ரத்தவர்களின் சிரமத்தை எண்ணி அவர்களுக்கு ஆயிரமாயிரமாக அனுப்பி அவர்களின் சிரத்தை போக்க வேண்டும். அனால் நமது கைவசம் அத்தனை பணமில்லையே என வேதனைபட்டவர்கள். அவர்கள் கேட்ட சிறிய தொகை தான் கைவசமுள்ளதென்று கூறி உடனெ அதை தந்தி மணியார்டர் மூலம் அனுப்பிவிட்டு வருமாறு என்னிடம் கூறினர். அதன்படி நான் அனுப்பிவிட்டு வந்தேன். அக்கடிதத்தில் அடுத் மாதம் சம்பளம் வாங்கித் தந்து விடுவதாக எழுதியுள்ளார்களே தந்து விடுவார்களா? இச்சிறிய கல்வியை கூட அவர்கள் கற்றுக்கொள்ள வில்லையே என்று கூறி வருந்தினார்கள் மஹான் பாபா அவர்கள் அடுத்த மாதச் சம்பளம் வாங்குவதற்கு முன்பே அந்த ஹஜ்ரத் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
அறிவிப்பாளர்: மௌலவி முஹம்மது குத்புத்தீன் ஆலிம்
மௌலவி முஹம்மது முபாரக் ஆலிம்
மஹான் பாபாவிடம் நான்கண்ட அற்புதங்கள்
       மஹான் பாபா அவர்கள் எங்கள்மீது மிகுந்த கிருபை நிறைந்தவர்களாகவும், நேர்வழியில் நடத்தக்கூடிய மிகப்பெரும் சீதேவியாகவும் இருந்தனர். மேலும் எங்களுடைய நல்ல நிலைக்காக நிறைய துஆவும் செய்துள்ளனர். எங்களுக்கு உடல்நிலை சரியில்லாதிருக்கும் போதெல்லாம் பல பக்குவங்களை கூறி எங்களின் பிணி நீங்க உதவியும் செய்து கொண்டிருந்தனர்.
       மேலும் மஹான் பாபா அவர்களிடம் நான் பல்வேறு அற்புதங்களையும் சிறப்புக்களையும் கண்டுள்ளேன். நாங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களையெல்லாம் அவர்களை சந்திக்கும்போது கூறி விடுவர். அத்துடன் அடுத்து நடக்கவிருக்கும் முக்கியமான விஷயங்களையும் முன்கூட்டியே கூறுவர். அவ்வாறே பிறகு நடக்கவும் செய்யும். நான் பாபா அவர்களை காண அவர்களுடைய வீட்டுக்குப் போகும் போதெல்லாம் பல சந்தர்ப்பங்களில் நான் தொலைவில் வந்து கொண்டிருக்கும் போதே அவர்கள் தமது விட்டிலுள்ள யாரையாவது அழைத்து ஆயிஷாம்மா வருகிறார்கள் என பாபா சொல்வது எனக்கு தெளிவாகக் கேட்கும் ஒருசமயம் பெருங்குளத்தில் மருந்து இலை பறித்துக்கொண்டு பாபாவின் வீட்டுக்குப் போய் வரலாமென்று அவர்களுடைய வீட்டை நோக்கி அரைபர்லாங் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் போதே பாபா அவர்கள் வீட்டிலுள்ளோரை அழைத்து ஆயிஷாமமா வருகிறார்கள் எனக்கூறியது அரை பர்லாங் தூரத்தில் வந்து கொண்டிருந்த எனக்கு மிகத்தெளிவாகக் கேட்டது. நான் அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்ததும் பெருங்குளத்திற்கா போய் வருகிறீர்கள்? உங்களுக்காக மருந்து தயார் செய்து வைத்துக்கொண்டு வைத்தியர் உங்களை (முகவையில்) எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். சீக்கிரம் புறப்படுங்கள் எனக் கூறியவர்கள் எனக்கு சாப்பாடும் தரச்சொல்லி அனுப்பி வைத்தனர். இவைகளெல்லாம் பாபாவிடம் நான்கண்ட பேரற்புதங்கள்.
       ஒருமுறை எனது வீட்டை தாண்டி கிழக்குப் பக்கமாக பாபா அவர்கள் போவது தெரிந்து வாசலுக்கு ஓடிவந்து பார்த்தேன். அப்போது தான் பாபா அவர்கள் மேற்குத் திசையிலிருந்து சிறிது தூரத்தில் அவர்களது மகனார் முபாரக்குடன் எனது விட்டை நோக்pக வந்து கொண்டிருந்தனர்.
       வேறொரு சமயம் பாபா வலியுல்லாஹ் அவர்கள் எங்களுடைய வீட்டு முன்ஹாலில் உலவுவது போன்று எனது மகளுக்குத் தெரிந்து சமையலறையிலிருந்து முன்ஹாலே வந்து பார்த்தபோது பாபாவை காணோம். திரும்பிப்போய் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அம்மா ஹப்ஸாம்h என பாபா அவர்கள் மிகத்தெளிவாக அழைக்கும் சப்தம் கேட்டு ஓடிவந்து வாசலில் பார்த்தால் ஒருவரையும் காணோம். அதேநேரம் நீண்ட நேரத்திற்குப்பின் ளுஹர் தொழுதுவிட்டு பாபா அவர்கள் வீட்டுக்கு வந்தனர் அதைக்கண்டு நாங்கள் பேராச்சரியம் அடைந்தோம்.
       மற்றொரு சமயம் நான் புதுநெல் அரிசி கிழங்கு போன்றவைகளை பாபாவுடைய வீட்டுக்குக் கொண்டு போனேன். நான் வீதியல் வரும்போதே பாபா அவர்கள் வீட்டுக்குள்ளிருந்து ஆயிஷாம்மா கொண்டு வருகிறார்கள் இறக்குங்கள் எனக்கூறியது வீதியில் வந்து கொண்டிருந்த எனக்கு மிகத்தெளிவாகக் கேட்டது. இதைக்கண்டு பாபா அவர்களின் மேன்மையை நான் புரிந்து கொண்டேன்.
அறிவிப்பாளர்: ஆயிஷாம்மா, முகவை
மஹான் பாபா முகத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்மீது அடித்தது
       இன்னோர் சமயம் மஹான் பாபா குத்புல் அக்தாப் அவர்களை காண அவர்களுடைய இல்லத்திற்கு சென்றேன். முன் வராண்டாவில் யாரையும் காணவில்லை. அப்போது பாபா அவர்கள் வீட்டின் உள் அறையிலிருந்து வெளியே வந்தனர். அதுபோது அவர்களுடைய முகத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்மீது அடித்தது. அதை தாங்க முடியாமல் மயங்கிப்போன நான் திண்ணை வராண்டாவை பிடித்துக்கொண்டு விழுகிற நிலையில் உட்கார்ந்து விட்டேன். அப்போது அவர்களுடைய முகத்தில் பிரகாசம் இலங்கிக் கொண்டிருந்தது. இப்போது தான் வருகிறீர்களா? என என்னை கேட்டவர்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டனர். அப்போது தான் அங்கே நின்றிருந்த மற்றவர்கள் உள்ளே வந்தனர். இது எனக்கக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம் இதுவே எனக்குப் போதும் அல்ஹம்குலில்லாஹ். பின்னரே நான் பாபா அவர்களை கனவில் கண்டேன்.
அறிவிப்பாளர்: ஹூசைன்பாய் மகள் ஆயிஷாம்மா
கைக்கொள்வார் தெரு, சின்னக்கடை, இராமநாதபுரம்.
நான் விதேக முக்தியடைந்து விட்டேன் என்னும் முன்னறிவிப்பு
       பாபா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தபோது நான் முகவையில் எனது வீட்டில் இரவு ஏழரை மணியளவில் கனவொன்று கண்டேன். அதில் பாபா அவர்கள் ஆயிஷாம்மா நான் விதேக முக்தியடைந்து விட்டேன் எனக்கூறியதை கேட்டு எனது மகளிடம் இப்படியொரு கனவை கண்டேனென்று சொல்ல அதுகேட்ட என்மகள் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? என்று ஆததிரப்பட்டாள். சிறிதுநேரம் கழித்து வீதியில் மக்களெல்லாம் கூட்டங்கூடடமாகக் கூடி பனைக்குளம் ஆலிம்ஷா அவர்கள் இறந்து விட்டார்களென்று பேசிக்கொண்டனர். அப்போது தான் பாபாவின் முன்னிறிப்பை கண்டு நான் பேராச்சரியம் அடைந்தேன்.
அறிவிப்பாளர்: ஹூசைன்பாய் மகள் ஆயிஷாம்மா
கை;கொள்வார் தெரு, சின்னக்கடை, இராமநாதபுரம்.
குருடர் கண்ணொளி பெற்றார்
       நான் பாபா அவர்களிடம் ஓதிக் கொண்டிருக்கும் போது தொழுகைக்கு வந்த என்னை பள்ளிவாசலில் அமர்ந்திருந்த பாபா அழைத்தனர். நான் பாபாவுக்கு முன்னால் போய் நிற்க ஒரு வயதான பெண்மணி இருபத்தைந்து வயதுள்ள வாலிபன் ஒருவனை அழைத்துவந்து இந்தப் பையனுக்கு பத்து வருடங்களாக கண் பார்வை தெரியவில்லையென வேதனையோடு முறையிட்டார் அதைக்கேட்ட பாபா எந்தப்பக்கமாக வந்தீர்களென்று கேட்டனர். அதற்கவர்கள் தெற்குப்பக்கம் பள்ளிவாசலின் கிழக்குப்பக்க ஓரமாக வந்தோம் என்றார். இப்போது நத்தர்ஷா தர்ஹாவுக்கு போகும் வழியாக அவனை கூட்டிக்செல்லுங்கள் உங்களுடைய மகனுக்கு குணமாகி விடும் எனக்கூறி அனுப்பி வைத்தனர். இது நடந்து சில நாட்களுக்குப் பின் நான் அந்த பெரியம்மாவை இராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் வைத்துப் பார்த்தேன். அப்போது அவரிடம் நான் நீங்க்ள தானே ஆலிம்ஷாவிட்ம வந்தவர்களென்று கேட்க அதற்கவர் ஆமாம் வாப்பா ஆலிம்ஷா சொன்னவாறு எனது மகனை அவர்கள் கூறிய வழியல் அழைத்துச் சென்றேன். பனைக்குளம் ஆற்றங்கரை வந்தாலும் ன்று கையை விட்டுவிட்டு என்மகன் நடக்கவாரம்பித்து விட்டான். ஆலிம்ஷாவின் துஆவைக் கொணடு எனது மகனுக்கு கண்பார்வை கிடைத்து விட்டதென்று மகிழ்ச்சியோடு கூறினார். அதைக்Nகுட்ட நான் இதை பாhபவிடம் வந்து கூறுங்களென்று சொல்ல அதற்கவர் நான் நல்லபடியாக பாபாவிடம் வருவேனென்று சொல்லுங்களென்று கூறினார். அதை நான் பாபா அவர்களிடம் வந்து கூறினேன்.
அறிவிப்பாளர்: கண் உள்ளான் இப்ரா}ம் கனி ( சாச்சி) பனைக்குளம்
சிறிய இரயில் நிலையத்தில் மஹான் பாபா அவர்களுக்கா
மெயில் வண்டி நின்றது.
       1947ம் வருடம் ஒருநாள் மஹான் பாபா அவர்களை சந்திப்பதற்காக பனைக்குளத்திற்குப் போயிருந்தேன். அப்போது ஒருவாரம் வரை அவர்களது நற்பேதைனைகளில் மூழ்கியிருந்தேன். மஹான் அவர்கள் போய் வாருங்களென அனுமதி கொடுக்காத வரை நாங்கள் போய் வருகிறோமெனக் கூறும் வழக்கமில்லை.
       ஒருநாள் மதியம் இரண்டு மணிக்கு உணவுண்ட பின் பள்ளிவாசலுக்கு வந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தனர். மணி இரண்டரை ஆகிவிட்டது. அப்போது பாபா அவர்கள் திடீரென இன்று மெயிலில் (தனுஷ்கோடி போட்மெயில்) ஊருக்குப் போவோமா? என்றனர். அந்த மெயில் இராமநாதபுரத்திற்கு இரண்டே முக்கால் மணிக்கே வந்துவிடுமே எப்படி நாம் பனைக்குளத்திலிருந்து இராமநாதபுரம் சென்று மெயிலில் செல்ல முடியுமென்று எண்ணினேன்.
       இருப்பினும் மஹான் பாபா அவர்கள் கூறியதற்கேற்ப சொல்வோம் என்றேன். நாங்கள் மாட்டு வண்டியில் ஏறி மண்டபம் ரோட்டுக்குச் சென்றோம். அங்கே சென்றதும் வண்டியை வாலாந்தரவை என்னும் ஊருக்குப் போகுமாறு பாபா கூறினர்.
       அப்போது வாலாந்தரவை சிறிய ஸ்டேஷன் மெயில் நிற்காதே என்று சொன்னேன் வண்டியோட்டியும் எப்படி மெயில் அநத ஸ்டேஷனில் நிற்கும் என்று தயங்கினார். அதற்கு பாபா அவர்கள் அதெல்லாம் மெயில் நிற்குமென்று கூறினர். பின்னர் வாலாந்தரவை வந்து சேர்ந்தோம். நாங்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே மெயில் அந்த ஸ்டேஷனில் வந்து நிற்று கொண்டிருந்தது. அதைக்கண்ட பாபா அவர்கள் வண்டியில் ஏறுங்கள் இராமநாதபுரம் சென்றதும் டிக்கெட் எடுத்துக்கொள்வோமென்று கூறினர்.
       வண்டியில் இருந்தோரிடம் இங்கே வண்டி ஏன் நின்றது? என என்னை கேட்குமாறு பாபா அவர்கள் கூற நான் வண்டியில் இருந்தோரிடம் கேட்டேன். அதற்கவர்கள் யாரோ வண்டியின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து விட்டார்கள் அந்தக் கேரேஜில் போய் விசாரித்ததில் அங்கே யாரும் இழுத்ததாகத் தெரியவில்லையென்று கூறினர்.
       அதுகேட்ட மஹான்பாபா அவர்கள் வண்டி இவ்வாறு நின்றது அல்லாஹ்வுடைய குத்ரத்து தான் என்று கூறினர். நானும் ஆம் என்றேன். பிறகு இராமநாதபுரம் வந்து டிக்கெட் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்கு வந்தோம் அங்கிருந்து பஸ் மூலமாக பேரையூருக்குச் சென்றோம்.
அறிவிப்பாளர்: கே.இ.அப்துர்ரஹ்மான், பேரையூர்
வருசை முஹம்மது ஷைகு (வலி) அவர்களோடு மஹான் பாபா அவர்கள் பேசினர்
       ஒருநாள் மஹான் பாபா அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு நாம் இருவரும் அழக்குளத்திற்குப் போவோம் வாருங்களெனக் கூறி அழைத்துச் சென்றனர். முதலில் எங்களுடைய ஊரு (பனைக்குளத்து)க்கு அழைத்துச் சென்றனர். என்னை பள்ளிவாசலுக்கு வெளியே இருக்குமாறு கூறிவிட்டு அவர்கள் மட்டும் பள்ளிக்கு உள்ளே சென்றவர்கள் கால்மணி நேரம் கழித்து திரும்பி வந்தனர். பள்ளிவாசலின் கிழக்கே அடங்கியுள்ள ஆலியார் ஷைகப்பா அவர்களுக்கு துஆ ஓதினர். அந்த இடத்தில் அவர்களோடு நான் மட்டும்தான் இருந்தேன். நான் மட்டும் ஆமீன் சொன்னேன். ஆனால் நிறையபேர் ஆமீன் ஆமீன் எனக்கூறுவது என் காதில் விழுந்தது. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
       அம்மஹானுக்கு துஆ முடித்துவிட்டு அழகன்குளத்திற்கு பாபா அவர்கள் சென்றனர். அப்போது இரவு மணி ஒன்றரை இருக்கும். பள்ளிவாசலுக்கு வெளியே இருக்குமாறு என்னை கூறிவிட்டு அவர்கள் மட்டும் பள்ளிக்கு உள்ளெ சென்றனர்.
       கால்மணி நேரம் கழித்துவந்து வருசை முஹம்மது ஷைகப்பா தர்ஹாவுக்குச் செல்ல உத்திரவு கிடைத்து விட்டது வாருங்கள் போவோமென்று கூறி என்னை அழைத்துச் சென்றனர்.
       வருசை முஹம்மது ஷைகப்பா அவர்களின் தர்ஹா ஷரீப் அழகன்குளத்திற்கு மேற்கே ஊரணி மேட்டில் அமைந்துள்ளது. அங்கே சென்றதும் தர்ஹாவின் முதல்வாசல் திறந்திருந்தது உள்ளே சென்றோம். ஆனால் உள்வாசல் பூட்டுப்போட்டு பூட்டியிருந்தது நானும் மஹான் பாபா அவர்களும் அந்த வாசலுக்கு அருகே செல்ல அந்த வாசல் தானாகவே திறந்து கொண்டது.
       மஹான் பாபா அவர்கள் உள்ளே சென்று விட்டனர். வாசலும் முன்போலவே பூட்டிக்கொண்டது. நான் உள்ளே செல்ல முடியவில்லை உள்ளே சென்ற பாபா அவர்கள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது எனக்குக் கேட்டது. சிறிதுநேரம் வரை நின்று பார்த்தேன் அவர்கள் திரும்பி வரவில்லை.
        சரி மஹான் பாபா அவர்கள் இந்த வழியாகத்ததான் வருவார்கள் என்றெண்ணி அந்த வாசல்படி மீது துண்டைச் சுருட்டி தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து உறங்கிவிட்டேன். திடீரென கதவு திறக்கப்பட்டு மஹான் பாபா அவர்கள் வெளியே வர நான் விழித்துக் கொண்டேன். என்னை கண்ட பாபா அவர்கள் பக்கீர் முஹம்மத் இங்கே ஏன் வந்தீர்கள்? என்று கேட்க அதற்கு நான் தாங்கள்தானே என்னை இங்கே அழைத்து வந்தீர்;களென்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசல் கதவு முன்போலவே பூட்டிக்கொண்டது. வாருங்கள் ஊருக்குப் போவோமென கூறியவர்கள் மணல்பாதை வழியாக அழைத்துச் சென்றனர்.
       நாங்கள் பனைக்குளத்திற்கும் அழகன்குளத்திற்கும் நடுவே மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்தோம். நல்ல நிலவு நேரம் தெற்கு வடக்காக ஒருபர்லாங் நீளத்திற்கு பூமியிலிருந்து வானத்தை முட்டுமளவுக்கு ஒரு கருப்புத் தெரிந்தது. அதைக்கண்ட மஹான் பாபா அவர்கள் பக்கீர் முஹம்மது பயப்படாதீர்;கள் என்றனர்.
       அதன்பின் என்னை நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ளுங்களென்று கூறினர். அப்போது நான் அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்தேன். மஹான் பாபா அவர்கள் கண்ணை மூடிக்கொண்டீர்களா? எனத் திரும்பக் கேட்டனர். நான் கண்ணை திறந்து கொண்டே ஆம் என்றுசொல்ல அதற்கவர்கள் நீங்கள் கண்ணை மூடவில்லை என என்னை திரும்பிப் பாராமலே கூறினர். நான் அதிர்ந்துபோய் கண்ணை மூடிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டேனென்று கூறினேன். சிறிதுநேரம் கழித்து அந்த கருப்புக்கு அப்பால் மஹான் பாபா அவர்கள் நின்றுகொண்டு பக்கீர் முஹம்மது என அழைத்தனர். நான் கண்ணை திறந்து பார்த்து பாபா என்னை விட்டு விட்டுப்போய் விட்டீர்களே என்றேன். அதுகேட்ட பாபா உங்களை ஒன்றும் செய்யாது என்றனர். சிறிது நேரத்திற்குப் பின் அந்தக் கருப்பை விட்டு சுற்றி வருமாறு சொல்ல அதை நான் சுற்றிவந்தேன். அதன்பின் பனைக்குளம் வந்து ஊரணியில் குறித்து விட்டு வீடுவந்து சேர்ந்தோம். அப்போது மணி இரண்டரை என்னை மஹான் பாபா அவர்கள் பக்கீர் முஹம்மது என்றுதான் அழைப்பார்கள்.
அறிவிப்பாளர்: பண்டாரி சீனிப்பக்கீர்
மாமேதை மஹான் பாபா அவர்கள் கூறிய இறைவசனத்தை ஓதியதால்
நாங்கள் காப்பாற்றப்பட்டோம்
       நான் ஹஜ்ஜூக்குச் சென்றபோது மஹான் பாபா அவர்கள் என்னிடம் கூறினர். அரபாத்துக்குச் சென்று அரபா மலையில் ஒரு ஸாஅத் நேரமிருந்து ஒருஆயத்தை ஓதுமாறு கூறினர். உனக்கு ஏதேனும் நேரிட்டால் இந்த ஆயத்தை நூறுமுறை ஓது ஒரு பக்கீர் வருவார் அவர் உனக்கு உதவி செய்வாரென்றும் கூறினர்.
       அதன்பின் நாங்கள் ஹஜ்ஜூக்குச் சென்றோம். அரபாத்தில் தங்கியிருந்த போது மஹான் பாபா அவர்கள் கூறிய ஆயத்தை ஓதினோம் அப்போது என்னுடன் ஒரு நபர்களும் வந்திருந்தனர் நாங்கள் பாபா அவர்கள் கூறியவாறு அரபாத் மலையில் சில நிமிடங்கள் வரை இருந்து ஓதிவிட்டு திரும்பி வரும்போது நாங்கள் தங்கியிருந்த கூடாரம் எங்கே இருக்கிறதென்று எங்களுக்குத் தெரியவில்லை.
       நாங்கள் மாலை நான்கு மணிக்கு அரபாத் மலைக்குச் சென்று விட்டு சிறிது நேரத்திற்கெல்லாம் திருமபி வந்து விட்டோம். அப்படியிருந்தும் இரவு பனிரெண்டு மணிவரை எங்களுடைய கூடாரத்தை தேடியலைந்தோம் கிடைக்கவில்லை.
       இரவு பனிரெண்டு மணிக்குப்பின் ஒருலாரியில் ஆடுகள் அடைக்கப்பட்டு அதை ஓட்டுகின்ற டிரைவரும் ஒருபெண்ணும் புறப்படத் தயாராக இருந்ததைக் கண்டு அப்பெண்ணிடம் எங்களை முஸ்தலிபாவில் கொண்டுபோய் விட்டு விடுமாறு ஜாடைகாட்டினேன். பாத்திமா முஸ்தலிபாவுக்கா வருகிறாய் எனக் கூறியவர் லாரியில் ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். நாங்கள் மூவரும் ஏறிக்கொள்ள அவர்கள் எங்களை முஸ்தலிபாவில் கொண்டுவந்து இறக்கி விட்டனர். அப்போது டிரைவருக்கு நாங்கள் மூவரும் ரியால் கொடுக்க முயல அப்பெண் ஜாடை மூலமாக அல்லாஹ் உங்களை இங்கே கொண்டவந்து விட்டான் நீங்கள் ரியாலெல்லாம் கொடுக்க வேண்டாமெனக் கூறிவிட்டு சென்று விட்டனர். முஸ்தலிபாவில் இறங்கிய நாங்கள் மூவரும் குளிர்தாங்காமல் நடுங்கிக்கொண்டு இரவு முழுவதும் மணலில் படுத்துக் கிடந்தோம்.
       அப்போது வளர்ந்துயர்ந்த சிவந்த நிறமுள்ள ஒருவர் பக்கத்தில் நிறைய கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு வந்தார். வந்தவர் பாத்திமா குளிராக இருக்கிறதா? என்று கேட்டார். நாங்கள் ஆம் என்றுசொல்ல எங்கள் மூவரையும் அழைத்துச்சென்று ஒரு கூடாரத்தில் இருக்க வைத்துவிட்டுப் போய்விட்டார். முஸ்தலிபாவில் அப்போது இரண்டே இரண்டு கூடாரங்கள் மட்டுமே இருந்தன. மறுநாள் விடிந்ததும் கார்களெல்லாம் சென்று விட்டனர். வேறு வழியின்றி மஹான் பாபா அவர்கள் கூறியிருந்த ஆயத்தை ஓதிக்கொண்டே கால்போன போக்கில் நடந்தோம் மினா எங்களுடைய கண்களுக்குப் புலப்பட்டது. அங்கே சென்ற நாங்கள் மைக்கில் காணாமல் போனவர்களை அழைக்கும் கூடாரத்திற்குச் சென்று நாங்கள் தப்பி விட்டோமென்று ஜாடை மூலமாக தெரிவித்தோம். உங்களிடம் முஅல்லிமுடைய அடையாறச் சீட்டு இருக்கிறதா என்று கேட்டனர். இல்லை என்றோம் அதன்பின் அவர்கள் யாரும் என்னவென்று கூட எங்களை கேட்கவில்லை நாங்கள் என் சொல்லியும் அவர்கள் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்போது என்னோடு வந்திருந்த இரு பெண்களில் ஒருவர் எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடலாம் என்று சொல்ல ஒரு கடைக்குச் சென்று ரொட்டி வாங்கிச் சாப்பிட்டோம் சாப்பிட்ட பின் நாங்கள் அக்கடைக்காரருக்கு ரியால் கொடுக்க அவர் அதை வாங்காது நீங்கள் போங்களென்று கூறிவிட்டார்.
       எல்லோரும் ஷைத்தானுக்கு கல்லெறியப் போய் கொண்டிருந்ததை பார்த்த நாங்கள் வாருங்கள் நாமும் கல்லெறியர் செல்வோம் என தாங்கமுடியாத கவலையோடு மஹான் பாபா அவர்கள் கூறிய ஆயத்தை ஓதிக்கொண்டே சென்றோம் ஷைத்தானுக்குக் கல்லெறிந்து விட்டு திரும்பும்போது பாபா அவர்கள் கூறிய ஆயத்தை நூறு தடைவ ஓதி முடித்து விட்டோம்.
       மஹான் பாபா அவர்கள் ஹம்ஸா (ரழி) பக்கீர் போன்று வருவார்களெனக் கூறியவர்கள் இன்னும் வரவில்லையே என வேதனையோடும் கவலையோடும் அழுது கொண்டேயிருந்தோம்,
       அப்போது கந்தலான ஆடையும், தலைப்பாகையும் அணிந்த ஒருவர் வந்து பாத்திமா தவறி விட்டாயா? முஅல்லிம் ஷில்லி இருக்கும் இடத்தையோ தேடுகிறாய் என்று கேட்க நாங்கள் ஆம் என்றோம். எங்களை அவர் அழைத்துக்கொண்டு காணாமல் போனவர்களை மைக் மூலமாக அழைக்குமிடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் போகப்போனார். நாங்கள் முன்பு இங்கேதான் வந்து இவர்களிடம் எங்களைபற்றி பலமுறை எடுத்துக்கூறியும் எங்களை பற்றி ஏனென்று கூடக் கேட்கவில்லை. மறுபடியும் எங்களை இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறீர்களே என்றோம். அதுகேட்ட அவர் கந்தலை அணிந்து கொண்டிருக்கும் என்னால் வேறென்ன செய்ய முடியும்? என்று கேட்டார்.
       அத்துடன் அவர் எங்களைபார்த்து இங்கேயே இருங்கள் உங்களுடைய ஆட்கள் வந்து உங்களை அழைத்துச் செல்வார்களென்று கூறிவிட்டுப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து முஸ்தலிபாவில் எங்களை ஒரு கூடாரத்தில் கொண்டுபோய் விட்ட அதே அடையாளமுள்ள ஒருவர் வந்து என்ன பாத்திமா தப்பி விட்டயா? என்று கேட்டார் அதற்கு நாங்கள் ஆம் என்றோம்.
       அதன்பின் ஒருசீட்டை எழுதி காணாமல் போனவர்களை மைக்கில் அழைப்பவர்களிடம் கொண்டுபோய் கொடுக்கச் சொன்னார். அதையும் கொண்டுபோய் கொடுத்தோம். அவர்கள் அதையும் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லவில்லை. மஹான் பாபா அவர்கள் கூறியவாறு அந்த ஆயத்தை நூறுமுறை ஓதியபின் ஹம்ஸா (ரழி) பக்கீரை போல வருவார்களெனக் கூறியவர் எங்களை அழைத்துக்கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டுப் போய் விட்டாரே நம்முடைய ஆட்களையும் காணவில்லையே என தாங்கமுடியாத வேதனையோடு ஆழுகைவரும் நிலையில் நின்று கொண்டிருந்தோம்.
       அப்போது ஏர்வாடி இப்ராஹீம் என்பவர் திடீரென நாங்கள் நின்று கொண்டிருந்த கூடாரத்தின் உட்பகுதியிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் என்னம்மா இப்படிக் காணாமல் போய் விட்டீர்கள்? உங்களை எங்கெல்லாம் தேடினோமென்று கேட்டார். அவரைக் கண்டதும் எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. அதன்பின் நாங்கள் நின்று கொண்டிருந்த கூடாரத்தின் உட்பகுதிக்கு எங்களை அழைத்தச் சென்றார் அங்கேதான் எங்களுடைய ஆட்கள் அனைவரும் இருந்தனர். பின்னர் மக்காவில் நாங்கள் நாற்பத்தைந்து நாட்கள் வரை தங்கியிருந்தோம்.
       ஒருநாள் ளுஹர் தொழுவதற்காக நாங்கள் கஃபாவில் அமர்ந்து கொண்டிருந்த போது மஹான் பாபா அவர்கள் கக்கத்தில் ஒரு குடையை வைத்துக்கொண்டு வெளியேயிருந்து வநதவர்கள் எங்களுக்கு ஓரமாக எங்களை கடந்து கஃபாவுக்குள் போய் கொண்டிருந்தனர்.
       எனக்கு அருகே மஹான் பாபா அவர்கள் வந்ததும் நான் அவர்களை அத்தா என்று அழைத்தேன். அதற்கவர்கள் கையை உயர்த்தி இரு என்று ஜாடை காட்டிவிட்டு கஃபாவுக்கு உள்ளே சென்று விட்டனர். (அதுசமயம் மஹான் பாபா அவர்கள் ஹஜ்ஜூக்கு வரவில்லை ஊரில்தான் இருந்தார்கள்)
அறிவிப்பாளர்: ம.மா.மு.கதீஜா உம்மாள் றுஃழ.முஹம்மது இப்ராஹீம்
இறந்து விட்டதாக ரேடியோவில் ஒளிபரப்பிய பின்னரும்
       நான் மக்காவில் இறந்து விட்டதாக வானொலியில் செய்தி ஒலிபரப்பப்பட்டது அதைக்கேட்ட எங்களுடைய ஊர் மக்களும் உறவினர்களும் துக்கம் விசாரிப்பதற்காக எங்களுடைய வீட்டுக்கு வந்து கூடிவிட்டனர். என்னுடைய மகன் ஹஸன் பஸரி மஹான் பாபா அவர்களிடம் இச்செய்தியை குறித்து கேட்க அதற்கவர்கள் கதீஜா எனக்குத் தெரியாமல் மௌத்தாக மாட்டார். இப்போது அவர் நல்லபடியாக இருக்கிறார் இறக்கவில்லை என்றனர்.
       இதனை மஹான் பாபா அவர்கள் கூறும் போது பலர் அங்கே குழுமியிருந்தனர். அதில் ஒரு முக்கியமானவர் சொன்னார். பாபா அவர்களே ரேடியோவில் சொன்னபோது அதை நான் தெளிவாகக் கேட்டேன் என்றார். அதற்கு பாபா அவர்கள் அவ்வாறு ஒலிபரப்பியிருந்தால் அதுதவறு கண்டிப்பாக கதீஜா இறக்கவில்லை என உறுதியாக எனது மகனிடம் கூறினர். (அதற்குப்பின் தவறாக ஒலிபரப்பானது தெரியவந்தது) அல்லாஹ்வின் கிருபையாலும் பாபா அவர்களின் துஆ பரக்கத்தாலும் ஹஜ்ஜை முடித்துக்கொண்டு நாங்கள் நல்லபடியாக ஊர்வந்து சேர்ந்தோம்.
அறிவிப்பாளர்: ம.மா.மு.கதீஜா உம்மாள்
வாய்பேச முடியாத, கண்பார்க்க முடியாத, காதுகேட்க முடியாத நிலையிலிருந்த கல்லூரி மாணவரை குணப்படுத்திய கோமான்
       1944ம் ஆண்டு எனது சிறியதந்தையின் மகன் அப்துல் ஹக்கீம் என்பார் மதுரை கல்லூhயிpல் படித்துக் கொண்டிருந்தார். அதுபோது அவர் கல்லூரியிலிருந்து விடுமுறையில் வந்திருந்தார். ஒருநாள் எதிர்பாரா வண்ணம் அவருக்கு வாய்பேச முடியாமலாகி விட்டது. மூன்று நாட்கள் கழித்து காதும் கேட்கவில்லை, ஐந்து நாட்களான போது அவருக்குக் கண்ணும் தெரியவில்லை. இந்நிலையில் பல சிகிச்சைகள் செய்தும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஒருநாள் இரவுநேரம் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது ஐந்து பேட்டரியுள்ள டார்ச்லைட் ஒளியை அவரது கண்ணில் பாய்ச்சிப் பார்த்தனர். அப்படியும் கண்தெரியவில்லை இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.
       மஹான் பாபா அவர்களிடம் தம்பி அப்துல்ஹக்கீமை அழைத்துச்சென்று காட்டு வருமாறு எனது சிறியதந்தை காட்டு பாவா என்னிடம் கூறினார். பாபா அவர்களிடம் தாங்கள் தம்பியை அழைத்துச் செல்வதுதான் நல்லது. ஏனெனில் உரிமையாளர்கள் தான் அவர்களது காரியங்களுக்கு வரவேண்டுமென பாபா அவர்கள் கூறுவார்கள் என்றேன்.
       மஹான் பாh அவர்களிடம் எங்களைவிட நீதான் நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கிறாய் ஆதலால் நீ அழைத்துச் சென்றால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களென்று சொல்லி செலவுக்குப் பணமும் கொடுத்து என்னையும் தம்பி ஹக்கீமையும் பாபா அவர்களை சந்திப்பதற்காக பனைக்குளத்திற்கு அனுப்பி வைத்தனர்.
       அன்று மாலை ஐந்தரை மணிக்கு பனைக்குளம் வந்து சேர்ந்தோம் அதுபோது பாபா அவர்கள் ஊரில் இல்லை. அழகன்குளம் சென்றிப்பதாக விசாரித்துத் தெரிந்து கொண்டோம். அழகன்குளம் பக்கத்தில் தான் இருக்கிறதென்று தம்பி ஹக்கீமிடம் சொல்லி வைத்தேன். அதுகேட்ட அவர் ஒரு பேப்பரில் அழகன்குளத்தில் எஸ்.கே.ஏ.அப்துர்ஷீத் பி.ஏ. என்பவர் என்னோடு மதுரை கல்லூரியில் படிக்கிறார். அவரை அழைத்து வருமாறு எழுதிக் காட்டினார்.
       அவ்வாறு தம்பி எழுதிக்கொடுத்த சீட்டை ஒருவரிடம் கொடுத்து அப்துர்ரஷீதை அழைத்து வருமாறு சொல்லியனுப்பினோம். அவர்சென்ற ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கெல்லாம் மஹான் பாபா அவர்களும் அப்துர்ரஷீதும் பனைக்குளம் பள்ளிவாசலுக்கு வந்தனர். அப்போது நேரம் மாலை ஆறரைமணி இருக்கும்.
       அப்போது ஹக்கீம் பள்ளிவாசலின் தென்புறத்தில் அமர்ந்திருந்தார். மஹான் பாபா அவர்கள் பள்ளிவாசலின் கிழக்குப் பக்கமாக அமர்ந்துகொண்டு என்னை அழைத்தனர். நான் அவர்களுக்கு அருகில் செல்ல என்ன நோக்கமாக வந்தீர்களென்று கேட்டனர்.
       தம்வி ஹக்கீமுக்கு திடீரென ஏற்பட்ட நிலையை விளக்கமாக எடுத்துக் கூறினேன். உடனே பாபா அவர்கள் பள்ளிவாசலை விட்டுக் கீழே இறங்கி தென்புறமாக நடந்து வந்தனர். அப்போது தம்பி ஹக்கீம் பள்ளிவாசலுக்கு மேலே அமர்ந்திருந்தார். பாபா அவர்கள் அவருக்க நேராக வந்து பள்ளிவாசலின் மீது ஏறி அமர்ந்துகொண்டு ஹக்கீம் என்று அழைத்தனர். அதற்கு அவர் பதிலேதும் தரவில்லை. அழகன்குளத்திலிருந்து பாபாவோடு வந்திருந்த அப்துர்ரஷீத் அவர்களை பார்த்து இவர் யாரென்று தெரியுமா? என பாபா அவர்கள் கேட்டனர்.
       அதற்கவர் ஆம் இவரை நன்றாகத் தெரியும் இவர் என்னுடைய தோழர்தான் இவரும் நானும் மதுரை கல்லூhயிpல் ஒன்றாகத்தான் படிக்கிறோமென்று கூறினார்.
       தம்பி அப்துல்ஹக்கீம் அவர்களின் நிலையை பார்த்த அப்துர்ரஷீத் அவர்கள் மதுரையில் பெரும் பெரும் நிபுணர்களான டாக்டர்களெல்லாம் இருக்கிறாங்களே அங்கே கொண்டுபோய் இவரை காட்டலாமே என்றார்.
       அதைக்கேட்ட மஹான் பாபா அவர்களும் சரி காட்டலாம் என்றனர். இவ்விபரத்தை தம்பி ஹக்கீம் அவர்களிடம் எழுதிக்காட்டினேன். அதற்கவர் சம்திக்கவில்லை மஹான் பாபா அவர்கள்தான் பார்க்க வேண்டுமென எழுதிக்காட்டினார். தம்பி அப்துல்ஹக்கீம் அவர்களை பள்ளிவாசலின் தென்புறமாக படுக்கச் சொன்னார்கள் பாபா. பின்னர் படுத்த சற்றுநேரத்தில் எழுந்து உட்காருமாறு சொல்ல அவரும் எழுந்து உட்கார்ந்து கொண்டார்.
       அதன்பின் மஹான் பாபா அவர்க்ள் அழக்களத்திலிருந்து வந்திருந்த அப்துர்ரஷீத் அவர்களை ஊருக்கச் செல்லுமாறு அனுமதியளிக்க அவரும் உருக்குச் சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிதுநேரத்தில் அப்துர்ரஷீத் அவர்கள் ஒருசிறிய மாட்டு வண்டியில் சில உணவுப் பண்டங்களையும் கனி வர்க்கங்களையும் ஒருவர் மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அவர் அனுப்பி வைத்தவைகளில் சிலவற்றை எடுத்துக்கொண்டு மீதியை பாபா அவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர்.
       அப்பொருட்களை தம்பி ஹக்கீம் அவர்களை பாபா அவர்கள் சாப்பிடுமாறு சொல்ல அவரும் சாப்பிட்டார். பின்னர் அவரை பள்ளிவாசலிலேயே இருக்குமாறு கூறிவிட்டு இரவு சாப்பாட்டுக்கு பாபா அவர்கள் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பள்ளிவாசலுக்கே செல்லுமாறு கூற தம்பி ஹக்கீமும் நானும் பள்ளிவாசலுக்கு வந்து அங்கேயே உறங்கினோம்.
       மறுநாள் காலை பஜ்ர் தொழுகைக்குப்பின் மஹான பாபா அவர்கள் வந்து எங்களை எழுப்பினார்கள். அதுபோது அவர்களுடைய கையில் ஒரு ஓலை பெட்டியிருந்தது அதில் நிறைய ஆப்பங்கள் இருந்தன. அதை என்னிடம் கொடுத்து தம்பி ஹக்கீம் அவர்களை சாப்பிடச் சொல்லுங்கள் என்றனர். அந்த ஆப்பத்திற்கு தொட்டுச் சாப்பிட எதுவுமேயில்லை தண்ணீரும் குடிக்கக் கூடாதெனக் கூறிவிட்டனர்.
       மஹான் பாபா அவர்கள் கூறியவாறே எல்லாவற்றையும் அவர் சாப்பிட்டு முடித்தார். பின்னர் ஹக்கீம் அவர்களை அழைத்துக் கொண்டு குளத்திற்குச் சென்று வருமாறு பாபா கூறினர். அவ்வாறே அழைத்துச்சென்று வந்தேன். இன்று நாம் இராமநாதபுரம் செல்ல வேண்டுமென பாபா அவர்கள் என்னிடம் சொல்ல நானும் சரியென்றேன். பின்னர் பாபா அவர்கள் என்னை பார்த்து நீங்கள் இருவரும் இராமநாதபுரத்திற்கப் போய் அங்குள்ள தரக்குடி ஹாஜியாரப்பா தர்ஹா ஷரீபுக்குச் சென்று அவர்களுடைய மக்பராவுக்கு அருகில் அமர்ந்திருங்களென்று கூறினர். அவர்கள் கூறியவாறே சென்று அமர்ந்திருந்தோம். அரைமணி நேரத்தில் மஹான் பாபா அவர்களும் நாங்கள் இருந்த இடத்திற்கு வந்து விட்டனர். இது எனக்கு பேராச்சரியமாக இருந்தது.
       வந்தவர்கள் என்னை கூப்பிட்டு தம்பி ஹக்கீம் பேசினார் என்று கேட்டனர். நான் இதுவரை பேசவில்லை என்று கூறினேன். அதுகேட்ட பாபா அவர்கள் ஹக்கீம் என்றழைக்க அவர் அஸ்ஸலாமு அலைக்கும் பாபா என்றார். இங்கே வாருங்கள் என்று அழைத்தனர். உடனே அவரது கண்களும் திறந்து கொண்டன. நன்றாகப் பார்த்தார் இப்போது எப்படி இருக்கிறதென்று பாபா அவர்கள் கேட்க அதற்கவர் காதும் நான்றாக கேட்க ஆரம்பித்து விட்டதென்று கூறினார். இது எனக்கு பெரும் பிரமிப்பாக இருந்தது.
       பின்னர் எங்கள் இருவரையும் கடைவீதிக்கு அனுப்பி பழங்கள் வாங்கி வருமாறு கூறினர் நாங்களும் பழங்களை வாங்கி வந்தோம் அதன்பின் எங்களை ஊருக்குப் போகுமாறு அனுமதித்தனர். நாங்க்ள புறப்படும் போது எங்களை நோக்pக தம்பி ஹக்கீம் அவர்களை பாபா எவ்வாறு குணப்படுத்தினார்கள் ன்று யாராவது கேட்டால் எங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறிவிடுங்களென்று சொன்னவர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். நானும் தம்பி ஹக்கீமும் பேரையூர் வந்து சேர்ந்தோம்.
       வாய்பேச முடியாத நிலையில் கண்பார்க்க முடியாத நிலையில் காது கேட்கமுடியாத நிலையில் முதல்நாள் மஹான் பாபா அவர்களிடம் சென்ற தங்களின் அருமை மகன் இன்று நன்றாகப் பேசுகிறார், தெளிவாகக் கேட்கிறார், நன்றாகப் பார்க்கிறார் என்பதை அறிந்த எனது சிறியதந்தை பேராச்சரியம் அடைந்தார் அன்றிலிருந்து அவர் மஹான் பாபா அவர்களின் மீது மாறாத நேசமும் கொண்டார். அவர்கள் கூறியவாறே நடக்கத் துவங்கினார் இந்நிகழ்ச்சியை கண்ட உற்றாரும் உறவினரும் ஊராரும் மஹான் பாபா அவர்களை மிக மிக மேலாக மதிக்கத் துவங்கினர். அவர்களின் நல்லாசியை பெற்றிட அவர்களைத் தேடி அவர்களுடைய ஊருக்கு கூட்டங் கூட்டமாக செல்லவும் துவங்கினர்.
அறிவிப்பாளர்: ஆ.கா.ஷம்ஜூகான் அம்பலம், பேரையூர்
மஹான் பாபா அவர்களிடம் வியாபாரத்திற்கு பணம் கேட்டபோது
நடந்த அற்புதம்
       1945;ம் ஆண்டு ஒருநாள் பனைக்குளம் சென்று மஹான் பாபா அவர்களை சந்தித்தேன். தாங்கள் வந்த நோக்கமென்ன எனக்கேட்டனர். ஒரு வியாபாரம் செய்யலாமென்று நினைக்கிறேன் அதற்கு பணம் வசதியில்லை கொஞ்சம் பணம் தந்தால் நலமாக இருக்குமென்று வேண்டினேன்.
       அதற்கு பாபா அவர்கள் எவ்வளவு பணம் தேவை என்று கேட்கவில்லை அதற்கு மாறாக என்னை அழைத்துக்கொண்டு இராமநாதபுரம் வந்தவர்கள் இரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சிவகங்கைக்கு இரண்டு டிக்கெட் எடுக்குமாறு கூறிபணத்தை கொடுத்தனர். நானும் டிக்கெட் எடுத்தேன் சற்று நேரத்தில் இரயில் வந்தது. நானும் மஹான் பாபா அவர்களும் இரயிலில் ஏறி அமர்ந்து கொண்டோம். இரயில் புறப்பட்டுப் போய் கொண்டிருந்தது மஹான் பாபா அவர்கள் மார்க்க சம்பந்தமான விஷயங்களை சொல்லச்சொல்ல நானும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
       சிவகங்கை ஸ்டேஷன் வந்ததும் நாங்கள் இரயிலே விட்டு இறங்கி வெளியேவந்து ஒருகுதிரை வண்டியில் ஏறியமர்ந்து கொள்ள கடைவீதிக்குச் செல் என்றனர் மஹான் பாபா.
       குதிரைவண்டி கடைவீதியை நோக்கிப் போய் கொண்டிருந்தது. ஒரு குளத்தின் கரையருயே வண்டி வந்தபோது ஒரு இந்து நபர் மஹான் பாபா அவர்களை பார்த்து கடவுளே தங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வாருங்களென அன்போடு அழைத்தனர். நாங்கள் வண்டியை விட்டும் கீழே இறங்க அவர் தமது இல்லத்திற்கு எங்களை மிகவும் மரியாதையோடு அழைத்துச் சென்றார். அங்கே சுத்தமான இடத்தில் அமருமாறு சொல்ல நாங்களும் அமர்ந்தோம்.
       நல்லமுறையில் காலை உணவுக்கு ஏற்பாடு செய்து நல்விருந்தளித்தார். நாங்களும் சாப்பிட்டோம். அதன்பின் என்னை வெளியே சென்று வருமாறு மஹான் பாபா அவர்கள்சொல்ல நானும் சிறிதுநேரம் வெளியே இருந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்போது பாபா அவர்களும் அந்த இந்து நபரும் பேசிக்கொண்டிருந்தனர்.
       கடவுளே தாங்கள் வந்த நோக்கமென்ன? என அந்த இந்து நபர் கேட்க அதற்கு பாபா அவர்கள் என்னை சுட்டிக்காட்டி இவருக்கு வியாபாரம் செய்ய கொஞ்சம் பணம் வேண்டுமாம் தங்களிடம் பணம் இருக்கிறதா? என்று கேட்க அதற்கவர் கடவுளே இப்போது என்வசம் ரொக்கமாக இருப்பது பத்தாயிரம் ரூபாய் மட்டும்தான் வெளியே மற்றவர்களிடம் முப்பதாயிரம் ரூபாய் இருக்கிறது தங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? என மிகவும் பணிவோடு கேட்டார்.
       மஹான் பாபா அவர்கள் என்னைபார்த்து உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? என்றுகேட்க ஐநூறு போதுமென எண்ணிக்கொண்டு ஐந்து விரல்களை சமிக்ஞையாகக் காட்டினேன். அதைக்கண்ட பாபா அவர்கள் ஐயாயிரம் போதுமா? என்று கேட்க இல்லை பாhப ஐநூறு போதும் என்றேன். வியாபாரம் செய்வதற்கு ஐநூறு ரூபாய் போதாது ஐயாயிரம் வாங்கிக் கொள்ளுங்களென பாபா கூறினர். அந்த இந்து நபரை பார்த்து ஐயாயிரம் ரூபய் கொடுங்களென மஹான் பாபா அவர்கள் கூறினர்.
       அதுகேட்ட அவர் தாங்கள் எதற்கும் யோசிக்க வேண்டாம் எவ்வளவு பணம் தேவை என்றாலும் தருகிறேன். என்னிடமிருக்கும் பத்தாயிரம் ரூபாய் போதாது எனில் வெளியே எனது பமண் முப்பதாயிரம் ரூபாய் இருக்கிறது வாங்கித் தருகிறேனென்று கூறினார். அதுகேட்ட பாபா அவர்கள் இல்லையில்லை ஐயாயிரம் ரூபாய் போதுமாம் ஐயாயிரம் ரூபாய் மட்டும் கொடுங்களென்று சொல்ல அவர் ஒன்றும் சொல்லாமல் பத்தாயிரம் ரூபாயையும் கொண்டுவந்து அதிலிருந்து ஐயாயிரம் ரூபாயை எடுத்து என்னிம் கொடுத்தார். நான் அப்பணத்த பெற்றுக்கொள்ள பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கு அத்தாட்சியாக என்னிடம எழுதி வாங்கிக்கொள்ளுமாறு பாபா அவரிடம் கூறினர். அதுகேட்ட அவர் கடவுளே தாங்கள் வந்திருக்கும்போது எதற்காக எழுதி வாங்க வேண்டும்? இப்பணத்தை அவர் உடனே தரவேண்டும் என்பதில்லை. எப்போது வேண்டுமானாலும் தரட்டும் அலலது தராமல் போனாலும் பரவாயில்லை என்று கூறினார்.
       அன்று மதிய உணவையும் சிறப்பாகத் தந்தார். சாப்பிட்ட பின் அவரிடமிருந்து நானும் பாபா அவர்களும் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்தோம். வரும் வழியில் மஹான் பாபா அவர்கள் என்னைநோக்கி அந்த இந்து நபரை இதற்குமுன் நாம் பார்த்ததேயில்லை இருந்தாலும் அவர் நல்ல மனிதரைப்போல் தெரிகிறார். அதனால்தான் நம்மை நன்றாக உபசரித்ததோடு நாம்கேட்ட பணத்தையும் கொடுத்தாரென்று சொல்ல நான் அப்படியே அதிர்ச்சியால் உறைந்து போனேன். 
       காரணம் முன்பின் தெரியாத ஒருவர் பாபா அவர்களை கண்டதும் வாருங்கள் என அன்போடு வரவேற்று உபசரித்ததும் இறுதிவரை பாhப அவர்களை கடவுளே என்னும் வார்த்தையை தவிர வேறொரு வார்த்தையை கொண்டு அழைக்காதிருந்ததும் விருந்தளித்ததும் தங்களிடம் பணமிருக்கிறதா? என்று பாபா அவர்கள் கேட்டதும், அவர் தன்னிடமிருந்த பணம் முழுவதையும் அப்படியே கூறிவிட்டதும் ஆக இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம் மேலிட்டதில் வியப்பென்ன?
       என்னை ஊருக்குச்சென்று வியாபாரம் செய்யுமாறு பாபா அவர்கள் சொல்ல நான் ஊருக்குச் சென்றேன். ஒருவாரம் வரை அப்பணத்தை எனது மடியிலேயே வைத்துக் கொண்டிருந்தேன் வியாபாரமும் செய்யவில்லை. பணம் இருப்பதையும் யாரிடமும் சொல்லவில்லை.
       இறுதியில் இத்தனை பணத்தை வைத்துக் கொண்டிருக்க எனக்கு பயமாக இருந்தது. (அக்காலத்தில் மிகவும் மதிப்பு பாய்ந்த தொகை இது) ஆம் என்னிடம் பணம் இருப்பதை யாராவது தெரிந்து கொண்டால் எங்கே அதை திருடிக்கொண்டு போய் விடுவார்களே என யோசித்தவன் ஒருவாரம் கழித்து பனைக்குளம் சென்று பாபா அவர்களை சந்தித்து அப்பணத்தை கொடுத்தேன். வியாபாரம் செய்யவில்லையா? எனக் கேட்டனர். இல்லை என்றேன்.
       மஹான் பாபா அவர்கள் அப்பணத்தை வாங்கிக்கொண்டு மானாமதுரை வரை என்னை அவர்களோடு அழைத்துச் சென்றவர்கள் அங்கே சென்றதும் என்னை ஊருக்குப போகுமாறு சொல்ல, நானும் ஊருக்கு வந்துவிட்டேன். அதன்பின் பாபா அவர்கள் எங்கே சென்றனர் என்பது எனக்குத் தெரியாது.
அறிவிப்பாளர்: ஆ.கா.ஷம்ஸூகான் அம்பலம், பேரையூர்

No comments:

Post a Comment